Sunday, March 29, 2020

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள்

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள் அவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவனால் நடக்க இருக்கும் ஆபத்தை புரிந்து கொள்ள முடியவில்லை ஏனெனில் அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். அவர்கள் அவன் மீது பெற்றோலை ஊற்றினார்கள் அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று கத்தியவாறு அவன்மீது நெருப்பு வைத்தார்கள். அவர்களுக்கு அவன் பெயர் முக்தாஸ் என்பது அவனைக் கொல்வதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கு தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் சிரித்தக் கொண்டே கருகிப் போனான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாரத மாதா சிரித்திருக்கமாட்டாள். நிச்சயம் தலை குனிந்து கண்ணீர் சிந்தியிருப்பாள். குறிப்பு - அமைதிப்படை என்று வந்தவர்கள் 1989ல் நெல்லியடியில் மெண்டல் பத்மநாதன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவனை சுட்டுக் கொன்றார்கள். அவனும் இறக்கும்போது தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பது தெரியாமல் சிரித்துக் கொண்டே இறந்திருப்பானா? Image may contain: 1 person, smiling, close-up

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா?

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா? தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருந்தாலும் அதை அடைவதற்கான பாதை குறித்து பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன. சிலர் பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். வேறு சிலர் இந்தியாவைப் பயன்படுத்தி இராஜதந்திரத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். போராளிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்கின்றனர். இவற்றைத் தவிர இப்போது கனடாவில் இருக்கும் உஷா சிறீஸ்கந்தராசா என்பவர் தியானத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கிறார். உஷா சிறீஸ்கந்தராசா சிறந்த உணர்வாளர் மட்டுமன்றி செயற்பாட்டாளரும்கூட. அவர் “ஒரே நோக்கத்துடன் கருத்தொருமித்த மனத்திட்பத்துடன் நாம் வாழும் நாடுகளிலும் தாயகத்திலும் நின்று அவரவர் கால மண்டலத்தில் 4, 8, 12, 18, 22 மணிகளில், கண்களை மூடி, மனதை ஒரு நிலைப் படுத்தி, உயர்பேராற்றலை வேண்டியழைத்துத், தமிழீழம் மலர வழிபடுவோம் – என்று கூறுகிறார். தியானம் செய்வது, ஆலயங்களில் வழிபடுவது, விரதம் இருப்பது போன்றவை எமது மனங்களை ஒருநிலைப்படுத்த உதவலாமே யொழிய தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தராது. அகிம்சைப் போராட்டத்தையே மதிக்காத இலங்கை இந்திய அரசுகள் தியானத்திற்கு மதிப்பளித்து தமிழீழ விடுதலையை தரும் என நம்புவது முட்டாள்தனமாகவே இருக்கும். அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் விடுதலைக்கு தியானத்தை பாதையாக முன்வைப்பது இலங்கை இந்திய அரசுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை நசுக்கி அழிப்பதற்கே உதவியாக இருக்கும். இந்த நேரத்தில் எதற்காக உஷா சிறீஸ்கந்தராசா இந்த தியானப்பாதையை முன்வைக்கிறார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் மறுபுறத்தில் மார்க்சியபாதையை முன்வைக்கும் தோழர் தியாகு இதை எப்படி மொழிபெயர்த்து ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற ஆச்சரியம் எழுகிறது. உஷா சிறீஸ்கந்தராசா முன்வைத்திருக்கும் தியானப் பாதையால் எந்த பயனும் இல்லையா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுக்கூடும். ஆம். தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்ற ஆய்வை தமிழ் மக்கள் மத்தியில் தூண்டுவதைத் தவிர வேறு எந்த பயனும் இதனால் விளையப் போவதில்லை. குறிப்பு - உஷா சிறீஸ்கந்தராசாவின் அறிக்கை இணைப்பு கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person Image may contain: 1 person

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம்.

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம். சுமந்திரன் அவர்களே! சரி. நம்புகிறோம். ஆனால் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் கூறினால் நம்புவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் உங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து. சம்பந்தர் ஐயாவின் கடவுள் காளி அம்மன். இதில் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் தெளிவாக கூறிவிடுங்கள். இல்லாவிடின் அப்புறம் மதக் கலவரம் வந்துவிடும். அவருக்கு காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. பிறர் உதவி இன்றி நடக்ககூட முடியவில்லை. இந் நிலையில் அவராகவே ஒதுங்க முன்வரும்போது எதற்காக தடுக்கிறீர்கள்? இளையவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நீங்கள்தானே பேசியிருக்கிறீர்கள். அப்புறம் சம்பந்தர் ஐயா ஒதுங்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? சம்பந்தர் ஐயா போய்விட்டால் அப்புறம் உங்கள் ஆட்டம் எடுபடாது என்று அச்சப்படுகிறீர்களா? Image may contain: 2 people, possible text that says 'NEWSUTHANTHIRAN.COM கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்தகொடை சம்பந்தன்! சுமந்திரன் பெருமிதம்'

•மாபெரும் ஆசான் மாவோக்கு வந்த நிலைமை?

•மாபெரும் ஆசான் மாவோக்கு வந்த நிலைமை? இதைவிட மோசமாக மாவோவை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது. பரவாயில்லை. இதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இப்போது எனது கவலை என்னவென்றால் இதை சுமந்திரன் செம்புகள் யாராவது பார்த்துவிடக்கூடாது என்பதே. அப்புறம், “மக்கள் விரோத சக்திகளை மண்டியிட வைத்த ஈழத்து மாவோ சுமந்திரன் வாழ்க” என்று போஸ்டர் ஒட்டிவிடப் போறாங்கள். தற்கொலை செய்வதைவிட எமக்கு வேறு வழியில்லை. Image may contain: 2 people, text

ஓடுங்கடா! ஓடுங்கடா!

ஓடுங்கடா! ஓடுங்கடா! பாராளுமன்றத்தைச் கலைச்சுட்டாங்களாம்டா! இத்தனை வருடமும் பாராளுமன்றம் என்ற சாக்கடையில் உழன்ற பன்னிகள் யாவும் இனி ஒரு மாதத்திற்கு ஊருக்குள்ள வரப்போகுதுகள். அதில் இத்தனை காலமும் நீண்ட உறக்கத்தில் இருந்தவரும் எழும்பி வரப்போகிறார். ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று கடந்த தேர்தலில் உறுதி தந்தவர் இந்த தேர்தலுக்கு என்ன உறுதி தரப்போகிறாரோ தெரியவில்லை. அவருக்கு தேர்தல் வந்தால் உஷாராக வருவார். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவருக்கு காது கேட்காது. கண் தெரியாது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை பற்றிக் கேட்டால் கையில் திறப்பு இல்லை என்பார். வேலை கேட்டால் அப்புறமம் தீர்வு பெற முடியாது போய்விடும் என்பார். ஆனால் தனக்கு பதவி , பங்களா மற்றும் சொகுசு வாகனம் கேட்டு வாங்குவார். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவில்லை காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கவில்லை இடம் பெயர்ந்தோர் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யவில்லை. வாக்குறுதி அளித்தபடி ஒரு வருடத்தில் தீர்வும் பெற்றுத் தரவில்லை. அப்புறம் எந்த முகத்தோட மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்? ஆனால் தமிழ் மக்களிடம் பிஞ்ச செருப்பு இருக்கிறது வாசற் படலையில் விளக்குமாறு இருக்கிறது. வேலிப் பூவரசு மரத்தில் நல்ல கதியால் இருக்கிறது. வாருங்கள். இம்முறை நல்ல வரவேற்பு உங்களுக்கு காத்திருக்கிறது! Image may contain: 1 person, standing 97You, Sivasothy Vijayaruban, Nadarajah Kandiah and 94 others 20 comments

நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?

நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? தெருவில் நடந்து செல்லும்போது பச்சையாக ஏதோ கிடந்தது. எடுத்து நக்கிப் பார்த்தேன். புளிப்பாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது அது எருமைச்சாணி என்று. நல்லவேளை நான் மிதிக்கவில்லை. இப்படித்தான் சிலர் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து தாங்கள் ஏதோ நல்லவர்கள் போல் முட்டாள்தனமாக காட்டிக் கொள்கிறார்கள். வரலாற்றை திரும்பிப் பார்ப்பது என்பது நாம் முன்னோக்கி சரியாக செல்வதற்கு உதவ வேண்டும். அதாவது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவ வேண்டும். மாறாக எதிரிக்கு காட்டிக் கொடுப்பதாகவோ உதவுவதாகவோ இருந்துவிடக்கூடாது. உதாரணமாக, சுமந்திரன் புலிகள் சகோதரப் படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் முஸ்லிம் இனப்படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் தமிழ் மக்களை கொன்றார்கள் என்கிறார். இவற்றை எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் என்கிறார். இப்போது புலிகள் இல்லை. இல்லாத புலிகள் மீது இப்படி கூறுவதன்மூலம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடியும் என சுமந்திரன் கருதுகிறார்? நிச்சயமாக இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இது தாங்கள் செய்த இனப்படுகொலையை நியாயப்படுத்தவே இலங்கை அரசுக்கு உதவுகிறது. அதேபோல் சம்பந்தா ஐயாவும் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் தான் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடிந்தது? மாறாக, இதனை தமிழ் செல்வனுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கிக்கொண்டு திரிந்தபோது கூறியிருக்கலாமே? புலிகள் இருந்தபோது அவர்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றுகூறி பதவி பெறுவது. அவர்கள் இல்லை என்றவுடன் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கை அரசிடம் பதவியும் சலுகைகளும் பெறுவது இவ்வாறு தங்கள் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பார்ப்பது தவறு மாறாக இனியாவது தமிழ் மக்களின் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பாருங்கள். Image may contain: 2 people, people smiling, outdoor

தமிழின அழிப்புக்கு நீதிகோரி

•தமிழின அழிப்புக்கு நீதிகோரி 8வது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்! ஒருபுறம் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் மறுபுறம் சீரற்ற காலநிலைக் கொடுமை ஆனாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 8வது நாளாக இவர்கள் பயணம் தொடர்கிறது வழி எங்கும் மக்களை சந்திக்கிறார்கள் நகர பிதாக்களை சந்திக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்கள் பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்கிறார்கள் அரசியல் தலைவர்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்திக்கிறார்கள் ஆனால் இவர்கள் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்கிறார்கள் இப்போது கூறுங்கள் யார் உண்மையான போராளிகள் என்று. Image may contain: 7 people, including Mylvaganam Pathmanathan, bicycle and outdoor