•தமிழினம் இதுவரை வெற்றி பெறாமைக்கு காரணம்
தொடரும் தமிழ் தலைமைகளின் துரோகமே!
தொடரும் தமிழ் தலைமைகளின் துரோகமே!
போர்த்துக்கேயருக்கு எதிராக 100 வருடம் போராடிய தமிழினம்
ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய தமிழினம்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக 150 வருடம் போராடிய தமிழினம்
சிங்கள அரசுக்கு எதிராக 71 வருடமாக போராடி வரும் தமிழினம்
இன்னும் தனக்கான விடுதலையை பெற முடியாமைக்கு என்ன காரணம்?
தலைமைகளின் துரோகம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
போர் முடிந்து 10 வருடமாகிவிட்டது. இன்னும்
• சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
• காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்பட வில்லை
• இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்பட வில்லை
ஆனாலும் எமது தலைமைகள் மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை அரசுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்தமுறையும் இரண்டுவருடகால அவகாசத்தை இவர்கள்தானே பெற்றுக் கொடுத்தார்கள். அதில் இலங்கை அரசு என்ன சாதித்தது?
இப்போது எந்த முகத்துடன் மீண்டும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை அரசுக்கு பெற்றுக் கொடுக்கிறார்கள்?
அடுத்த இரண்டு வருடத்திலும் இலங்கை அரசு எதுவும் செய்யவில்லை என்றால் இவர்கள் அதற்குரிய பொறுப்பை எடுப்பார்களா?
நிச்சயமாக எடுக்கமாட்டார்கள். அடுத்த முறையும் ஏதாவது காரணம் கூறி இலங்கை அரசைக் காப்பாற்றுவார்கள்.
அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு?
தீர்வு- இந்த துரோகத் தலைமைகளை அப்புறப்படுத்தாதவரை தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
குறிப்பு- இம்முறை இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை கொடுக்கும் தீர்மானத்தை பிரிட்டனும் கனடாவுமே கொண்டு வருகின்றன. பிரிட்டனில் ஒரு லட்சம் தமிழரும் கனடாவில் 3 லட்சம் தமிழரும் இருந்தும் இந் நாடுகள் இத் தீர்மானத்தை கொண்டு வருகின்றது எனில் இந் நாடுகளில் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக கூறும் தமிழ் அமைப்புகளின் தோல்வி இது என்பதே அர்த்தமாகும்.
இனி என்ன செய்ய வேண்டும்?
(1)தமிழ் அமைப்புகள் முதலில் தமிழ் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்.
(2) உண்மையை சொல்லி தமிழ் மக்களை அமைப்பாக திரட்ட வேண்டும்
(3) தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலக மக்களுக்கும் உண்மை விபரங்களை தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும்.
எம்முடைய கருத்துக்கு பின்னால் எந்தளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்தே எந்த ஒருநாடும் எமது பிரச்சனையை அணுகும் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment