தோழர் பாலன்
03.03.2019
லண்டன்
வணக்கம்
நண்பர்களே!
நான்
ஒரு ஈழத் தமிழன். அதுமட்டுமல்ல 1991ம் ஆண்டு முதல்
1999 வரை எட்டு வருடங்கள் தமிழக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி கூறுவதற்கு இந்த தகுதி போதும் என கருதுகின்றேன்.
முதன்
முதலில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் வேலூர் கோட்டையில் 1990ம் ஆண்டு சிறப்புமுகாம்
ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெயா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1991ம் அண்டு தமிழகத்தில்
பல கிளைச் சிறைகள் சிறப்புமுகாம்களாக மாற்றப்பட்டு பல அப்பாவி அகதிகள்
அவற்றில் அடைக்கப்பட்டனர்.
தற்போது
திருச்சியில் மட்டும் இச் சிறப்புமுகாம் இருக்கிறது. அதில் 17 அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இச்
சட்டவிரோத சித்திரவதைமுகாம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோள் ஆகும்.
இச்
சிறப்புமுகாம் தமிழக மக்களால் மட்டுமே மூடப்பட முடியும். எனவே தமிழக மக்களின் கவனத்திற்கு இச் சித்திரவதைமுகாம் பற்றிய விபரங்களை கொண்டு செல்ல வேண்டும்.
அதன்பொருட்டு
செப்டம்பர் 2015 யன்று “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலை வெளியிட்டிருந்தோம். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்திற்காக இதனை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்.
இப்போது
உங்கள் கவனத்திற்காக அவ் நூலில் உள்ள சில பகுதிகளை கீழே தருகிறேன்.
சிறப்பு
முகாம் என்னும் கொடிய சித்திரவதைமுகாம் நிரந்தரமாக மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற தங்களின் ஆதரவையும் உதவியையும் வேண்டி நிற்கிறேன்.
தோழர்
பாலன்
03.03.2019
லண்டன்
·
சிறப்புமுகாம் என்னும்
சிறையை
விடக்
கொடிய
சித்திரவதை
முகாம்
அமெரிக்காவின்
குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை. இதில் வேதனை என்னவென்றால் தமிழ்நாட்டில்
தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.
அமெரிக்காவின்
குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக் குறைந்தது அதை ஒத்துக்கொள்ளவாவது செய்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டியும் கொடுக்கிறார்.
ஆனால்
தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக் கொள்ளவுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!’ என்று தமிழக மக்கள்; பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த ஈழத் தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள்.
·
சிறப்புமுகாம் என்றால்
என்ன?
சிறப்புமுகாம்
என்பது 1946ம் ஆண்டு அயல்
நாட்டார் சட்டம் 3(2)நு ல் வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்திற்கு அமைய தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து முகமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் முகாம் ஆகும்.
சட்டப்படி
மாவட்டஆட்சித் தலைவரின் அதிகாரத்தின் கீழ் உள்ள முகாம் எனக் குறிப்பிட்டிருந்தாலும்; நடைமுறையில் இந்த முகாம் தொடர்பான அனைத்து அதிகாரமும் சட்டவிரோதமாக கியூ பிரிவு பொலிசாரிடமே வழங்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள முகாமாகவே இது இயங்கி வருகிறது.
·
சிறப்பு முகாம்
எப்போது,
யாரால்
ஆரம்பிக்கப்பட்டது?
சிறப்பு
முகாம் என்பது முதன் முதலாக 1990ம் ஆண்டு உலகத்
தமிழினத் தலைவர் என தன்னை அழைத்துக்
கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்களால் அகதியாக வந்த ஈழத் தமிழர்களை அடைத்து
வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
தமிழீழ
விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த கலைஞர் அரசு தவறிவிட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியபோது மத்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் உள்ள திப்புமகாலில் முதலாவது சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டது.
·
சிறப்பு முகாமில்
முதலில்
அடைக்கப்பட்டவர்கள்
யார்?
தமிழீழ
விடுதலை புலிகளைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டதாக அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால்; உண்மையில் அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அல்லர். மாறாக சாதாரண அகதி முகாமில் வாழ்ந்து வந்த அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளே.
அவர்கள்
படிக்க வசதி, நல்ல வேலைவாய்ப்பு போன்றவை தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்கள். அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட பின்பே தெரிந்து கொண்டார்கள்.
·
வேலூர் சிறப்புமுகாமில்
துப்பாக்கிச்சூடு
ஏன்
நடத்தப்பட்டது?
வேலூர்
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கோபம் கொண்டார்கள். தங்களை உடனே விடுதலை செய்யும்படி கோரினார்கள். உணவு உட்கொள்ள மறுத்தார்கள். ஆனால் அவர்களை எந்த அரசு அதிகாரிகளும் சென்று சந்திக்கவும் இல்லை. அவர்களது கோரிக்கைக்குத் தகுந்த பதில் அளிக்கவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவ் அகதி இளைஞர்கள் திப்புமகால் வாயிற் கதவுக்குத் தீ வைத்தார்கள். பொலிசாரை
நோக்கி கற்களை வீசினார்கள்.
பொலிஸ்
கமிஷனர் தேவாரம் தலைமையில் வந்த பொலிசார் அவ் அகதி இளைஞர்களை அடக்குவதற்காகத் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தினார்கள். அதனால் அப்பாவி இளைஞர்கள் இருவர் பலியானார்கள். பல இளைஞர்களை கட்டைகளைக்
கொண்டு; தாக்கினார்கள். இறுதியாக 130 இளைஞர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
உலகில்
நிராயுதபாணியான அகதிகளைத் துப்பாக்கியால் சுட்டு அடக்கிய பெருமை தமிழக பொலிசாரையும் அதற்கு உத்தரவு வழங்கிய கலைஞர் கருணாநிதியையுமே சேரும். அதுமட்டுமல்ல அகதிகளை அதுவும் 130 அகதிகளை ஒரே நேரத்தில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைத்த பெருமையும் கலைஞர் அரசையே சேரும். தங்களை விடுதலை செய்யுமாறு கோரிய அகதிகளை “பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள்” என்று
பத்திரிகைகளும் தம் பங்கிற்கு திரித்து எழுதி அகதிகள் மீது அவதூறு பரப்பினார்கள்.
·
எதிர்க்கட்சித் தலைவராக
இருக்கும்
போது
சிறப்புமுகாம்
பற்றி
கலைஞர்
கருணாநிதி
கூறியது
என்ன?
மத்திய
அரசைத் திருப்திப்படுத்த சிறப்பு முகாம் என்னும் கொடிய சித்திரவதை முகாமை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்திருந்தாலும்கூட மத்திய அரசானது அவரது அரசை ‘டிஸ்மிஸ்’
செய்தது.
அதன்
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் வேலூர் கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சிலர்; சுரங்கம் தோண்டித் தப்பியிருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி தான்
சிறப்பு முகாமை சில மாதங்களின் பின் மூட இருந்ததாகவும் ஆனால் அதற்குள் தனது அரசு கலைக்கப்பட்டு விட்டதால் தன்னால் மூட முடியாமற் போய்விட்டது எனவும் அறிக்கை விட்டிருந்தார்.
எதிர்க்கட்சியாக
இருக்கும்போது சிறப்பு முகாமை மூடுவதற்கு தான் நினைத்திருந்ததாக கூறிய அதே கலைஞர் கருணாநிதி அவர்கள், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு முகாமை மூடுவார் என சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த அகதிகள் நம்பினார்கள்.
அதன் பின் இரண்டு முறை ஆட்சிக்கு வந்துவிட்டார் கலைஞர். ஆனால் அவர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த அப்பாவி அகதிகளை ஏமாற்றிவிட்டார்.
·
ஜெயா அம்மையார்
சிறப்பு
முகாம்கள்
குறித்து
எடுத்த
நடவடிக்கைகள்
என்ன?
பொதுவாக
கலைஞர் திட்டங்களுக்கு எதிராக செயற்படும் குணம் கொண்ட ஜெயா அம்மையார் கலைஞர் ஆரம்பித்த சிறப்பு முகாம்களை மூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ
செங்கல்பட்டு, பூந்தமல்லி, மேலூர், துறையூர், திருவையாறு, பழனி என பல்வேறு இடங்களில்
இருந்த கிளைச் சிறைகளில் புதிய சிறப்புமுகாம்களை உருவாக்கினார். ராஜீவ்காந்தி கொலையைக் காரணம் காட்டி பல அப்பாவி அகதிகளை
பிடித்துச் சிறப்புமுகாம்களில் அடைத்தார்.
கலைஞரும்
ஜெயா அம்மையாரும் ஒற்றுமையாக செயற்பட்ட ஒரேயொரு விடயம் இந்த சிறப்பு முகாம் விடயம் மட்டுமே! ஈழ அகதிகளை சிறப்பு
முகாமில் அடைத்து துன்புறுத்துவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் ஆட்சிக் காலங்களில் நன்கு நிரூபித்தார்கள்.
·
சிறையை விடக்
கொடிய
சித்திரவதை
முகாம்
என
சிறப்பு
முகாம்
ஏன்
கருதப்படுகிறது?
சிறைச்சாலையானது
கொடிய சித்திரவதைகள் நிறைந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த சிறைகளில் வழங்கப்படும் அற்ப சலுகைகள் கூட சிறப்பு முகாம்களில் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் என கருதப்படுகிறது.
சிறையில்
அடைக்கப்படும் கைதிகள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சிறைவிதிகள் உண்டு. ஆனால் இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்படும் அகதிகள் உரிமைகள் தொடர்பாக எந்த விதியும் இல்லை. இதனால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் (றுP 15044ஃ91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாசலம் மற்றும் பிரதாப்சிங் அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவெனில்,
(1) சிறப்பு முகாமில்
உணவு வழங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக ஓரு உதவி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
(2) சிறப்பு முகாமில்
வைக்கப்படுபவர்களுக்கு
அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதேயன்றி மற்றும்படி அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
(3) சிறப்பு முகாமில்
வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் குடும்பத் தலைவர்களை வரவழைத்துத் தங்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்தவர்களின் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
(4) சிறப்பு முகாமிற்குள்
இருப்பவர்களை சிறையில் சிறைவாசிகளை 'லாக்கப்" செய்வதுபோல் (செல்களில் வைத்துப் பூட்டுதல்)
செய்வது கூடாது. முகாமின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
(5) பார்வையாளர்கள் அனைவரும்
அனுமதிக்கப்படுவர். எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
(6) போலீசார் காவலுக்கு
மட்டும் அதுவும் சிறப்பு முகாமின் வெளிப்புறத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மற்றும்படி தாசில்தார் பொறுப்பில் தான் முகாம் நிர்வகிக்கப்படும்.
(7) நாடு திரும்பிச்
செல்ல விரும்பினால் சொந்தச் செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பிவைக்கப்படும்.
தமிழக
அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேற்கண்ட
உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால்
உண்மையென்னவெனில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அவ்வுரிமைகளில் ஒன்றைக் கூட தமிழக அரசு இச் சிறப்பு முகாம்களில் வழங்கவில்லை.
மாறாக
தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் மனிதாபிமானமற்ற முறையில், ஈவிரக்கமின்றி, தமிழ் அகதிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றனர்.
·
தமிழக பொலிஸ்
சிறப்புமுகாம்
அகதிகளை
அடித்து
துன்புறுத்துகிறதா?
சிறப்புமுகாமில்
அடைத்து வைத்திருக்கும் அகதிகளை தமிழக பொலிஸ் அடித்துச் சித்திரவதை செய்கிறது. அகதிப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்கிறது. அது மனதாபிமாமற்ற முறையில் சட்ட விரோதமாக செயற்படுகிறது என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை பல முறை
தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
மனிதவுரிமை
கமிசன் தலைமை நீதிபதிக்கு இக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
துறையூர்
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சிவா என்பவர் கரூர் நீதிமன்றில் 17.10.1994 அன்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து வாக்குமூலம்
அளித்திருந்தார். அதில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:
'21.12.93 அன்று
உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் வெறி பிடித்த போலீசார் கும்பலாகச் சேர்ந்து என்னைத் தாக்கினார்கள். இதனால் என் கால் முறிந்தது.
அன்று
என்னை மட்டுமல்ல முகாமில் வைக்கப்பட்டிருந்த இன்னும் பலரையும் இவ்வாறு அடித்துத் துன்புறுத்தினர். அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்தனர் என்பதைக் கூறுவதற்கு என் நாக்கு கூசுகிறது. அந்த அளவிற்குக் கேவலமான முறையில் கொடுமை செய்தனர்.
கால்
முறிக்கப்பட்டு நடக்க முடியாமல் நான் வேதனைப்பட்ட போதும் என்னை மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. எனக்கு மருத்துவ சிகிச்சையும் தரப்படவில்லை.
இச்சிறப்பு
முகாமில் தாய், தந்தை, பிள்ளைகளை பிரித்து அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு தனியாகப் பிரித்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களை தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவமனைக்கென அழைத்துச் சென்று வெளியே வைத்து தமது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு போலீஸ் அதிகாரிகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயரதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் மனுக் கொடுத்தும் இதுவரை இவை குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவை யாவும் அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நடத்தப்படுகிறதென்றே நான் கருதுகிறேன்.
அத்துடன்
இங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இந்நிலையில் நோட் புக், பேனா, பாடப்புத்தகங்கள் எவற்றையும் சொந்தச் செலவில் பெற்றுப் படிப்பதற்கும்கூட அனுமதிக்கவில்லை." என்று தனது வாக்குமூலத்தில் சிவா தெரிவித்துள்ளார்.
சிவா
என்பவரின் இந்த நீதிமன்ற வாக்குமூலம் தமிழக பொலிஸ் சிறப்புமுகாம் அகதிகளை அடித்து துன்புறுத்துகிறது என்பதற்கும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பொலிசாரினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதற்கும் சாட்சியாக உள்ளது. ஆனால் கரூர் நீதிமன்றமோ அல்லது தமிழக அரசோ இதுவரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
·
ஜெயா அம்மையாருக்கு
ஒரு
நீதி
சிறப்புமுகாம்
அகதிகளுக்கு
இன்னொரு
நீதி.
இது என்ன
நியாயம்?
இந்தியா
ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இங்கு ஜெயா அம்மையாருக்கு ஒரு நீதி, சிறப்புமுகாம் அகதிகளுக்கு இன்னொரு நீதி வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
66கோடி
ரூபா மக்களின் பணத்தை சுருட்டிய குற்றத்திற்காக ஜெயா அம்மையாருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் நான்கு வருட தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு 21 நாட்களில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது. அதேவேளை
அகதிகள் எந்தவித குற்றச்சாட்டும் இன்றி எந்தவித தண்டனையும் இன்றி வருடக் கணக்காக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றங்கள் அக்கறையற்று இருப்பது என்ன நியாயம்?
ஜெயா
அம்மையாருக்கு மட்டுமன்றி அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என்று காரணம் கூறி ஜாமீன் விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால் சிறப்புமுகாமில் உண்மையாகவே உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதே காரணங்களுக்காக விடுதலை
செய்ய நீதிமன்றம் முன்வரவில்லை. இது
என்ன நியாயம்?
சிறையில்
தன்னுடன் தங்கியிருக்கத் தனது தோழி சசிகலாவுக்கு அனுமதியளிக்குமாறு ஜெயா அம்மையார் கோரினார். ஆனால் சிறப்புமுகாமில் கணவன் மனைவி குழந்தைகளைக்கூட பிரித்து வைத்திருப்பதோடு அவர்கள் பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிறையில் ஒரு தண்டனைக் குற்றவாளிக்கு வழங்கப்படும் சலுகைகள்கூட சிறப்புமுகாமில் அப்பாவி அகதிகளுக்கு மறுப்பது என்ன நியாயம்?
·
தமிழக அரசு
தவறிழைத்தால்
நீதிமன்றில்
முறையிடலாம்.
நீதிமன்றம்
கவனிக்க தவறினால் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடலாம்.
சர்வதேச
அமைப்புகளும் கண்டு கொள்ளாவிடின் அகதிகள் என்ன செய்ய முடியும்?
சிறப்புமுகாம்
கொடுமைகள் குறித்து பல அகதிகள்; நீதிமன்றங்களில்
முறையிட்டார்கள்.
குறிப்பாக
நான் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவேளை எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் நீதிமன்றங்களில் நேரிடையாக முறையிட்டேன்.
அது
மட்டுமன்றி மக்கள் உரிமைக் கழக வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம்
எனக்காக சென்னை உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அரசு இணைச்செயலர் பாஸ்கரதாஸ் மன்னிப்பு கோரியதுடன் இனி என்னை சட்டரீதியாக நடத்தப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால் அதன்
பின்பும்கூட தமிழக அரசு என்மீது மட்டுமல்ல சிறப்புமுகாம் அகதிகள் அனைவர் மீதும் சட்டவிரோதமாகவே செயற்பட்டு வருகிறது.
நான்
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளை தோழர் தமிழ்முகிலன் மற்றும் பல மனிதவுரிமை ஆர்வலர்கள்
இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து நடத்தி வந்த போராட்டத்தின் பயனாக மனிதவுரிமைக் கமிசன் தலைமை நீதிபதி வேலூர் சிறப்புமுகாமிற்கு விஜயம் செய்து நேரில் கொடுமைகளைப் பார்வையிட்டார்.
இனிமேல்
இவ்வாறு நிகழாவண்ணம் தான் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அவ் நீதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் அதன் பின்னும் கொடுமைகள் தொடர்ந்தது மட்டுமல்ல அதிகரித்ததுதான் மிச்சம்.
இந்திய
நீதிமன்றங்களினால் தமிழக அரசின் இக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வேறு வழியின்றி நானே ஜ.நா மனிதவுரிமைக்
கமிசன் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றுக்கு மனுக்கள் அனுப்பினேன்.
எனது
மனுக்களை பெற்றுக்கொண்டதாக அறிவித்த அந்த அமைப்புகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக
அரசு தொடர்ந்து தவறு இழைத்து வருகிறது. இது குறித்து நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. சர்வதேச அமைப்புகளும் இது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. இந் நிலையில் அந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாரில் நம்பிக்கை வைக்க முடியும்? அவர்கள் விடுதலை பெறுவதற்கு என்னதான் செய்ய முடியும்?
·
சிறப்புமுகாம்கள் ஏன்
இன்னும்
மூடப்படவில்லை?
புலிகளை
அடைத்து வைப்பதற்காகவே சிறப்பு முகாம்களை உருவாக்கியதாக கலைஞர் கருணாநிதி கூறினார். அதன் பின்பு வந்த ஜெயா அம்மையாரும் புலிகள் நடமாட்டம் இருப்பதால் சிறப்புமுகாமை வைத்திருப்பதாக கூறினார். ஆனால் தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதனை ஏற்றுக்கொண்டு ராஜீவ்காந்தி கொலையில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயரை நீக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் புலிகளின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாமை மூட மறுத்து வருகிறது.
யுத்தம்
முடிந்து 10 வருடங்களாகிவிட்டன. மகிந்த ராஜபக்சகூட முள்வேலிக்குள் அடைத்து வைத்திருந்த தமிழர்களை பெரும்பாலும் விடுதலை செய்துவிட்டார். ஆனால் தமிழக அரசு மட்டும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது.
·
சிறப்புமுகாம்களின் தற்போதைய
நிலை
என்ன?
தற்போது
திருச்சியில்; மட்டும் சிறப்புமுகாம்; உள்ளது. அதில் பல அப்பாவி தமிழ்
அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை உண்ணாவிரதம்
இருந்துள்ளனர். ஆனால் காந்தி தேச ஆட்சியாளர்கள் அந்த அகதிகளின் அகிம்சை போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை. மாறாக காவலுக்கு இருந்த தமிழக பொலிஸ் அதிகாரிகள் “தேவடியா அகதி நாய்களே! அடித்து போட்டால் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. உங்களுக்கு உண்ணாவிரத போராட்டம் கேட்குதா?” எனக் கேட்டு அந்த அப்பாவி அகதிகளைத் தாக்கியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அந்த அகதிகள் 17 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை சாகவும் விடாது காப்பாற்றிய பொலிசார் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அகதிகளை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொடுமைப்படுத்தும் ஒரே அரசு உலகத்தில் தமிழக அரசாகவே இருக்கும்!
·
சிறப்பு முகாமும்
தமிழக
அரசியல்
தலைவர்களும்
கலைஞர் கருணாநிதி
முதன்
முதலில் சிறப்புமுகாமை உருவாக்கி அதில் அப்பாவி அகதிகளை அடைத்தவர் உலக தமிழினத் தலைவர் என தன்னை பெருமையாக
அழைத்துக் கொள்ளும் கலைஞர்
கருணாநிதி அவர்கள். அவர் அதன் பின்பு பல முறை ஆட்சிக்
கட்டிலில் அமர்ந்துவிட்டார். ஆனால் தான் உருவாக்கிய சிறப்பு முகாமை மூடுவதற்கு அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழீழம் அமைக்க “டெசோ” மாநாடு நடத்தினார். உண்மையில் அவருக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமாயின் முதலில் தான் உருவாக்கிய சிறப்புமுகாமை அவர் மூடியிருக்க வேண்டும். அவர் சிறப்புமுகாமை மூடாதது மட்டுமல்ல பின்னர் எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் அதனை மூடுமாறு கோரிக்கைகூட வைக்கவில்லை. இந் நிலையில் இவர் ஈழத் தமிழகள் மீது அக்கறை கொண்டு “டெசோ” மாநாடு நடத்துகிறார் என்று எப்படி நம்ப முடியும்? இப்போது அவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
ஜெயா அம்மையார்
ஜெயா
அம்மையார் தான் பதவிக்கு வந்தால் இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்று தருவேன் என்றார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின் அது குறித்து பேசுவதில்லை. அவர் ஈழம் பெற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை, சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கும்கூட தயார் இல்லை. இந்நிலையில் அவரை “ஈழத்தாய்”
என சிலர் அழைப்பது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. அவரும் இறந்துவிட்டார். ஈழத் தாய் என பெயர் பெற்றவரும்
சிறப்புமுகாமை மூடவில்லை.
வை.கோ.
வை.
கோ அவர்கள் சிறப்பு முகாமை மூடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கட்சியினர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாமை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த வைகோ அவர்கள் விரும்பியிருந்தால் இந்த சிறப்புமுகாமை மூடுமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருக்கமுடியும். அதன் மூலம் சிறப்புமுகாமை மூட வழி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அது குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.
டாக்டர் ராமதாஸ்
டாக்டர்
ராமதாஸ் அவர்கள் சிறப்புமுகாமை மூடுமாறு பல முறை கோரியிருக்கிறார்
போராட்டமும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய மகன் அன்புமணி மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாம்களை மூடுவதற்கு அவர் மூலம் எதாவது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல தமிழகத்தில்கூட அவருடைய கட்சியின் ஆதரவுடனே தமிழக அரசு இயங்கி வந்தது. அப்போதும்கூட டாக்டர் ராமதாஸ் அவர்கள் விரும்பியிருந்தால் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறப்புமுகாமை மூடியிருக்க முடியும். ஆனால் அவரும்கூட இதுகுறித்து அக்கறையற்று இருந்துள்ளார்.
திருமாவளவன்
விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சிறப்பு முகாமை மூடுமாறு பலமுறை அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த வேளையில் அவர் ஒருமுறைகூட பாராளுமன்றத்தில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து குரல் எழுப்பவில்லை. இது ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
தி.மு.க, காங்கிரஸ்
மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் சிறப்புமுகாம்களை மூடி அவற்றில் உள்ள
அகதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். பல்வேறு மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த கொடுமைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளனர். சர்வதேச அமைப்புகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் உலகத்தின் கவனமும் குறிப்பாக தமிழ்மக்களின் கவனமும் இந்த கொடுமைகள் குறித்து கவனம் கொள்ளாததாலேயே அகதிகள் மீதான சிறப்புமுகாம் கொடுமைகள் தொடர்கின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது.
·
ஈழத்தமிழ் தலைவர்களின்
கண்டு
கொள்ளாத
அவல
நிலை
ஈழத்
தமிழ் தலைவர்கள் அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து வருகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் ஒருமுறைகூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதில்லை. அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்த வடமாணான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழகத்தில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு கோரியபோதும்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோராதது ஈழ தமிழ் மக்களின் அவல
நிலையைக் காட்டுகிறது.
இதைவிட
பெரிய கொடுமை என்னவெனில் அமெரிக்காவில் இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும்
உருத்திரகுமார் அவர்கள்கூட ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரை விடுதலை செய்யமாறு அறிக்கை விடுக்கின்றார். ஆனால் அந்த ஜெயா அம்மையாரினால் சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு அறிக்கை
விடப்படவில்லை.
·
சிங்கள இனவெறி
அரசு
தமிழர்களை
விடுதலை
செய்தாலும்
தமிழக
அரசு
விடுதலை
செய்ய
மறுக்கிறது
இலங்கையில்
பதவியேற்ற புதிய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் யார் பதவிக்கு வந்தாலும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கின்றார்கள். விடுதலை செய்வது குறித்து எந்த உறுதிமொழியைக்கூட தர மறுக்கிறார்கள். தமிழ் அகதிகளை
தொடர்ந்தும் அடைத்து வைத்து சித்திரவதை செய்யவே முனைகின்றனர். சிங்கள இனவாத அரசு தமிழர்களை விடுதலை செய்தாலும்கூட தமிழ்நாடு அரசு தமிழ் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பது என்பது ஈழதமிழ் மக்கள் நினைத்துக்கூட பார்த்திராத கொடுமை.
தமிழ்நாட்டில்
ஜெயா அம்மையாருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் பல வருடங்களாக கறுப்பு
பூனை பாதுகாப்பு வழங்கப்பட்டு வரப்பட்டது.. இருவருக்கும் புலிகள் இயக்கத்தால் உயிருக்கு ஆபத்து எனக்கூறியே அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வரப்பட்டது. புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில்கூட இந்த இருவரையும் கொல்வதற்கு அவர்கள் ஒருபோதும் முனைந்தது கிடையாது. அப்படியிருக்க இன்று புலிகள் இல்லாத நிலையிலும்கூட இவர்கள் இருவரும் தமது உயிருக்கு புலிகளால் ஆபத்து என்று கூறி கறுப்பு பூனை பாதுகாப்பை பெற்று வந்தது கேவலமானது.
இவர்கள்
இருவரும் தமது சுயநலங்களுக்காக புலிகள் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டபோதும்கூட புலிகள் அது குறித்து பொது வெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமே கடைப்பிடித்தார்கள்.
