Saturday, July 30, 2016

•அவதூறுகள் மூலம் தோழர் சண்முகதாசன் பங்களிப்பை மறுத்துவிட முடியாது!

•அவதூறுகள் மூலம் தோழர் சண்முகதாசன் பங்களிப்பை மறுத்துவிட முடியாது!
கடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் ஜெயபாலன் எழுதிய வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நூல் வெளியீடு நடைபெற்றது.
அதையடுத்து பௌசர் தலைமையில் “தேசியவாதமும் சமகால அரசியலும்” என்னும் தலைப்பில் கனடாவில் இருந்து வந்திருந்த ஜான் மாஸ்டர் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையின்போது கிராமங்களில் இருந்து நகரங்களைக் கைப்பற்றுதல் என்று மாவோ வின் திட்டத்தை அப்படியே சண்முகதாசன் காப்பி அடித்ததாகவும் அதற்கு காரணம் சண்முகதாசன் சொந்தமாக சிந்திக்கும் திறனற்ற ஒரு தலைவராக இருந்ததே காரணம் என்று கூறினார்.
அதையடுத்து பார்வையாளர்களின் கருத்து பகிர்வின்போது பேசிய சோசலிசக் கட்சியை சேர்ந்த சேனன் என்பவர் சண்முகதாசனுக்கு டிராக்சியின் முழு உலகப் புரட்சி பற்றி எதுவுமே தெரியாது என்றும் சண்முகதாசன் ஒரு கம்யுனிஸ்டே அல்லவென்று பேசினார்.
தோழர் ஸ்டாலின் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் முதலாளித்துவவாதிகள் ஸ்டாலின் மீது அவதூறு பொழிவதற்கு ஓரே காரணம் ஸ்டாலின் போல் முதலாளித்துவவாதிகளுக்கு மரண அடி கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை என்பதே.
அதேபோல் தோழர் சண்முகதாசன் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும் இன்றும் இலங்கையில் திரிபுவாதிகளும் டிரொக்சியவாதிகளும் தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதற்கு காரணம் அவரைப் போல் வேறு யாரும் இவர்களை அம்பலப்படுத்தி மரண அடி கொடுத்ததில்லை.
ஜான் மாஸ்டர் என்பவர் முதலில் புளட் அமைப்பில் இருந்தார். பின்பு தீப்பொறியில் இருந்தார். அதன் பின்பு தமிழீழ கட்சி; அமைத்தார். அதன் பின்பு மே 18 என்றார்கள். இடையிடையே காணாமல் போவார். அப்புறம் உயிர்த்தெழுந்து வருவார். இப்போது என்ன கட்சியில் என்ன கொள்கையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இவர்மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது குறித்து ஒரு சுயவிமர்சனம் எதுவும் செய்யாமல் சண்முகதாசன் மீது அவர் அவதூறு பொழிவது எதற்காக?
தோழர் சண்முகதாசன் ஒரு சர்வதேச தலைவர். அவர் தன் வாழ் நாளின் இறுதிக் கணம்வரை மாசேதுங் சிந்தனைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர்.
தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதன் மூலம்,
அவர் முன்வைத்த மாசேதுங் சிந்தனைகளை நிராகரிக்க முயலுகின்றார்கள்.
அவர் காட்டிய மக்கள் யுத்த பாதையை நிராகரிக்க முயலுகின்றார்கள்
அவர் முன்னெடுத்த புதியஜனநாயக புரட்சியை நிராகரிக்க முயலுகின்றார்கள்.
அவர் தோற்கடித்த டிரொக்சியத்திற்கு உயிர் கொடுக்க முனைகிறார்கள்.
அவர் அம்பலப்படுத்திய திரிபுவாதிகளை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
ஆனால் எனனதான் தலைகீழாக நின்றாலும் புரட்சியாளர்கள் மனங்களில் இருந்து தோழர் சண்முகதாசனை இவர்களால் நீக்கிவிடமுடியாது.
தோழர் சண்முகதாசன் மீது அவதூறு பொழிவதன் மூலம் இவர்கள் தங்களையே மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் கூடுவோர் தமக்காக மாண்டவர்களுக்காக கூட மறுப்பது ஏன்?

•ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் கூடுவோர்
தமக்காக மாண்டவர்களுக்காக கூட மறுப்பது ஏன்?
ஜரோப்பாவில் முதல் முதலாக சுவிசில் ஆயிரக் கணக்கில் திரண்டு தீ மிதிப்பு நடத்தியுள்ளார்கள்.
கனடாவில் ஆயிரக் கணக்கில் திரண்டு கோயில் திருவிழா நடத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் எம்மவர்கள் கூடுகின்றார்கள்.
இன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் BTF சார்பில் கறுப்பு யூலை நினைவு அனுட்டிக்கப்பட்டது.
எமக்காக மாண்டவர்களுக்காக முதலில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் வந்திருந்தவர்கள் அனைவரும் மாண்டவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
வழக்கறிஞர் சிவானி, ஊடகவியாளர் கலம் மக்கரே மற்றும் ரவி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக பார்வையாளரின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.
இன்று வேலை நாள். இருப்பினும் ஒரு லட்சம் தமிழர்கள் இருக்கும் லண்டனில் நூறுபேர் கூட வரமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
கோயில் திருவிழாவிற்காக கூடுவோர்கள்,
சினிமா நடீகர் நடிகையரைக் காண்பற்காக கூடுவோர்
பிறந்தநாள் சாமத்திய சடங்குகளுக்காக கூடுவோர்
ஊர்ச் சங்கங்களுக்காக கூடுவோர்
ஏன் இந்த யூலை படுகொலை நினைவு தினத்திற்கு கூட முடியவில்லை?
உண்மையிலே புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகள் மழுங்குகின்றதா?
அல்லது நிகழ்வுகளை ஒழுங்கு செய்வோர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனரா?
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்குகென பல அமைப்புகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒவ்வொருவர் வந்தாலே மண்டபம் நிரம்பியிருக்கும்.
மக்களுக்கான நிகழ்வில் கூட இவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனில் இவர்கள் அமைப்புகள் நடத்துவது யாருக்காக?
தமிழ் மக்களின் பெயரில் தங்கள் வயிறுகளை நிரப்பவா இவர்கள் அமைப்புகள் நடத்துகின்றனர்?
பரவாயில்லை. கூடியவர்கள் கொஞ்சம் என்றாலும் அவர்கள் உணர்வள்ளவர்கள்.
இவர்களே எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பவர்கள்.

திருலிங்கேஸ்வரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் கண்டி நகரில் வாழ்ந்து வரும் திருலிங்கேஸ்வரன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்ற உங்களின் நூலை படித்தேன்
எமது மக்கள் இராமாயணத்தை ஏற்று ,சந்ததியினருக்கு போதித்து எமது மன்னரை கொ(வெ)ன்ற மனிதனை கடவுளாக வணங்கும் எமது பகுத்தறிவற்ற மக்களுக்கு இந்தியா என்ன செய்தாலும் சரியே....
இந்தியாவின் விஷ இரும்பு கைகளை எதிர்நோக்குவதற்காக எமது பல,பலவீனங்கள் ஆராய வேண்டும்.
அந்தளவில் இந்த நூல் மிக அவசியமானதும் அனைவரும் படிக்க வேண்டியதும் ஆகும்

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

•தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.
கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.
”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.
தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது.
ஆனால் இன்று பல மாநிலங்களில் குறிப்பாக 160 மாவட்டங்களில் நக்சலைட் நிர்வாகமே நடைபெறுகிறது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே.
நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது.
ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது
.
இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?
இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?

•இனவாதத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க முயலும் மகிந்த ராஜபக்ச!

•இனவாதத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க முயலும் மகிந்த ராஜபக்ச!
இனவாதத்தின் மூலம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க மகிந்த ராஜபக்சாக்கள் முயலுகிறார்கள்.
பாதயாத்திரை மூலம் நாட்டில் இனவாதத்தை பரப்பி இனக் கலவரங்களை உருவாக்க முயலுகிறார்கள்.
தங்கள் மீதான ஊழல் மற்றும் நிதிக் குற்றவியல் வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள்.
வழக்கு போட்டு கைது செய்தால் ஒரு வாரத்தில் பிணையில் வெளியே வந்துவிடுகிறார்கள். வெளியே வந்து மக்கள் மத்தியில் இனவாதத்தை உருவாக்கிறார்கள்.
சட்டத்தின் பிடியில் தப்புவதற்காக, மக்களுக்காக போராடுவதாக வேடம் போடுகிறார்கள்.
இவர்களது போலி வேடத்தை அம்பலப்படுத்துமுகமாக இவர்கள் புரிந்த அத்தனை குற்றங்களுக்கும் வழக்கு பதிவு செய்து கூடிய விரைவில் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் பாத யாத்திரைக்கே 18 மில்லியன் ரூபா பணம் செலவு செய்துள்ளார்கள். இன்னும் கோடிக்கணக்கான ரூபாய்க்களை செலவு செய்யவுள்ளார்கள்.
சட்டவிரோதமாக இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இவர்களை வெளியில் விட்டு வைத்திருப்பதால்தான் இவர்கள் மக்களை குழப்பும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
எனவே மக்களினதும் நாட்டினதும் நலக் கருதி பிணையில் வரமுடியாதபடி வழக்கு பதிவு செய்து இவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
இவர்கள் மீதான வழங்குகள் யாவும் விரைந்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும்.
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
இவர்கள் முன்வைக்கும் எட்கா மற்றும் பட்டதாரிகளுக்கான வேலை மற்றும் வட் வரி விதிப்பு எதிர்ப்பு என்பன நியாயமான கோரிக்கைதான்.
ஆனால் இவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைப்பது மக்கள் நலன் சார்ந்து அல்ல. மாறாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே.
எனவே மக்கள் இவர்களின் சூழ்சிகளுக்கு பலியாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனியாவது இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும்.

திருமதி வாணி அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
20 hrs
டென்மார்க்கில் வாழ்ந்துவரும் திருமதி வாணி அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
பலரின் பாராட்டுதலைப் பெற்றுவரும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற நூலினை படிக்கும் வாயப்பு எனக்கு கிட்டியது. தோழர் பாலா அவர்கள் இதனை எழுதி உள்ளார்.
அவர் இந்த நூலை எந்தவித புகழையோ அல்லது பெயரையோ எதிர்பார்த்து எழுதவில்லை. இது ஒரு சமூக நலன் சார்ந்த படைப்பு என்பதை வாசிப்பவர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள முடியும்
இந்த நூலை வாசிக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதற்கான பல காரணங்கள் தகவல்கள் இந்த நூலில் மிகவும் நேர்த்தியாக பதிவாக்கியுள்ளார்.
அது மட்டுமல்லாது மிகவும் குறுகிய பக்கங்களை கொண்ட இந்த நூலை எல்லோரும் படித்து புரிந்து கொள்ளும் முறையிலும் பல மணி நேர உழைப்பையும் நமது மக்களின் நலனுக்காய் அர்ப்பணித்துள்ளார் சகோதரர் பாலா.
ஈழத்தமிழர்களின் வாழ்வில் முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு பின் என்று வீரம் செறிந்த நினைவுகளும் துரோகம் தந்த வலிகளையும் எமது வரலாற்றில் மட்டும் அல்ல இறுதி ஈழத்தமிழன் வாழும் வரை நினைவில் இருக்கும்.
அநீதிக்கும் சுதந்திரத்திற்குமான எமது போராட்ட வடிவங்கள் மாறி உள்ளது என்பதை சரியான நேரத்தில் மிக தெளிவாக, இந்த புத்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தால் நாம் கொடுத்த விலையையும் கொடுக்கப் போகும் விலையையும் தாங்கி வந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்காக நமது தமிழ்நாட்டு உறவுகள் கொடுத்த விலை என்றும் ஈழத்தமிழர் வாழ்வில் போற்றுதலுக்குரியது, போற்றப்பட வேண்டியதும் கூட என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
என்ற போதிலும் இந்தியாவின் துரோகத்தினாலும் பல வல்லரசுகளின் கபட நாடகத்திற்கும் பலியாகிப் போன நமது மக்கள் கனவையும், மீதம் இருக்கும் மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டியதும் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் நமது ஒவ்வொருவர் கடமையாகும்.
இந்த நூலின் மூலம் ஆசிரியர தோழர் பாலா அவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல இலங்கை வாழ் மக்களையும் விழிப்போடு இருக்கும் காலம் இதுவென நினைவூட்டி உள்ளார்.
முள்ளிவாய்க்காலுக்கு பின் குழம்பியும் குழப்பப்பட்டும் கொண்டு இருக்கும் ஈழத்தமிழர்களும், நமது தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய விடையம், இந்தியா எம்மை காப்பாற்றும் கரம் கொடுக்கும் என்று இன்னமும் அதே மாயைக்குள் தாங்களும் வாழ்ந்து எமது இளம் சமுகத்திடமும் பிழையான ஒரு அவநம்பிக்கையை வளர்ப்பதும் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் உயிரோடு புதைக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்இனத்தில் ஒரு குழந்தையையேனும் மனிதாபிமான அடிப்படையில்கூட காப்பாற்ற முன்வராத இந்திய அரசை நம்பி இன்னமும் அன்பு கரம் நீட்டுவதும், இல்லாது எமது வளங்களையும் வந்து எடுத்து செல்ல அனுமதிப்பதும் கண்டிக்க தக்க செயல் என்பதை இந்த நூல் சுமந்து வந்துள்ளது.
தோழர் பாலா போன்று மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட நலன் விரும்பிகளும் இதனைப் போல படைப்புகளை படைக்க வேண்டும். என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
தோழர் பாலா அவர்கள் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலானது ஓவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கருத்தையும் முகநூலில் பகிர்ந்துகொள்ள வழிசமைத்தமைக்கு சகோதரர் பாலா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அவரின் இந்த மக்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சி அடைகிறேன்.
நன்றி
திருமதி வாணி (டென்மார்க்

•தமிழக மக்களுக்கு இன்று தேவையானது இந்திய உணர்வா? அல்லது தமிழ் இன உணர்வா?

•தமிழக மக்களுக்கு இன்று தேவையானது
இந்திய உணர்வா? அல்லது தமிழ் இன உணர்வா?
இந்தியா பங்களாதேஸ் நீர்ப் பிரச்சனை தீர்க்கப்படுகிறது
இந்தியா பாகிஸ்தான் நீர்ப்பிரச்சனை தீர்க்கப்படுகிறது
எதிரி நாடுகளுக்கிடையில்கூட நீர்ப்பிரச்சனை
தீர்க்கப்படுகிறது
ஆனால் இந்தியாவுக்குள் இந்தியனாக இருக்கும் தமிழர்களுக்கு
காவிரி தண்ணீhப்; பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை
முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படவில்லை
பாலாற்றுப் பிரச்சனைகூட தீர்க்கப்படவில்லை
இவைமட்டுமன்றி
தமிழக மீனவர் சுடப்பட்டால் அக்கறை கொள்வதில்லை
தமிழர்கள் ஆந்திராவில் சுடப்பட்டால் அக்கறை கொள்வதில்லை
பாலாற்றில் அணை கட்டும்போதே அதனை தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும்.
இன்று ஒரு விவசாயி இறந்ததும் தவறுதலாக விழுந்து மரணம் என்று தமிழக அரசு மூடி மறைக்கிறது.
இன்னும் எத்தனை விவசாயிகள் மரணமடைந்தாலும் இந்திய அரசு அக்கறை கொள்ளப் போவதில்லை.
ஒரு வருடத்தில் 85ஆயிரம் கோடி ரூபாவை வரியாக தமிழக மக்களிமிருந்து பெறும் இந்திய அரசு தமிழக மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.
தமிழக மக்கள் மீது இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையை சுமத்தியிருக்கும் மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களின் நலன் குறித்து அக்றை கொள்வதில்லை
முள்ளிவாய்க்காலில் தமிழ் இனம் அழிக்கப்ட்டபோது காப்பாற்ற முடியவில்லை
தன்னை நம்பி வந்த அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்தை தடுக்க முடியவில்லை
இன்று தமிழக மக்கள் முன் உள்ள கேள்வி
இனியும் இந்தியனாக நினைத்து அழியப் போகிறீர்களா?
அல்லது தமிழனாக இன உணர்வு பெறப் போகிறீர்களா?
•தண்ணீருக்காக பாலாற்றில் விழுந்து தற்கொலை செய்த விவசாயி சீனிவாசனுக்கு அஞ்சலிகள்.