Saturday, April 30, 2022

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்

காத்துவாக்கில இரண்டு காதல்

*காத்துவாக்கில இரண்டு காதல் ! எனக்கென்னவோ படம் முடியும்வரை அந்த தலைவரே நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். மனைவி துணைவி என்று இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு என்று தைரியமாக பேச அந்த தலைவரால் மட்டுமே முடியும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர்

சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர் மாத்திரமே. இது 3 நாட்களுக்கு தேவையான இறக்குமதிக்கே போதுமானது. இந்நிலையில் திராவிட முதல்வர் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறார். பாராட்டுகள். ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று அவரால் ஏன் வலியுறுத்த முடியவில்லை? இலங்கையின் ஒருநாள் தேவை 6500 டன் அரிசி. சீனா 2000 மெட்ரிக் டன் அரிசி அனுப்புகிறது. அதாவது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனுப்புகிறது. ஆனால் திராவிட முதல்வர் 6 நாட்களுக்கு போதுமான 40000 டன் அரிசியை அனுப்புகிறார். சிங்கள அரசை காப்பாற்றுவதில் சீனாவைவிட திராவிட முதல்வர் அக்கறை காட்டுகிறார்

டிஜிபி – சார்! மீண்டும் ஒரு லாக்கப் கொலை நடந்திடுச்சு

டிஜிபி – சார்! மீண்டும் ஒரு லாக்கப் கொலை நடந்திடுச்சு முதல்வர் - அப்படியா? சரி ஒரு பத்து லட்சம் கொடுத்திட்டு பைலை மூடுங்க. டிஜிபி – சார்! மக்கள் கொஞ்சம் கோபமாய் இருக்காங்க முதல்வர் - உதயநிதி கிட்ட சொல்லி இளையராசாவுக்கு எதிராக ஒரு அறிக்கை விடச் சொல்லுங்க. மக்கள் கொலை மேட்டரை மறந்திடுவாங்க. டிஜிபி - ????

Wednesday, April 27, 2022

பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு

பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் முதலில் என் நன்றிகள். கடந்த ஏழு நாட்கள் முகநூல் நிர்வாகம் விதித்த தடை காரணமாகவே என்னால் பதிவுகள் போட முடியவில்லை. ஒருபுறம் முகநூலில் எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருப்பினும் மறுபுறம் இந்த இடைவெளியில் டிவிட்டரில் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது நிறைவாக உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இனி வழக்கம்போல் முகநூலில் தொடர்வோம்.

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 28ம் ஆண்டு நினவு நாள் 29.03.2022 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html