முன்னாள்
பிரதமர் வி.பி.சிங்
அவர்களால்; புலிகளிடம் கொடுக்கச்; சொல்லி வழங்கப்பட்ட பணத்தைக்கூட கலைஞர் கருணாநிதி வழங்காமல் சுருட்டியபோதும்கூட புலிகள் அது குறித்து பொது வெளியில் எதுவும் குறை கூறியதில்லை. அப்படியிருந்தும்கூட கொஞ்சம்கூட மனிதாபிமானம் இன்றி கலைஞரும் ஜெயா அம்மையாரும் புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து எனக்கூறி கறுப்பு பூனை பாதுகாப்பை பெற்று வந்தனர்.
2009ல் புலிகள்
தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னரும்கூட அவர்களில் பலர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர். கலைஞரின் மகள் கனிமொழியின் ஏற்பாட்டின் பேரிலேயே வெள்ளைக்கொடியுடன் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள்; சரணடைந்தபோதும் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதை வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ளார். உண்மையில் கலைஞரும் அவர் மகள் கனிமொழியும் போர்க் குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்பதற்காக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் கலைஞரோ ஒரு புறம் தமிழீழத்திற்காக டெசோ மாநாடு நடத்திக்கொண்டு; மறு புறத்தில் புலிகளால் ஆபத்து என்று கறுப்பு
பூனை பாதுகாப்பை பெற்று வந்தார்.
ஜெயா
அம்மையாரோ சட்டசபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல தீர்மானங்களை நிறைவேற்றி
ஈழத்தாய் பட்டம் பெற்றுள்ளார். புலிகள் தற்போது இல்லை என்பதும் அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதும் நன்கு தெரிந்தும் கறுப்புபூனை பாதுகாப்பை தொடர்ந்தும் பெறுவதற்காக புலிகளால் ஆபத்து என்றார். அதுமட்டுமல்ல அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பின்போதும்
நீதிமன்றத்தை மாற்றுவதற்காகவும்கூட புலிகளால் தனக்கு ஆபத்து என்று முறையிட்டார். இவர் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்று நன்கு தெரிந்தும் யாருமே இது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. குறிப்பாக புலிகளின் பிரதிநிதியாக தன்னைக்காட்டிக் கொள்ளும் “நாம் தமிழர்” சீமான் கூட இதனைக் கண்டிக்காதது ஆச்சரியமே!
·
புலிகள் மீதான
தடையும்
தொடரும்
சிறப்புமுகாம்
கொடுமையும்.
ஜெயா
அம்மையார் தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடர்ந்து பெறுவதற்காகவே புலிகள் மீதான தடையை நீடிக்க ஆதரவு வழங்கி வந்தார். அதேபோல் கலைஞர் கருணாநிதியும்கூட தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடருவதற்காகவே இல்லாத புலிகள் அமைப்பு மீதான தடைக்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தார். இதில் மிகக்கொடிய கொடுமை என்னவெனில் புலிகளுக்காக குரல் கொடுப்பதாக கூறும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்களும்கூட கலைஞரும் ஜெயா அம்மையாரும் தமது கறுப்பு பூனை பாதுகாப்பை தொடர்வதற்காகவே இப்படி புலிகளை தடை செய்கின்றனர் என்பதைக்கூட மக்களுக்கு தெரிவிப்பதில்லை.
கலைஞரும்
ஜெயா அம்மையாரும் தமது சுயநலங்;களுக்காக எப்படி புலிகள் மீதான தடையை நீடித்து வந்தனரோ அதேபோல் புலிகள் மீதான தடைக்கு உதவும் முகமாக சிறப்பு முகாமையும் மூடாமல் பாதுகாத்து வந்தனர்.அப்பாவி ஈழத்தமிழ் அகதிகளைப் பிடித்து புலிகள் எனக் கணக்கு காட்டி சிறப்பு முகாமில் அடைத்து வந்தனர். தமது கறுப்பு பூனை பாதுகாப்பிற்காக அப்பாவி அகதிகளைப் பலி கொடுத்தனர். ஆனால் இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பவர்கள் என்று இன்றும்கூட பல்லாயிரம் தமிழர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள்.
·
முன்னாள் காவல்துறை
அதிகாரியின்
வாக்குமூலம்
ராஜீவ்
காந்தி கொலையில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் ஒரு அப்பாவி எனப் பலர் ஆரம்பம் முதல் கூறி வந்தனர். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்திய அரசும் ஏற்கவில்லை. ஆனால் அந்த வழக்கை விசாரணை செய்த ஒரு அதிகாரி பேரறிவாளனின்
வாக்குமூலத்தை தான் மாற்றி பதிவு செய்ததால்தான் அவர் தண்டனைக்குள்ளானார் என ஒப்புதல் வாக்குமூலம்
அளித்த பின்பே அப்பாவி
பேரறிவாளன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டார் என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தும் பேரறிவாளன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் அவர் ஒரு அப்பாவி என்பது ஒரு அதிகாரி மூலம் வெளி உலகிற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புமுகாம்
அகதிகளைப் பொறுத்தவரையில் ஒரு உயர் காவல்துறை அதிகாரியே “அகதிகள் அப்பாவிகள் என்றும் சட்ட விரோதமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும்
தெரிவித்தும்கூட அது குறித்து யாருமே அக்கறை கொள்ளாதது பேரறிவாளனைவிட மோசமான நிலையிலேயே ஈழ தமிழ் அகதிகளின்
நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
முன்னாள்
காவல்துறை தலைவரான வைகுந் அவர்கள் “நான் சமாளித்த சவால்கள்”
என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் சிறப்பு முகாம் குறித்து பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஈழ அகதிகளை அடைத்து வைப்பது பற்றி அவர் குறிப்பிடுகையில்
“வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை இங்கு வைத்து நாம் பாதுகாக்கும்போது அதை முழுமையாக உறுதி செய்வதற்குச் சட்டரீதியிலான அதிகாரம் நமது காவல்துறைக்குத் தரப்படவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பாகக் கவனிக்க வேண்டும். வெளிநாட்டவர் சட்டத்தின் 2(2)(இ) பிரிவின்படி உப்புச்
சப்பில்லாத சட்டப்போர்வையில் அதுவும் ஜந்தாண்டுகள் வெளிநாட்டவரை வெளியே சுதந்திரமாக நடமாட முடியாதபடி முழுமையாக ஒரு இடத்தில் அடைத்து வைப்பதற்கு நமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் கூறுகையில் “வெளிநாட்டவர் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவைத் தவிர அவர்களை சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்திருக்க வேறு எந்த சட்டரீதியான அதிகாரத்தையும் நாம் பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்த்தால் அவர்கள் கைதிகளும் இல்லை. விசாரணைக் கைதிகளும் இல்லை. ஆகவே அவர்களை சிறைத்துறை விதிகளைக் கொண்டு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்த நிலையாக இருந்தது”
என்கிறார்.
வைகுந்
அவர்கள் ‘கியூ பிராஞ்ச்;’ புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த காலத்திலேயே வேலூர் சிறப்புமுகாமில் இருந்த அகதிகள் சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றனர். இது குறித்து வைகுந் அவர்கள் தனது புத்தகத்தில் குறிப்பிடுகையில் “திப்புமகாலில் இருந்தவர்களை நான் இலங்கை தமிழர்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர போராளிகள் என்றல்ல. ஒரு சாதாரண இலங்கை தமிழன் யார்? இலங்கைப் போராளி யார்? என்பதைப் பிரித்து பார்க்க நமது மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறையிடம் எவ்விதமான உறுதியான நெறிமுறைகளும் கிடையாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். மத்திய உளவு அமைப்புகளுக்குகூட ஒரு சாதாரண அகதி யார்? தீவிரவாதி யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ள எவ்விதமான உறுதியான நெறிமுறைகளும் இல்லை என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்”
என்கிறார்.
அத்தோடு
“திப்புமகால் என்பது சிறையல்ல. வெறும் சிறப்பு அகதிகள் முகாம் தான். மேலும் அதில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் எந்த சிறை விதிமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல. எனினும் அதைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், கண்காணிப்பு கோபுரங்களும், ஏ.கே. 47 துப்பாக்கிகளும்
இருந்தன. ஆனால் இவையெல்லாம் தேவையில்லாத பயனற்ற சட்டத்திற்கு உட்படாத ஒரு பணி என்பதை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் புரியும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள்
காவல்துறை தலைவர் வைகுந் அவர்கள் “சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” என்கிறார். ‘அவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும்’ கூறுகிறார்.
அதுமட்டுமல்ல “அடுத்தடுத்து
வந்த மத்திய மாநில அரசுகள் பின்பற்றி வரும் கொள்கைகளினால் ஏற்படும் குழப்பத்திற்கு எதற்காகத் தேவையில்லாமல் பொலிஸ் மீது பழி போட வேண்டும்?” எனவும் கேட்கிறார்.
