Friday, October 30, 2015

பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஈழ அகதிகள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
இந்திய அரசு பாகிஸ்தான் பாடகர் ஒருவருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஆனால் 32 ஆண்டுகளாக வாழ்ந்தவரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது. அதுமட்டுமல்ல ஈழ அகதிகளை கொடிய சிறப்புமகாமில் அடைத்து சித்திரவதை செய்கிறது.
இந்தியாவில் தீபெத் அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் வங்கதேச அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் நேபாள அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் உள்ள எல்லா அகதிகளும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஈழ தமிழ் அகதிகள் மட்டும் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
எல்லா நாடுகளிலும் அகதிகள் உயர் கல்வி கற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில மட்டும்; ஈழ அகதிகளுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எட்டுக்கோடி தமிழர் உண்டு. இருந்தும் ஈழ அகதி நந்தினிக்கு மருத்துகல்வி மறுக்கப்பட்டது. சீனாவில் ஒரு தமிழரும் இல்லை. ஆனால் சீனா அவ் நந்தினிக்கு மருத்துவம் கற்ற புலமைப்பரிசிலுடன் வாய்ப்பு வழங்கியள்ளது.
இந்தியாவில்,
தீபெத் அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்..
வங்கதேச அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்.
பர்மிய அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்.
ஆனால் ஈழ அகதி ஆட்டோ ஒட்டக்கூட லைசென்ஸ் எடுக்க முடியாது.
இதுதான் இந்தியா!

•உறுதியளித்தபடி 7ம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

•உறுதியளித்தபடி 7ம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
முதலில் அரசியல் கைதிகள் இல்லை என்றார்கள்.
பின்பு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றார்கள்.
இப்போது சிலருக்கு பிணை வழங்கப்படும் என்கிறார்கள்.
இதுவும்கூட 7ம் திகதிக்கு முன்னர் நடக்குமா தெரியவில்லை.
குண்டு வாங்கி கொடுத்த கே.பி மீது வழக்கு எதுவும் இல்லை.
குண்டு வைக்கச் சொன்ன தளபதி கருணாவுக்கு சிறை இல்லை.
ஆனால் சாப்பாடு கொடுத்த அப்பாவிகளை 25 வருடமாகியும் விடுதலை செய்ய மறுப்பு.
இது என்ன நியாயம்?
1971ல் ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி தலைவர் உட்பட அனைவருக்கும் இதே யுஎன்பி அரசே பொது மன்னிப்பு வழங்கியது.
1989ல் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி அங்கத்தவர்களும் இதே யுஎன்பி அரசே பொது மன்னிப்பு வழங்கியது.
1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இதே யுஎன.பி அரசே தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது.
இவ்வாறு எற்கனவே பலமுறை பொது மன்னிப்பு வழங்கிய அரசுக்கு இப்போது மட்டும் மன்னிப்பு வழங்க என்ன தடை?
தமிழ் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று இதுவரை எந்த சிங்கள அமைப்பும் கோரவில்லை.
மாறாக இவ் தமிழ் கைதிகளை விடுதலை செய்யும்படி சிங்கள மக்களும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
இருந்தும்கூட இலங்கை அரசு கைதிகளை விடுதலை செய்ய மறுக்கிறது.
"நல்லாட்சி" என்ற பெயரால் தொடர்ந்தும் இனவாதத்தையே இலங்கை அரசு விதைக்கிறது.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் 7ம் திகதி முன்னர் உறுதியளித்தபடி விடுதலை செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் அறிவித்தபடி தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்கள் கைதிகளின் விடுதலைக்காக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

நாம் தமிழர் !!

•நாம் தமிழர் !!
வந்தேறி சோனியாவை அடிக்க முடியாதவர்கள்
நாயக்கரை "வந்தேறிகள்" என்று அடிக்கிறார்கள்.
ராஜீவ் சிலையை உடைக்க முடியாதவர்கள்
நாயுடு மகாலை உடைக்க வேண்டும் என்கிறார்கள்.
650 மீனவரைக் கொன்ற இலங்கை அரசின் தூதரகத்தை வெளியேற்ற முடியாதவர்கள,
கூட இருப்போரை "வந்தேறிகள்" வெளியேறுங்கள் என்கிறார்கள்.
கண்முன்னே இருக்கும் சிறப்புமுகாமை மூட முடியாதவர்கள்
கடல் கடந்து வந்து ஈழம் அமைப்போம் என்கிறார்கள்.
தனித் தமிழ்நாடு கேட்க திராணியற்றவர்கள்
ஒரு குண்டுகூட வெடிக்க வைக்க முடியாதவர்கள்
தமிழனை சாதி ரீதியாக பிரிக்க முனைகிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவு சாதி சங்கம் இருப்பதும்
தமிழனை சாதி ரீதியாக பிரித்து வைக்க தலைவர்கள் துணை போவதும்
ஒன்றும் தற்செயலானது அல்ல. மாறாக இது மத்திய அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலே.

இந்தியா ஜனநாயக நாடுதானா?

