Monday, April 23, 2018

போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை

•போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்றால்
தமிழக மக்களின் போராட்டம் தோல்வி அடைந்துவிடுமா என்ன?
காவிரி ஆணையம் அமைத்தால் கர்நாடகம் கொந்தளிக்கும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிடும் என்று மத்திய அரசு கூறுகிறது.
அப்படியென்றால் ஆணையம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் கொந்தளிக்காதா? அல்லது தமிழகம் கொந்தளித்தாலும் அதுபற்றி தனக்கு கவலை இல்லை என்று மத்திய அரசு கருதுகிறதா?
ஆனாலும் தமிழக மக்கள் அறவழியில் தமது தமது உரிமைக்காக மெரினா கடற்கரையில் போராட முனைந்தார்கள்.
உடனே அவர்களை கைது செய்த தமிழக அரசு, மெரினா கடற்கரையில் போராடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போட்டுள்ளது என்று கூறுகிறது.
அதாவது ஆணையம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை அமுல்படுத்தாத அரசு, உயர்நீதிமன்றம் மெரினாவில் போராட தடை விதித்த உத்தரவை அமுல்படுத்துகிறது.
மக்கள் அற வழியில் போராடுவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டமையினால் இயல்பாகவே தனி மனித போராட்டங்கள் வெடித்தன.
டிரபிக் ராமசாமி என்ற வயதானவர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். கும்பகோணத்தில் தனியார் பள்ளி அசிரியர் தேசியக்கொடியை கொளுத்துகிறார்.
காவிரி ஆணையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு போராடும் மக்களை உடனே கைது செய்து வருகிறது.
இதனால் தமிழகவாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மக்கள் டோல்கேட்டுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
இதுவரை உளுந்தூர்பேட்டை, ஓமலூர், சேலம் சுங்கச்சாவடிகள் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் சுங்கச்சாவடி மக்களால் முற்றுகைக்குள்ளானது.
வருடந்தோறும் 85000 கோடி ரூபாவை வரியாக தமிழகத்தில் இருந்துபெற்றுவரும் இந்திய அரசுக்கு அரசுக்கு சுங்கச்சாவடி மீதான தாக்குதல் நிச்சயம் கலக்கத்தைக் கொடுக்கும்.
எனவேதான் “சுங்கச்சாவடியை தாக்குவது பெரிய வீரமா? முடியுமென்றால் ஆளுனர் மாளிகையை தாக்குங்கள் பார்க்கலாம்” என்று மக்கள் கவனத்தை திசைதிருப்ப பாஜக விசுவாசிகள் முயல்கிறார்கள்.
மக்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை மக்கள் ஒருபோதும் தீர்மானிப்பதில்லை. மக்களின் எதிரியான அரசின் அடக்குமுறையே தீர்மானிக்கின்றது.
போராட்டம் வெற்றியை தராமல் போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியை தருவதில்லை.
தமிழக மக்களின்; “தண்ணியைக்கொடு இல்லையேல் தனியாக விடு” போராட்டமும் தோல்வியை ஒருபோதும் தராது. மாறாக வெற்றியையே பெற்றுக் கொடுக்கும்.

•இவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்!

•இவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்!
மீண்டும் தமக்கு பதவி கிடைக்காது என்பதால் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடிக்கு முடிந்த கொள்ளையை அடிப்பதிலேயே இவர்கள் கவனம் உள்ளது.
தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக மோடி அரசிற்கு ஆதரவாக தமிழ் மக்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து வருகின்றனர் இவர்கள்.
கர்நாடகத்தில் எந்த அரசு இருந்தாலும் காவிரிக்காக அவர்கள் மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசிற்காக மக்களை மிரட்டி வருகிறது.
காவிரி ஆணையம் அமைக்காவிடின் தமிழக எம்.பி க்கள் தற்கொலை செய்வோம் என்றார்கள். இப்போது உண்ணாவிரதம் இருப்போம் என்கிறார்கள்.
ஆனால் அதிலும்கூட முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளமாட்டார்களாம்.
எம்.பி பதவி முடிய இன்னும் சில காலமே உள்ளது. இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்காக தமது பதவியை ராஜினாமா செய்ய ஒரு எம்.பி யும் தயாரில்லை.
இவர்கள் தாங்களும் போராட மாட்டார்கள். போராட முன்வருபவர்களையும் விடமாட்டார்கள். உடனே கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.
மெரினாவில் சில மாணவர்கள் போராட முனைந்தார்கள். உடனே ஓடிச்சென்று அவர்களை கைது செய்தார்கள்.
கும்பகோணத்தில் ஒரு ஆசிரியர் தேசியக் கொடியை எரித்தார். உடனே தனிப்படை அமைத்து அவரை கைது செய்து விட்டார்கள்.
வேல்முருகன் டோல்கேட்டை உடைத்தார். உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
தந்தைபெரியார் திராவிடக் கழகத்தினர் ரயில் மறியல் செய்ய முனைந்தார்கள். அவர்களையும் கைது செய்து விட்டார்கள்.
உணர்வுள்ள தனிநபர்கள் போராடுகிறார்கள். சில நூறு தொண்டர்களை உடைய கட்சிகள்கூட போராடுகின்றன.
ஆனால் ஒரு கோடி தொண்டர்கள் உள்ள கட்சி என்று பெருமை பேசும் திமுக 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது. 12 மணிக்கு சாலை மறியல் செய்து கைதாகிறது. 1 மணிக்கு விடுதலையாகி வீடு சென்றுவிட்டது.
யப்பா! புல்லரிக்கிறது. இப்படி போராட்டம் நடத்தினால் எப்படி மத்திய அரசு பயப்பிடும்? எப்படி காவிரி கிடைக்கும்?

கம்பன்கழகத்தின் பேரால்

கம்பன்கழகத்தின் பேரால்
கம்பவாரிதி ஜெயராஜ்
சம்பந்தர் அய்யாவுக்கு
நடத்திய பட்டமளிப்பு விழா இது
ஒரு வீணாய் போனவன்
இன்னொரு வீணாய் போனவனுக்கு
நடத்திய பட்டமளிப்பு விழா இது.
கொடுக்கிறவனுக்கும் வெட்கம் இல்லை
வாங்கிறவனுக்கும் வெட்கம் இல்லை
இதை பிரசுரம் செய்யிற
பத்திரிகைக்கும் வெட்கம் இல்லை.
தரம் கெட்டவர்களை சூடுவதால்
பட்டங்களும் பொன்னாடைகளும்
வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கின்றன.
சீ--- தூ என்று அவை காரி உமிழ்கின்றன.

காவிரியில் தண்ணீர் தரமுடியாது

காவிரியில் தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசால் சொல்ல முடியுமென்றால் நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர முடியாது என்று ஏன் தமிழக அரசால் கூறமுடியாது?
தண்ணிர் தராத கர்நாடகத்தை “தேசவிரோதிகள்” என்று கூறமுடியாதவர்கள் நெய்வேலி மின்சாரத்தை மறிக்க முனையும் தமிழர்களை மட்டும் தேசவிரோதிகள் என்று எப்படி கூறமுடியும்?
கர்நாடகத்தில் தமிழன் தாக்கப்படுவதை “வன்முறை” என்று கூறாதவர்கள் தமிழ்நாட்டில் டோல்கேட்டை தாக்கினால் வன்முறை என்று ஒப்பாரி வைப்பது ஏன்?
போராடாத இனம் விடுதலை பெற்றதில்லை
போராடிய இனம் விடுதலை பெறாமல் விட்டதில்லை.
தண்ணியை விடு அல்லது தனியா விடு

போராட்டம்

போராட்டம்
சாதி பார்ப்பதில்லை
மதம் பார்ப்பதில்லை
ஆண் பெண் வேறுபாடு கூட பார்ப்பதில்லை
ஏன் குழந்தையென்றும் பார்ப்பதில்லை
அது பார்ப்பதெல்லாம் வெற்றி ஒன்றையே.
காவிரி போராட்டமும்
வெற்றி பெறாமல் ஓய்ந்து விடப்போவதில்லை.
போராட்டம் தமிழனை
சாதி , மதம், பால் கடந்து ஒற்றுமையாக்கின்றது.
ஆதனால்தான் போராட்டம் மகிழ்சிகரமானது என்றார் மார்க்ஸ்
குறிப்பு-
காவிரிக்காக இஸ்லாமிய தமிழ் பெண் ஒரவர் திருச்சி வமான நிலையத்தை மற்றுகை இட்டுள்ளார்.
எல்லாம் வல்ல ஆண்டவரே! நாளை இந்த பெண்ணை பாகிஸ்தான் கைக்கூலி என்று எச்ச.ராசா அழைக்காமல் இருக்க அருள்புரிவீராக.

சுமந்திரனுக்கு பாராட்டுகள்!

•சுமந்திரனுக்கு பாராட்டுகள்!
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொண்டு சுமந்திரன் உரையாற்றியுள்ளார்.
12000 போராளிகளை முன்னாள் மகிந்த அரசாங்கம் விடுவித்த நிலையில் தற்போது இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க ஏன் தற்போதைய அரசாங்கம் தயங்குகிறது என்று சுமந்திரன் கேட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஜேவிபி போராளிகளை மன்னித்த அரசாங்கம் ஏன் புலிப் போராளிகளை மன்னிக்க மறுக்கிறது என்றும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன், காணிகள் விடுவிக்கப்படாததுடன் அதில் ராணுவம் முன்பள்ளிகளையும் விவசாயங்களையும் நடத்துகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை முன்னோக்கி நகராமல் உள்ளது. அரசின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டவர்களாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் யாவும் இதுவரை நாம் தெரிவித்து வந்த கருத்துகள் ஆகும்.
இக் கருத்துகளை நாம் தெரிவித்த போதெல்லாம் அதனை மறுத்து அரசை ஆதரித்து வந்த சுமந்திரன், தற்போது தானே அவற்றை இன்று தெரிவித்துள்ளார்.
இக் கருத்துகளை வெளிப்படையாக அதுவும் பாராளுமன்றத்திலேயே சுமந்திரன் பேசியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே.
“அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பதுபோல அண்மையில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி சம்பந்தர் சுமந்திரன் போக்குகளில் சிறிது மாற்றத்தை எற்படுத்தியிருக்கிறது.
தேர் பாதையில் சரியாக செல்வதற்கு சக்கட்டை அவசியமாக இருப்பது போன்று, எமது அரசியல் தலைமைகள் சரியாக செல்வதற்கு விமர்சனம் அவசியமாக உள்ளது.
எனவே முகநூல்களில் இன்னும் அதிகமாக அரசியல் விமர்சனங்கள்; செய்வோம்.

காவிரிக்கான போராட்டத்தில்

காவிரிக்கான போராட்டத்தில்
தமிழர்கள் அனைவரும் உண்டு- ஆனால்
இவர்கள் மட்டும் இல்லையே?
அது ஏன்?
இவர்களும் தமிழர்கள் என்றால்
இந்நேரம் போராட்டத்தில் குதித்திருப்பார்களே!
ஆண்டாளுக்காக போராடியவர்கள்
ஏன் காவிரிக்காக போராட மறுக்கிறார்கள்?
காஞ்சி சங்கராச்சாரி கைது என்றவுடன்
மைலாப்பூரில் வீதியில் குவிந்தவர்கள்
காவிரிக்காக வீதியில் இறங்க மறுப்பது என்?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு
தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் இவர்களை
தமிழர்கள் என்று எப்படி நம்புவது?