Saturday, March 30, 2019

அவர் பெயரோ தமிழீழம்

அவர் பெயரோ தமிழீழம்
அவர் கேட்டதோ துப்பாக்கி வைத்திருக்க அனுமதி
அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க இந்த இரண்டு காரணங்களே தமிழக காவல்துறைக்கு போதும்.
துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் அவர்கள் தைரியமாக முன்வந்து மனு கொடுத்தது எதைக் காட்டுகிறது?
இந்திய சட்டம் தமக்கு பாதுகாப்பு தராது என்று அவர்கள் உணர்கிறார்கள்
இந்திய நீதிமன்றத்தில் தமக்கு நீதி கிடைக்காது என்று அவர்கள் உணர்கிறார்கள்
இந்திய காவல்துறை தம்மை பாதுகாக்காது என்று அவர்கள் உணர்கிறார்கள்
மொத்தத்தில் இந்திய அரசே தம்முடையது அல்ல என்று அவர்கள் உணர்கிறார்கள்.
அதனால்தான் அவர்கள் துப்பாக்கி மட்டுமே தம்மை பாதுகாக்கும் என்று கருதுகிறார்கள்
.
இந்தியா சுதந்திரம் அடைந்து 71 வருடங்களுக்கு பின்னர் இரண்டு பெண்கள் தமக்கு பாதுகாப்பிற்கு துப்பாக்கி கேட்கிறார்கள் எனில் பெற்ற சுதந்திரம் யாருக்கானது?
இந்திய அரசு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்காமல் போகலாம்.
ஆனால் தப்பாக்கி ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாறுவதை தடுக்க முடியாது.
ஆம். இந்திய அரசின் தோளில் தொங்கும் துப்பாக்கி விரைவில் இவர்களின் தோளில் தொங்கும்.
இது உறுதி.

No comments:

Post a Comment