Monday, March 30, 2015

• ஜனாதிபதி மைத்திரி தமிழில் பேச வேண்டும்- மாவை சேனாதிராசா வேண்டுகோள்

• ஜனாதிபதி மைத்திரி தமிழில் பேச வேண்டும்- மாவை சேனாதிராசா வேண்டுகோள்
இந்த ஆள் உண்மையில் லூசா அல்லது
லூசு போல் நடிக்கிறாரா?
தமிழில் பேசினால் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்களா? அல்லது
தமிழில் பேசினால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடுமா?
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தமிழில் பேசி
தமிழ் இனத்தை அழித்ததை இவர் மறந்து விட்டாரா?
26ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுகிறார்கள்
அவர்களை விடுதலை செய்யுமாறு இவர் கோரவில்லை
பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்
அவர்களை மீள் குடியேற்றுமாறு இவர் கோரவில்லை
குறைந்தது சுன்னாகம் தண்ணீர் பிரச்சனையாவது
தீர்க்குமாறு ஜனதிபதியிடம் கோரியிருக்கலாம்.
அதையெல்லாம் விடுத்து தமிழில் பேசுமாறு கோருவது
சுத்த பையித்தியக்காரத்தனமாகும்
அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு
நிச்சயம் சரியான பாடம் புகட்டுவார்கள்

• தொடரும் சிறப்புமுகாம் கொடுமைகள்!

• தொடரும் சிறப்புமுகாம் கொடுமைகள்!
கலைஞரும், ஜெயா அம்மையாரும் தங்களுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக புலிகளால் தமக்கு ஆபத்து என்கிறார்கள்.
கறுப்பு பூனை பாதுகாப்பு தொடர்ந்து பெறுவதற்காக அவர்கள் புலிகள் அமைப்பை தடை செய்து வருகிறார்கள்.
புலிகள் அமைப்பை தடைசெய்வதற்காக தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக பொய் கூறுகிறார்கள்.
புலிகள் நடமாட்டம் இருப்பதாக காட்டுவதற்காக அப்பாவி அகதிகள் மீது புலிகள் முத்திரை குத்துகிறார்கள்.
புலிகள் முத்திரை குத்தப்பட்ட அப்பாவி அகதிகளை அடைப்பதற்காக சிறப்பு முகாம்களை இயக்குகிறார்கள்.
கலைஞர், ஜெயா அம்மையார் கறுப்பு பூனை பாதுகாப்பு பெறுவதற்காக அப்பாவி அகதிகள் சிறப்புமுகாமில் வாடுகின்றார்கள்.
“சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள் அல்ல . அப்பாவி அகதிகள்” என்று முன்னாள் காவல்துறை தலைவர் வைகுந் அவர்களே கூறியிருக்கிறார்.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி ஈழ அகதிகள் மட்டுமல்ல தாயகம் திரும்பிய தமிழர்களும் சட்டவிரோதமாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பதை இரா.சிவலிங்கம் கூறுகிறார்.
திருச்சியை சேர்ந்த தமிழரை தவறுதலாக சிறப்புமுகாமில் அடைத்தமைக்காக செங்கல்பட்டு தாசில்தார் உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
சிறப்புமுகாம் குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிசன் நீதிபதி சிங்கரவேலு கூட மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மைக்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகையை கொடிய சிறப்புமுகாம் இனியாவது மூடப்படுமா?
அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும்.
http://tholarbalan.blogspot.co.uk/2015/03/part-2.html

• மார்ச்-8 பெண்கள் தினத்தை முன்னிட்டு

• மார்ச்-8 பெண்கள் தினத்தை முன்னிட்டு
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக்கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது- தோழர் லெனின்
காரைநகரில் கடற்படையால் பள்ளி சிறுமி கற்பழிப்பு. அந்த கடற்படைச் சிப்பாய்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவும்கூட இலங்கை அரசு மறுப்பு
நெடுங்கேணியில் தமிழ் சிறுமி இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு. இன்னும் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
மன்னாரில் ராணுத்தால் தமிழ் பெண் கற்பழிப்பு. மன்னார் ஆயர் வலியுறுத்திக் கேட்டும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கனகராயன் குளத்தில் மாணவி ஒருவர் கூட்டாக கற்பழிக்கப்பட்டு மரணம். குற்றவாளிகளை தேடி கைது செய்ய வேண்டிய பொலிஸ் வழக்குகூட பதிவு செய்யாது முடி மறைக்க முயல்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க வேண்டிய எமது தமிழ் சமூகம்
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என பட்டிமன்றம் நடத்தி மகிழ்கிறது.
விபுசிகாவின் தாயாரை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டிய எமது சமூகம்
விஜய் டிவி யில் சுப்பர் சிங்கர் ஜெய்சிகாவின் வெற்றிக்காகப் பாடுபடுகின்றது.
இந்த நிலை ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல
இந்தியாவிலும்கூட,
மணிப்பூர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்படுகின்றனர்
காஸ்மீரில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படுகின்றனர்.
சதீஸ்கரில் ஆதிவாசிப் பெண்கள் கொல்லப்படுகின்றனர்
இந்தியாவில் 30 நிமிடத்திற்கொரு கற்பழிப்பு நடப்பதாக
ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.
உலகம் பூராவும் பெண்கள் நிலை இதுதான்.
வருடத்தில் ஒரு நாளை பெண்கள் தினமாக கொண்டாடுவதால்
பெண்களுக்கு எந்த விடிவும் கிட்டப்போவதில்லை.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சி ஒன்றே
பெண்களுக்கு முழு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும்.

• மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித் தமிழ்”

• மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித் தமிழ்”
மு.நித்தியானந்தன் அவர்களினால் எழுதப்பட்டு கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நூல் “கூலித்தமிழ்” ஆகும்.
19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிகளுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவு செய்கிறது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கூலிகள் என்றும் அவர்களது மொழி கூலித் தமிழ் என்றும் அழைக்கப்படலாயிற்று. அதன் வரலாற்றை மு.நித்தியானந்தன் அவர்கள் நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
பதுளையை பிறப்பிடமாக கொண்ட மு.நித்தியானந்தன் அவர்கள் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்பு பட்டம் பெற்றவர். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய போது ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
தான் சார்ந்த சமூகம் குறித்த இலக்கிய வரலாற்றை மிகவும் சிரத்தையுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரின் பங்களிப்பு மகத்தானது. நிச்சயம் பாராட்டுக்குரியது.
நாம் இதுவரை
இசைத்தமிழ் அறிந்திருக்கிறோம்
இயல் தமிழ் அறிந்திருக்கிறோம்.
நாடக தமிழ் அறிந்திருக்கிறோம்.
கணணி தமிழ்கூட அறிந்திருக்கிறோம்.
ஆனால் கூலித்தமிழ் என்ன என்பதை அறியவில்லை.
அதனை மு. நித்தியானந்தன் அறிய தந்திருக்கிறார்.
ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?

• தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?
• இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவு இல்லையா?
பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு. ஆனால் அந்த நாடு இதுவரை ஒரு இந்திய மீனவரையும் சுட்டுக்கொன்றது கிடையாது.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடு . ஆனால் இலங்கை இதுவரை 700 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளது.
தற்போது யுத்தம் இல்லை. ஆனால் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என மிரட்டியுள்ளார்.
இதனைக் கண்டிக்க வேண்டிய இந்திய பிரதமர் மோடியோ தான் யாழ்ப்பாணம் செல்வதாக டிவீட்டரில் செய்தி போட்டு மகிழ்கிறார்.
உலகில் மீனவர்களை அதுவும் தனது நட்பு நாட்டு மீனவரை கொல்லும் அதிசய நாடு இலங்கை ஒன்றே.
அதுமட்டுமல்ல தனது சொந்த மீனவனையே கொல்லும் ஒரு நாட்டின் படைக்கு பயிற்சி அளிக்கும் அதிசய நாடும் இந்தியா ஒன்றே.
இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையிலும் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ளது. ஆனால் தமிழக மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசுக்கு கவலை இல்லையா?
இங்கு இரண்டு அரசாலும் எவ்வித கவலையும் இன்றி கொல்லப்படுவது பரிதாபத்துக்குரிய தமிழ் இனமே.
உலகமும் இது கவலைப்படுவதில்லை. ஏனெனில் தமிழ் இனம் ஒரு மனித இனம் என்று உலகமே கருதவில்லை போலும்
இறுதியாக ஒரு வேண்டுகோள்!
அய்யா மோடி அவர்களே,
நீங்கள் எமது பிரச்சனைகளை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை. சம்பூரில் உங்கள் அனல் மின்சாரத்திற்காக வெளியேற்றப்பட்ட தமிழர்கள் அகதிகளாக பல வருடம் வாழ்கின்றனர். அவர்களை மீண்டும் அந்த மண்ணில் வாழ் வழி விடுங்கள். அதுபோதும்.

• இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா!

• இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா!
இலங்கையில் இனப்பிரச்சனையை குழப்புவது இந்தியா!
இலங்கையில் அதிகம் ஆக்கிரமிக்கும் நாடு இந்தியா!
இலங்கையில் 3 தூதரகங்கள் வைத்திருப்பது இந்தியா
இலங்கையில் அதிகம் முதலீடு செய்திருப்பது இந்தியா!
இலங்கையை அதிகம் சுரண்டும் நாடு இந்தியா!
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது இந்தியா!
இலங்கைப் படைகளுக்கு பயிற்சி கொடுப்பது இந்தியா!
இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல் வழங்குவது இந்தியா!
இலங்கை அரசு தமிழக மீனவர்களை கொல்ல அனுமதிப்பது இந்தியா!
இலங்கைத் தமிழர் போராட்டத்தை நசுக்குவது இந்தியா!
இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு துணை போவது இந்தியா!
இலங்கையில் 1971ல் வந்து ஜே.வி.பி யை அழித்தது இந்தியா!
இலங்கையில் 1987ல் அமைதிப்படையாக வந்து தமிழரை அழித்தது இந்தியா!
சீன உதவியுடன் மேற்கொண்ட கொழும்பு அபிவிருத்தியை பாதியில் நிறுத்தும்படி இந்தியா கட்டளையிடுகிறது. கொழும்பு துறைமுகம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலா? அல்லது இந்திய அரசின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது?
இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரே ஆக்கிரமிப்பு கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது தமிழக தமிழர்களுக்கு எழுச்சியை கொடுக்கும் என்ற காரணத்தைக் கூறி தொடர்ந்து இலங்கை தமிழர் போராட்டத்தை நசுக்கி வருகின்றனர்.
சிக்கிம், பூட்டான் போன்று இலங்கையையும் இந்தியாவின் ஒரு அடிமைப் பிரதேசமாக்க இந்தியா முயல்கிறது.
இலங்கையை இந்தியாவின் 30 வது மாநிலமாக்க இந்தியா மெல்ல மெல்ல முயற்சி செய்கிறது. அதற்கு இலங்கை ஆட்சியாளர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் உதவி வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வந்துள்ளார். அவர் 4 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். அதில் ஒன்றுகூட இலங்கை தமிழர்களுக்கு உதவும் ஒப்பந்தம் இல்லை.
26 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யும்படி கூட மோடி கேட்கவில்லை.
மன்னாருக்கு மோடி செல்கிறார். ஆனால் அங்கு தமிழ் மாணவியை இலங்கை ராணுவம் கற்பழித்துள்ளதைக்கூட அவரால் கண்டிக்க முடியவில்லை.
தமிழர்களை அழித்த முன்னாள் ஜனாதிபதியைக்கூட மோடி சந்திக்கிறார். ஆனால் காணாமல் போனவர்களின் பெற்றார்களை சந்திக்க மோடி மறுக்கிறார்.
சம்பூரில் இந்திய அனல் மின் நிலையத்திற்காக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்றும் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்கள் குறித்துகூட மோடிக்கு கவலை இல்லை.
ஆனால் இத்தனைக்கு பிறகும் இந்தியா தமிழருக்கு உதவும் என்று சம்பந்தன் அய்யா கூறுகிறார். இந்த ரொட்டித்துண்டுக்கு வாலாட்டும் நாயக்குட்டிகள் தமிழின தலைவராக இருக்கும்வரை தமிழர்களுக்கு விடிவு என்பது இல்லை.

மதப் பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம் தமிழ் இனப் போராளிகளுக்கு இன்னொரு நியாயம். இதுதான் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையின் நியாயம் ??

• மதப் பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம்
தமிழ் இனப் போராளிகளுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையின் நியாயம் ???
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தாங்கள் வீசியது வெடிகுண்டுதான் என்கிறார்கள இந்துமதப் பயங்கரவாதிகள். ஆனால் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையோ வீசப்பட்டது வெறும் பட்டாசு என்கிறது.
தமிழ் இன உணர்வாளர்களை பொய்வழக்கில் கைது செய்வது மட்டுமன்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கும் ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இந்து மதப் பயங்கரவாதிகளை எந்த வழக்கும் இன்றி காப்பாற்ற முயற்சி செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ் இன போராளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மதுரை சிறையில் 365 நாட்களுக்கு மேலாக வாடுகிறார்கள். ஆனால் சமூகத்திற்கு பெருங்கேடு விளைவிக்கும் மதப் பயங்கரவாதிகள் உல்லாசமாக உலா வருகிறார்கள்.
தமிழ் இன போராளிகள் தமிழ் இன மக்கள் விடுதலை பெற வேண்டும் என கோருவது தவறா?
தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் என கோருவது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட வேண்டிய குற்றமா?
தமிழ்நாட்டில் தமிழன் விடுதலை பெற வேண்டும் என விரும்புவர்கள் தமிழ்நாடு அரசால் தமிழக சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் தமிழ் இனத்தை அழிக்கும் மதப் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
தமிழக மக்கள் தமது அடிமைத்தனத்தை உணராதவரை
தமிழக மக்கள் தமது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவி என்பதை உணராதவரை
தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை உணராதவரை
எந்த தமிழனும் விடுதலை பெற முடியாது என்பதே உண்மை.