பெல்ட் ஆல் அடிக்காதீங்கண்ணா, வலிக்குது அண்ணா, நானே கழட்டுகிறேன் அண்ணா” என்று பெண் கதறி அழுகிறார்.
ஆனாலும் அந்த மிருகங்கள் இரங்கவில்லை. பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அதை படம் பிடித்தும் வைத்துள்ளனர்.
பிடித்து வைத்திருந்த படத்தை காட்டி பணம் பறித்துள்ளனர். மிரட்டி வேறு பலருக்கும் அந்த பெண்களை இரையாக்கி உள்ளனர்.
இது ஏதோ ஒன்றோ இரண்டு பெண்களுக்கு நடக்கவில்லை. 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்துள்ளது.
அதுவும் ஏதோ ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் நடந்துவிடவில்லை. மாறாக 2012ல் இருந்து நடந்து வருகிறது.
இந்த கும்பலில் தொகுதி எம்எல்.ஏ வின் மகன் உட்பட 20ற்கு மேற்பட்டவர்கள் உணடு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
ஆனால் பொலிஸ் நாலு பேரை மட்டுமே கைது செய்து வழக்கை மூடப் பார்க்கிறது.
இதில் அரசியல்வாதிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. அரசியல்வாதிகளின் தலையீடும் இல்லை என்று பொலிஸ் அவசரம் அவசரமாக அறிக்கை விடுகிறது.
ஆளுநரைக் காப்பாற்றுவதற்காக நிர்மாலாதேவி எப்படி பலிக்கடாவாக்கப்பட்டாரோ அதுபோன்று இந்த வழக்கிலும் யாராவது ஒருவர் பலியாக்கப்படலாம்.
ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் ஒருபோதும் தண்டிக்கப்படபோவதில்லை. அவர்கள் தண்டிக்கப்படும்வரை இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படபோவதும் இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் அறியும்போது மக்களும் உணர்ச்சிவசப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் ஆண் குறியை வெட்ட வேண்டும். தூக்கில் போட வேண்டும் என்று எழுதுகிறார்கள்.
வழக்கை விசாரிக்கமாலே தீர்ப்பை வழங்குகிறார்கள். அப்புறம் அடுத்த சம்பவம் நடக்கும்வரை இதை மறந்துவிடுகின்றார்கள்.
மக்களின் இந்த போக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும் அவர்களை தப்ப வைக்கும் காவல்துறைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
No comments:
Post a Comment