முன்னாள்
காவல்துறை தலைவர் மட்டுமன்றி வேலூர் சிறப்புமுகாம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நீதிபதி
சிங்காரவேலு அவர்களும் தனது அறிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இரண்டையுமே குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவ்வாறு
காவல் துறை தலைவர் மற்றும் நீதிபதி எல்லாம் குற்றம்சாட்டியும்கூட மத்திய மாநில அரசுகள் எவ்வித அக்கறையுமின்றி சிறப்புமுகாம்களை தொடர்ந்தும் சட்டவிரோதமாக இயக்கி வருகின்றன.
·
அதிகாரிகளின் அதிகார
துஸ்பிரயோகம்
1991ல் ராஜிவ்
காந்தி கொலை செய்யப்பட்ட பின் தமிழகக் காவல்துறை நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களை மனித வேட்டையாடிய போது அதற்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பியவர் இர.சிவலிங்கம் அவர்கள்.
அதற்காக அவர் கைது செய்யப்பட்டு கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் சிறையிலிடப்பட்டு வதையுற்றார். அவர் தனது சிறப்புமுகாம் கோர அனுபவத்தை “மக்கள்
மன்றம்” ஏட்டில்
விபரித்து எழுதியுள்ளார். அதில் அவர் “என்னைக் கைது செய்து உடனடியாகக் காஞ்சிபுரம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டிருந்தது என்றால் நம்பமுடியவில்லை.
கடந்த
பத்தாண்டுகளாக இந்தியாவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வந்த என்னை திடீர் என்று அகதியாக்கி பொலிஸ் காவலில் அகதிகள் முகாமில் வைக்க அரசுக்கு என்ன கேடு வந்தது? இன்றுவரை இந்தக் கேள்விக்கு விடையில்லை.
நான்
அகதியாக இந்தியாவிற்கு வரவில்லை. அரசிடம் அடைக்கலம் கோரவில்லை. ஜந்து பைசா உதவி கோரவில்லை. எனது முந்தையர் நாட்டுக்கு என் சுயவிருப்பப்படி வந்து குடியேறி அரசாங்க அனுமதியுடன் பொதுத்தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒருவனை எவ்வித எச்சரிக்கையும் எதுவுமின்றி சிறைபிடிக்கும் செயலை யார் செய்வார்? ஏன் செய்வார்? இந்தியா சனநாயக நாடுதானா? சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கும் நாடுதானா?” என்று கேட்கிறார்.
அவர்
மேலும் குறிப்பிடுகையில் “தாயகம்
திரும்பிய இந்தியத் தமிழர்களை தொடர்ந்து ‘இலங்கைத் தமிழர்கள்’
என்று அழைப்பதும், அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற விசமப் பிரச்சாரம் செய்வதும,; ஒரு முக்கிய அரசியல் பொழுது போக்காகிவிட்டது. இதனை நம்புகின்ற அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் ஏராளம்.
லீனா
நாயர் என்ற நீலகிரிக் கலெக்டர் இந்த விசமப் பிரச்சாரத்தை ஆராய்ந்து பாராது பயங்கர புலிவேட்டை ஆடினார். பல அப்பாவித் தமிழர்களைத்
துன்புறுத்தினார்.
அந்த
அம்மையாரின் கைங்கரியத்தால்தான் நமக்கும் சிறப்புமுகாம் செல்லும் வாய்ப்பேற்பட்டது. தாயகம் திரும்பியோருக்குக் குரல் கொடுப்பதையே குற்றமாகக் கருதி நமக்கும் புலி வேடம் போட்டு அதிகார துஸ்பிரயோகம் செய்த ஜ.ஏ.எஸ்
அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது சட்டம் எளிதில் இடந்தருவதில்லை” என்கிறார்.
தாயகம்
திரும்பிய மலையக தமிழர்கள் சட்டப்படி இந்திய குடிமக்கள். அவர்களை வெளிநாட்டவர் சட்டப்படி சிறப்புமுகாமில் அடைக்க முடியாது. ஆனால் லீனாநாயர் என்ற ஒரு அதிகாரி அது குறித்து எந்த கவலையும் இன்றிப் பொறுப்பற்ற முறையில் அவர்களை சிறப்பு முகாமில் அடைத்துள்ளார் என்பதற்கு இர.சிவலிங்கம் அவர்கள்
ஒரு உதாரணமாகின்றார்
·
இந்திய பிரசைகளையும்
சிறப்புமுகாமில்
அடைத்த
கொடுமை
தமிழக
அரசு மட்டுமன்றி பல அதிகாரிகளும் பொறுப்பற்ற
தன்மையுடனே செயற்பட்டுள்ளனர். அவர்கள் தாயகம் திரும்பிய தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களைக்கூட சிறப்புமுகாமில் அடைத்துள்ளனர்.
திருமதி.
வெங்கடேஸ்வரி ஒரு இந்தியப் பெண். அவர் மதுரையைச் சேர்ந்தவர். அவரையும்
அந்நியர் சட்டத்தின் கீழ் செங்கற்பட்டு சிறப்புமுகாமில் சிறை வைத்தார்கள். வெங்கடேஸ்வரி தான் ஒரு இந்தியப் பெண் என்பதை எடுத்துரைத்து மேலதிகாரிகளுக்கு எத்தனையோ முறையீடு செய்தும் யாரும் அதனைக் கவனிக்கவில்லை. இறுதியாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது விடுதலையைப் பெற்றார். வெங்கடேஸ்வரியை சட்ட விரோதமாக சிறை வைத்ததற்காக தமிழக அரசு ரூ.50,000 நட்டஈடாகவும்; தாசில்தார்
தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.5,000 உம் அந்த அம்மாவுக்கு தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது
செங்கல்பட்டு சிறப்பு முகாமின் கொடுமையை ஈவிரக்கமற்ற நிர்வாகத்தை உலகுக்கு உணர்த்தியது. ஓர் இந்தியப் பெண்மணியை எப்படி அந்நியர் சட்டத்தின் கீழ் சிறை வைக்க முடியும்? இது தவறு என்று
உணர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் தேவையா? எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் செங்கல்பட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறதென்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
·
சட்டவிரோதமான சிறப்புமுகாம்கள்
செங்கல்பட்டு
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள்
ஒரு சட்டதரணி. அவர் இந்த வெளிநாட்டவர் சட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் “அந்நியர் சட்டம் என்பது 1946ம் வருடம் மத்திய
அரசால் ஏற்படுத்தப்பட்டது. பொதுவாகவே காமன் வெல்த் நாடுகளுக்கு உட்படாத
பிற அந்நிய பிரஜைகளின்
நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதற்காக இயற்றப்பட்ட சட்டம். இச்சட்டம் இலங்கைப் பிரஜைகளையும் பாதிக்காது. ஆனால் 1958ம் ஆண்டு உள்நாட்டு
அமைச்சு வெளியிட்ட அரசாணைப்படி இந்த சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை மாநிலங்களுக்கு வழங்கிய அரசாணையும் இதை இலங்கை அகதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும் உள்நாட்டு
வெளிநாட்டு சட்டங்களுக்கு எதிரானது என்பதும் சர்வதேச மனித உரிமைக்கும் சர்வதேச
அகதிகள் பற்றிய ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் சட்ட நிபுணர்களின் முடிவு.
குறிப்பாக இந்தியா
இலங்கை அகதிகளுக்கும் எதிராக அமுல் படுத்த முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. குறிப்பாக தமிழக அரசு இந்தச் சட்டத்தை அமுல் படுத்தும் முறை கேலிக் கூத்தானது என்பதும் எல்லா
சட்டங்களுக்கும் முரண்பாடானது என்பதும் ஜயமில்லை.
இது
முக்கியமான சட்டப் பிரச்சனை என்பதால் இதன் நுணுக்கங்களை மேலும் விவரிக்காமல் இத்துடன் விடுகிறேன். இந்த சட்டத்தை இவ்வாறு தமிழ்நாடு துஸ்பிரயோகம் செய்வதை இன்னும் முறையாக எவரும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்று வாதாடவில்லை. அவ்வாறு செய்யின் இன்று சிறப்பு முகாம்களில் உழலும் பலருக்கு விடிவேற்படும் என்பதில் ஜயமில்லை”
என்கிறார்.
தமிழ்நாட்டில்
ஈழ அகதிகள் தொடர்பாக அனுதாபம் உள்ள பல சட்டத்தரணிகள் இருக்கின்றனர்.
அவர்களில் யாராவது ஒருவர் இதனை உச்சநீதிமன்றம் கொண்டு செல்வாரேயானால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு நிச்சயம் விடுதலை கிட்டும் வாய்ப்புள்ளது. யாராவது செய்வார்களா?
