Friday, December 29, 2017

கருத்துக்கள் மக்களை பற்றிக்கொள்ளும்போது அவை பௌதிக சக்தியாக மாறுகிறது!

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 2 new photos.
கருத்துக்கள் மக்களை பற்றிக்கொள்ளும்போது
அவை பௌதிக சக்தியாக மாறுகிறது!
மக்கள் மத்தியில் புரட்சிகர கருத்துகளை விதைப்போம்!
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை தமிழ்தேசமக்கள் கட்சி தோழர் செந்தமிழ் குமரன் அவர்கள் தோழர் மாறன் அவர்களுக்கும் தோழர் லெனின் சகோதரி அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
தோழர் தமிழரசன் மரணத்திற்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படையை முன்னெடுத்த தோழர்களில் தோழர் லெனின் மற்றும் தோழர் மாறன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நூலை வழங்கிய தோழர் செந்தமிழ்குமரன் அவர்களுக்கும் நூலைப் பெற்றுக்கொண்ட தோழர் மாறன் மற்றும் தோழர் லெனின் சகோதரி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

தமிழ்நாய்கள் கூட்டமைப்பு

•தமிழ்நாய்கள் கூட்டமைப்பு
நாய்கள் எப்போதும் இறைச்சித்துண்டுக்காக தங்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்டே இருக்கும்
ஆனால் இறைச்சித்துண்டை வீசி எறியும் எஜமான் கொஞ்சம் அதட்டியதும் வாலாட்டிக்கொண்டு அமைதியாக இருக்கும்.
நாய்களில் பலவகை இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
அவை இறைச்சித்துண்டை போடும் எஜமானுக்கு எப்போதும் நன்றியுடன் வாலாட்டும்.
குறிப்பு- எனது பதிவைப் படிப்பவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்களை நாய்களுக்கு ஒப்பிட்டு நாய்களை கேவலப்படுத்திவிட்டதாகவும் யாரும் என்மீது வருத்தப்பட வேண்டாம்.
செய்தி-
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு வேண்டாம் என்று பிரதமர் ரணில் வேண்டுகோள்
ஒற்றுமையை பேணவும் என்று இந்தியா வலியுறுத்தல்.

•இது ஒரு அதிசய மிருகம்!

•இது ஒரு அதிசய மிருகம்!
காணாமல் போனோர் பிரச்சனை என்றால் கடிதம் எழுதும்
முதலமைச்ருக்கு எதிராக அமைச்சர்கள் பிரச்சனை என்றாலும் கடிதம்தான் எழுதும்
ஆனால் தனது பதவிக்கு ஆபத்து என்றால் செல்வம் அடைக்கலநாதனுடன் நாலு மணி நேரம் தொலைபேசியில் பேசும்.
திருகோணமலையில் இருந்தாலும் யாழில் இருக்கும் மாவை சேனாதிராசாவுடனும் கொழும்பில் இருக்கும் சுமந்திரனுடனும் மாறி மாறி பல மணி நேரம் தொலைபேசியில் உரையாடும்.
அதுமட்டுமல்ல தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயார் என்று அறிக்கையும் விடும்.
கேப்பாப்பிலவில் மக்கள் போராடுவது கண்ணுக்கு தெரியாது
காணாமல் போனோர் பிரச்சனை பற்றி கூறினால் காது கேட்காது
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து கேட்டால் திறப்பு தன்னிடம் இல்லை என்று நக்கல் பேசும்.
ஆனால் இந்திய தூதுவர் விருந்துக்கு அழைத்தால் கண் காது மட்டுமல்ல எல்லா உறுப்பும் நன்கு வேலை செய்யும்.
அதுவும் சந்திரிக்காவுடன் இரகசியம் பேசுவதென்றால் தானாக குஷி வந்துவிடும்.
தனக்கு பதவி, இரண்டு சொகுசு பங்களா, ஆறு சொகுசு வாகனம், 40 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு என அரசிடம் கேட்டு வாங்கும்
ஆனால் தமிழ் மக்களுக்கு வேலை வழங்கும்படி கேட்டால் அப்புறம் தீர்வு பெற முடியாது என்று சொல்லும்.
தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக யாருடனும் பேசாது. ஆனால் தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் பிரதமரிடம் ஓடிச் செல்கிறது. இந்தியாவிடம் உதவி நாடுகிறது. செல்வம் அடைக்லநாதனிடம் கெஞ்சுகிறது.
தேர்தல் வந்தால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும். ஆனால் பதவி பெற்றதும் புலிகளை பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் பேசும். ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடியை ஆட்டும்.
அதுமட்டுமா! தமிழ் மக்களைக் கொன்ற மகிந்த ராஜபக்சவை நாட்டின் தேசியதலைவர் என்று கூச்சமின்றி புகழ் பாடும்.
இது ஒரு அதிசய மிருகம்தான். ஏனெனில் இது எமனும் மறந்த கிழடு அல்லவா!

மழைக்குகூட பள்ளியில் ஒதுங்காதவனை எல்லாம் யாராடா பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டது?

•மழைக்குகூட பள்ளியில் ஒதுங்காதவனை எல்லாம்
யாராடா பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டது?
யார் யாரை எது ஏதுக்கு கூப்பிடுறது என்று ஒரு விவஸ்தையே இல்லையாடா?
கேப்பாப்பிலவில் மக்களுடன் சேர்ந்து குந்தாதவர்களை,
காணமல்போனவர்களின் உறவகள் 290 நாட்காக கொட்டிலில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களுடன் ஒருநாள் கூட உட்காராதவர்களை,
எதுக்கடா பட்டமளிப்புவிழாவில் அழைத்து குந்த வைத்துள்ளீர்கள்?
படித்தாலும் வேலை கிடைக்காது. வேலை கிடைத்தாலும் ஒரு வீடு கட்ட உழைக்க முடியாது.
ஆனால் எந்த படிப்பும் இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராகி கோடி கோடியாக உழைக்கலாம்.
ஒன்றல்ல நாலு வீடுகளை கட்டலாம். 5 கோடி ரூபா சொகுசு வாகனம் ஓடலாம் என்பதை மாணவர்களுக்கு காட்டவா இவங்களை அழைத்தீங்கடா?
இவங்களை பார்த்தா மாணவர்களுக்கு படிப்பு வருமா? அல்லது படித்த படிப்பில் மதிப்புத்தான் வருமா?
ஒருவர் மாணவி வித்யா கொலை செய்யப்பட்டபோது அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக தன் மகளுக்கு ஜனாதிபதியை அழைத்து வந்து பிறந்தநாள் கொண்டாடினார்.
இன்னொருவர் மாணவி வித்யா கொலையாளியை தப்பவைத்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்தபோது கனடாவில் போய் ஒளிந்து இருந்தவர்.
ஒருவர் சப்றா நிதிநிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி பணம் சுருட்டியவர். இன்னொருவர் கட்சிக்கு நிதி என்று வாங்கி தன் குடும்ப நிதியாக மாற்றியவர்.
மக்கள கடன் தொல்லையால் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த தலைவர் மாவிட்டபுரத்தில் கட்டும் வீட்டிற்கு மாபிள் கற்கள் இறக்குமதி செய்கிறார்.
இனியாவது இப்படிப்பட்டவர்களை தயவு செய்து பட்டமளிப்பு விழாக்களுக்கு அழைக்காதீங்கடா!

இவரும் கோயிலை இடிக்கப்போவதில்லை மற்றவரும் தன்னைக் கொளுத்தப் போவதில்லை

இவரும் கோயிலை இடிக்கப்போவதில்லை
மற்றவரும் தன்னைக் கொளுத்தப் போவதில்லை
ஆனால் இரண்டுபேருமா சேர்ந்து 
மீனவர் பிரச்சனையை நன்றாக திசை திருப்புகின்றனர்.
1018 தமிழ் மீனவனை இன்னும் காணவில்லை
அதுபற்றி இந்த இருவருக்கும் எந்தக் கவலையும் இல்லை!
பாபர் மசூதியை இடித்தவன் சுதந்திரமாக திரிகிறான்
முஸ்லிம்களை கொன்றவர் பிரதமாக இருக்கிறார்
ஆனால் கோயிலை இடிப்பேன் என்ற திருமா மீது
நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று
எச்ச ராசா கொக்கரிக்கிறார்.
நன்றாக தீக்குளி ராசா.
தேவையென்றால் எண்ணெய், தீப்பெட்டி செலவு
நாங்கள் தந்து உதவுகிறோம்!

•யாருக்கும் வெட்கம் இல்லை!

•யாருக்கும் வெட்கம் இல்லை!
ஒற்றுமைக்காக எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயார் என்று சம்பந்தர் அய்யா கூறுவது எதற்காக?
ஆயுதக்குழுக்கள் பிரிந்து போனால் போகட்டும் என்று சவால் விட்ட சுமந்திரன் இப்போது ஆயுதக் குழுக்களை அரவணைத்துக்கொள்ள தயார் என்று கூறுவது எதற்காக?
சம்பந்தர் அய்யாவுடன் நாலு மணி நேரம் தொலைபேசியில் செல்வம் அடைக்கலநாதன் பேசியது எதற்காக?
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கப் போவதாக “புளட்” சித்தார்த்தன் மிரட்டுவது எதற்காக?
இத்தனை நாளும் பேசாமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆனந்தசங்கரியும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூட்டு முன்னணி அமைத்திருப்பது எதற்காக?
முன்னாள் முதல்வர் வரதர் மீண்டும் இலங்கை குடியுரிமை பெற்றதோடு தமிழரசுக்கட்சியில் சேரத் துடிப்பது எதற்காக?
பதவி. பதவி. பதவி. பதவி நலனுக்காகவே யொழிய தமிழ் மக்கள் நலனுக்காக இல்லை.
டெலோ பிரிந்து சென்றால் தன் எதிர்க்ட்சி தலைவர் பதவி போய்விடும் என்பதாலேயே சம்பந்தர் அய்யா பதறுகிறார்.
தனது பிரதி பாராளுமன்ற தலைவர் பதவி போய்விடும் என்பதாலேயே செல்வம் அடைக்கலநாதன் பேசுகிறார்.
எப்படியாவது ஏதாவது பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே சுரேசும் ஆனந்தசங்கரியும் ஒன்று கூடியுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவுகள் 290 நாட்களாக போராடுகிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் சொந்த நிலம் கேட்டு 300 நாட்களுக்கு மேலாக போராடுகிறார்கள்
ஆரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டங்கள் எதற்கும் குரல் கொடுக்காதவர்கள் இன்று திடீரென்று குரல் கொடுக்கிறார்கள்.
இவர்கள் இன்று குரல் கொடுப்பது தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல. தமது பதவி நலனுக்காகவே!

•போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!

•போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!
டிசெம்பா-10 சர்வதேச மனிதவுரிமைகள் தினம்!
இன்று சர்வதேச மனிதவுரிமைகள் தினமாம். 
குழந்தைகளைக்கூட காக்க முடியவில்லை.
இந்நிலையில் மனிதவுரிமை தினம் தேவைதானா?
இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள்
300 நாட்களாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள்
இந்த தினத்திலாவது எதாவது ஆறுதல் வார்த்தை
எமது தலைவர்கள் சொல்வார்களா என்று பார்த்தால்
பியர் விலை குறைத்த பட்ஜெட்டுக்கு ஆதரவு என்று செய்தி.
போராடும் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு
போராடும் கேப்பாப்பிலவு மக்களுக்கு
போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு
எமது தலைவர் சம்பந்தர் அய்யா சொல்லும் செய்தி
விலை குறைக்கப்பட்ட பியரை குடியுங்கள் என்பதே.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தால்தான்
பட்ஜெட்டுக்கு ஆதரவு தரமுடியும் என்றுகூட
எமது தலைவர்களால் சொல்ல முடியவில்லையே.
காணாமல்போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டால்தான்
உள்ளுராட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று
பங்களாளிக் கட்சிகள் ரெலோ, புளட் கூட சொல்லவில்லையே
பதவிக்கு போட்டி போடுபவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவில்லையே?
போங்கடா! நீங்களும் உங்கட மனிதவுரிமையும்!
குறிப்பு-
தமிழ் மக்களுக்கு விலை குறைந்த பியர் வழங்கி
தமிழ்மக்களை குடி மக்களாக்கும்
“பெருங்குடிமகன”; சம்பந்தர் அய்யாவுக்கு பாராட்டுகள்.
ஏற்கனவே அதிக மது விற்பனை செய்யும் மாவட்டமாக
யாழ் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
இனி அது இன்னும் சாதனை மாவட்டமாக மாறும்
சபாஸ் சம்பந்தர் அய்யா! தொடரட்டும் உங்கள் பணி.