இந்தியா ஜனநாயக நாடுதானா?
இந்தியா ஜனநாயக நாடு என்றும் இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் , பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உண்டு என்கிறார்கள்.
ஆனால் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பாட்டு பாடியமைக்காக "மக்கள் பாடகன்" தோழர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வரமுடியாத தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் அடைக்கப்ட்டுள்ளார்.
ஊழல் பேர்வழிகள் சுதந்திரமாக திரிகிறார்கள்.
மணற்கொள்ளையர் சுதந்திரமாக திரிகிறார்கள்
குவாரி திருடர்கள் சுதந்திரமாக திரிகின்றார்கள்
ஆனால் மக்களுக்கா குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன.
அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
என்ன கொடுமை இது?
மதுவை ஒழிக்க குரல் கொடுத்த சசிபெருமாள் கொல்லப்பட்டார்.
மதுவை ஒழிக்க பாட்டுபாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது.
பெப்சிக்கு எதிராக போராடிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினருக்கு மண்டை உடைக்கப்பட்டது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ்தேச மக்கள் கட்சியினர் கடந்த 18 மாதங்களாக மதுரை சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
ஜெயா அம்மையாரின் அடக்குமுறையை மக்கள் உடைத்தெறிவார்கள்.
ஜெயா அம்மையாருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

திருச்சியில் எனது நூல் வெளியீடு !

• திருச்சியில் எனது நூல் வெளியீடு !
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல்
• சென்னையில் 21.09.15 யன்று வெளியிடப்பட்டது.
• கோவையில் 16.10.15 யன்று வெளியிடப்பட்டது.
• செய்யாறில் 25.10.15 யன்று வெளியிடப்பட்டது.
• திருச்சியில் 05.11.15 யன்று வெளியிடப்படவுள்ளது.
இடம்- அருண் உணவகம் , மத்திய பேருந்து நிலையம் (ரயில் நிலையம் அருகில்), திருச்சி மாநகர்.
காலம்- 05.11.15 வியாழன் மாலை 5.30 மணி
வெளியீடு- தமிழ்தேச மக்கள் கட்சி
தொடர்புக்கு- 7845808115 ,7871167265
திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை மூடக்கோரியும், அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலைசெய்யக் கோரியும் , திருச்சி மக்களை அணிதிரட்டுமுகமாக தமிழ்தேசமக்கள் கட்சியினரால் இவ் நூல் வெளியீடு நடத்தப்படுகிறது.
அனைவரையும் வருக என அன்போடு அழைக்கிறோம்
சிறப்புமகாமை மூடுவதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, September 30, 2015

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!
பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்
தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.
தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
யார் மாமனிதர்கள்?
யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?
மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ் கூறுகிறார்,
மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது. பெருவாரியான மனிதர்களை மகிழ்ச்சி பெறச் செய்கிற மனிதன்தான் பெரும் மகிழ்ச்சியாளன் என்று அனுபவம் கூறுகிறது.
ஆம். தோழர் தமிழரசன் நினைத்திருந்தால் நல்ல சம்பளம் பெறும் உத்தியோகத்தில் அமர்ந்து தனக்கென ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்திருக்க முடியும். ஆனால் அவரோ அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
பரந்துபட்ட மக்களின் நலனுக்காக போராடிய தோழர் தமிழரசன் மாமனிதரே!
அவரை என்றும் நினைவில் கொள்வோம்.
அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
குறிப்பு- பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்துவதை தமிழக காவல்துறை தடை செய்துள்ளது. தடையை மீறி தோழர்கள் வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?
ஏற்கனவே அரச செலவில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு அரச செலவில் மணி மண்டபம் கட்டப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்துள்ளார்.
சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக இருக்கலாம். அதற்காக எதற்கு மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
மணி மண்டபம் கட்டுவதாயின் சிவாஜி குடும்பத்து பணத்தில் கட்டலாமே. அவர்களிடம் இல்லாத பணமா?
மணி மண்டபம் கட்டுவதாயின் சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் பணம் பெற்று கட்டலாமே. அவர்கள்தானே கோடியில் புரளுகிறார்கள.;
ஒரு சினிமா நடிகருக்கு எதற்காக மக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
100 கோடி ருபாயில் தமிழ்தாய்க்கு சிலை வைக்கப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்தார். அது ஏன் இன்னும் கட்டப்படவில்லை?
மக்கள் பணத்தில் தமிழ் தாய்க்கு சிலை வேண்டுமா என கேட்டவர்கள் இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்?
தமிழத் தாயைவிட சிவாஜி கணேசன் முக்கியமானவரா?
ஒரு சந்தேகம்- சிறந்த நடிகர் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவோர் சிறந்த மருத்துவர், சிறந்த பொறியிலாளர், சிறந்த ஆசிரியர் , சிறந்த தொழிலாளி போன்றவர்களுக்கு ஏன் மணிமண்டபம் கட்டுவதில்லை? சினிமா இவை எல்லாவற்றையும்விட சமூகத்திற்கு முக்கியமானதா?