Thursday, November 29, 2018
பாம்பை விட கொடிய விஷம்
•பாம்பை விட கொடிய விஷம்
இந்த “சிவசேனை” சச்சிதானந்தம்!
இந்த “சிவசேனை” சச்சிதானந்தம்!
பாம்பையும் சச்சிதானந்தையும் ஒன்றாக கண்டால்
பாம்பை விட்டு விடுங்கள்- ஆனால்
இந்த சச்சிதானந்தத்தை விட்டு விடாதீர்கள்
ஏனெனில் பாம்பை விட கொடிய விஷம் இது.
பாம்பை விட்டு விடுங்கள்- ஆனால்
இந்த சச்சிதானந்தத்தை விட்டு விடாதீர்கள்
ஏனெனில் பாம்பை விட கொடிய விஷம் இது.
இந்திய உளவுப்படையினால் அனுப்பி வைக்கப்பட்ட
கிழட்டு “சிவசேனை” இது.
கிழட்டு “சிவசேனை” இது.
வழக்கமாக கோவணத்தோடு வேட்டி கட்டுபவர்
பிக்குவிற்கு வேட்டி கொடுக்கும் நாடகம் போட
காற்சட்டையுடன் வந்து திறமையாக நடிக்கிறார்.
பிக்குவிற்கு வேட்டி கொடுக்கும் நாடகம் போட
காற்சட்டையுடன் வந்து திறமையாக நடிக்கிறார்.
அன்று முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
இன்று பிக்குவிற்கு வேட்டி கொடுத்தான் சச்சி
இல்லாதவனுக்கு கொடுப்பதே வள்ளல்
ஆண்டானுக்கு கொடுப்பது அடிமை
இன்று பிக்குவிற்கு வேட்டி கொடுத்தான் சச்சி
இல்லாதவனுக்கு கொடுப்பதே வள்ளல்
ஆண்டானுக்கு கொடுப்பது அடிமை
எத்தனையோ தமிழ் குழந்தைகள்
ஆடையின்றி நிர்வாணமாய் நிற்கும் மண்ணில்
புத்த பிக்குவிற்கு வேட்டி கொடுத்து
பெருமை தேடுகிறது இந்த கருங்காலி
ஆடையின்றி நிர்வாணமாய் நிற்கும் மண்ணில்
புத்த பிக்குவிற்கு வேட்டி கொடுத்து
பெருமை தேடுகிறது இந்த கருங்காலி
வடக்கு கிழக்கு இணைய விட மாட்டேன்
தமிழருக்கு சமஸ்டி கொடுக்க விட மாட்டேன்
என்று திமிராக பேசுகிறார் ஜனாதிபதி மைத்திரி
அவரை கண்டிக்க முடியாத இந்த சச்சிதானந்தர்
மைத்திரியை ஒருமையில் ஏசிய சுமந்திரன் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
தமிழருக்கு சமஸ்டி கொடுக்க விட மாட்டேன்
என்று திமிராக பேசுகிறார் ஜனாதிபதி மைத்திரி
அவரை கண்டிக்க முடியாத இந்த சச்சிதானந்தர்
மைத்திரியை ஒருமையில் ஏசிய சுமந்திரன் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
அது சரி, மைத்திரியை ஏசினால்
இவருக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இப்போது புரிகிறதா?
இது பாம்பை விட கொடிய விஷம் என்று!
இவருக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இப்போது புரிகிறதா?
இது பாம்பை விட கொடிய விஷம் என்று!
எதிரி உன்னை புகழ்கிறான் எனில்
எதிரி உன்னை புகழ்கிறான் எனில்
நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்.
நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்.
செய்தி- தமிழருக்கு உரிமை தேவையில்லை என்று கூறிய முரளிதரனை கோத்பாய ராஜபக்ச பாராட்டு
• சர்க்கார்!
• சர்க்கார்!
ஒரு அரசே தயாரிப்பாளரை மிரட்டி காட்சிகளை நீக்க முடியுமென்றால் அப்புறம் சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு?
“சர்க்கார்” படம் ஆயுதம் எந்தும்படி கூறவில்லை. மாறாக தேர்தல் பாதையையே வலியுறுத்துகிறது.
இருந்தும் சர்க்கார் படக் குழுவினரை “தீவிரவாதிகள்” என்று ஒரு அமைச்சரே கூறினால் என்ன அர்த்தம்?
தயாரிப்பாளரை மிரட்டி தியேட்டரில் காட்சிகளை நீக்கலாம். ஆனால் தமிழ்ராக்கர்ஸை மிரட்டி காட்சிகளை நீக்க முடியுமா?
இப்படியே போனால் மக்கள் தமிழ் ராக்கர்ஸை சப்போர்ட் பண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை.
குறிப்பு- சொன்ன வாக்கை அரசியல்வாதிகள் நிறைவேற்றுவதில்லை. ஆனால் சொன்னபடி முதல்நாளே சிறந்த படக்காப்பியை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்!
குரங்கு கையில் கொடுத்த பூ மாலையும்
•குரங்கு கையில் கொடுத்த பூ மாலையும்
மைத்திரி கையில் கொடுத்த ஜனாதிபதி பதவியும்
மைத்திரி கையில் கொடுத்த ஜனாதிபதி பதவியும்
குரங்கு கையில் பூ மாலையை கொடுத்துவிட்டு அது மாலையை பிய்க்குது, அறுக்குது என்று புலம்பவது எப்படி அர்த்த மற்றதோ,
அதே போன்று மைத்திரியின் கையில் ஜனாதிபதி பதவியைக் கொடுத்து விட்டு அவர் பிரதமரை மாற்றுகிறார், பாராளுமன்றத்தை கலைக்கிறார் என்று புலம்புவதும் அர்த்த மற்றதாகும்.
மைத்திரி மகிந்தவுக்கு பிரதமர் பதவியை கொடுத்தார். அவர் ஒரு எம்.பிக்கு 50 கோடி ரூபா வழங்க முன்வந்தும் தேவையான பெரும்பான்மையை பெற முடியவில்லை.
எனவே (குரங்கு) மைத்திரி வேறு வழியின்றி (மாலையை) பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
இப்போது எல்லோரும் மைத்திரி ஜனநாயகத்தை கொன்று புதைத்து விட்டார் என்று ஒப்பாரி வைக்கிறார்களே யொழிய மைத்திரி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
கடந்த 2015 தேர்தலுக்கு 1280 மில்லியன் ரூபா செலவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இனி அடுத்த தேர்தலுக்கு குறைந்தது 1500 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது.
பாராளுமன்றம் முறைப்படி 2020ல் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மைத்திரியின் பொறுப்பற்ற செயலால் இச் செலவு இப்போது மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் மொத்த கடன் 10313 பில்லியன் ரூபா என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் இது பொய் என்றும் உண்மையான கடன் தொகை 10702 பில்லியன் ரூபா என ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
பிரதமர் ரணில் டில்லி சென்ற போது இலங்கையின் மொத்த கடன் தொகை தனக்கு தெரியாது என்று பத்திரிகை பேட்டியொன்றில் கூறினார். நிதியமைச்சரோ 389 பில்லியன் ரூபா தவறாக கணக்கு சொல்கிறார்.
இன்று இலங்கை குடிமகன் ஒவ்வொருவர்; தலையிலும் 417913 ரூபா கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமார் நான்கு லட்சம் ரூபா கடனுடனே பிறக்கிறது.
கடன் வாங்குவது தவறு அல்ல. ஆனால் அது பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவ்வாறு இல்லை.
இலங்கையின் GDP growth rate 3.1 % என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் உண்மையில் இது 2.7% என்று ஆடிட்டர் ஜெனரல் கூறுகிறார்.
வருமானத்தில் 70.1 வீதம் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது. இதனால் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாத நிலை.
எனவேதான் மகிந்த அரசானாலும் சரி அல்லது ரணில் அரசானாலும் சரி ஒருபுறம் அரசுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்கின்றனர். மறுபுறம் நாட்டின் வளங்களை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கின்றன.
மைத்திரி பதவியேற்றபோது செலவு வெறும் ஜயாயிரம் ரூபா என கூறப்பட்டது. அவர் செருப்புடனே நடந்து திரிகிறார். அவர் தனது வீட்டு சாப்பாட்டை கொண்டு வந்து தானே தன் கையால் சாப்பிடுகிறார் என்று எல்லாம் கூறி அவரை எளிய ஜனாதிபதி என்றார்கள்.
அந்த எளிய ஜனாதிபதி தன் மகளுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சாராய பார்லைசென்சுகளை வழங்கியிருப்பதாக இப்போது அறிகிறோம். அதுமட்டுமல்ல இந்த எளிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தலா 16 கோடி ரூபாவுக்கு குண்டு துளைக்காத கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு வேடிக்கை என்னவெனில் பிரதமர் ரணில் தனது அலரி மாளிகையில் இருந்து அருகில் இருக்கும் பாராளுமன்றத்திற்கு ஹெலிகெப்டரில்தான் சென்று வருகிறார். இருந்தும் அவருக்கும் 16 கோடி ரூபாவுக்கு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, ரணில், மைத்திரி இவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் மீது எவருக்குமே அக்கறை இல்லை. இவர்களுடைய அக்கறை எல்லாம் பதவி, ஊழல், லஞ்சம்தான்.
•அது ஒரு கனாக் காலம்!
•அது ஒரு கனாக் காலம்!
கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது
அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது
அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது
அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது
அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது
அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது
அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது
சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது
மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட
நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே
மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட
நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே
ஒரு வீட்டில் விசேடம் என்றால்
பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே
ஒரு வீட்டில் ஓலம் கேட்டால்
ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில்
பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே
ஒரு வீட்டில் ஓலம் கேட்டால்
ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில்
அருகில் அத்துளு வயல் இருந்தது
அதன் நடுவே ஒரு குளம் இருந்தது
குளம் நிறைய தாமரை மலர்ந்தது
நீச்சல் பழகும் சிறுசுகளாலும்
குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது.
அதன் நடுவே ஒரு குளம் இருந்தது
குளம் நிறைய தாமரை மலர்ந்தது
நீச்சல் பழகும் சிறுசுகளாலும்
குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது.
அங்கும் பல சாதிகள் இருந்தன
ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது
பல மதங்கள் இருந்தன
ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை
பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர்
உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது
என்றதொரு சண்டை நடந்ததில்லையே
ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது
பல மதங்கள் இருந்தன
ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை
பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர்
உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது
என்றதொரு சண்டை நடந்ததில்லையே
மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன
ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல
அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன
ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல
அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன
மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும்
மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும்
கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது
எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும்
ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே
மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும்
கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது
எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும்
ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே
பொடியன்கள் தில்லையம்பலம் கோவிலடியில்
பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும்
ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர்
தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும்
மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே
பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும்
ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர்
தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும்
மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே
யாரோ பெத்த பிள்ளைகள்தானே என்று இருந்துவிடாமல்
தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து
இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து
சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த
பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா?
தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து
இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து
சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த
பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா?
மதவடி அருகில் ஒரு காளி கோவில் இருந்தது
அதில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்
ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள்
ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர்
அதில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்
ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள்
ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர்
ஜயோ! பூசாரி ஏசப் போகிறரே என்று
மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை
“அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை
தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து
காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா”
என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி.
அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட
அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு.
மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை
“அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை
தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து
காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா”
என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி.
அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட
அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு.
ஒருமுறை ராணுவம் தேடுதல் நடத்தியவேளை
பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த
30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது
ஆத்திரம் கொண்ட ராணுவம்
அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது
அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது
பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த
30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது
ஆத்திரம் கொண்ட ராணுவம்
அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது
அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது
அந்த வீட்டில் மறைந்திருந்த பொடியன்
அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான்.
அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே
அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு
அதன் மேலே அசையாமல் நின்றாள்
அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான்.
அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே
அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு
அதன் மேலே அசையாமல் நின்றாள்
ராணுவத்தை கண்டு பெண்கள் பயந்த காலத்தில்
தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை
வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று
தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர்.
தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை
வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று
தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர்.
மதவடி பொடியன்கள் ஒன்றுகூடி
கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில்
வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள்
கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில்
வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள்
அதில் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம்,
புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும்
இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள்.
இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள்
பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர்.
புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும்
இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள்.
இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள்
பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர்.
ஒருமுறை இந்திய ராணுவம் இருந்தவேளை
ஊர்க் கோயில் திருவிழாவிற்காக
சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை
இந்திய ராணவம் வருகின்றது என்றதும்
சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு
காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர்.
ஊர்க் கோயில் திருவிழாவிற்காக
சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை
இந்திய ராணவம் வருகின்றது என்றதும்
சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு
காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர்.
கடவுள் பிள்ளையார் கோவில் வீதியில்
தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம்
பிள்ளையாரை தூக்கிச் சென்று
கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர்.
தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம்
பிள்ளையாரை தூக்கிச் சென்று
கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர்.
இதையறிந்த மதவடி பொடியன்கள்
அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள்
அதில்,
“பக்தர்களே!
பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார்.
போராளிகளே உங்களை காப்பாற்றுவர்”
என்று எழுதியிருந்தார்கள்.
அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள்
அதில்,
“பக்தர்களே!
பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார்.
போராளிகளே உங்களை காப்பாற்றுவர்”
என்று எழுதியிருந்தார்கள்.
மதவடியில் போஸ்டரைக் கண்டதும்
ஊரே பர பரத்தது.
சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள்
பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர்.
ஊரே பர பரத்தது.
சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள்
பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர்.
மதவடி ஓட்டையில் எப்போதும் வெடி குண்டுகள் இருந்தன
எட்டு முறை ராணுவம் அதன் மேலாக வந்தபோதும்
ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை
ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது
தாம் இருந்து மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை
எட்டு முறை ராணுவம் அதன் மேலாக வந்தபோதும்
ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை
ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது
தாம் இருந்து மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை
மதவடி இப்போதும் இருக்கிறது
அதில் இருந்த பொடியன்கள் சிலர்
இப்போது உயிரோடு இல்லை
உயிரோடு இருக்கும் சிலருக்கும்
அது ஒரு கனவாகி போனதன்றோ?
அதில் இருந்த பொடியன்கள் சிலர்
இப்போது உயிரோடு இல்லை
உயிரோடு இருக்கும் சிலருக்கும்
அது ஒரு கனவாகி போனதன்றோ?
மதவடி எப்போதும் இருக்கும்
அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்?
அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்?
பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!
•பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!
தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை.
உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள்.
உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன்.
ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது.
நாம் அவர்கள் மண்ணில் கொலை செய்தோம். கொள்ளை அடித்தோம். பெண்களின் கழுத்pல் இருந்த தாலியைக்கூட அறுத்தோம்.
ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை.
கடந்த 35 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள்.
பெங்களு+ரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை
ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை.
ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர்.
பல இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர்.
அதில் ஒருவரே சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்.
அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார்.
இன்று அவரது 25வது நினைவு தினம் ஆகும். எமக்காக ஈழத்திற்கே வந்து மரணித்த அந்த சகோதரனை ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.
இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள்.
ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள்.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள்.
அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது!
Subscribe to:
Posts (Atom)







