Thursday, December 31, 2020

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்!

தோழர் வள்ளுவன் அவர்களை நினைவில் கொள்வோம்! இன்று (21.12.2020) தோழர் வள்ளுவன் அவர்களின் 3வது நினைவுதினம் ஆகும். இன்று அவரது படத் திறப்பு நிகழ்வும் நினைவேந்தலும் பெண்ணாடத்தில் நடைபெறுகிறது. தோழர் வள்ளுவன் பற்றிய எனது நினைவுக் குறிப்பு கீழ்வரும் இணைப்பில் உள்ளது. http://tholarbalan.blogspot.com/2020/12/blog-post_71.html ஈழத் தமிழர்களை இறுதிவரை உறுதியுடன் ஆதரித்து வந்த தோழர் வள்ளுவன் அவர்களை ஈழத் தமிழராகிய நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

•ஆழ்ந்த இரங்கல்!

•ஆழ்ந்த இரங்கல்! இப்பொழுதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. முகநூலில் வரும் மரணச் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அந்தவகையில் நீண்டகால நட்பான் தோழர் கருப்பு கருணாவின் மறைவு செய்தி வந்திருக்கிறது. இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோதுகூட “ நல்லது தோழர், தொடரட்டும் நம் தோழமை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்படி இடைநடுவில் தோழமையை விட்டிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லையே. குறிப்பு- இங்கு பதிவு செய்த படமும் வரிகளும் அவரே எனக்கு அனுப்பியது.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

•ஆழ்ந்த அஞ்சலிகள்! சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது. ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார். உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலிக்கின்றது. எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தருகின்றது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது!

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது! தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். மராட்டியர் ஆள அனுமதிக்க முடியாது என்று கூறினால் அதை தவறு என்கிறார்கள். அதுமட்டுமன்றி தமிழன் என்றால் யார் என்று நக்கலாகவும் கேட்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆள வேண்டும். குஜராத்தி ஆள அனுமதிக்க முடியாது என்று மம்தா கூறும்போது அதை தவறு என்று இவர்கள் கூறுவதில்லை. அதுமட்டுமன்றி வங்காளி என்றால் யார் என்று தைரியமிருந்தால் மம்தாவிடம் இவர்கள் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏனெனில் தமிழனை இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள். மம்தாவின் அரசியல்; உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் இன உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது.

மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020)

•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2020) மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 127வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள். தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர். மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர். சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை. சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது. மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

எதியோப்பிய இனப்படுகொலைகள்!

•எதியோப்பிய இனப்படுகொலைகள்! இலங்கையில் நடந்தது போன்று எதியோப்பியாவிலும் இராணுவம் இனப்படுகொலை செய்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடக்கும்போது உலகம் எப்படி வேடிக்கை பார்த்ததோ அதே மாதிரியே எதியோப்பியாவிலும் வேடிக்கை பார்க்கின்றது. உலகெங்கும் போராடும் இனங்கள் எல்லாம் தனித் தனியாக போராடுவதால் தனித்தனியாக இலகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே இனியாவது போராடும் இனங்கள் யாவும் ஒன்றினைந்து போராட முன்வர வேண்டும். இந்தியா ஆதரிக்க வேண்டும், அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்காமல் உலகெங்கும் உள்ள போராடும் அமைப்புகளுடன் ஜக்கியப்பட ஈழத் தமிழ் அமைப்புகள் முயல வேண்டும்.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக

கேரளாவில் திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் வயது குறைந்த முதல் பெண் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். ஆனால் அருகில் தமிழ்நாட்டில் 71 வயதான மராட்டிய நடிகரை ஆள வரவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கிய காரணம் கேரளா 100 வீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக இருப்பதே. அதனால்தான் கேரள மக்கள் முதலமைச்சரை சினிமா நடிகர்களில் தேடுவதில்லை என நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்த நிலை வருமா? அல்லது வழக்கம்போல் 500 ரூபாவுக்கு வோட்டை விற்கப் போகிறார்களா?