Wednesday, June 22, 2016

இதுதான் இந்தியாவா?

•இதுதான் இந்தியாவா?
நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் இளைஞர் மாடு வியாபாரம் செய்தமைக்காக இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதனை அவர்கள் படம் பிடித்து வீரமாக வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஒரு இளைஞர் மேற்கு வங்க மாநிலத்தில் மாட்டு வியாபாரி என்ற சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவர் ஒரு ஜ.ரி பட்டதாரியாவார்.
உள்நாட்டில் மாடு வியாபாரிகள் என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்துமத வெறியர்களால் தாக்கப்படுகின்றனர். ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.
அப்பாவி முஸ்லிம்களை தாக்கும் இந்துமத வெறியர்கள் ஏன் மாட்டிறைச்சி ஏற்றுமதி முதலாளிகளை தாக்குவதில்லை?
இது குறித்து பிரதமர் மோடிக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லை. அவரது நீதிமன்றங்களுக்கும் கொஞ்சம்கூட அக்கறை இல்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமில்லை என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு சார்பாக தீர்ப்பு கூறும் இந்திய நீதிமன்றத்தில் அப்பாவிகளான இந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காதது ஆச்சரியம் இல்லைதான்.
இதோ மணிப்பூர் மாநிலத்தில் பெண்களும் குழந்தைகளும் இந்திய அரசக்கு எதிராகப் போராடுவதை பாருங்கள்.
தமது உரிமைக்காக அவர்கள் ராணுவத்தின் தாக்குதல்களுக்கும்; அஞ்சாமல் இந்திய அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கிவரும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என சிலர் இன்னமும் கூறிவருகிறார்கள்.
இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?

•சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என ஏன் பாரதி பாடினான்?

•சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என ஏன் பாரதி பாடினான்?
கடந்த 30.05.2016 யன்று லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “பாரதி பற்றி அறிந்ததும் அறியாததும்” என்னும் தலைப்பில் உரையாடல் ஒன்று நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் தலைமையில் இவ் உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆய்வாளர், எழுத்தாளர், ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்கள் பாரதி பற்றி உரையாற்றினார்.
அவர் பின்னர் கலந்கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பார்வையாளர் ஒருவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி ஏன் பாடினார்?” என கேள்வி எழப்பினார்.
அதற்கு பதில் அளித்த வெங்கடாசலபதி அவர்கள் “பாரதி இலங்கையையும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகவே கருதியிருப்பான்” என்று கூறினார்.
வெங்கடாசலபதியின் இந்த பதில் பொருத்தமானதாக எனக்கு தோன்றவில்லை.
ஏனெனில் இலங்கையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருவதும் அவர்களது வரலாறும் நன்கு தெரிந்துகொண்ட பாரதி எப்படி இலங்கையை சிங்கள தீவு என அழைக்க முடியும் என்பதே கேள்வியாகும்.
இதற்கு தகுந்த பதில் தெரிந்தவர்கள் யாராவது கூறுவீர்களா?

கலைஞர் வயது 93! மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. அதனால், வாழ்த்த மனம் வருகுதுமில்லை. .

