• விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி
இலங்கையில் நடத்தக் கூடாது. ஆனால்
இலண்டனில் நடத்தலாம்.
இது என்ன நியாயம்?
புரட்சிப் புயல் வைகோ அவர்களே!
புலத்தில் கச்சேரிகள் நடக்கலாம்.
குத்தாட்டம் நடக்கலாம். ஆனால்
தாயகத்தில் நடந்தால் துரோகம் என்கிறீர்கள்.
புலத்து தமிழனுக்கு ஒரு நியாயம்
தாயக தமிழனுக்கு இன்னொரு நியாயமா?
அன்று இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது அதனைக் காட்டாத தமிழக தொலைக்காட்சிகள்,
அன்று இலங்கையில் தமிழ் இனம் அமிக்கப்பட்டபோது அதற்கு எதிராக வாய் திறக்காத தென்னிந்திய கலைஞர்கள்,
இன்று கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வந்து புலத்தில் தமிழனிடம் பணம் பறிக்க முயலுகின்றனர்.
புலத்து தமிழர்களே!
என்ன நிகழ்ச்சி பார்க்க வேண்டும்?
எங்கு சென்று பார்க்க வேண்டும்?
எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும்?
என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விடயங்களாக இருக்கலாம.
அதில் தலையிட எமக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம.
ஆனால் உங்களுக்கு சொல்ல ஒரு விடயம் எம்மிடம் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி டிக்கட் ஆகக் குறைந்த விலை இலங்கை ருபாயில் சுமார் 5000.
இந்த 5000 ரூபா இருந்திருந்தால்,
வன்னியில் இரண்டு சிறுவர் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியிருக்க மாட்டார்கள்!
வன்னியில் ஒரு தாய் பசிக் கொடுமையால் தன் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றிருக்கமாட்டார்!
இப்படி பல உதாரணங்களை உங்களுக்கு காட்ட முடியும்.
இனி முடிவு உங்கள் கையில்
இப்படியான குப்பை நிகழ்ச்சிகளை பகிஸ்கரித்து அந்த பணத்தை தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு கொடுத்து உதவப் போகிறீர்களா? அல்லது
தாயகத்தில் உள்ள உறவுகள் எக் கேடு கெட்டாலும் பரவாயில்லை, இந்த தென் இந்திய குப்பைகளுக்கே அள்ளிக் கொடுக்கப்போகிறீர்களா?
சிந்திப்பீர்!
நல்ல முடிவு எடுப்பீர்!
தாயக உறவுகளுக்கு நம்பிக்கை கொடுப்பீர்!

No comments:
Post a Comment