மன்னார் புதைகுழி அறிக்கையும் சுமந்திரனும்
மன்னார் புதைகுழி இராணுவத்தின் கட்டுப்பாட்டு காலத்தில் நடந்தது என்றால் இலங்கை அரசு விரும்பாது.
மன்னார் புதைகுழி இந்திய ராணுவ காலத்தில் நடந்தது என்றால் இந்திய அரசுக்கு பிடிக்காது
மன்னார் புதைகுழி விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்தது என்றால் தமிழ் மக்கள் நம்பப் போவதில்லை.
பார்த்தான் அமெரிக்ககாரன். பேசாமல் இது சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று அறிக்கையை தந்துவிட்டான்.
அறிக்கை வரும்போது தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்று சுமந்திரன் கூறியபோதே நாம உஷாராகியிருக்கனும்.
இது புலிகள் காலத்தில் நடந்தது என்றுதான் கூறப்போகின்றார்கள் என்று நினைத்துவிட்டோம்.
இப்படி சங்கிலியன் காலத்தில் நடந்தது என்று கூறுவார்கள் என கனவிலும் நினைக்க முடியவில்லை.
சங்கிலியன் காலத்தில் கிருத்தவ மதத்திற்கு மாறிய 600 பேர் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
எனவே அது இதுதான் என்றும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இனி கோரலாம்.
ஒருவேளை சுமந்திரன் அவ்வாறு கோரினால் அதற்கு முழு அதரவு வழங்க தயாராய் இருக்கிறோம்.
ஏனெனில் சங்கிலியனின் வாரிசு தான் என்று ஒருவன் ஹோலண்டில் கூறிக்கொண்டிருக்கிறான்.
முகநூலில் அவன் தொல்லை தாங்க முடியவில்லை. எனவே சங்கிலியன் செய்த கொலைக்காக இவனை பிடித்து சிறையில் தள்ளுங்கள்.
கெட்டதிலும் ஒரு நல்லது போன்று இவனின் தொல்லையாவது இல்லாமல் போகட்டும்.
சுமந்திரன் சேர்! வெகுவிரைவில் ஒரு அறிக்கை விடுங்கள்.
No comments:
Post a Comment