Monday, June 29, 2020

எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ

எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள். அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள். அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு. குறிப்பு - இன்று யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் ஆகும். (31.05.1981) Image may contain: sky and outdoor

கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து

கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து எப்படி சேர்த்தீர்கள் என்று கேட்டால் அவர் “அந்தம்மா நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து வைச்சுருக்குது அதை கேட்க மாட்டீங்களா?” என்று பதில் கூறுவார். அதன்படி ஜெயா அம்மையாரிடம் எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தீர்கள் என்று கேட்டால் “முப்பதாயிரம் கோடி ரூபா சொத்து எப்படி சேர்த்தார் என்று கருணாநிதியிடம் கேளுங்கள்” என்பார். இப்படி மாறி மாறி கூறினார்களேயொழிய கடைசிவரைக்கும் இருவரும் தாங்கள் எப்படி இத்தனை ஆயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தோம் என்று பதில் கூறியதில்லை. அதைவிட முக்கியம் என்னவெனில் “முதலில் நீங்கள் எப்படி சொத்து சேர்த்தீர்கள் என்பதைக் கூறுங்கள்”என்று இவர்கள் இருவரிடமும் கேட்கக்கூடிய தைரியமான ஊடகவியலாளர் ஒருவர்கூட தமிழ்நாட்டில் இல்லை. அத்தகைய தைரியமான(?) ஊடகவியலாளர்களில் ஒருவர், காசுக்காக நான் சீமானுக்கு ஆதரவாக எழுதுவதாகவும் எனக்கு ஆயிரம் ரூபா தன் சம்பளத்தில் இருந்து தருவதாகவும் எழுதியிருக்கிறார். இந்த மூத்த ஊடகவியலாளர் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார் என்ற நம்பிக்கையில், காசுக்காக நான் சீமானுக்கு எழுதியதற்கான ஆதாரத்தை தரும்படி கேட்டேன். ஆனால் அந்த ஊடகவியலாளர் எனக்கு இதுவரை பதில் தரவில்லை. மாறாக தனது அப் பதிவை நைசாக நீக்கிவிட்டார். என்னைப் பற்றி நன்கு தெரிந்த அந்த மூத்த ஊடகவியலாளர் ஏன் இப்படி எழுதினார் என்று வருத்தத்துடன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அந்த நண்பர் “ பாவம். அவருக்கும் பசிக்குமில்லே” என்றார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த ஊடகவியலாளரின் பதிவை நம்பி பகிர்ந்த சில ஈழத் தமிழர் இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். Image may contain: 1 person, text

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப் பொறியில் இருந்தே ஆரம்பித்தது. பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். குறிப்பு - இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் பாலச்சந்திரன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும். Image may contain: 1 person

•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல் !

•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல் ! இரண்டு கொலைகள். இரண்டும் பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது . ஒன்று அமெரிக்காவில் அமெரிக்க பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது. மற்றது இலங்கையில் கொக்குவிலில் இலங்கை பொலிசாhhல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர். அவரின் பெயர் ஜோர்ஜ் பிளைட் இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இருவர் (20.10.2016) அவர்கள் தமிழர்கள் . அவர்கள் மாணவர்கள். அவர்களின் பெயர் சுலக்சன் மற்றும் கஜன். அமெரிக்காவில் நடந்தது நிற ஒடுக்குமுறை என்றும் அதற்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமன்றி ஜரோப்பாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது இன ஒடுக்குமுறை என்று கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடுவதற்கோ தமிழ் தலைவர்கள் இன்றுவரை தயாராக இல்லை. கறுப்பு இனத்தவரான ஒபாமா அமெரிக்க அரசின் இக் கொலையைக் கண்டித்ததோடு தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இத்தனைக்கும் அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் தமிழ் தலைவர் சுமந்திரன் தமிழ் மாணவர்களை கொலை செய்தவர்களை நல்லாட்சியினர் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார். அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் பொலிசார் முன்னிலையிலேயே அமெரிக்க தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள். ஆனால் எமது தலைவர் சம்பந்தர் ஜயா இலங்கை தேசியக்கொடியை அவமதிக்கக்கூடாது என்றும் சிங்கள மக்களுக்கு கோபம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார். கறுப்பு இன மக்களின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க வெள்ளை இன மக்களின் ஆதரவு மட்டுமன்றி சர்வதேச ஆதரவும் கிடைத்து வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் இத்தகைய ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? குறிப்பு - கறுப்பு இன மக்களின் போராட்டத்தை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அதையும் வன்முறை என்றும் தன்னால் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்போகிறாரா? Image may contain: one or more people and outdoor Image may contain: 2 people, selfie Image may contain: 1 person Image may contain: 1 person

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் - தோழர் தமிழரசன். கறுப்பு இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனது அதரவைத் தெரிவிக்கும் இந்த சிங்கள பெண்ணின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் இவர் முதலில் செய்ய வேண்டியது தான் போர்த்தியிருக்கும் சிங்கக் கொடியின் கீழ் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும். இலங்கை இனவெறி அரசின் இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே கறுப்பு இன மக்களுக்கான உண்மையான ஆதரவாக இருக்கும். மாறாக, இலங்கையில் இனப்படுகொலையை ஆதரித்தக்கொண்டு அல்லது கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டு அமெரிக்காவில் நிற ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது வெறும் வேஷம் ஆகும். அதை அந்த கறுப்பு இன மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். Image may contain: one or more people, people standing and outdoor

ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை.

ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை. மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவர் இலங்கை பொலிசா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவருக்கு இந்திய அரசு உதவி செய்கிறதா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - நீ ஒரு ஈழத் தமிழனா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - உன் பெயர் சுலக்சன் அல்லது கஜனா? ஒரு குரல் - இல்லை. மிஸ்டர் எக்ஸ் - அப்ப நீ யாரு? ஒரு குரல் - நான் ஜோர்ஜ் பிளைட். என்னை அமெரிக்க பொலிஸ் கழுத்தை நெரித்து கொல்கிறது. மிஸ்டர் எக்ஸ் - அப்படியா? இப்ப பாரு, “அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!” “அமெரிக்க நிற ஒடுக்குமுறை ஒழிக” “ஓயமாட்டோம் ஓயமாட்டோம் கறுப்பு இனத்தவருக்கு நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம்.” மிஸ்டர் எக்ஸ் - பார்த்தாயா உனக்காக எப்படி குரல் கொடுத்துள்ளேன் என்று. ஒரு குரல் - எங்கே ஒருக்கால் உன் மூஞ்சியைக் காட்டு. த்தூ... செருப்பால அடி வாங்கிறத்துக்குள்ளே ஓடிப் போயிடு. குறிப்பு - இந்த மிஸ்டர் எக்ஸ் என்ற இடத்தில் தமிழ் தலைவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் மனதவுரிமைவாதிகள் யார் பெயரையும் பொருத்திப் பாருங்கள். யாவும் சரியாகவே பொருந்தும். Image may contain: one or more people, people standing and outdoor, text that says "APOUS"

•நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்!

•நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார். என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன். 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன். ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள். அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர். எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது. இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள். எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள். மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது. இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. Image may contain: one or more people, people standing, basketball court and outdoor