Wednesday, November 30, 2022
தாய் பாதுசாம்மாள்!
தாய் பாதுசாம்மாள்!
ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது.
அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார்.
பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும்.
ஆனால் அந்த போராளியை பெற்றெடுத்த தாயை வரலாறு நினைவு கூர்வதில்லை.
ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர்.
ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள்.
ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார்.
33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது.
ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது.
இன்று அவரது இரண்டாவது நினைவு தினம் ஆகும். அவருக்கு எமது அஞ்சலிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment