Wednesday, January 31, 2018

•யாழ் இந்திய தூதுவரும் நாய்க்குட்டி தலைவர்களும்!

•யாழ் இந்திய தூதுவரும்
நாய்க்குட்டி தலைவர்களும்!
நாய்க்குட்டிகளில் பலவகை இருந்தாலும் அவையாவும் பிஸ்கட் துண்டு போடும் எஜமானுக்கு நன்றியுடன் வாலாட்டும்.
அதேபோல், பிஸ்கட் துண்டுபோட்டால் ஈழத்து நாய்க்குட்டி தலைவர்கள் ஓடி வருவார்கள் என்பது யாழ் இந்திய தூதருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இதற்காகவே, இந்திய குடியரசு தினத்தை ஒட்டி யாழ் இந்திய தூதர் ஓட்டலில் விருந்து வைத்தார்.
இந்திய தூதரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பல நாய்க்குட்டி தலைவர்கள் நன்றியுடன் கலந்து கொண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாய்க்குட்டி தலைவர்களுக்கு,
இந்திய ராணுவம் செய்த கொலைகள் மறந்து போயிருக்கலாம்.
இந்திய ராணுவம் செய்த பாலியல் வல்லுறவுகள் மறந்து போயிருக்கலாம்.
இந்தியா முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு செய்த உதவிகள் மறந்துபோயிருக்கலாம்.
இந்தியா ஈழத் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் ஆக்கிரமித்திருப்பது பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அகக்குறைந்தது,
இன்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?
இன்றும் தமிழக அகதிமுகாம்களில் துன்பப்படும் ஈழ அகதிகளுக்கு உதவுமாறு ஏன் இவர்களால் யாழ் இந்திய தூதரிடம் கோர முடியவில்லை?
இதைக்கூட கோர முடியாத அளவுக்கு இந்த தலைவர்களுக்கு இந்திய விசுவாசம் இருக்கின்றதா?
யாழ் இந்திய தூதரின் விருந்தில் கலந்துகொண்டதுகூட பரவாயில்லை,
யாழ் இந்திய தூதரிடம் ஈழ அகதிகள் குறித்து கேட்காததுகூட பரவாயில்லை,
ஆனால் யாழ் இந்திய தூதருடன் விருந்து உண்ணும் படங்களை கொஞ்சம்கூட கூச்சமின்றி எப்படி உங்கள் முகநூலில் பகிர முடிகிறது?
தூ… நாய்களா! இதைவிட கூட்டிக் கொடுக்கிற மாமா வேலையை பார்க்கலாமடா?
பி.கு- தயவுசெய்து நாய்க்குட்டிகளை கேவலப்படுத்திவிட்டதாக யாரும் வருத்தப்பட வேண்டாம்.

•நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!

•நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!
நித்தியானந்தாவைக் கைது செயயுமாறு உத்தரவிடவேண்டி வரும் என்றும் அவரது ஆச்சிரமங்களை முடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் யாரோ ஒரு ஆண்டாளுக்காக பொங்கிய நித்தியின் சீடர்கள் தமது குருவுக்காக பொங்காமல் விடுவார்களா?
அவரது பெண் சீடர்கள் நீதிபதியை அம்பிளைதானா என்று வந்து நிரூபி என்று கேட்கப் போறாங்களே?
அதுவும் மைனர் பெண் பிள்ளைகள் நள்ளிரவில் எழும்பி வீடீயோ பதிவு போட்டு ஏசப் போகிறார்களே?
இதையெல்லாம்கூட கொஞ்சம் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரது வெள்ளைக்கார சீடர்கள் கொச்சைத் தமிழில் நீதிபதியை கெட்ட வார்த்தைகளால் திட்டப் போகிறார்களே?
அதை நினைத்தால்தான் பகீர் என்கிறது. அதுவும் நீதிபதிக்கு குண்டியில் கட்டி வந்து சாகப்போகிறார் என்று திட்டப்போவதை எப்படி கேட்பது?
ஓ! நித்தியானந்த சுவாமி அவர்களே! நீங்கள்தான் எப்படியாவது உங்கள் சீடர்களை கட்டுப்படுத்தி எங்களை காப்பாற்ற வேண்டும்.
குறிப்பு- அதுசரி நீதிபதி ஏன் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்கிறார்? நித்தியானந்தாவின் சக்திக்கு பயந்துவிட்டாரா?

•STF காவலுடன் சங்கிலி அறுக்க வந்தால் என்ன செய்வது?

•STF காவலுடன் சங்கிலி அறுக்க வந்தால் என்ன செய்வது?
கீழே படத்தில் இருக்கும் நபர் தமிழரசுக்கட்சி வேட்பாளர். ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்தமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வேட்பாளர் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால் அதற்கு தலைவர்கள் எப்படி பொறுப்பாகும் என சிலர் கேட்கலாம்.
டெலோவும் பிளாட்டும் முன்னாள் ஆயுததாரிகள். கறைபடித்த கரங்களின் சொந்தக்காரர்கள் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார்.
எனவே தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள் நிச்சயம் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று நம்பினோம்.
ஆனால் அப்படி இல்லையே.! சரி பரவாயில்லை.
இப்ப தமிழ் மக்களின் கவலை என்னவெனில் பதவிக்கு வர முன்னரே இப்படி திருடுபவர்கள் பதவிக்கு வந்தபின் எப்படி திருடுவார்கள்?
அதுமட்டுமல்ல பதவிக்கு வந்தபின் தமக்கு STF பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்பார்கள்.
அப்புறம் STF பாதுகாப்போடு வந்து சங்கிலி அறுத்தால் என்ன செய்வது?
இதைப் படித்தவிட்டு “அப்ப சுமந்திரன் STF பாதுகாப்போடு சங்கிலி திருடுகிறார் என்று கூறுகிறீர்களா?” என சிலர் கேட்கலாம்.
அவர்களுக்கு நான் சொல்வது “சே சே சுமந்திரன் அப்படி சில்றைத்தனமாக எல்லாம் திருடமாட்டார். அவர் லெவல் வேற”

•அனைவரும் திருடர்களே!

•அனைவரும் திருடர்களே!
சிவசக்தி ஆனந்தன்- தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்துள்ளனர்.
சுமந்திரன்- இதற்கு முன்னர் இரண்டு வரவு செலவு திட்டத்திற்கு சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார். அதற்கு அவர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
சிவசக்தி ஆனந்தன்- தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்றுள்ளனர்.
சுமந்திரன்- வவுனியாவில் உளவு வேலைக்கு பயன்படுத்திய வாடி வீட்டிற்கு சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு வாடகை செலுத்தினார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
தமிழ் மக்கள்- இவர்கள் அனைவரும் திருடர்கள். தேர்தல் பாதை திருடர் பாதை.

இந்த கொடுமைகள் மிருகவதைச் சட்டத்தின் கீழ் வராதா?

இந்த கொடுமைகள் மிருகவதைச் சட்டத்தின் கீழ் வராதா?
மாட்டுக்காக கவலைப்படும் இந்திய அரசு
மாடு மாதிரி சுமக்கும் இந்த மனிதர்களுக்காக கவலைப்படாதா?
இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பார்ப்பான்களை சுமப்பது?
இதற்கெல்லாம் ஒரு முடிவு வராதா?

•ஈழத்து கருணாந்தா சுவாமிகளின் அருளுரை!

•ஈழத்து கருணாந்தா சுவாமிகளின் அருளுரை!
ராஜீவ் காந்தியை பிரபாகரனும் பொட்டம்மானுமே கொலை செய்தனர் என்றும் அதனாலேயே இந்திய அரசு புலிகளை தடை செய்தது என்றும் கருணா அம்மான் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு என்னும் பிரிவினையை முன்னெடுக்கும் தமிழ்நாடு மீட்சிப்படைக்கு பயிற்சியும் உதவியும் செய்தனர் என்று கூறியே புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
இந்தக் காரணத்தையே ஒவ்வொரு இரண்டு வருடத்திற்குகொரு முறை தடையை நீடிக்கும்போதும் இந்திய அரசு கூறிவருகிறது.
அப்படியிருக்க கருணா அம்மான் திடீரென எதற்காக ராஜீவ்காந்தி கொலையே தடைக்கு காரணம் என கூறுகிறார்?
அதுமட்டுமல்ல, ராஜீவ்காந்தி கொலையைப் பேசியவர் அதற்கு காரணமான அமைதிப்படை என்ற பெயரில் வந்து இந்திய ராணுவம் செய்த கொலைகளை ஏன் பேசவில்லை?
இத்தனை நாளும் மகிந்த ராஜபக்சவே தமிழர்களுக்கான தலைவர் என்று கூறிக்கொண்டிருந்தவர் இப்போது எதற்காக இந்தியாவுக்கு விசுவாசமான கருத்துகளை கூறுகிறார்?
தமிழின படுகொலையாளிகளையும் அதற்கு உதவியவர்களையும் தமிழினம் ஒருபோதும் மறந்துவிடாது என்பதை கருணா மட்டுமல்ல இந்திய உளவு நிறுவனங்களும் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு ஈழத் தமிழனும் தங்கவேல் அய்யாவும் உரையாடல்!

ஒரு ஈழத் தமிழனும் தங்கவேல் அய்யாவும் உரையாடல்!
வன்னியில் இருக்கும் நான் கனடாவில் இருக்கும் தங்கவேலு அய்யாவுடன் முகநூலில் இன்று உரையாடினேன்
" நான் உண்மையான தமிழனா" என்று அவரிடம் கேட்டேன் .
சற்று யோசித்த தங்கவேலு அய்யா சில கேள்விகளுக்கு பதில் கூறுமாறு கேட்டார்.
இலங்கை தேசிய கீதத்தை தமிழில் ஒலிக்கவிட்டு இதை யார் எழுதியது என்று கேட்டார்?
அதை யார் எழுதியது என்று தெரியாது என்றேன்.
ஆனால் தேசியகீதம் ஒலிக்கும்போது உடனே எழுந்து நின்று சம்பந்தர் அய்யா ஆட்டியது போல் நானும் ஒரு சிங்க கொடியை ஆட்டிக் காட்டினேன்.
இதைப் பார்த்ததும்; தங்கவேலுவின் அய்யாவின் முகம் மலர்ந்ததை என்னால் உணர முடிந்தது.
அடுத்து, சம்பந்தர் அய்யா சொகுசு பங்களாhவில் தண்ணியடித்தக்கொண்டு ஒய்யாரமாக படுத்திருக்கும் படத்தை காட்டிவிட்டு அமைதியோடு என்னை நோக்கினார் தங்கவேலு அய்யா.
என்னால்தான் என் தலைவர் மீதான பற்றை அடக்க முடியவில்லை.
மறுபடியும் எழுந்து நின்று “சம்பந்தர் அய்யா வாழ்க” என்றேன்.
“தமிழ் மக்களுக்காக ஒரு சிறியவீட்டில் சிறிய கட்டிலில் அய்யா வாழ்வதாகவே என் கண்ணுக்கு தெரிகிறது” என்றேன்.
இப்போது தங்கவேலு அய்யா மகிழ்சியுடன் ஒரு புன்சிரிப்பை உதிர்த்தார்.
அடுத்து கனடாவில் சுமத்திரன் பேசிய வீடியோவை ஓடவிட்டார் தங்கவேலு அய்யா.
பொறுமையாக முழுவதும் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. ஆனால் நன்றாக தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் இதைக்கூறினால் தங்கவேலுக்கு அய்யாவுக்கு கொபம் வருமே.
எனவே, “அற்புதமான பேச்சு.. இவருக்கு வாழும் வீரர் பட்டம் கொடுத்தால் என்ன அய்யா?” என்று கேட்டேன்.
“அது ஏற்கனவே குகதாசன் சம்பந்தருக்கு கொடுத்துவிட்டார். எனவே சுமந்திரனுக்கு வேறு ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டும்” என்றார்.
குகதாசன் அய்யாவின் பெயரை தங்கவேலு அய்யா கூறியதும் “அதனால்தான் அவருக்கு சம்பந்தர் அய்யாவின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டதா அய்யா?” என்று கேட்டேன்.
உடனே தங்கவேலு அய்யாவின் முகம் கோபமாக மாறியது. “அது எங்கள் கட்சி விடயம். அதை நீ கேட்க முடியாது” என்றார்.
“அய்யா! எதிர்க்கட்சி தலைவரின் இணைப்பாளர் பதவி என்பது கட்சிப் பதவியும் இல்லை. அது உங்கள் கட்சி உள்விடயமும் இல்லை. யாரும் இதைப் பற்றி கேட்கலாம் அய்யா” என்றேன்.
அதுமட்டுமன்றி, “இந்த பதவியை தனக்கு தரும்படி சந்திரகாந்தன் நேரு கேட்டதாகவும் ஆனால் அவருக்கு கொடுக்காமல் குகதாசன் அய்யாவுக்கு கொடுத்ததாக கூறுகிறார்களே. இது உண்மையா அய்யா?” என்று கேட்டேன்
இதைக் கேட்டதும் அய்யாவுக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு “சந்திரகாந்தன் உமக்கு உறவோ?” எனக் கேட்டார்.
அய்யா! சந்திரகாந்தன் நேரு எனது உறவினர் இல்லை. அவர் உங்கள் தமிழ்தேசியகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அய்யா” என்று நான் பதில் அளித்தேன்.
அதற்கு அவர் " உங்களுக்கு எல்லாம் சூடு சொரணை எதாவது இருக்கா ..." என வெறி பிடித்தாற்போல் கேட்டார் .
" அதெல்லாம் தெரியாது. அய்யா. ஆனால் .என்னிடம் வாக்காளர்; அட்டை இருக்கிறது ஐயா .." என பயபக்தியோடு வாக்காளர் அட்டையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
வாக்காளர் அட்டையைக் கண்டதும் தங்கவேலு அய்யா முகமலர்ச்சியோடு “ எங்களுக்கு வோட்டு போட்டமைக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
நான் குழப்பமாகி “ உங்களுக்கு போடுவதாக நான் சொல்லவில்லையே. அதுமட்டுமல்ல யாருக்கு போடுவது என்றுகூட இன்னும் நான் நினைக்கவேயில்லையே” என்றேன்.
அதற்கு தங்கவேலு அய்யா புன்சிரிப்புடன் “ நீங்கள் யாருக்கு வோட்டு போட்டாலும் அது சுமந்திரன் சின்னத்திற்கே விழும்” என்றார்.
“ஆமாம் ஆமாம். நன்றி” என்று கூறிவிட்டு வெளியே வந்த போது வெயில் அடித்துக் கொண்டிருந்தது, காற்று வீசிக்கொண்டிருந்தது. அவையாவும் “ஏக்கியராஜ்ஜிய” என கூறிக்கொண்டிருந்தது.
.நான் துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டேன். கோமணத்தை இறுக்கிக் கட்டினேன். ஏனெனில் அதுவும் உருவப்பட்டுவிடக்கூடாதே!
குறிப்பு- இவை யாவும் உண்மைகள் நிறைந்த கற்பனை உரையாடல்.