• லண்டனில் அம்மா!
லண்டனில் அம்மா என்றதும் ஜெயா அம்மையார் லண்டன் வருகிறாரா என்று நினைத்துவிடாதீர்கள். இது கேரள சாமி அம்மா பற்றியது.
எதிர்வரும் 23 திகதி (23.10.13) லண்டனில் அலெக்சான்டர் பலஸ் என்னும் புகழ் பெற்ற மண்டபத்தில் கேரளத்து சாமி “அம்மா” தனது பக்தர்களை சந்திக்க வருகிறார்.
இந்தியாவில் தனது மக்களின் குறைகளை தீர்க்க முடியாத இந்த அம்மா இங்கிலாந்து வந்து மக்களின் குறைகளை தீர்க்கவுள்ளாராம். நம்புங்கள் மக்களே!
ஒருபுறம் கலைநிகழ்ச்சி என திரைப்படத்துறையினர் வந்து பணத்தை சுருட்டி செல்கின்றனர். இன்னொரு புறம் இந்த சாமிகள் வந்து பணத்தை பிடுங்குகின்றனர். பாவம் தமிழ் மக்கள். இந்த லண்டன் குளிரில் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை இந்த பகல் கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர். இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த வழியில்லையா?
“கதவை திற காற்று வரும்” என்றார் நித்தியானந்தா சுவாமிகள். கதவைத் திறந்தால் காற்று வரவில்லை. மாறாக அவரும் ரஞ்திதாவும் கட்டிப் புரண்ட காட்சிகள் டி.வி யில் வந்தன. அடுத்து காஞ்சிப் பெரியவாள் நடிகை சுவர்ணலதாவுடன் சேர்ந்து கொலைக் கேசுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகிறார். இன்னொரு ஆசாரம் சாமி என்பவர் சிறுமி ஒருத்தியுடன் கொண்ட பாலியல் உறவுக்காக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அதேவரிசையில் இந்த அம்மாவும் இறுக்கி கட்டியணைத்து அருள் பாலிக்கின்றாராம். நிறைய ஆம்பிளைகள் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு காத்து கிடக்கின்றனர். இது என்ன வில்லங்கத்தைக் கொண்டு வரப்போகிறதோ தெரியவில்லை.
முள்ளிவாய்க்காலில் அவலம் நடந்தபோது இந்த அம்மா அருள் பாலிக்கவில்லை. இன்றும்கூட இந்த அம்மா அந்த பாதிக்கப்பட்ட மக்களை காண வன்னி செல்லவில்லை. மாறாக டாலர் பவுண்ட்ஸ் பெறுவதற்காகவே லண்டனுக்கு வருகிறார். இதை இந்த அப்பாவி தமிழ் பக்தர்கள் எப்போது உணரப் போகின்றார்கள்?
தந்தை பெரியார் ஏன் அடிக்கடி “வெங்காயம்” என்று கூறினார் என்பது இப்போது புரிகிறது. ஆனால் இந்த முட்டாள் வெங்காயங்களை எப்படி திட்டினாலும் உறைக்காது.

No comments:
Post a Comment