கலைஞர் வயது 93!
மறக்கவும் முடியவில்லை.
மன்னிக்கவும் முடியவில்லை.
அதனால், வாழ்த்த மனம் வருகுதுமில்லை.
.
எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவது தமிழன் பண்பாடு. ஆனால் தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் அவர்களை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
கலைஞர் விரும்பியிருந்தால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்திருக்கமுடியும். ஆனால் அவர் அவ்வாறு விரும்பாதது மட்டுமல்ல படுகொலைகளுக்கு சோனியாவுடன் சேர்ந்து துணை போனதை மறக்க முடியவில்லையே!
ஆயிரக் கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரனின் தாயார் இந்தியா சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதை தடுக்கவில்லை. ஆனால் தமிழனத் தலைவர் கலைஞர் விமான நிலையத்தில் வைத்து அவரை திருப்பி அனுப்பியதை மறக்க முடியவில்லையே!
தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக கலைஞர் கருணாநிதி சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்களை ஆரம்பித்து ஈழ அகதிகளை அடைத்ததை மன்னிக்க முடியவில்லையே!
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவிட்டது என்று கூறிவிட்டு பின்பு தேர்தலில் மீண்டும் அவர்களுடன் கலைஞர் கருணாநிதி கூட்டு சேர்ந்ததை சகிக்க முடியவில்லையே!
தனது நடிப்பிற்காக அப்பாவி ஈழ அகதி சிறுவன் மணியை தத்து எடுத்து வளர்த்துவிட்டு பின்பு ஸ்டாலினால் அவன் கொல்லப்பட காரணமான கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை மறக்க முடியவில்லையே!
வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் இருக்கும்வரை அதில் துரோகம் இழைத்த கலைஞர் பெயரும் ஈழத் தமிழர் நினைவில் இருக்கும். அதனால்தான் அவரை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எவ்வளவு வயதானாலும் ஒருவர் மரணம் அடையும்போது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் என நினைப்பது மனித இயல்பு.
ஒருவர் வாழும்போதே இவர் இன்னும் சாகவில்லையா என நினைப்பது மிகவும் அரிது. இந்த அரிதானவர்களில் ஒருவராக கலைஞரும் இருக்கிறார் என்பதே அவருக்கான வாழ்த்து ஆகும்.
இத்தனை துரோகம் இழைத்த, ஊழல் புரிந்த கலைஞர் கருணாநிதி தொடர்ந்து 13 முறை வென்றிருப்பது ஜனநாயகத்தின் ஓர் அதிசயம் என்றே கூறவேண்டும்.
வெறும் மஞ்சள் பையுடன் வித்தவுட் டிக்கட்டில் சென்னை வந்தவர் கலைஞர் கருணாநிதி. இன்று அவரின் குடும்ப சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்கிறார்கள்.
அன்றைக்கு ஒரு டிக்கட் பரிசோதகர் இவரை கண்டு பிடித்து தண்டித்திருந்தால் இன்று பல்லாயிரம் கோடி ஊழல் தவிர்த்திருக்கலாம். ஈழத்தில் பல்லாயிரம் தமிழர்கள் அழிவை தடுத்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.
பக்கத்தில் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று கலைஞர் கருணாநிதியால் மட்டுமே தைரியமாக தமிழகத்தில் பேச முடிகிறது.
தான் ஊழல் மூலம் பல்லாயிரம் கோடியை சம்பாதித்துவிட்டு ஊழலுக்கு எதிராக போராட உடன்பிறப்பகள் முனவரவேண்டும் என்று தன் பிறந்தநாள் செய்தியாக கலைஞர் கருணாநிதியால் மட்டுமே தைரியமாக கூறமுடிகிறது.
உண்மையில் கலைஞர் கருணாநிதி ஜனநாயகத்தின் ஓர் அதிசயம்தான்.

•இந்தியர்கள் “இளிச்சவாயர்கள்” என்று மோடி கருதுகிறாரா?

•இந்தியர்கள் “இளிச்சவாயர்கள்” என்று மோடி கருதுகிறாரா?
பிரதமர் மோடியின் முதலாளி நண்பர் அதானியின் நிலக்கரி ஊழல்
•நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி ரூபா,
•மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி ரூபா
•இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி ரூபா
•கிட்டத்தட்ட மொத்தம் 50,000 கோடி ரூபா அளவில் கொள்ளை நடந்துள்ளது.
ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ 1.50 முதல் ரூ 2.00 வரை அதிகமாக மக்களிடமிருந்து பெறப்படுகிறது. மாதம் 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 24,000 ஆயிரம் ரூபா வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் இம முதலாளிகள்.
தனியார்மயத்தின் மூலமாகத்தான் சிறப்பான சேவையை பெறமுடியும்,
போட்டியின் மூலம் விலை குறையும், ஊழல் குறையும் போன்ற
தனியார்மய புரோக்கர்களின் வாதங்கள் எவ்வளவு போலியானது என்பதை
இவ் ஊழல் மேலும் அம்பலப்படுத்துகிறது.
தனது முதலாளி நண்பர்களுக்காக மோடி செய்த சாதனைகள்,
•முதலாளி அம்பானிக்காக பெற்றோல் விலை ஏற்றம்
•முதலாளி அதானிக்காக பருப்பு விலை ஏற்றம்
•முதலாளி மிட்டலுக்காக தொலைபேசி, இண்டர்நெட் விலை ஏற்றம்
•முதலாளி பிர்லாவுக்காக சீமெந்து விலை ஏற்றம்
முதலாளி மல்லையாவிற்கு 9000 கோடி
முதலாளி அதானிக்கு 72000 கொடி
ஓட்டுப் போட்ட மக்களுக்கு செய்தது என்ன மோடி ?
மோடி இதுவரை சென்ற நாடுகளின் எண்ணிக்கை - 35
மோடியின் மொத்த பயணச் செலவு- 586 கோடி ரூபா
அதேவேளை,
உலகில் அதிகம் அடிமைத் தொழிலாளர்கள் உள்ள நாடு இந்தியா
உலகில் அதிகம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ள நாடு இந்தியா
உலகில் வறுமை காரணமாக அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்யும் நாடு இந்தியா
போன்ற பெருமைகளை(!) மோடி ஆட்சியில் இந்தியா பெற்றுள்ளது.

• பகிடி வதை!

• பகிடி வதை!
பகிடி ஒருபோதும் வதையாக இருக்க முடியாது.
வதை ஒருபோதும் பகிடியாக இருக்க முடியாது.
பகிடி வதையின் பேரால் நடக்கும் சித்திரவதையை
பொறுப்புள்ள சமூகம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பகிடி வதை தாங்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
பகிடிவதை தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர்.
ஆனால் அரசோ இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்மூடி இருக்கிறது.
வீடுகளுக்குள் வந்து பெற்றோர் முன்னிலையில் பகிடிவதை செய்கின்றனர்.
வீதிகளில் பொது மக்கள் முன்னிலையில் பகிடிவதை செய்கின்றனர்
ஓடும் பஸ் இல் பயணிகள் முன்னிலையில் பகிடி வதை செய்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் முன்னிலையிலே பகிடி வதை செய்கின்றனர்.
பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்
ராணுவம் கண்டும் காணாமல் இருக்கின்றது.
நீதிமன்றங்கள் அக்கறை அற்று இருக்க்pன்றன.
இத்தனைக்கும் காரணம் பொறுப்பற்ற அரசே!
மகிந்தவின் பாதுகாப்பு குறித்து அக்றை கொள்வோர் புதிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை அற்று இருக்கின்றனர்.
தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில் கவனமாக இருக்கும் எம்.பி மார்கள் இந்த பகிடிவதை குறித்து கவனம் அற்று இருக்கின்றனர்.
ஒருவேளை இதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் கூறினால்தான் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
அல்லது இன்னும் எத்தனை மாணவாகள் தற்கொலை செய்த பின்பு நடவடிக்கை எடுக்க நினைத்துள்ளார்கள்?
நல்லாட்சி அரசில் உள்ளவர்கள் இதனை கவனிப்பார்களா?

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்.
அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம்.
ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள்.
ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார்.
தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.
அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார்.
எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை.
எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள்.
தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர்.
தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
இன்று ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு தினத்தை மாவீரர் நினைவு நாளாக கொண்டாடுகின்றனர்.
அனைவரும் ஒற்றுமையாக ஒருநாளை ஒருமித்துக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் மக்களின் பெரு விரும்பமாகும்.
அப்படி ஒருநாளைக் கொண்டாடுவதாயின் அதற்கு மிகவும் பொருத்தமான நாள் தியாகி சிவகுமாரன் இறந்த தினமாகும்.
அனைவரும் இதனை ஒருமித்து ஏற்றுக்கொள்வார்களா?

•மக்கள் பெரும் படையாக திரளட்டும்

•மக்கள் பெரும் படையாக திரளட்டும்
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எழுவர் விடுதலைக்கு வழி வகுக்கட்டும்
சாதி மத பேதங்களை மறந்து
அரசியல் பேதங்களை மறந்து
தமிழ் இன உணர்வுடன் அனைவரும் ஓரணியாய் திரள்வோம்.
மக்களால் மட்டுமே எழுவர் விடுதலையை செய்ய முடியும்
மக்கள் எந்தளவு பெரும் படையாக அணி திரள்கிறார்களோ
அந்தளவு விரைவாக எழுவரை விடுதலை செய்ய முடியும்.
இதை உணர்ந்து அனைவரும் திரள வேண்டிய தருணம் இது.
மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது
மக்கள் சக்தியே மகத்தான சக்தி
மக்களால் மட்டுமே எழுவரை விடுதலை செய்ய முடியும்.