Saturday, January 30, 2021
வழக்கறிஞர் நடசேடன் பற்றி தோழர் சண்முகதாசன்
•வழக்கறிஞர் நடசேடன் பற்றி தோழர் சண்முகதாசன்
இன்றைய சந்ததியினருக்கு வழக்கறிஞர் நடசேனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவரது மகன் வழக்கறிஞர் சத்தியேந்திரா பற்றி பலரும் அறிந்திருப்பார்கள்.
வழக்கறிஞர் சத்தியேந்திரா குட்டிமணி போன்றவர்களின் வழக்கில் ஆஜராகி வாதாடியவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர்.
இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன் போன்றவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியபோது இவரையும் வெளியேற்றியது.
இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தமிழ் நேஷன் (https://tamilnation.org ) இணையதளத்தை நடத்தி வருகிறார்.
இவரது தந்தையான வழக்கறிஞர் நடேசன் அவர்கள் 21.12.1986 யன்று மரணமடைந்தார். அப்போது தோழர் சண்முகதாசன் அவர்கள் இவர் பற்றிய இரங்கல் உரை ஒன்றை டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
தோழர் சண்முகதாசன் அவர்கள் வழக்கறிஞர் நடேசன் குறித்து எழுதிய இரங்கல் உரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம். ( தமிழாக்கம் - டாக்டர் தம்பிராசா)
http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_73.html
இந்த இரங்கல் உரை மூலம் நடேசன் குறித்தும் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தோழர் சண்முகதாசனுக்கு செய்த பொருளாதார உதவிகள் குறித்தும் அறிய முடிகிறது.
குறிப்பு - ஆங்கில மூலத்தை கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்.
http://tholarbalan.blogspot.com/.../obituary-senator...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
2020ம் ஆண்டு முடிந்து 2021 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன.
நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும்.
மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.
இனிய பொங்கல் மற்றும்
இனிய பொங்கல் மற்றும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
உழவர் மக்களின் உன்னத நாளாம்
உழைக்கும் மக்களின் உரிமை நாளாம்
தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில்
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!
தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!
• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!
யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர்.
இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே.
இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே.
ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள். அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள்.
சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம்.
ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.
“வெங்காய” சுரேன் ராகவன்!
“வெங்காய” சுரேன் ராகவன்!
யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் அப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேதான் வசித்தும் வந்தார்.
ஒருநாள் அவரது மகன் குளித்துக்கொண்டிருக்கும்போது தவறி கிணற்றில் விழுந்துவிட்டான்.
இதைப் பார்த்த பேராசிரியருக்கு கிணற்றில் இறங்க பயம் .எனவே சயிக்கிளை எடுத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் விடயத்தை கூறி சிலரை அழைத்து வந்தார்.
நல்லவேளை. யாழ்ப்பாண கிணறுகளில் எப்போதும் தண்ணி மட்டம் முழங்கால் அளவுகூட இருப்பதில்லை என்பதால் மகன் எந்தவித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டான்.
இதை அறிந்த பக்கத்துவீட்டுக் கிழவி அந்த பேராசிரியரிடம் “ஏம்பா இவ்வளவு படித்திருக்கிறியே. கிணத்தடியில் இருந்துகொண்டே ஐயோ என்று கத்தி இருந்தால் யாராவது வந்து காப்பாற்றியிருப்பார்களே, அதுகூட உனக்கு தெரியவில்லையா? என்று கேட்டார்.
புத்திஜீவிகள் என மதிக்கப்படும் பேராசிரியர்கள் ஒரு சாதாரண நடைமுறை விடயம்கூட தெரியாத அடிமுட்டாள்கள் என்பதை கூறுவதற்கான ஒரு கிண்டல் கதையாகவே இதனை நான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன்.
ஆனால் இப்போது சுரேன் ராகவன் என்ற புத்திஜீவியின் கருத்துக்களை கேட்கும்போது இந்தக் கதை உண்மையாக நடந்திருக்கும் என்றே நம்ப தோன்றுகிறது.
சுரேன் ராகவன் ஒரு புத்திஜீவி என்பதாலேயே கடந்த ஆட்சியில் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் அவரை வடமாகாண ஆளுநராக அழைத்து வந்தார்கள்.
ஆனால் இப்போது அவர் சிங்கள கட்சி ஒன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அதனால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ் இனத்திற்கு விரோதமாக கருத்து கூறுகிறார்.
கனடாவில் இனப்படுகொலை பற்றிய சட்டம் இயற்றப்படுவதால் இலங்கையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று தேவையானால் அவர் கூறியிருக்கலாம்.
ஆனால் அவரோ இன்னும் ஒருபடி மேலாக சென்று இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரம் இல்லை என்கிறார். இனி இனப்படுகொலையே நடக்கவில்லை என்றும் அவர் கூறுவார்.
பாவம். அவருக்கும் ரொம்ப பசிக்க ஆரம்பித்திருக்குபோல?
Subscribe to:
Posts (Atom)