Friday, February 28, 2020
பாஜக வுடன் கூட்டணி அமைத்தால்
பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் ஊழல் வழக்கு வாபஸ். அது மகாரஸ்ரா மாநிலம்.
பெரியாரை திட்டினால் வருமான வரி வழக்கு வாபஸ். இது தமிழ்நாடு.
மராட்டிய நடிகர் ரஜனி,
வருமானத்திற்கு ஒழுங்காய் வரி கட்டவில்லை
பள்ளிக்கூடத்திற்கு வாடகை செலுத்தவில்லை
இவர் தமிழ் நாட்டிற்கு நேர்மையான ஆட்சி தரப் போகிறாராம்.
இன்னுமாடா இந்த பரட்டையை நம்புறீங்க?
குறிப்பு - தர்பார் படம் 65 கோடி ரூபா நட்டம்
Image may contain: 1 person
அன்று இதே நாளில் காந்தியைச் சுட்டார்கள்
அன்று இதே நாளில் காந்தியைச் சுட்டார்கள்
இன்று அதே நாளில் மாணவர்களை சுடுகின்றார்கள்
“ஹே ராம்” சொல்லிக் கொண்டு சுட்டால்
பயங்கரவாதியும் தேச பக்தன் ஆயிடுவான்
ஜெய. ஹிந்! பாரத் மாதாக்கி ஜே!
Image may contain: 1 person, standing, possible text that says '30 JAN 1948 30 JAN 2020'
ஆமைக்கு மயிர் கிடையாது
ஆமைக்கு மயிர் கிடையாது
முதலைக்கு நாக்கு கிடையாது
மீனுக்கு இரைப்பை கிடையாது
பாம்புக்கு காது கிடையாது
நண்டுக்கு தலை கிடையாது
சுமந்திரனுக்கு ---------- கிடையாது!
நான் சுமந்திரனுக்கு அறிவு கிடையாது என்றே எழுத நினைத்தேன். ஆனால் உங்களுக்கு வேறு ஏதும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.
முதலில், நடந்தது இனப்படுகொலை இல்லை, போர்க்குற்றம் மட்டுமே என்றார்
அடுத்து, சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றார்.
பின்னர் இலங்கை அரசுக்கு இரண்டு முறை கால அவகாசம் பெற்றுக் கொடுத்தார்.
இப்போது , விசாரணைகள் யாவும் முடிந்துவிட்டது. இனி சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்கிறார்.
அதுமட்டுமல்ல சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பேசி வைத்திருந்தேன். அதற்குள் ஆட்சி மாற்றம் எற்பட்டுவிட்டது என்கிறார்.
ஜந்து வருடமாக அவர் முக்கியது இதுதான். இத்தனைக்கும் பிறகுகம்கூட அவரை சிலர் நம்புகிறார்களே?
குறிப்பு - அந்த மானஸ்தன் பாக்கட்டில் இப்பவும் அந்த ராஜினாமாக் கடிதம் இருக்கிறதா?
Image may contain: one or more people, people standing and text
•என்னது ரணில் தலைவரா?
•என்னது ரணில் தலைவரா?
சுமந்திரன் - ஜயா! UNPக்குள்ள யார் தலைவர் என்று பெரிய பிரச்சனையாக இருக்காம். எங்களை உதவும்படி மங்களா கேட்கிறார்.
சம்பந்தர் - எங்கட பிரச்சனை அதைவிட மோசமாய் இருக்கு. நாங்க எப்படி அவைக்கு உதவ முடியும் தம்பி?
சுமந்திரன் - பேசாமல் ரணிலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக போட்டுவிடுவம். அவையின்ர பிரச்சனையும் தீர்ந்துவிடும். எங்கட பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா ஜயா?
சம்பந்தர் - என்னது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ரணில் தலைவரா? ஒரு சிங்களவரை தலைவராக எங்கட தமிழர் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் தம்பி.
சுமந்திரன் - ஏன் ஜயா? இத்தனை நாளும் ரணில் தலைமையில்தானே நாங்கள் இயங்கினோம். ரணிலுக்காகத்தானே இயங்கினோம். இதெல்லாம் தமிழ் மக்களுக்கு தெரியும்தானே?
சம்பந்தர் -- தேர்தல் வேற வரப் போகுது. இந்த நேரத்தில ஏன் தம்பி இந்த விஷப் பரீட்சை?
சுமந்திரன் - இல்லை ஜயா, அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நான் சொன்னால் உடனே என்னுடைய தம்பிகள் “சம்பந்தர் ஜயாவின் சாணக்கியம். - ஒரு சிங்களவரை வைத்தே சிங்களவரை எதிர்க்கும் சுமந்திரன் சாதுரியம்” என்றெல்லாம் பேஸ்புக்கில் எழுதுவாங்கள்.
சம்பந்தர் - அப்படி எல்லாம் எழுதுவாங்களா தம்பி? எனக்கே வெட்கமாய் இருக்கு. ஆனால் தம்பி “ நீர் என்ன வேண்டுமானாலும் செய்யும். எனக்கு என் சொகுசு பங்களா முக்கியம். தெரியும்தானே? அதை விட்டிட்டு என்னால இந்த வயசில் இருக்க முடியாதென்று?
சுமந்திரன் - என்ன ஜயா இப்படிச் சொல்லிட்டீங்க? ஒரு சின்ன வீட்டில் இருக்கிறியள். உட்காருவதற்கு ஒரு கதிரை கூட இல்லை. கட்டிலில்தான் உட்காருவோம் என்று பொய் சொல்லி இந்த சொகுசு பங்களாவை பெற்றுத் தந்ததே நான்தானே.. அதை மறப்பேனா?
குறிப்பு - யாவும் கற்பனை இல்லை.
Image may contain: one or more people
•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?
•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?
ஆங்கிலேயரிடமிருந்து 04.02.1948 யன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சிலர் கூறுகிறார்கள்.
இந்த சுதந்திரம் போராடிப் பெற்றதில்லை என்றும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது கொசுறாக இலங்கைக்கும் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றதாக அந்த சிலர் கூறுகிறார்கள்.
இந்த சிலரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்
(1) இலங்கை மக்கள் போராடாமலே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் அதற்கு முன்னர் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் எப்படி இலங்கையை விட்டு வெளியேறினார்கள்?
(2) இந்தியாவில் கோவாவை 300 வருடம் ஆண்ட போர்த்துக்கேயர் இலங்கையில் நூறு வருடத்தில் எப்படி வெளியேற்றப்பட்டார்கள்?
(3) போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் ஏன் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை?
(4) ஆங்கிலேயர்கூட இறுதியாகத்தானே கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்தது. அதற்கு என்ன காரணம்?
(5) இந்தியாவில் இருந்து 265 மைல் தொலைவில் உள்ள லட்சதீவுகளையும் 740 மைல் தொலைவில் உள்ள அந்தமான் தீவையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்கள் வெறும் 20 மைல் தொலைவில் உள்ள இலங்கையை ஏன் இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை?
(6) மன்னர் காலத்தில்கூட இலங்கை தமிழக மன்னர்களின் பிடியில் நீண்டகாலம் இருக்கவில்லையே. அது ஏன்?
மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிந்து கொண்டால் இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை அந்த சிலரால் புரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் இலங்கை சுதந்திரம் என்பது காலனி நாடாக இருந்தது நவகாலனி நாடாக மாறியுள்ளது.
அப்படியென்றால் இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?
• இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது.
• தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது.
• தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது.
சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இலங்கையில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எனவே இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் நடத்த வேண்டியுள்ளனர்.
இந்தியாவில் ஜின்னா கேட்டதுபோல் இலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் பிரிவினை கோரவில்லை என்பதை உணர வேண்டும்.
அதுமட்டுமல்ல காஸ்மீரில் சில அமைப்புகள் தம்மை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு கோருகின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு தமிழ் அமைப்புகூட தம்மை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரவில்லை.
இந்தளவு உணர்வுமிக்க தமிழ் மக்களை தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு கெஞச வேண்டிய நிலையில் இலங்கை ஆட்சியாளர் தள்ளியுள்ளனர்.
குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.
Image may contain: one or more people
•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா?
•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா?
இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக முதன்முதலில் 1956ல் அறிவித்தவர்கள் தமிழரசுக்கட்சியினரே.
அதற்கமைய நடராஜா என்பவர் திருகோணமலை கச்சேரியில் பறந்த இலங்கை தேசியக் கொடியை அகற்றிவிட்டு கறுப்பு கொடியை ஏற்றினார்.
அப்போது இலங்கை பொலிஸ் அவரை சுட்டுக் கொன்றது. இன்று அவரது 64வது நினைவு தினம் ஆகும்.
கடந்த ஆண்டு இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரினார்கள்.
அப்போது தமிழரசுக்கட்சி எம்.பி யான சுமந்திரன் சுதந்திரதினத்தை கரிநாள் எனக் குறிப்பிடுவது தவறு என்றார்.
அதுமட்டுமல்ல தன் மனைவியுடன் சென்று இலங்கை அரசின் சுதந்திpரதின வைபவத்திலும் கலந்துகொண்டார்.
ஆனால் இம்முறை அதே சுமந்திரனும் சம்பந்தரும் தமிழும் தமிழரும் அரசால் புறக்கணிக்கப்படுவதால்; சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளார்கள்.
தமிழர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை அறிவதற்கு சம்பந்தர் ஐயாவுக்கும் சுமந்திரனுக்கும் 72 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது
பாவம் திருமலை நடராஜன்?
Image may contain: 7 people, people smiling, text
88You, தமிழரசன் சீனிவாசன், Nad Raj and 85 others
11 comments
42 shares
Like
Comment
இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?
•இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?
செய்தி -
இலங்கை 72வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.
வரலாற்றில் முதல்முறையாக,
முஸ்லிம் பிரதிநிதி இல்லாத அமைச்சரவை
தமிழருக்கு வெறும் இரண்டு அமைச்சுகள்
தமிழில் தேசியகீதம் பாட தடை
512 கைதிகள் விடுதலை. ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை
இத்தனையும் செய்தவிட்டு “ அனைத்து இனங்களும் சமமாக நடத்தப்படும்” என ஜனாதிபதி கோத்தா பேசியுள்ளார்.
சரி. பரவாயில்லை. என்னவாவது பேசிவிட்டு போகட்டும்.
ஆனால் புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை?
புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை?
இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது?
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே,
அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று?
Image may contain: 1 person, sitting, standing and outdoor
Subscribe to:
Posts (Atom)