·
தாயகம் திரும்பியோரும்
சிறப்புமுகாமில்
அடைக்கப்பட்டனர்
இர.சிவலிங்கம் அவர்கள் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர். அவர் ஊட்டியில் உள்ள தாயகம் திரும்பிய மக்களுக்காகப் பாடுபட்டவர். அவர் எந்த வன்முறை அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டவரல்ல. சனநாயக அமைப்பில் நம்பிக்கை கொண்டவர். அவர் ஒரு படித்த சட்டத்தரணியும்கூட. அவரை வயதானவர் என்றும் பாராமல் சிறப்புமுகாமில் அடைத்தனர். அவரை விடுதலை செய்யும்படி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஸ்ணய்யர் கேட்டுக்கொண்டார். அப்போதைய இலங்கை அமைச்சர் தொண்டமான் அவர்களும் கேட்டுக்கொண்டார். பல மனிதவுரிமை அமைப்புகள்
கேட்டுக்கொண்டன. இருந்தும் தமிழக அரசு அவரை விடுதலை செய்ய மறுத்தது. அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் பொலிஸ் அவரை சட்டவிரோதமாக சங்கிலியால் பிணைத்துத் துன்புறுத்தியது. இதுகுறித்து அவரது மனைவியினால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்பு, தான் தண்டிக்கப்படலாம் என அச்சப்பட்ட நிலையிலேயே
அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வந்தது.
அதிகாரிகளின்
அதிகார துஸ்பிரயோகத்திற்கு கொடூரமாக வதைபடுகின்ற அப்பாவிகளுக்கு இர.சிவலிங்கம் அவர்கள்
ஒரு சிறந்த உதாரணமாகும்.
தாயகம்
திரும்பிய இந்திய வம்சாவழி தமிழர்களும் சட்டவிரோதமாக செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டமைக்கு இன்னொரு உதாரணம் முனியம்மா குடும்பமாகும். முனியம்மா மதுரையைச் சேர்ந்தவர். அவரது கணவன் பெயர் பெருமாள். அவர்கள் மகன் பெயர் செல்லத்துரை. இந்த மூவருமே தாயகம் திரும்பிய இந்தியர்கள். பெருமாள் மதுரை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவியும் மகனும் எந்தக் காரணமும் இன்றி செங்கற்பட்டு சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து மேலும் மூன்று தாயகம் திரும்பியோரும் பத்து மாதங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பத்து மாதங்களுக்கு பிறகுதான் “கியூ” பிரிவு மேதாவிகள் இந்த ஜவரும் தாயகம் திரும்பியோர்கள், ஆதலால் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து வைக்க முடியாது என்று கண்டு பிடித்தனர். அதன் பின்னர் அந்த ஜவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பரம ஏழைகள். அவர்கள் ஊரான மதுரைக்குத் திரும்பிச் செல்ல அவர்களிடம் எந்த வசதியும் இல்லை. பஸ் கட்டணம் செலுத்தப் பணமில்லை. மனிதாபிமான அடிப்படையில் முறைப்படி பார்த்தால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்களோ அங்கு கொண்டு போய் அவர்களை விட வேண்டும். ஆனால் பத்து மாதம் தவறுதலாக அவர்களைச் சிறைப்படுத்திக் கொடுமை செய்து விட்டோமே என்று எவ்வித மனசாட்சி உறுத்தலுமின்றி “கியூ” பிரிவு அதிகாரிகள் அந்த ஏழைகள் வீடு திரும்புவதற்கான எவ்வித உதவியும் செய்யவில்லை. அவர்கள் உள்ளேயிருந்த அகதிகளிடம் கெஞ்சி மன்றாடி பணந்திரட்டி ஊர் போய்ச் சேர்ந்தனர். என்ன கொடுமை இது? இந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம்கூட இரக்கம் இல்லையா?
சிறப்புமுகாமில்
புலிகளே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழ்நாடு அரசு
சொல்லி வருகிறது. அவ்வாறு வைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள்
என்றும் அவர்களை வெளியே விட்டால் தமிழ்நாடு அமைதிக்கு ஆபத்து ஏற்படும் என கியூ பிரிவு
பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆனால் கியூ பிரிவு தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை தலைவர் வைகுந் அவர்களோ அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அகதிகள் என்றும் அவர்களை சட்டவிரோதமாகவே காவலில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி அகதிகள் மட்டுமல்ல தாயகம் திரும்பியோர் மற்றும் தமிழ்நாட்டு தமிழரும்கூட சிறப்புமுகாமில்
அடைக்கப்படுவதை மேலே பல உதாரணங்கள் மூலம்
கண்டோம். இங்கு சொல்லப்பட்டவை மிகச் சிலவே. இது போல் ஆயிரமாயிரம் கண்ணீர்க்கதைகள் உள்ளன.
இங்கு
இவற்றைவிட கொடுமையான இன்னொரு விடயம் என்னவெனில் கனடாப் பிரஜாவுரிமை பெற்ற தமிழக தமிழரும்கூட இந்த அதிகாரிகளினால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே.
·
கனடாப் பிரசையையும்
சிறப்புமுகாமில்
அடைத்த
கொடுமை
சோமு
என்பவர் கனடியத் தமிழர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருச்சியில் இருக்கும் தனது தாய் தந்தையரைப் பார்ப்பதற்காகக் கனடாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரை “விடுதலைப் புலி” என்றும் ஜெயா அம்மையாரை தற்கொலைப் படையாக கொல்ல வந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். இவர் ‘தான் ஈழத்தமிழர் அல்ல என்றும் தனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றும் முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு எழுதினார். ‘தான் ஒரு தமிழ்நாட்டு தமிழர் என்றும் தனது தாய் தந்தையர் திருச்சியில் வாழ்ந்து வருவதாகவும்’ விளக்கமளித்து
அதற்குரிய ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் எந்த அதிகாரியுமே அதனைக் கண்டு கொள்ளவில்லை.
இறுதியாக
தனது கனடிய அரசுக்குத் தெரிவித்தார். கனடிய அரசு உடனே தனது டில்லி தூதர அதிகாரி ஒருவரை செங்கல்பட்டிற்கு அனுப்பி நேரில் பார்த்து உடன் நடவடிக்கை மேற்கொண்டது. அவர் மீண்டும் கனடா செல்ல வழியேற்படுத்திக்கொடுத்தது.
ஒரு
தமிழரை தமிழர் தேசம் என சொல்லப்படும் தமிழ்நாடு
அரசு பொறுப்பற்ற முறையில் சிறப்புமுகாமில் அடைத்தது. ஆனால் அந்நிய தேசமான கனடிய அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து அவரை மீண்டும் கனடா நாட்டிற்கு பாதுகாப்பாக எடுத்துக்
கொண்டது. என்னே வேடிக்கை இது?!
தமிழகத்தில்
இருந்து துரத்தப்பட்ட தமிழனுக்கு கனடாவில் குடியுரிமை. ஆனால் தமிழ்நாட்டில் சிறைவாசம். தமிழகமே இது தமிழன் வாழும் நாடு தானா? தமிழ்நாடு உண்மையில் தமிழர் நாடு தானா?
·
சிறப்புமுகாமில் பாலியல்
வல்லுறவுக்
கொடுமைகள்
சிறப்பு
முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிப் பெண்களை
தமிழக அதிகாரிகள் பாலியல் வல்லுறவு செய்கின்றனர் என்பது பலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாக இருக்கும். பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில், தமிழ் பெண்களை அதுவும் தமிழ்நாட்டை நம்பி வந்த அகதித் தமிழ்ப் பெண்களை தமிழக காவல்துறை அதிகாரிகளால் இவ்வாறு செய்ய முடியுமா? என்பதே அவர்கள் அதிர்ச்சியடைவதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால்
தமிழக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கடந்தகால வரலாறுகளை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமூட்டும் செய்தியாக ஒருபோதும் இருக்காது. ஏனெனில் இதே தமிழக காவல்துறையினர்தான் சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி என்ற பெண்ணைக் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அந்த அப்பாவிப் பெண்ணை கொலையும் செய்தார்கள். ஆனால் இது தற்கொலை மரணம் என காவல்துறை உயர்
அதிகாரிகளால் பொய்களால் மூடி மறைக்க முயன்றபோது மக்களுக்கு
உண்மையை வெளிப்படுத்துமுகமாக தோழர் லெனின் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையினர் அந்த காவல் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்த்தனர்.
அவ்வாறு
குண்டு வைத்தவர்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி ஆயுள்தண்டனை வழங்கியிருக்கும் தமிழ்நாடு அரசும் அதன் நீதித்துறையும் அந்த அப்பாவி பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தமைக்காக ஒரு காவல்துறை அதிகாரியையும் இதுவரை தண்டிக்கவில்லை.
இதுமட்டுமல்ல,
வாசாத்தியில் சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுவதாகச் சென்ற தமிழக
காவல்துறையினர் பல நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல்
வல்லுறவு செய்தனர். இது தொடர்பாக பல மனிதவுரிமை அமைப்புகள்
கண்டனம் தெரிவித்தன. இதனால் வேறு வழியின்றி நீதிமன்றம் 60 காவல்துறையினரை பல வருடங்களின் பின்னர்
தண்டித்தது. அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு எந்தவித நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு
தமது சொந்த தேச மக்களையே பாலியல் வல்லுறவு செய்யும் தமிழக காவல்துறையினர் அகதியாக வந்த, கேட்பதற்கு யாருமேயற்ற அனாதைகளான, அந்த அப்பாவி ஈழப் பெண்களை விட்டுவைப்பார்களா?
