•இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது
ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்!
ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்!
சிங்களவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. ஆனால் தமிழர்களே இந்தியாவுக்கு பூரண விசுவாசமாக இருக்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.
இந்தியாவில் ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொப்புள்கொடி உறவுகளே ஈழத் தமிழர்கள். எனவே இதனை இந்தியா புரிந்து கொண்டு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என இன்னும் சிலர் விரும்புகின்றனர்.
ஈழத் தமிழர்கள் இந்துக்கள். எனவே ஈழத் தமிழர்கள் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்தியா அதனை புரிந்துகொண்டு உதவும் என வேறு சிலர் நம்புகின்றனர்.
இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. எனவே ஈழத் தமிழரே தமது உண்மையான பாதுகாப்பு என்பதை இந்தியா புரிந்துகொண்டு உதவும் என சிலர் ஆய்வு கட்டுரைகள் எழுதுகின்றனர்.
இந்தியாவை பயன்படுத்த நினைத்தனர் ஈழத் தமிழ் தலைவர்கள். ஆனால் அவர்களை பயன்படுத்திக்கொண்டது முழு இலங்கையையும் ஆக்கிரமித்துவிட்டது இந்தியா.
ஆனாலும் இன்றும்கூட இந்தியா புரிந்துகொண்டு உதவும் என இத் தமிழ் தலைவர்கள் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்.
தமிழர்கள் அனைவரும் ஒருமித்து இந்தியாவுக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்தியாவை பணிய வைக்க முடியும்.
கடந்த வருடத்தில் இந்திய அரசுக்கு எதிராக அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடுதான்.
சுமார் பன்னிரண்டாயிரம் போராட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.
இது இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளின் கவனத்தையும் பெற ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு அம்சமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீசிய அணுகுண்டு.
“புலிகள் அநீதிக்கு எதிராகவே தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்” என்று அவர் வீசிய இக் குண்டு நிச்சயம் பெரிய விளைவுகளை எற்படுத்தப் போகிறது.
இம்ரான்கான் தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டவரல்ல. அதுமட்டுமல்ல அவர் தனது நாட்டில் பல இனங்களின் போராட்டத்தையே அடக்கிக்கொண்டு இருக்கிறார்.
ஆனாலும் அவர் தமிழருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை கவனத்தில் எடுத்திருக்கின்றார் என்பதையே அவரது புலி பற்றிய பேச்சு காட்டுகின்றது.
புலிகளின் போராட்டத்தைப் பற்றி முதன் முதலாக ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது தமிழரின் பிரச்சனையை உலகில் யாருமே கவனத்தில் கொள்ள மாட்டார்கள் என்று இறுமாப்பாக இருந்த இந்திய அரசுக்கு விழுந்த பெரிய அடியே..
No comments:
Post a Comment