Monday, August 31, 2020

இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்? இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொரோனோ என்று வீட்டுக்குள் இருந்திருக்கலாம். அல்லது, இவர்கள் விரும்பியிருந்தால் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி ஒட்டாவா செல்கிறார்கள். உண்மையில் ஒட்டாவில் சென்று கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ சென்றிருக்கலாம். ஆனால் இவர்களோ கனடாவில் பிறம்டனில் இருந்து நடந்து ஒட்டாவா செல்கிறார்கள். வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள். மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள். சரியான பாதையில்தான் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைந்தே தீருவார்கள்;. கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பயத்தில் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என சிலர் நக்கலாக கூறினார்கள். ஆனால் தாயகத்தில்கூட இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் இலங்கை தூதரக முற்றுகை, டிவிட்டரில் கவனயீர்ப்பு என பலவகைப் போராட்டங்கள். இவ்வாறு தமிழ் மக்கள் போராட்டம் நடத்தியிருப்பது மட்டுமல்ல உலகில் பல இடங்களில் ஒன்றுபட்டு போராட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது. ஆம். போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. Image may contain: one or more people, people standing, sky and outdoor

சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

•சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள் செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும். குறிப்பு - இப் பதிவு 25.08.2014யன்று எழுதப்பட்டது. செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு மீள்பதிவு செய்கிறேன். Image may contain: 1 person, sitting

எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!!

•எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!! “உலகத் தொழிலார்களே ஒன்று சேருங்கள்” என்று காரல் மார்க்ஸ் சொல்லுமுன்னரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய இனம் தமிழ் இனம். வந்தாரை வாழ வைத்த அந்த இனம் கைபர் கணவாய் வழியே வந்த திருட்டு கூட்டத்திடம் இரந்து கேட்டது. 17 பேர் தீக்குளித்து இறந்தும் கேட்டனர். தன் கைக்கெட்டும் தூரத்தில் தன் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம்பேர் இறந்தபோது தாய்த் தமிழகம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆனாலும் அந்த வெளிவிவகார அமைச்சர் இரங்க மறுத்தார். அவர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடைந்துவிட்டார் எனில் தமிழனாகிய எம்மால் எப்படி வருத்தப்பட முடியும்? ஏனெனில் எம்மால் இவரை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. Image may contain: one or more people

சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம் ஒலிக்கையில்

சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம் ஒலிக்கையில் இன்னொரு வீட்டில் மங்கள ஒசை கேட்டது" - நன்றி கலைஞர் கருணாநிதி. இன்று தமிழர் மனங்களில் மகிழ்ச்சி இது கைபர் கணவாய் வழியே வந்தவர்களுக்கு தெரியட்டும்! Image may contain: 3 people, including மைக்கேல் ராஜ் நே and Prabakaran Praba, people standing

மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா?

•மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா? எந்தளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணமடைந்துவிட்டால் அவனது அயோக்கியத்தனத்தை விமர்சிக்க கூடாது என்று ஒரு மரபு எம்மத்தியில் இருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் தாமரை கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை. பாராட்டுக்குரியவை. “சாவதினாலேயே ஒருவர் 'புனித'ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு ! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு. செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்” என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார். Image may contain: Kavignar Thamarai

Saturday, August 29, 2020

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும்

சுமந்திரனுக்கு எதிராக திறக்காத வாயும் சுமந்திரனுக்கு எதிராக உயராத கையும் அடிமையாக இருக்க மட்டுமே அருகதையானது! சுமந்திரன் பற்றி ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, “சுமந்திரனுக்கு வாய் சரியில்லை. ஒரு உண்மையான தமிழன் வாயில் இருந்து இவர் கூறும் வார்த்தைகள் வராது” ஒரு படிப்பறிவற்ற பாமரத் தமிழன் இவ்வாறு கூறுவதில் இருந்து என்ன தெரிகிறது? பாமர மக்கள் வரை சுமந்திரன் மீதான எதிர்ப்பு உணர்வு பரவிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். ஆனாலும் சுமந்திரன் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தொடர்ந்து கூறிவருவது எப்படி? தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறுகிறாரா அல்லது இலங்கை இந்திய அரசுகள் தன்னை தோல்வியடைய விடமாட்டாது என்ற நம்பிக்கையில் கூறுகிறாரா? தான் தேர்தலில் தோல்வி அடைந்தால் வேறு வழியில் பதவி பெற்றுக்கொள்ள மாட்டேன் என சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் சுமந்திரனை நம்ப முடியாது. ஏனெனில் தீர்வு வரவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. எனவே தேர்தலில் தோல்வியுற்றாலும் அவர் ஏதோவொரு வழியில் பதவியை பெறவே முயற்சி செய்வார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது. ஆதலால் தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரன் தனது துரோக அரசியலை தொடரத்தான் போகிறார். அதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அரசியலும் தொடரத்தான் போகிறது. இது அவருடைய மரணம் வரை நிகழப் போகிறது! Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம் தாணுவிற்கு இன்னொரு நியாயம்

உதம்சிங்கிற்கு ஒரு நியாயம் தாணுவிற்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாபில் 400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று சுட்டுக் கொன்றவர் உதம்சிங. 1940ல் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட உதம்சிங் உடல் எச்சங்களை 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவுக்கு எடுத்துவந்து அரச மரியாதையுடன் அடக்கம் செய்தார். இந்திய பிரதமர் , ஜனாதிபதி உட்பட பலரும் உதம்சிங் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரை மாபெரும் தியாகி என புகழாரம் சூட்டினார்கள். இலங்கையில் 7000 தமிழர்களைக்கொன்ற, 800 பெண்களை பாலியல் வல்லுறவு செய்த இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியை இந்தியா சென்று கொன்றவர் தானு. ஆனால் உதம்சிங்கை மாபெரும் தியாகி என்று கௌரவிக்கும் இந்திய அரசு தானுவை பயங்கரவாதி என்கிறது. "என் சகோதரியின் கற்பு பறிபோகும்போது என்னால் நிச்சயமாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது" என்று இந்தியாவின் தாத்தா காந்தி கூறினார். ஆனால் 800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு தானு என்ற பெண் ராஜீவை பழிவாங்கினால் அதை பயங்கரவாதம் என இந்திய அரசு அழைக்கிறது. இந்திரா காந்தியின் கொலையை அடுத்து இந்தியாவெங்கும் 5000 அப்பாவி சீக்கியர் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிரதமர் மோடி சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் 7000 அப்பாவி தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கோராதது மட்டுமல்ல ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறது. சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் அவர்களுக்கு ஆட்சியிலும் பிரதமர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழர்களிடம் மன்னிப்பு கோராதது மட்டுமல்ல தொடர்ந்தும் தமிழினம் நசுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? தமிழினம் அடிமையாக இருப்பதால்தானே இந்திய அரசு அதன் முதுகில் ஏறி சவாரி செய்கிறது! தமிழினம் விடுதலை பெற்று சுதந்திரமாக இருந்தால் இந்நிலை வந்திருக்குமா? உதம்சிங் நினைவை மட்டுமல்ல இனி தானுவின் நினைவையும் போற்றுவோம்! Image may contain: 1 person, beard, text that says "இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் உத்தம்சிங் நினைவு தினம் இன்று ஜூலை 31 ஜாலியன் வாலாபா க் படுகொலைக்காக ஜெனரல் டயரை காத்திருந்து லண்டனில் சுட்டுத்தள்ளினார் உத்தம் சிங்." Image may contain: 1 person, close-up