1989களில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்நாடு அமைப்பு கமிட்டி தோழர்கள் சிலர் தோழர் சண்முகதாசனை பார்க்க விரும்பினார்கள். அவரை இந்தியா அழைத்து வரும்படி என்னிடம் கேட்டனர். ஆனால் தோழர் சண்முகதாசன் பயணம் செய்யக்கூடிய நிலையில் அவர் உடல் நிலை இல்லாததால் அவரை ஒரு வீடியோ பேட்டி எடுத்து தரும்படி கேட்டனர். அவர்களது விருப்பத்தை நான் நிறைவேற்ற முனைந்த போது அப்போது எனக்கு கொழும்பில் மிகவும் உதவிகரமாக இருந்தவர் எனது நண்பர் வரதன் என்ற வரதராஜன். அவர் தனது நண்பர் சீவகனையும் இன்னொருவரையும் அழைத்து வந்து சுமார் இரண்டு மணிநேர மதிப்புடைய ஒரு சிறந்த வீடியோவை எடுத்துக் கொடுத்தார்.
உண்மையில் அப்போது கொழும்பு மிகவும் பாதுகாப்பற்ற நெருக்கடியான காலகட்டம். அந்த நிலையில் வரதனும் அவரது நண்பர் சீவகனும் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. அவர்களது உணர்வுகளை பாராட்டுகிறேன். பின்பு லண்டனில் சீவகன் அவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது. அவர் தோழர் சண்முகதாசன் குறித்த ஒரு ஆவணப்படத்தை செய்து தந்திருக்கிறார்.மறக்க முடியாத பங்களிப்பு அது.
தற்போது நண்பர் வரதன் நியூசிலாந்தில் இருக்கிறார். அவர் லண்டனில் இருந்து வெளியாகும் புதினம் இதழில் தனது அனுபவங்களை தொடராக எழுதிவருகிறார். அவருடைய சிறந்த அனுபவங்கள் எழுத்து வடிவத்தில் வருவதை வரவேற்கிறேன்.

No comments:
Post a Comment