• அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த ஆண்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை ஆண்டாக அமைய உழைப்தென்று சபதம் கொள்வோம்.
2013 ஆண்டு கழிந்து 2014 ம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கம்போல் வாழ்த்துகளும் புதுவருட தீர்மானங்களும் வந்து செல்கின்றன. ஆனால் மக்களுக்கு எந்த விடிவும் கிட்டவில்லை. மாறாக மேலும் மேலும் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்படுகின்றன. இந்த கொடுமைக்கு என்னதான் முடிவு?
இலங்கையில் யுத்தம் முடிந்து 4 வருடங்களாகிவிட்டது. பாலும் தேனும் ஓடும் என்றார்கள். ஆனால் யுத்தகாலத்திலும் பார்க்க அதிகமாக பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. உலகிலேயே சிறுவர் பாலியல் அதிகமான நாடு என்று இலங்கை பெயர் எடுத்துள்ளது. இதுதான் மகிந்த சிந்தனையா?
இலங்கையில் இன்னும் பலர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது விசாரணையும் இல்லை. விடுதலையும் இல்லை. இதன் அர்த்தம் என்ன?
இந்தியாவில் சங்கரராமனைக் கொன்ற சங்கராச்சாரியார் விடுதலை. நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடி விடுதலை. ஆனால் பற்றரி வாங்கி கொடுத்தமைக்காக பேரறிவாளனுக்கு மரண தண்டனை. சந்தன வீரப்பனை நேரில் பார்க்காதவர்களுக்கு சந்தன வீரப்பனுக்கு உதவியதாக மரண தண்டனை. இது என்ன நீதி என்றால் இதுதான் இந்திய நீதி என்று திமிராக கூறுகிறார்களே!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரத்து குரல் கொடுப்போம்!
இந்த ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலை ஆண்டாய அமைய உழைப்தென்று சபதம் கொள்வோம்!

No comments:
Post a Comment