Wednesday, August 31, 2022

பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் பாலகுமார் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இங்கு கொடுமை என்னவெனில் சமாதான காலத்தில் வன்னி சென்று பாலகுமாரோடு படம் பிடித்தவர்கள பலர் இன்று எம்.பி களாகவும் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட பாலகுமார் எங்கே என்று இலங்கைஅரசை இதுவரை கேட்கவில்லை. குறிப்பு- “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்” 30.08.2022ஆகும்.

முதலில் இந்திய தூதரும்

முதலில் இந்திய தூதரும் தூதராலயமும் யாழ்ப்பாணம் வந்தார்கள் அடுத்து அவர்கள் இந்தியாவில் இருந்து சிவசேனை என்று மறவன்புலவு சச்சிதானத்தை கொண்டு வந்தார்கள். இப்போது இந்தி மொழியை யாழ் இந்துக் கல்லூரியில் புகுத்தியுள்ளார்கள். வடையும் தேத்தண்ணியும் கொடுக்கிறார்கள் என்றாலே நம்மாளுகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவாங்கள். இந்திய தூதர் தண்ணியும் பணமும் கொடுத்தால் சும்மா இருப்பார்களா? இனத்தையே தூக்கி கொடுக்கிறாங்களே!

வந்தார்கள்

வந்தார்கள் கொன்றார்கள் ஏறி குந்தியும் விட்டார்கள் நிரந்தரமாக! அவர்கள் வந்தார்கள். முதலில் வானில் இருந்து உணவுப் பொட்டலம் போட்டார்கள் பின்னர் துப்பாக்கி டாங்கிகளுடன் வந்தார்கள் எமது மீட்பர்கள் வருகிறார்கள் என்று நம்பினோம். திடீரென மருத்துவ மனையில் சுட்டார்கள் பத்திரிகை அலுவலத்தில் சுட்டார்கள் ஊரையே சுற்றி வழைத்து சுட்டார்கள் ஏன் என்று கேட்டதற்கு “ நாங்கள் அமைதிப்படை. அமைதியை நிலை நாட்டுகிறோம்” என்றார்கள். அவர்களது அமைதி நிலைநாட்டலில் நாம் 12000 தமிழர்களின் உயிர்களை இழந்தோம் 800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோம் பல கோடி ரூபா பெறுமதியான உடமைகளை இழந்தோம். நல்லவேளை இரண்டு வருடத்தில் திரும்பிச் சென்றார்கள் இல்லையேல் என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் வந்தார்கள் இம் முறை “பயங்கரவாத ஒழிப்பு” என்று கூறிக்கொண்டு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து வந்தார்கள் புலிகளைத்தானே அழிக்கிறார்கள் என்று நாங்களும் சும்மா இருந்தோம் ஆனால் அவர்கள் புலிகளை அழித்தது தமது ஆக்கிரமிப்புக்காகவே என்பதை இப்போதுதான் உணர்கிறோம் இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்று ராஜபக்சாக்கள் கூறியதன் அர்த்தத்தையும் இப்போதுதான் நாம் உணர்கிறோம் ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவர்கள் துப்பாக்கிகளுடன் கிருத்தவ மதத்தையும் கொண்டு சென்றார்கள் அதனால்தான் ஒரு கவிஞன் எழுதினான் “அவர்கள் வருமுன்னர் நாடு எமது கையில் இருந்தது பைபிள் அவர்கள் கையில் இருந்தது. இப்போது பைபிள் எமது கையில் இருக்கிறது அவர்கள் கையில் எமது நாடு இருக்கிறது” இதே கதைதான் எமது நாட்டிலும் நடந்துள்ளது. ஆனால் இதை எழுத எமக்கு ஒரு கவிஞன் இல்லை அவர்கள் இம்முறை இந்து மதத்தையும் இந்தி மொழியையும் கொண்டு வந்துள்ளார்கள் அதனால் இப்போது நாம் கிளிநொச்சியில் சர்வதேச இந்து மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம் யாழ் இந்துக் கல்லூரியில் இந்தி மொழி படித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்கள் கையில் காங்கேசன்துறை துறைமுகம் போய்விட்டது கூடவே அதன் சீமெந்து ஆவையும் போய்விட்டது பலாலி விமான நிலையம் போய்விட்டது திருகோணமலை துறைமுகம் போய்விட்டது சம்பூர் 500 எக்கர் நிலமும் போய்விட்டது கூடவே அனல்மின் நிலையமும் போய்விட்டது புல்மோட்டை கனிவளமும் போய்விட்டது மன்னாரில் எண்ணெய் வளமும் போய்விட்டது. இதென்ன நியாயம் என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்திசிலைகளை நிறுவித் தருகிறேன் என்று யாழ் இந்திய தூதர் சிரித்தக் கொண்டே கூறுகிறார். ஆனாலும் இந்திய தூதர் கொஞ்சம் நல்லவர்தான் ஏனெனில், 20 ராஜீவ் காந்தி சிலைகளை நிறுவப் போகிறேன் என்று கூறியிருந்தால் என்னாவது? ஆனாலும் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை ஏனெனில் ராஜீவ் காந்தி இருந்திருந்தால் ஈழம் பெற்று தந்திருப்பார் என்று எழுதுவதற்கு நம் மத்தியில் நாலு பேர் அப்போதும் இருப்பார்கள்தானே?

எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்

•எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் அத்தனையையும் தாண்டி பரவும் தோழர் தமிழரசன் புகழ்! 35 ஆண்டுகளுக்கு முன் அவரை கொன்று விட்டார்கள். ஆனால் இன்றும்கூட அவரை நினைவு கூர்வதை தடுக்கிறார்கள். அவருக்கு சிலை வைக்க தடுக்கிறார்கள் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள் புத்தகம் வெளியிட இடைஞ்சல் கொடுக்கிறார்கள் போஸ்டர் ஒட்டினால் இரவிரவாக கிழிக்கிறார்கள் அவர் பெயரை உச்சரிப்பவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் அதையும் மீறி செயற்பட்டால் கைது செய்து பொய் வழக்கு போடுகிறார்கள் சிறையில் அடைத்தால் வழக்கை விரைந்து விசாரிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் சரி ஜாமீனாவது கொடுங்கள் என்றால் அதையும் மறுக்கிறார்கள். வேடிக்கை என்னவெனில் ஜாமீன் கோரினால் அதை தள்ளுபடி செய்வதாக ஒற்றைவரி எழுதுவதற்குகூட நீதிபதி 6 மாதம் எடுத்துக்கொள்கிறார். ஏன் இத்தனை அராஜகம்? எதற்காக அரசு அவரைக் கண்டு அஞ்சுகிறது? அவர் இறந்து 35 ஆண்டு ஆகியும்கூட அரசு ஏன் அவர் பெயரைக் கேட்டால் பதட்டமடைகிறது? ஒரே ஒரு காரணம்தான். இந்த ஒற்றைப் பெயர் அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நினைக்கிறார்கள். இந்தப் பெயரே தங்களை தகர்த்து எறியப் போகிறது என்று உணர்கிறார்கள். அதனால்தானே அந்தப் பெயருக்கு அரசு அஞ்சுகிறது. ஆம். அந்த பெயர் “ தோழர்.தமிழரசன்

ஒரு மகனாக தந்தையைப்பற்றி

ஒரு மகனாக தந்தையைப்பற்றி இதைக்கூட சொல்லவில்லை என்றால் எப்படி? தயவு செய்து சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். சீரியஸாக எடுக்க வேண்டாம்.

இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை.

இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை. வாங்கப்படுவது. அது ஏன் என்று இப்போது புரிகிறதா?

“என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்” - வைகோ

“என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்” - வைகோ உருக்கம் பசி எவ்வளவு கொடுமையானது?