•தொடரும் சிறப்புமுகாம் சித்திரவதைகள்!
தன்னை விடுதலை செய்யுமாறு கோரி ஈழ அகதி ஒருவர் சிறப்புமுகாமில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இலங்கையில் போர் முடிந்து பத்து வருடங்களாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் சிறப்புமுகாம் மூடப்படவில்லை.
எதிரி நாட்டில் எல்லைதாண்டி குண்டு போடச் சென்ற அபிநந்தனைக்கூட மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியவர்கள் இந்த சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதில்லை.
இந்த சட்டவிரோத சித்திரவதை முகாம் இன்னும் எத்தனை வருடங்கள் தமிழகத்தில் இருக்கப் போகின்றது?
இதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழஅகதிகள் எப்போது விடுதலை செய்யப்படப் போகிறார்கள்?
1990ம் ஆண்டு சிறப்புமுகாமை ஆரம்பித்த கலைஞர் கருணாநிதியும் மரணமடைந்துவிட்டார்.
பல சிறப்புமுகாம்களை உருவாக்கி அதில் பல ஈழ அகதிகளை அடைத்த ஜெயா அம்மையாரும் மரணமடைந்துவிட்டார்.
ஆனால் சிறப்புமுகாம் எனப்படும் இச் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்பட வில்லை.
இவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் அகதிகள் மட்டுமல்ல தமிழ் இனமாகவும் பிறந்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment