Sunday, September 11, 2016

•கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான்!

•கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான்!
கடவுள் உண்மையில் பெருந்தன்மை கொண்டவர்தான். ஆதனால்தான் தனக்கு தங்கம் இல்லாவிட்டாலும்கூட தன்னை குத்தகை எடுத்தவர்களுக்கு தங்கமாக வாரி வழங்கிறார்.
திருப்பதியில் லட்டு குத்தகை எடுத்தவனும், பழனியில் பஞ்சாமிர்தம் குத்தகை எடுத்தவனும் குருவாயூரில் நெய் குத்தகை எடுத்தவனும் தங்கத்தில் ஜொலிக்க கடவுள் அருள் இன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
சரி. கடவுள் பெருந்தன்மையானவராகவோ அல்லது இளிச்சவாயராகவோ இருந்தவிட்டுப் போகட்டும். அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் அதிக பெண் தெய்வம் உள்ள இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது என்ன நியாயம்?
பெண்களை தெய்வமாக மதிக்கும் நாட்டில் அம்பானி மனைவிக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு? என்று நான் கேட்கப் போவதில்லை. மாறாக எல்லாம் வல்ல இந்த கடவுள் தன் நாட்டில் 92 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதற்கு ஏன் அனுமதிக்கிறார்?
குறிப்பு- தயவு செய்து நான் இந்த நியாயத்தை கேட்டமைக்காக தந்தை பெரியாரை யாரும் திட்டி கருத்து பகிர வேண்டாம்.

• இயேசு சீக்கிரம் வருகிறார்!

• இயேசு சீக்கிரம் வருகிறார்!
இயேசுவே சீக்கிரமாக வந்து சேரவும்.
உங்கள் பெயரால் இவனுகள் செய்யும் கூத்தை தாங்க முடியவில்லை.
இந்த வீடியோவை பார்த்த பிறகு பக்தி ஒருவித மனநோய் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளமை உண்மைதான் என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக போராடுகிறார்கள்?

•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக போராடுகிறார்கள்?
•இவர்கள் ஏன் தமிழ் மக்களுக்காக சிறையில் வாடுகிறார்கள்?
தமிழக மக்களுக்காக காவிரியில் தண்ணீர் கேட்டு இவர்கள் போராடுகிறார்கள்.
தன் மகள் செல்வி குடும்பம் பெங்களுரில் இருப்பதால் கலைஞர் போராடாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் போராடாமல் இருக்க மாட்டார்கள்.
தங்கள் சொத்து பெங்களுரில் இருப்பதால் சன் டிவி மாறன் மௌனமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் மௌனமாக இருக்கமாட்டார்கள்.
தான் கன்னடத்தி என்பதால் ஜெயா அம்மையார் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யலாம். ஆனால் இவர்கள் தமிழர்கள். தம் இனத்திற்கு துரோகம் செய்யமாட்டார்கள்.
போராட்டம் நடத்தினால் சிறை செல்ல நேரிடும் என அஞ்சி சிலர் ஒளிந்துகொள்ளலாம். ஆனால் இவர்கள் சிறை செல்லவும் அஞ்ச மாட்டார்கள்.
ஏனெனில்,
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையை பின்பற்றுபவர்கள்.
இவர்கள் தமிழ் மக்களுக்காக தம்மை அhப்பணித்தவர்கள்.
இவர்கள் தமிழ் இன உணர்வு மிக்கவர்கள்.
தோழர் தமிழரசன் அன்றே காவரி அணையை குண்டு வைத்து உடைக்க திட்டம் போட்டவர். அவர் தமிழ் மக்களுக்காக போராடியதால் உளவுப்படைகளால் நயவஞ்சமாக கொல்லப்பட்டவர்.
தோழர் தமிழரசன் பாதையில் சென்றமையினால் மதுரையில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைத்தாலும் , கொன்று புதைத்தாலும் கலங்காது தமிழ் மக்களுக்காக போராடுபவர்களே தமிழரசன் தோழர்கள்.
அவர்களது போராட்டம் வெல்லட்டும்.
தமிழர்கள் அடிமை நிலையில் இருந்து விடுதலை பெறட்டும்.

•இந்தியாவில்,

•இந்தியாவில்,
கடலில் கரைக்கும் மண் பிள்ளையாருக்கு பாதுகாப்பு உண்டு
முற்றும் துறந்த நிர்வான சாமிகளுக்கும் பாதுகாப்பு உண்டு
முதலாளி அம்பானி மனைவிக்கும்கூட இசட் பிரிவு பாதுகாப்பு உண்டு
ஆனால் அப்பாவி தமிழனுக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை!
கர்நாடகாவில் தமிழனின்,
கடையை அடித்து நொருக்குகிறார்கள்
வாகனத்தை தீவைத்து கொளுத்துகிறார்கள்
சூடான மூத்திரம் தேவையா என திமிராக கேட்கிறார்கள்
இத்தனைக்கும் தமிழன் செய்த தவறு என்ன?
தனக்குரிய தண்ணீரைக் கேட்டது குற்றமா?
தண்ணீர் கேட்டால் தமிழனை அடிப்பதா?
மாநில அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது
மத்திய அரசு கண்மூடி யோகா செய்கிறது.
தமிழ் தலைவர்களோ இந்திய ஒருமைப்பாடு பற்றி போதிக்கின்றார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
தோழர் தமிழரசன் கூறியதுபோல் தமிழ்நாடு விடுதலை பெற்றால்தான்
தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்று நினைக்க வேண்டிய தருணம் இது.

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!
மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்றார்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்றார்.
மக்களை அணிதிரட்ட
ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட
கொரில்லா தாக்குதல் மேன்மையானது என்றார்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில்
கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.
நூறு மலர்கள் மலரட்டும்
ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார்.
மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை என்றார்.
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

•தமிழன் சினம் கொள்வானா?

•தமிழன் சினம் கொள்வானா?
கர்நாடகாவில்,
தமிழ் நாளிதழ் தீயிட்டு கொளுத்தப்படுகிறது
தமிழ் சனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழர் வாகனங்கள் அடித்து நொருக்கப்படுகின்றன.
என்ன மயிருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்? என்று ஒரு நடிகை பகிரங்கமாக கேட்கிறார்.
சூடான மூத்திரம் தேவையா? என நக்கலாக கேட்கிறார்கள்.
இதனை கர்நாக அரசு தடுக்கவில்லை. பொலிஸ் வேடிக்கை பார்க்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில்,
கர்நாடகாவின் சொத்துகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
கர்நாடகாவிற்கு மின்சாரம் பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது.
அதுமட்டுமன்றி தண்ணீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்யப்படுகிறார்கள்.
கர்நாடகாவில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று அங்குள்ள பி.ஜே.பி கட்சி போராடுகிறது.
பிரதர் மோடியோ காவிரிப் பிரச்சனையில் தலையிட முடியாது என்கிறார். இது மாநிலங்களின் உரிமை என்கிறார்.
இதே மோடிதான் பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்தபோது அதில் தலையிட்டு மாநில உரிமைக்கு எதிராக உச்ச நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பவர்.
எழுவர் விடுதலை விடயத்தில் தலையிட்ட மோடிக்கு காவிரி பிரச்சனையில் ஏன் தலையிட முடியாது?
இங்கு “தமிழக பி.ஜே.பி வேற. கர்நாடக பி.ஜே.பி வேற” என்று அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் கூறுகிறார்
அப்படியென்றால் இதுவரை அகண்ட பாரதம் அண்டா பாரதம் என்று பேசி வந்தது எல்லாம் வெறும் கப்சா தானா?
மானமுள்ள தமிழன் யாராவது தமிழக பி.ஜே.பி யில் இருந்தால் இந் நேரம் பி.ஜே.பி கொடியை அறுத்து எறிந்திருப்பான்.
தமிழக உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய ஜெயா அம்மையார் தனது வழக்கு தீர்ப்பு வர இருப்பதால் மௌனமாக இருக்கிறார்.
தமிழர்களை திரட்டி போராட வேண்ட்டிய கலைஞர் கருணாநிதியோ தன் மகள் செல்வி குடும்பம் கர்நாடகாவில் இருப்பதால் ஜெயா அம்மையார் மீது குற்றம் கண்டு பிடித்து கவனத்தை திருப்புகிறார்.
கர்நாடகாவில் இருக்கும் செல்வி குடும்பம் மீது இதவரை ஒரு கல் கூட வீசப்படவில்லை என்பதன் ரகசியம் கலைஞரின் திசை திருப்பலை புரிந்துகொள்ள உதவும்.
கர்நாடகாவில் அனைத்து கட்சியும் ஒன்று திரண்டு தமிழர்களை எதிர்க்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது.
இந்த அநியாயங்களுக்கு எதிராக , இந்த துரோகங்களுக்கு எதிராக இனியாவது தமிழன் சினம் கொள்வானா?

•இன்று திலீபன். நாளை ??

•இன்று திலீபன். நாளை ??
திலீபன் மீதான தாக்குதல்
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
சுவாதி கொலை தொடர்பாக தான அறிந்த சில தகவல்களை திலீபன் மகேந்திரன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்தார்.
அதேவேளை பிரான்சில் உள்ள தமிழிச்சி என்பவர் சுவாதி கொலையை பி.ஜே.பி யை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவரே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மையை அறிவதில் தமிழக பொலிசாருக்கு நாட்டம் இருந்திருந்தால் கருப்பு முருகானந்தத்தை கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக பொலிஸ் வழக்கம்போல கருப்பு முருகானந்தத்தின் புகாரின் பேரில் திலீபன் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தது.
அதுமட்டுமல்ல திலீபனின் கைத்தொலைபேசியை பறித்த பொலிசார் அதனை முருகானந்தனிடம் வழங்கியிருக்கிறது. அதில் இருந்து திலீபனின் நட்புகள் மற்றும் தொடர்புகள்; அறியப்பட்டுள்ளன.
பல வழக்குகளிற்காக தேடப்படும் முருகானந்தத்தை கைது செய்யாமல் அவர் கொடுத்த புகாரில் திலீபனை எப்படி கைது செய்யலாம் என்று நீதிபதியே கேட்ட அவலம் நடந்துள்ளது.
ஜாமீனில் வெளிவந்த திலீபனும் அவரது வழக்கறிஞரும் நேற்றைய தினம் திருவாரூரில் கருப்பு முருகானந்தனின் குண்டர் படையினால் தாக்கப்பட்டுள்ளார்.
காயம்பட்ட திலீபனுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் தஞ்சாவூர் அரச மருத்துமனையில் மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டிருக்கிறது.
வர வர காவிக் கூட்டத்தின் அட்டகாசம் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இன்று திலீபனுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் நடந்தது நாளை ஒவ்வாரு தமிழனுக்கும் நடக்கும்.
எனவே காவிப் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.