•மாணவர் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
வடக்கிலும் கிழக்கிலும் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலருக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது.
• இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதை ஜ.நா வக்கு தெளிவாக சொல்லியுள்ளது.
• தமிழ் தலைமைகளை விலைக்கு வாங்கினாலும் தமிழ் மக்களை அடக்கி ஆள முடியாது என்பதை ரணிலுக்கு சொல்லியுள்ளது.
• புலம்பெயர்ந்த ஒரு சிலர்தான் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுப்பதை எதிர்க்கிறார்கள் என்ற சுமந்திரன் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளது.
• நீங்கள் எம்மை சாகடிக்கலாம். ஆனால் தமிழ் இனத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதை மகிந்த ராஜபக்ச கும்பலுக்கு சொல்லியுள்ளது.
• பல்லாயிரம் பேரை கொன்று குவித்தாலும் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு சொல்லியுள்ளது.
• குறிப்பாக, பற்றி எரியப்போகும் பெரு நெருப்புக்கான தீப்பொறி இது என்று சர்வதேசத்திற்கு சொல்லியுள்ளது.
இவர்களுக்கு தேவை தமிழ் மக்களின் செய்தி என்றால் அதை மாணவர்கள் தெளிவாகவே தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை பாராட்டுவோம்.
அவர்களுடன் ஒன்று சேருவோம்
அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்
அவர்களுடன் ஒன்று சேருவோம்
அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்
நாம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை
ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு வெற்றி காத்திருக்கிறது.
ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு வெற்றி காத்திருக்கிறது.
ஓடாத மானும் போராட இனமும் வாழ்ந்ததில்லை
இதை மனதில் நிறுத்தி போராடுவோம்
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
இதை மனதில் நிறுத்தி போராடுவோம்
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
குறிப்பு - மறப்போம் மன்னிப்போம் என்றார் பிரதமர் ரணில். ஆனால் தமிழ் மக்கள் “மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் என்ன ஆடு மாடுகளையா ஒப்படைத்தோம்?” என்று கேட்டிருக்கிறார்கள். இனி சுமந்திரன் என்ன கூறப்போகிறார்?
No comments:
Post a Comment