தமிழக
பொலிசார் தமிழக பெண்கள் மீது பாலியல் வல்லுறவு செய்வதையே கண்டு கொள்ளாத தமிழக அரசு, ஈழத் தமிழ் அகதிப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்யும்போது கண்டு கொள்ளுமா என்ன?
காவல்துறை
மட்டுமா பாலியல் துஸ்பிரயோகம் செய்தது? காவல்துறையை கண்டிக்க வேண்டிய நிர்வாகத்துறை அதிகாரிகளுமல்லவா பாலியல் சேட்டைகள் புரிந்தனர். காவல்துறை, நிர்வாக துறை, நீதிமன்றம் எல்லாம் சேர்ந்து ஒரு தவறை செய்யும்போது அதற்கு எதிராக அதுவும் அகதியாக வந்தவர்களால் என்னதான் செய்ய முடியும்?
இங்கு
வேடிக்கை என்னவெனில் சிங்கள ராணுவம் இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்வதாக கணணீர் விடும் தமிழக அரசியல்வாதிகள், தமது
மண்ணில் தமது கண் முன்னே தமிழக அதிகாரிகளால் அகதிப் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது குறித்து கண்ணீர் விடுவது கிடையாது. ஒரு கண்டனம்கூட தெரிவிப்பதும் கிடையாது. இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழக அதிகாரிகளால் அகதிப்பெண்கள் பலியாவதைத் தடுக்க முடியாதவர்கள் ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ்; பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை மட்டுமல்ல கொடுமையான வேதனையும்கூட.
சிலர்
தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்போம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இவை யாவும் ஏதோ இரகசியமாக நடந்த அல்லது நடக்கும் விடயங்கள் அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அரசசார்பற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்குகூட
தெரியப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் யாருமே கண்டு கொள்ளவுமில்லை. எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவுமில்லை. இதுதான் இந்த அகதிகளின் துர்ப்பாக்கிய நிலையாகும்.
•
துறையூர் சிறப்புமுகாமில்
நடந்த
பாலியல்
வல்லுறவுகள்
1992களில் ஜெயா
அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு
முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் பல ஈழத்து அகதிகள்
அடைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறான கொடிய சிறப்பு முகாம்களில் ஒன்றாக துறையூரில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமும் விளங்கியது. இத்; துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிவா என்ற விடுதலைப் புலி போராளி 17.10.1994 அன்று கரூர் நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் துறையூர் சிறப்புமுகாமில் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு நிகழ்வுகளையும் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்ட சில பகுதிகளை இங்கே தருகிறேன்.
“24-7-92 முதல் நான் துறையூரில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் என்னும் பெயரில் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாமாகவே இது இருக்கின்றது. ஏனெனில் சிறையில் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சொற்பச் சலுகைகள் கூட இச்சிறப்புமுகாமில் எமக்கு மறுக்கப்படுகிறது. தமிழக அரசால் நடத்தப்படும் இச் சிறப்பு முகாம்கள் என்பது ஈழத் தமிழ் அகதிகளை கொடுமைப்படுத்தும் சித்திரவதை முகாம்கள் என்பது அனைவருக்கும் தெரியும். துறையூர் சிறப்புமுகாமில் கணவன், மனைவி பிள்ளைகளை பிரித்து தனித்தனி சிறைக்கூடங்களில் ஷெல்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். கணவன் தனது மனைவி பிள்ளைகளுடன் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. தனியாக வைக்கப்பட்டிருக்கும் இப் பெண்களை இரவு நேரங்களில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி மருத்துவமனைக்கு என வெளியே கூட்டிச்
சென்று லாட்ஜில் (தங்கு விடுதிகளில்) வைத்து பாலியல் பலாத்காரங்கள் நிகழ்கின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்களே உயர் அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை."
மேற்கண்டவாறு
போராளி சிவா அவர்கள் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தும்கூட கரூர் நீதிமன்றமானது இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றம்
மட்டுமல்ல அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயா அம்மையார் கூட தான் ஒரு பெண்ணாக இருந்தும்கூட தனது ஆட்சியில் ஒரு அகதிப் பெண்ணுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
•
சிறப்புமுகாமில் ரீட்டா என்ற
பெண்ணுக்கு
நடந்த
கொடுமை
துறையூர்
சிறப்புமுகாமில் 1993
ஆண்டில் “ரீட்டா” என்ற ஒரு
இளம் பெண் அடைக்கப்பட்டிருந்தார். இவர் இலங்கையில் மன்னார் பகுதியைச்
சேர்ந்தவர். இந்த பெண்ணை துறையூர் சிறப்புமுகாம் காவல்துறை அதிகாரிகள் இரவில் மருத்துவமனைக்கு என்று அழைத்து சென்று விடுதிகளில் வைத்து பாலியல் வல்லுறவுகள் மேற்கொண்டனர். இவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்தார். ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேறுவழியின்றி அந்த அப்பாவி பெண் இக் கொடுமைகளை சகித்து கொண்டார். ஆனால் அப்போது துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சில “புளட்” அமைப்பு போராளிகள்; இந்த பெண்ணால் தமக்கு அவமானம் எனக் கருதினார்கள். அவர்கள் தாம் விடுதலை பெற்று இலங்கைக்கு திரும்பும்போது தம்முடன் இந்த
பெண்ணையும் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் இந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி அழைத்துச் சென்று வவுனியாவில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.
காவலில்
வைக்கப்பட்டிருந்த பெண்ணை நிர்ப்பந்தித்து பாலியல் வல்லுறவு மேற்கொண்டமைக்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையே “புளட்” அமைப்பினர் உண்மையில் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த
அப்பாவி பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்று வவுனியா காட்டில் கொலை செய்தது மிகவும் கொடுமையானது. தங்களின் செயலால் ஒரு அப்பாவிப் பெண் கொல்லப்பட்டுவிட்டாள் என்பதை தெரிந்த பின்னரும்கூட சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் திருந்தவில்லை. தமது தவறுக்காக மனம் வருந்தவும் இல்லை. மாறாக தொடர்ந்தும் தமது கொடுமைகளை அகதிப் பெண்கள் மீது ஈவு இரக்கமின்றி தொடர்ச்சியாக இழைத்தனர். இதில் கொடுமையான வியப்பு என்ன என்றால் இதுவரை இந்த அதிகாரிகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவும் இல்லை. தமிழக அரசாலோ அல்லது தமிழக அரசியல் தலைவர்களாலோ கண்டிக்கப்படவும் இல்லை என்பது மிகவும் துரதிருஸ்டவசமானது.
•
நிர்வாகத்துறை அதிகாரியினால்
இழைக்கப்பட்ட
கொடுமை
ஈழஅகதிப்
பெண்களை காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல நிர்வாக துறை அதிகாரிகளும் பாலியல் வல்லுறவு செய்த சம்பவங்கள் ஏராளம். இந்தக் கொடுமைகளை சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்ட
நபர்களை சிறப்பு முகாமில் அடைத்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
கரூர்
அகதிமுகாமில் கந்தையா என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் இலங்கையில் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். இவரை “ஈழத்து பாரதி” என்று இலங்கையில் அழைப்பார்கள். இவர் தமிழீழம் குறித்து பல உணர்ச்சிக் கவிதைகளைப்
பாடியுள்ளார். அதனால் இவரை இலங்கை இராணுவம் கொலை வெறியோடு தேடியது. இலங்கை இராணுவத்திற்கு அஞ்சி தமிழகம் சென்ற கவிஞர் கந்தையா கரூர் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு அப்போது 80 வயது.
கரூர்
அகதிமுகாம் பொறுப்பாளரான தாசில்தார் ஒருவர் அகதி பெண் ஒருவரை அழைத்துச் சென்று லாட்ஜில் வைத்து பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார். இதை அறிந்த கவிஞர் கந்தையா அடுத்த நாள் தாசில்தாரிடம் “தேன் நிலவு எப்படி இருந்தது?” என்று கிண்டலாகக் கேட்டிருக்கிறார். ஒரு அகதி தன்னைப் பார்த்துக் கேட்பதா என ஆத்திரம்
கொண்ட தாசில்தார் கியூ பிரிவு பொலிசாரிடம் சொல்லி இவரை புலி என முத்திரை குத்தி
வேலூர் சிறப்புமுகாமில் அடைத்துவிட்டார். ஒரு 80 வயது பெரியவர் தன் இனப் பெண்ணை அதிகாரத்தை
பயன்படுத்தி ஒரு தாசில்தார் பாலியல் வல்லுறவு செய்வதை தட்டிக் கேட்டதற்காக புலி என்று சிறப்புமுகாமில் அடைத்தால் அதன் பின் யாருக்குத்தான் இத்தகைய தவறுகளை தட்டிக் கேட்க துணிவு வரும்? ஒரு தாசில்தாரின் பாலியல் தவறை தட்டிக் கேட்டமைக்காக அவரை புலி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமில் அடைக்க ஒரு அரசு இடங்கொடுக்கிறதாயின் அந்த தமிழக அரசின் கீழ் அகதிகளின் பாதுகாப்பிற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? காவல்துறை அதிகாரிகளின் தவறை கண்டிக்க வேண்டிய நிர்வாகத் துறை அதிகாரியான தாசில்தாரே அகதிப் பெண்கள் மீது பாலியல் தவறு இழைத்தால் அப்புறம் அகதிப் பெண்களுக்கு யார் தான் பாதுகாப்பு?
