Saturday, January 31, 2015

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?
செய்தி:- சிறையில் உள்ளவர்களின் பெயர்களைத் தாருங்கள் விடுதலை செய்கிறேன் - ஜனாதிபதி மைத்திரி
மகிந்த ராஜபக்ச மறைத்து வைத்த விலையுயர்ந்த காரை கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் மறைத்து வைத்த பணத்தைக் கண்டுபிடித்த அரசுக்கு,
மகிந்தவின் மகன் நாமல் மறைத்துவைத்த விமானத்தைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்தவின் தம்பி கோத்தபாயா கப்பலில் மறைத்து வைத்த ஆயுதங்களைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்சாவால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் தமிழர்களை கண்டு பிடிக்க முடியவில்லையா?
அல்லது அவர்களை கண்டு பிடித்து விடுதலை செய்ய புதிய அரசுக்கும் விருப்பம் இல்லையா?
புதிய மைத்திரி அரசு,
மகிந்தவினால் தண்டிக்கப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு பூரண விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவினால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மகிந்தவினால் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகளை மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அது ஏன்?
தேர்தலுக்கு முன்னர் லண்டன் வந்திருந்த ரணில் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
மன்னார் ஆயர் முதல் மனித உரிமைவாதிகள் வரை பலரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினால் இனவாதிகள் எனக் கூறப்படும் ஜே.வி.பி இயக்கம் கூட தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பகிரங்கமாக கோரியுள்ளது.
அதுமட்டுமல்ல 20 ஆயரத்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்களையும் ஜே.வி.பி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டீக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பகிரங்கமாக இல்லாவிடினும் இரகசியமாகவேனும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஏன் கோர முடியவில்லை? சீ வெட்கம்!
புதிய ஜனாதிபதி மைத்திரியிடம் டக்ளஸ் தேவானந்தாவை அரசில் சேர்க்க வேண்டாம் என கோரிய தமிழ்தேசிய கூட்டமைப்பு,
கருணாவுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு,
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரமுடியாதது ஏன்?
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைவிட டக்ளஸ், கருணா ஆகியோரின் விடயம் முக்கியமானதா?
இனியாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்குமா?

No comments:

Post a Comment