Saturday, June 30, 2018

• அம்மா! எங்களை மன்னித்துவிடுங்கள்!

• அம்மா!
எங்களை மன்னித்துவிடுங்கள்!
ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தேழு வருடங்கள் உங்கள் மகனின் விடுதலைக்காக நடந்து நடந்து களைத்து விட்டீர்கள்.
விடுதலை பெற்று வருவான் என்று காத்து காத்து இருந்து விரக்தி அடைந்துவிட்டீர்கள்.
அதனால் எந்த தாயும் சொல்ல முடியாத வார்த்தை “என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” என்று சொல்லியுள்ளீர்கள்.
ஆனால் இந்த வேளையிலும்கூட மகனை கொன்றுவிடுங்கள் என்றுதான் சொல்லியுள்ளீர்களேயொழிய “மகன் தெரியாத்தனமாக ஈழத் தமிழர்களை ஆதரித்து விட்டான்” என்று சொல்லவில்லை.
ஒரு வருடம் இரண்டு வருடம் சிறை என்றவுடனே பெரும்பாலும் பலர் மன்னிப்பு கெட்டு கடிதம் வழங்கும் இந்த காலத்தில் 27 வருடம் கழித்த பின்பும்கூட ஈழத் தமிழர்களை தான் ஆதரித்தது தவறு என்று உங்கள் மகன் பேரறிவாளன் கூறவில்லை.
அதுமட்டுமல்ல தான் விடுதலை செய்யப்பட்டால் தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை ஆதரிப்பேன் என்றுதான் அவர் தொடர்ந்தும் கூறிவருகிறார்.
நீங்களோ அல்லது உங்கள் மகனோ ஒரு சாதிச் சங்கத்தை ஆதரித்திருந்தால் இந் நேரம் விடுதலை பெற்றிருக்க முடியும்.
நீங்களோ அல்லது உங்கள் மகனோ ஒரு இந்துத்துவ அமைப்பை ஆதரித்திருந்தால்கூட இந் நேரம் விடுதலை பெற்றிருக்க முடியும்.
ஆனால் நீங்களும் உங்கள் மகனும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுவதோடு ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதிரிப்பதால்தானே விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.
எங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் விருந்து உண்ணுகிறார். ஒருதடவைகூட பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என்று அவரால் கேட்க முடியவில்லை.
அண்மையில்கூட எமது மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அய்யா தமிழகம் வந்திருந்தார். ஒரு சம்பிரதாயத்திற்குகூட பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் என்று அவரால் குரல் கொடுக்க முடியவில்லை.
எமது தலைவர்கள் பதவி பெறுவதிலும் தமக்கு 5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் வாங்குவதிலும் அக்கறை கொள்கிறார்களேயொழிய ஈழத் தமிழருக்காக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என்பதை உணர்கிறார்கள் இல்லை.
அம்மா! எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகனின் விடுதலைக்கு எதுவும் செய்தாத நன்றி கெட்ட இனமாக ஈழத் தமிழர்கள் இருக்கிறோம்.
தயவு செய்து நீங்கள் மனதை விட்டு விடாதீர்கள் அம்மா!
அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்தால் மகிழ்ச்சி அடைவோம். விடுதலை செய்யாவிட்டால் பெரு மகிழ்ச்சி அடைவோம்.
ஏனெனில் அவர்கள் எழுவர் விடுதலையை மறுப்பதன் மூலம் தமிழ்நாடு விடுதலைக்கு வழி சமைத்து தருகின்றனர்.

சிறீதரன் எம்.பி- அய்யா , இது சாந்தனின் தாய். தன் மகனின் விடுதலைக்கு உதவும்படி கேட்டு வந்திருக்கிறார்.

சிறீதரன் எம்.பி- அய்யா , இது சாந்தனின் தாய். தன் மகனின் விடுதலைக்கு உதவும்படி கேட்டு வந்திருக்கிறார்.
சம்பந்தர்அய்யா- எந்த சாந்தன்? வெலிக்கடை சிறையில் இருக்கிறாரா?
சிறீதரன் எம்.பி- ஜயோ அய்யா! இது ராஜீவ் காந்தி வழக்கில் தமிழ்நாட்டு சிறையில் இருக்கும் சின்ன சாந்தனின் தாயார்.
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? இப்ப அதுக்கு என்ன?
சிறீதரன் எம்.பி - 27 வருடமாகிவிட்டது. தான் சாகுறதற்குள்ள மகனை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
சம்பந்தர் அய்யா- நான் இலங்கை சிறையில் இருக்கிறவையைக்கூட விடுதலை செய்யும்படி கேட்கிறதில்லை. அப்படியிருக்க இந்திய சிறையில் இருக்கிறவரை விடும்படி எப்படி கேட்பேன்?
சிறீதரன் எம்.பி- தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா தலைவர்களும் எழுவர் விடுதலைக்கு குரல் கொடுக்கினம். அந்த எழுவரில் நாலுபேர் ஈழத் தமிழர். அப்ப நாங்களும் குரல் கொடுக்க வேண்டியது கடமை அல்லவா?
சம்பந்தர் அய்யா- நீர் சொல்வது புரியுது. ஆனால் இன்னொரு நீதிமன்ற விடயத்தில் நாங்கள் தலையிடுவது முறையல்ல அல்லவா?
சிறீதரன் எம்.பி- ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டபோது அவரை விடுதலை செய்யும்படி நாங்கள் அறிக்கை விட்டோம் அல்லவா.
சம்பந்தர் அய்யா- ஓமோம் ஓமோம் அறிக்கை விட்டனாங்கள்.
சிறீதரன் எம்.பி- அப்ப ஜெயா அம்மையாரை விடுதலை செய்யும்படி கேட்டது அந்த நாட்டு நீதிமன்ற விடயத்தில் தலையிடுவது போல் இல்லையா? ஜெயா அம்மையாருக்கு ஒரு நியாயம். பேரறிவாளன் மற்றும் சாந்தனுக்கு இன்னொரு நியாயமா என்று கேட்கப் போகிறார்கள்.
சம்பந்தர் அய்யா- கேட்பான்கள், கேட்பான்கள். அதுவும் பத்திரிகைக்காரன்கள் கேட்காவிட்டாலும் பேஸ்புக்கில் கேட்டு கிழிப்பாங்கள்.
சிறீதரன் எம்.பி- அதுமட்டுமல்ல அய்யா, மாகாணசபை தேர்தல் வரப்போகுது. இப்ப அறிக்கை விட்டால் எலெக்சனுக்கு பயனாகவும் இருக்கும்.
சம்பந்தர் அய்யா- அறிக்கை விடலாம்தான். ஆனால் இந்த இந்திய தூதருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. அப்புறம் அடுத்த மாதம் நான் இருதய செக்கப்பிற்காக டில்லி போறதை குழப்பிப் போடுவார்.
சிறீதரன் எம்.பி- அப்ப என்ன செய்யலாம் அய்யா?
சம்பந்தர் அய்யா- பார்க்கலாம். மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டால் நாமும் அறிக்கை விடலாம்.
சிறீதரன் எம்.பி- எல்லை தாண்டிப் போன இந்திய பசு மாட்டை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும்படி பல நாடுகள் பாகிஸ்தானிடம் கேட்டன. பாகிஸ்தானும் பொது மன்னிப்பு அளித்து அந்த பசு மாட்டை விடுதலை செய்துள்ளனர்.
சம்பந்தர் அய்யா- அதுக்கு?
சிறிதரன் எம்.பி- ஒரு பசு மாட்டுக்கு கேட்க முடியுமென்றால் நாம் எமது இனத்து இளைஞர்களுக்காக கேட்கக்கூடாதா?

நிஜ ஹீரோவும் வில்லனும்!

நிஜ ஹீரோவும் வில்லனும்!
சினிமாவில வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் மக்களுக்காக போராடி நிஜத்தில் ஹீரோவாகிறார்.
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் ரஜனி நிஜத்தில் தமிழ் மக்களுக்கு வில்லன் என்று காட்டுகிறார்.
எஸ்.வி. சேகரை கைது செய்ய முடியாத பொலிஸ் மன்சூர் அலிகானை மீண்டும் கைது செய்து “சிரிப்பு பொலிஸ்” என்று பெயர் எடுக்கிறது.
பெண்களை இழிவு படுத்திய எஸ்.வி. சேகரை கைது செய்ய துப்பில்லாத பொலிஸ் மக்களுக்காக போராடும் மன்சூர் அலிகானை கைது செய்கிறது.

கருணாநிதியை தட்சனாமூர்த்தி என்று எழுத முடியாதவர்கள்

கருணாநிதியை தட்சனாமூர்த்தி என்று எழுத முடியாதவர்கள்
ஜெயலலிதாவை கோமளவல்லி என்று எழுத முடியாதவர்கள்
சீமானை சைமன் என்று எழுதி கிண்டல் செய்கின்றனர்.
சீமான் சினிமாவில் இருந்தபோது பெயர் பிரச்சனை இல்லை
சீமான் அரசியல் பேசும்போது பெயர் பிரச்சனையாகிறது என்றால்
பிரச்சனை சீமானில் இல்லை அவர் பேசும் அரசியலில் என்று அர்த்தம்.
சீமானின் தேர்தல் அரசியலை விமர்சிக்க முடியாதவர்கள்
சீமானின் ஆமை இறைச்சிக் கதையை விமர்சிக்கின்றார்கள்.
சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால்
தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியும் என சிலர் நினைக்கின்றஙனர்.
ஆனால் இனிமேல் சீமானே நினைத்தால்கூட தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியாது என்பதே உண்மை.

வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்

•வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்
நேற்றையதினம் நான் போட்ட பதிவு ஒன்றை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இந்தியாவில் ஒருபுறம் குடும்பமாக தற்கொலை செய்த விவசாயிக் குடும்பத்தின் படத்தையும் மறுபுறம் 121 மாடுகளுக்கு 121 பூசாரிகள் பகவத்கீதை ஓதும் படத்தையும் போட்டு “இதுதானா மோடி பெத்துப் போட்ட புதிய இந்தியா” எனக் கேட்டிருந்தேன்.
எனது இந்த பதிவை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியதோடு எனக்கு தற்கொலை உணர்வு அதிகரித்துள்ளதாகவும் அதனால் அதற்கு சில டிப்ஸ் தருவதாகவும் கூறியுள்ளது.
மனதை கொஞ்சம் றிலாக்ஸ் செய்து வெளியில் சென்று கொஞ்ச நேரம் நடக்கும்படி அந்த டிப்ஸ் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனக்கு இது புரியவில்லை. இதை படித்ததும் சிரிப்புதான் வந்தது.
இதுதான் நடந்தது. பலர் எங்கே அந்த பதிவைக் காணவில்லை என்று கேட்கின்றபடியால் இந்த விளக்க பதிவை இடுகிறேன்.
அவர்களிடம் எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயலாக்கி விட்டீங்களடா!

•ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயலாக்கி விட்டீங்களடா!
நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தும் அதை மதிக்காமல் தலைமறைவாக திரிபவர் எஸ்.வி. சேகர்.
தலைமறைவாக திரியும் சேகருடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பற்றி தமிழக அமைச்சருக்கு சிறிதும் வெட்கம் இல்லை.
பொலிஸ் மக்களின் நண்பன் என்கிறார்கள். ஆனால் இதை தூத்துக்குடியில் போய் சொன்னால் மக்கள் உதைப்பார்கள்.
இருந்தாலும் பொலிஸ் எஸ்.வி. சேகரின் நண்பன் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் தமிழக அரசு, சேகர், பொலிஸ் எல்லாம் சேர்ந்து ஏழு கோடி தமிழனையும் கேனைப்பயல்களாக்கி விட்டார்கள்.
நம்புவோம் !
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு மன் அனைவரும் சமம் என்று.

பத்மநாபா ! விதைக்கப்பட்டாரா? புதைக்கப்பட்டாரா?

பத்மநாபா !
விதைக்கப்பட்டாரா?
புதைக்கப்பட்டாரா?
பத்மநாபா விடுதலையை விரும்பினார்
பத்மநாபா புரட்சியை விரும்பினார்
பத்மநாபா ஈழத்தை விரும்பினார்
.
ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார்.
ஆனால்,
விடுதலையை கைவிட்டவர்கள்
புரட்சியை கைவிட்டவர்கள்
ஈழத்தை கைவிட்டவர்கள்
அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள்.
நாபாவே தன் இறுதிக் காலத்தில்
அவர் உச்சரித்த புரட்சியை கைவிட்டார்.
அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்
இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார்.
இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார்.
இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் வரலாற்றில் துரோகியானார்.
பத்மநாபா விதைக்கப்படவில்லை அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தியாகிகள் முளைப்பதற்கு.
பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த் தெழுவார் என்று
.
ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.