• சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால்
இவர் மட்டும் எப்படி சட்ட விரோதமாக சுட்டுக்கொல்ல முடிகிறது?
இவர் மட்டும் எப்படி சட்ட விரோதமாக சுட்டுக்கொல்ல முடிகிறது?
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு மன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
இதோ இவரும் இந்திய குடிமகன்தான். இவர் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதி இல்லை.
அப்புறம் இவர் “என்கவுண்டர்” போலி மோதலில் கேரள பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்?
“மாவோயிஸ்ட்” என்ற ஒற்றைச் சொல்லை கூறிவிட்டு இவரை எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
மாவோயிஸ்டுகள் தேச விரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள் என்று உச்சநீதிமன்றமே கூறிய பின்பும் இவர்களால் எப்படி சுட்டுக் கொல்ல முடிகிறது?
அதுவும் கேரள உயர்நீதிமன்றமே மாவோயிஸ்டுகளை சட்டரீதியாக நடத்த வேண்டும் என்று கூறிய பின்பும் இவர்களால் சுட்டுக் கொல்ல முடிகிறது?
அதுவும் ஒரு கம்யுனிஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே எப்படி இப்படி ஒரு அராஜகம் நடைபெறுகிறது?
கடந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞரை மாவோயிஸ்ட் என்று சுட்டுக் கொன்றார்கள்.
இப்போது மாவோயிஸ்ட் என்று இன்னொருவரை தமிழக எல்லையில் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
இங்கு வேதனை தரும் விடயம் என்னவெனில் இந்துத்துவ வெறியர்களால் முற்போக்கு சக்திகள் சுட்டுக் கொல்லப்படுவதாக கண்டனம் தெரிவிக்கும் தமிழக மனிதவுரிமைவாதிகள் இந்த மாவோயிஸ்ட் கொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை. அது ஏன்?
No comments:
Post a Comment