•
வேலூர் சிறப்புமுகாமில்
நடந்த
கொடுமையும்
காவல்துறை
அதிகாரி
வைகுந்தின்
பெருமையும்
முதன்
முதலாக வேலூர் கோட்டையில்தான் சிறப்புமுகாம் அமைக்கப்பட்டது என்பது யாவரும் அறிவர். இதில் திப்புமகாலில் புலிப்போராளிகள் என 150 இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதன் அருகில் இருந்த கைதர் மகாலில் குடும்பத்தவர்கள் 400பேர் அடைக்கப்பட்டிருந்தார்கள். இதில் கைதர் மகாலில் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் பகலில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறு வெளியே செல்லும் பெண்களை வேலூர் ஆயுதப்படை பொலிசார் தமது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்தினார்கள். இதையறிந்த திப்புமகாலில் இருந்த புலிகள் சிலர் இரண்டு மகால்களுக்கும் இடையில் உள்ள உள்பாதை ஒன்றை பயன்படுத்தி இரகசியமாக கைதர்மகால் சென்று அப் பெண்களை பலமாக அடித்து தண்டனை வழங்கினார்கள்.
அடுத்தநாள்
இந்தச் செய்தி உயர் அதிகாரிகளுக்குச் சென்றுவிட்டது. அவர்கள் அகதிப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் பொலிசாரைக் கண்டிப்பதற்குப் பதிலாக புலிகள் வந்துசென்ற பாதையையை சீமெந்து பூசி அடைத்துவிட்டார்கள். இதையே அப்போது பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்த வைகுந் அவர்கள் தான் எழுதிய “நான் சந்தித்த சவால்கள்”
என்னும் புத்தகத்தில் புலிகள் தப்பிப்போக இருந்த பாதையை தாங்கள் அடைத்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
புலிகள்
ஏன் கைதர் மகாலுக்கு வந்தார்கள்? ஏன் அந்த பெண்களைத் தாக்கினார்கள்? என்பதெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் தப்பிப் போக இருந்தாக ஒரு உயர் அதிகாரியே பெருமையாகக் குறிப்பிடுகிறார் எனில் தமிழக காவல்துறையினர் ஈழ அகதிப் பெண்கள்
மீதான பாலியல் வல்லுறவு குறித்து எத்தகைய மனோபாவம் கொண்டுள்ளனர் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா?
•
திருச்சியில் காவல்துறை
அதிகாரிகளின்
பொறுப்பற்ற
தன்மையால்
பாதிக்கப்பட்ட
அப்பாவி
அகதிப்பெண்கள்
திருச்சியில்
தங்கியிருந்த ஒரு அகதிப் பெண் தமது குடும்ப வருமானத்திற்காக விமானம்
மூலம் இலங்கை சென்று பொருட்கள் வாங்கி வந்து விற்று பிழைப்பு நடத்தினார். இவர் இலங்கையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய கணவன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதால் தமது பிள்ளைகளுக்காக இந்த வியாபாரத்தை இவர் மேற்கொண்டார். இது சட்டரீயான ஒரு வியாபாரம் என்றாலும் விசா மற்றும் ‘கிளியரன்ஸ்’ விடயங்களுக்காக
அதிகாரிகளின் தயவு தேவைப்பட்டது. இதனைப் பயன்படுத்தி திருச்சி உளவுப்படை அதிகாரிகள் தமது தேவைகளை பூர்த்தி செய்தார்கள்.
வன்னி
சென்று தமக்கு வேண்டிய தகவல்களை திரட்டி தருமாறும் இல்லையேல் வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டினார்கள். இதனால்
வேறுவழியின்றி அந்த பெண் வன்னி சென்று உளவுத் தகவல்களைத் திரட்ட சம்மதித்தார். இதையறிந்த புலிகள் இவர் வன்னி சென்றபோது கைது செய்து இரகசியமாக கொலை செய்துவிட்டார்கள்.
தாங்கள்
அனுப்பிய பெண் கொலை செய்யப்பட்டுவிட்டாள் என்பதை அறிந்த பின்னரும்கூட சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கொஞ்சம்கூட இரக்கப்படவில்லை. தம்மால் அந்த பெண்ணின் பிள்ளைகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனவே என்றுகூட அந்த அதிகாரிகள் கவலைப்படவில்லை.
இதே போன்று
இந்த காவல்துறை அதிகாரிகளால் திருச்சியில் இன்னொரு பெண் குடும்பமாக சீரழிக்கப்பட்டார். திருச்சியில் கே.கே நகர்
பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி வசதியாக வாழ்ந்த அந்த குடும்பத்து பெண்ணை பாலியல்ரீதியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக திருச்சி கியூ பிராஞ் உதவி கண்காணிப்பாளார் அப் பெண்ணின் கணவரை புலிகளுக்குப் பெற்றோல் கடத்தினார் என்ற பொய்க் குற்றச்சாட்டில் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்தார். கணவரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் அவரை சிறப்புமுகாமில் இருந்து விடுவிப்பதற்காகவும் அந்த பெண் வேறு வழியின்றி அந்த அதிகாரியின் பாலியல் இச்சைகளுக்குச் சம்மதித்தார். இதை அறிந்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் தன்னுடனும் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என அந்த பெண்ணை
வற்புறுத்தினார். அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த அதிகாரி உடனே அந்த பெண்ணை போதைப் பொருள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்துவிட்டார். அந்த பெண் ஒருவாறு நீதிமன்றின் மூலம் ஜாமீனில் விடுதலையானதும் சிறைவாசலில் வைத்து மீண்டும் கைது செய்து மேலூர் சிறப்பு முகாமில் அடைத்து விட்டார்கள். இரு அதிகாரிகளின் காம வெறியால் ஒரு அகதிப் பெண் குடும்பமாக சீரழிக்கப்பட்டார். இதன்பின் எந்த பெண்ணிற்குத்தான்; அதிகாரிகளை எதிர்ப்பதற்கு துணிவு வரும்?
•
சிறப்புமுகாம் அகதிகளின்
அண்மைக்கால
போராட்டம்
திருச்சி
சிறப்பு முகாமில் இருக்கும் சுபாஸ்கரன் என்ற நபரின் மாமியார் அண்மையில் இறந்து விட்டார். தமிழகத்தில் அவருக்கு வேறு எந்த உறவினர்களும் இல்லாததால் அவரின் இறுதி சடங்கை சுபாஸ்கரன் தான் செய்ய வேண்டும். இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சுபாஸ்கரன் அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
சிறைகளில்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குக்கூட அவர்களின் உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது. இவ்வாறே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கும் அவரது உறவினரின் மரண சடங்கிற்குச் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சிறப்புமுகாமில் ஒரு அகதிக்கு இத்தகையை அனுமதி மறுப்பது என்பது சட்ட விரோதம் மட்டுமல்ல சிறப்புமுகாம் என்பது சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாமாக இருக்கிறது என்பதையும் நன்கு காட்டுகிறது.
சிறப்புமுகாமில்
தற்போது நபர் ஒருவருக்கு ஒருநாளைக்கு 70 ரூபாய் பணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இந்த 70 ரூபாயில்தான் உணவு உட்பட அனைத்து செலவுகளும் செய்ய வேண்டும். இது போதாது என்பதால் தமக்கு வழங்கும் பணத்தை அதிகரித்து தரும்படி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் கடந்த இரண்டு வருடங்களாக கோரி வருகின்றனர். சிறப்புமுகாமை நிர்வகிக்கும் அதிகாரிகள்கூட வழங்கப்படும் இந்த பணம் போதாது
என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இதனால்
வேறு வழியின்றி சிறப்புமுகாம் அகதிகள் தமக்கு வழங்கும் பணத்தை அதிகரிக்குமாறு கோரி கடந்த 15.03.2015 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். அவர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பத்திரிகைகள்கூட கண்டு கொள்ளவில்லை. மாடு வெட்டக்கூடாது என்று மாட்டின்மீது காட்டும் அக்கறைகூட இந்திய அரசு இந்த ஈழ அகதிகள் மீது
காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு மாட்டைவிடக் கேவலமாகவே ஈழ அகதிகள் தமிழ்நாட்டில்
வைக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும்.
•
சிறப்புமுகாம் கொடுமைக்கு
என்னதான்
முடிவு?
உலகத்தின்
கவனத்திற்கு குறிப்பாக தமிழக மக்களின் கவனத்திற்கு சிறப்புமுகாம் கொடுமைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழக மக்களால் மாத்திரமே இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும். அந்த மக்களால் மட்டுமே சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய முடியும். எனவே அவர்கள் கவனத்திற்கு இந்த சிறப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கொண்டு செல்வதே விடுதலையை விரும்புபவர்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment