Friday, August 30, 2019

கரடியே காறித் துப்பி விட்டது.

•கரடியே காறித் துப்பி விட்டது.
மாவை சேனாதிராசாவுக்கு இது தேவையா?
மாவை சேனாதிராசா மீது எமக்கு விமர்சனம் உண்டுதான். ஆனால் அதற்காக நாமல் ராஜபக்ச எல்லாம் அவரை விமர்சிப்பதை எம்மால் தாங்க முடியவில்லை.
ஆனால் இந்த நிலைக்கு நாமல் ராஜபக்ச காரணம் இல்லை. மாவை சேனாதிராசாவே முழுக் காரணமாகும்.
மாவை சேனாதிராசாவுக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லைதான். இருந்திருந்தால் நாமல் ராஜபக்சவின் அறிக்கையை படித்ததும் தூக்கு போட்டு செத்திருப்பார்.
மாவை நாமலுக்கு வரலாறு தெரியாது என்றார். ஆனால் நாமலோ இவரின் மகனுக்கு ஒழுங்கா தமிழ் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல மாவை தன் மகனை இந்தியாவில் மருத்துவம் படிப்பிக்கிறார். ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ச.
இதைவிட மாவிட்புர பங்களா, கொழும்பு பங்களா, சென்னை பங்களா எல்லாம் கூறியதுடன் இனி வாய் திறந்தால் இன்னும் வரும் என்று வேற மிரட்டியுள்ளார்.
போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் என்னென்னவெல்லாம் வரப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த தேர்தலில் மாவிட்டபுரத்திலேயே மாவையை எதிர்த்து நாமல் எலெக்சன் கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
மாவை மட்டுமல்ல சரவணபவன் சிறீதரன் எல்லோரையும் கிழித்து தொங்கவிட்டிருக்pறார் நாமல் ராஜபக்ச.
படிக்கும்போது மகிழ்ச்சி அடைய முடியவில்லை. தமிழ் இனத்திற்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என்று மனவருத்தம் ஏற்படுகிறது.
இனியாவது திருந்துங்கடா பிளீஸ்!
குறிப்பு – நாமல் ராஜபக்சா அறிக்கை கீழே இணைப்பில் தந்துள்ளேன்.
சம்பந்தர் ஐயா எழும்பி நிண்டு 72 நிமிடம் பேசியதை சாதனையாக எழுதியவர்கள் இதற்கும் ஏதாவது பதில் எழுதுங்கள்.

நண்பர் தின வாழ்த்துகள்!

•நண்பர் தின வாழ்த்துகள்!
பொட்டம்மான் ஒருமுறை தளபதி நியூட்டனை அழைத்து என்னைப் பற்றி கேட்டபோது “ பாலன் எனது ஊரைச் சேர்ந்தவர். என்னுடன் படித்தவர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்” என்று நியூட்டன் கூறியிருக்கிறார்.
உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். எனது பலவீனமும் நண்பர்கள்தான்.
தமிழகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
நான் அவருக்கு கூறினேன் “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்தது போல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று.
பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை. ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் நண்பர்களின் உதவியாகும்.
என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள். அவர்களில் பலரை நான் இன்னும் பொது வெளியில் நினைவு கூர்ந்ததில்லை.
ஆனால் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே.
நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும். நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும். ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் பெற்றுவிட முடியாது.
இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள். ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள்.
அதேபோல் நேற்று பல ஊர் நண்பர்கள் முகநூலில் ஒருவர் என்னைப் பற்றி அநாகரிகமாக எழுதியது குறித்து பேசினார்கள்.
அப்போது ஒரு நண்பர் கூறினார் “ அண்ணை நீங்கள் வருத்தப்படாதீர்கள். உங்களுடன் ஒருநாளாவது அவன் நட்பாய் பழகியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டான்” என்று.
உண்மைதான். நட்பின் அருமையை புரியவைக்க இந்த ஒரு வரியே போதும்
பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள்.
அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும்.
என் இனிய நண்பர்களுக்கு “வாழ்த்துகள்”

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள் இன்று .

•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள் இன்று .
தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார்.
ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும்.
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர்.
மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார்.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார்.
1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.
தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார்.
மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

காஷ்மீர்! தமிழ் மக்களுக்கு ஒரு நண்பன் கிடைத்துள்ளது.

•காஷ்மீர்!
தமிழ் மக்களுக்கு ஒரு நண்பன் கிடைத்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாய் குரல் கொடுப்போம்
கடைகள் இல்லை
போக்குவரத்து இல்லை
இண்டர்நெட் இல்லை
தொலைபேசிகள் செயல் இழக்கின்றன.
கேபிள் டிவி இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன
பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
மிகப் பெரிய ஜனநாயகநாடு
தனது காஸ்மீர் மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம் இது.

தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை

•தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையாக இருந்தால் போதும் என நினைக்கும் தமிழ் தலைவர்கள்!
அவர்களே விக்கினேஸ்வரனை அழைத்து வந்து முதலமைச்சர் ஆக்கினார்கள்.
அப்புறம் அவர்களே முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.
விக்கினேஸ்வரனும் அவர்களுடைய கட்சி. விக்கினேஸ்வரன் நீக்கிய டெனீஸ்வரனும் அவர்களது கட்சி.
கட்சிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை அவர்கள் ஏன் நீதிமன்றம் கொண்டு சென்றார்கள்?
நீதிமன்றம் முதலமைச்சருக்குரிய அதிகாரத்தை பறிக்கும் என்று நன்கு தெரிந்தும் எப்படி அவர்களால் இதனை மேற்கொள்ள முடிந்தது?
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க போராடுவதாக கூறுபவர்கள் பெற்ற அதிகாரத்தையும் பறிப்பதற்கு எப்படி துணை போனார்கள?
எற்கனவே ஒரு வழக்கின் மூலம் ஒன்றிணைந்திருந்த மாகாணசபையை இரண்டாக பிரித்தார்கள்.
இப்போது இன்னொரு வழக்கின் மூலம் மாகாணசபையின் முதலமைச்சருக்குரிய அதிகாரத்தை பறி கொடுத்துள்ளனர்.
அடுத்து அப்படியே இன்னொரு வழக்கு போட்டு மாகாணசபையையே இல்லாமல் செய்யப் போகிறார்கள்.
தங்களுடைய பதவிச் சண்டையில் தமிழ் மக்களின் அதிகாரங்களை பறித்தெடுக்க துணை போகும் தமிழ் தலைவர்களை வரலாறு ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது.

தமிழர்களை முட்டாள்னு நினைச்சு

தமிழர்களை முட்டாள்னு நினைச்சு கதை சொன்னால்கூட பரவாயில்லை
தமிழர்களுக்கு மூளையே இல்லைன்னு நினைச்சு கதை சொல்கிறார்கள்
மாவை சேனாதிராசா அவர்களே!
நாமல் ராஜபக்சா நீங்கள் கூறியபடி கொலைகார மகிந்தவின் மகனாக இருக்கலாம்
நாமல் ராஜபக்சா நீங்கள் கூறியபடி “ சின்னப் பொடியன்” ஆக இருக்கலாம்.
அல்லது உங்கள் ஆதரவாளர்கள் கூறுவதுபோல் அவர் நடிகைகளுடன் திரிபவராகக்கூட இருக்கலாம்.
ஆனால் இவ்வாறு கூறுவது எல்லாம் நாமல் ராஜபக்சா கூறிய குற்றச்சாட்டுக்களுக்குரிய பதில் இல்லை.
நாமல் ராஜபக்சா என்னவாக இருந்தாலும் அவர் தனது இனத்திற்கு துரோகம் இழைத்ததாக ஒரு சிங்களவரும் இதுவரை கூறவில்லை.
அதுபோல் நீங்களும் உங்கள் இனமான தமிழ் இனத்திற்கு நேர்மையாக இருந்திருந்தால் இப்படி போறவன் வாறவன் எல்லாம் கேட்கும் நிலை வந்திருக்குமா?
இனப் படுகொலையாளிகளின் கதைகளை நம்ப வேண்டாம் என்று இப்போது கூறுகிறீர்கள்.
ஆனால் அதே இனப்படுகொலையாளியான பசில் ராஜபக்சவிடம் உங்கள் மகனுடன் நீங்கள் போய் சந்தித்து உதவி பெற்றதை அவர்கள் சொல்லி சிரிக்கின்றனரே?
இன்னும் என்னென்ன கதைகளை எல்லாம் அவர்கள் கூறப் போகிறார்களோ தெரியவில்லை.
உங்களுக்கு வெட்கம் வருகிறதோ இல்லையோ ஆனால் தமிழராக நாங்கள் வெட்கி தலை குனிகிறோம்.
நீங்கள் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழர்களுக்கு மூளையே இல்லை என்று நினைத்து கதை சொல்கிறீர்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களைவிட மிகப் பெரிய தலைவர்களாக இருந்த ஜிஜி பொன்ம்பலம் அமிர்தலிங்கம் போன்றவர்களையே தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள்.

டிறைவிங் பழக்குபவர்

டிறைவிங் பழக்குபவர் - தம்பி! நீங்க வண்டியில வேகமாக போறீங்க. திடீர்னு எதிரே இரண்டு பேர் வர்றாங்க. ஒரு பக்கம் போனா ரணிலை மோத வேண்டி வரும். இன்னொரு பக்கம் போனா சுமந்திரனை மோத வேண்டி வரும். நீங்க முதல்ல என்ன பண்ணுவீங்க?
தமிழ் இளைஞர் - நான் சுமந்திரன் மேலே மோதுவேன்.
டிறைவிங் பழக்குபவர் - தம்பி! இத்தோட 15 முறை சொல்லிக் கொடுத்திட்டன். முதல்ல வண்டியில் பிரேக் பிடிக்கனும்.
குறிப்பு - இது வெறும் பகிடி மட்டுமே. ஏதும் அரசியல் உங்களுக்கு தோன்றினால் அதற்கு கம்பனி பொறுப்பு அல்ல.