11.04.1986 யன்று வீர மரணம் அடைந்த தோழர் மாறன் அவர்களுக்கு அஞ்சலிகள்.
இலங்கையில் அமைதிப்படையாக சென்ற இந்திய ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது. பல தமிழ் பெண்களை கற்பழித்தது. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. உடமைகள் சேதமாக்கப்பட்டன. இவற்றையெல்லாம் அமைதிப் பணியாக அரசு தொலைக்காட்சி பொய்ப்பிரச்சாரம் செய்தது. அதனைக் கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக தமிழ்நாடு விடுதலைப்படை சார்பில் கொடைக்கானல் டிவி டவரை தகர்க்கும் முயற்சியில் 11.04.1986 யன்று தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தோழர் மாறன் அவர்களின் தியாகம் மகத்தானது. அவர்களது உணர்வு பாராட்டத்தக்கது. அவருடன் நான் பழகிய நாட்கள் சிறிது ஆனாலும் மறக்க முடியாதவை. அந்த தாக்குதல் வழக்கிலேயே (கொடைக்கானல் வெடி குண்டு வழக்கு) என் மீது போடப்பட்டு எட்டு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.
இலங்கை தமிழர்கள் போராட்ட வரலாற்றில் தோழர் மாறன் அவர்களின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். தோழர் மாறன் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் எனது புரட்சி அஞ்சலிகளை செலுத்துகிறேன்.

No comments:
Post a Comment