•ராமாயி வயசுக்கு வந்திட்டா!
நாடு கடந்த தமிழீழ பிரதமருக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு வந்திடுச்சு!
80 வயது கிழவி வயசுக்கு வந்தா யாரும் மகிழ்வதில்லை. மாறாக இனி வந்தா என்ன? வரவிட்டா என்ன? என்று சலிப்பாகவே சொல்வார்கள்.
அதுபோல் எங்கட நாடு கடந்த தமிழீழ பிரதமரும் இத்தனை நாளும் இந்திய அக்கிரமங்கள் குறித்து மௌனமாக இருந்துவிட்டு இப்போது மாணவி அனிதாவுக்காக குரல் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு மாணவியின் மருத்துவ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்காக பிரதமர் உருத்திரகுமார் குரல் கொடுத்தமை பாராட்டப்பட வேண்டியதே.
ஆனால் இதே தமிழ்நாட்டில் கடந்த வருடம் மாணவி நந்தினியின் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டதே, அப்போது உருத்திரகுமார் ஏன் குரல் கொடுக்கவில்லை?
இத்தனைக்கும் அந்த மாணவி ஒரு ஈழ அகதி. அகதி என்பதற்காகவே அவரது உயர் கல்வி வாய்ப்பு தமிழக அரசால் மறுக்கப்பட்டது.
அகதி மாணவி நந்தினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நியாயம் கேட்டார். அப்போது பல தலைவர்கள் நந்தினிக்காக குரல் கொடுத்தார்கள்.
அப்போது ஏன் நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமார் அந்த அகதி மாணவிக்காக குரல் கொடுக்கவில்லை?
குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவரோ மாணவியின் கல்வி வாய்ப்பை மறுத்த ஜெயா அம்மையாருக்கு அல்லவா குரல் கொடுத்தார்.
மக்கள் பணத்தை ஊழல் செய்த குற்றத்திற்காக ஜெயா அம்மையாருக்கு நீதிமன்றம் 4 வருட தண்டனை வழங்கி சிறையில் அடைத்தபோது அவரை விடுதலை செய்யுமாறு இந்த உருத்திரகுமார் அறிக்கை விட்டார்.
ஆனால் அதே ஜெயா அம்மையார் பல அப்பாவி ஈழ அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பதை விடுதலை செய்யும்படி இந்த உருத்திரகுமார் கேட்கவில்லை.
கடந்தவருடம் மதுரை அகதிமுhமில் அதிகாரியின் கொடுமை தாங்க முடியாமல் 7 பிள்ளைகளின் தந்தையான தமிழ் அகதி ஒருவர் மின்சாரக்கம்பியை பிடித்து தற்கொலை செய்தார்.
அப்போதெல்லாம் இந்திய அரசுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்த பிரதமர் உருத்திரகுமார் இப்போது அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பரவாயில்லை. தாமதமானாலும் இந்திய அரசுக்கு எதிராக பிரதமர் உருத்திரகுமார் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை பாராட்டுக்குரியது. வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment