Wednesday, November 30, 2022

கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை . •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை. தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

இலங்கை இந்திய அரசுகளே!

இலங்கை இந்திய அரசுகளே! இவர்கள் வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து விடுவார்கள் என்றுமட்டும் நினைத்து விட வேண்டாம். தேவை ஏற்பட்டால் மாபெரும் கந்தக கிடங்காக மாறி வெடிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இவர்கள் நினைத்தால் அன்னைபூபதியாக மாறி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பார்கள். அதுவே இவர்கள் நினைத்தால் தானுவாக மாறி வெடி குண்டை வெடிக்கவைப்பார்கள். இவர்கள் மாவீரர்களை மட்டும் படைக்கவில்லை இவர்கள் மாபெரும் வீர வரலாற்றையும் படைப்பவர்கள்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் கடந்த 16 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ஆதுரசாலை நாவலுக்கு சிறந்த தமிழ் இலக்கிய நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான அவர் சிறையில் 7 தமிழ்நாவல் 1 ஆங்கில நாவல் எழுதியுள்ளார்.

யாழ் புத்தவிகாரை விழாவில்

யாழ் புத்தவிகாரை விழாவில் சிங்கள தளபதியுடன் யாழ் இந்திய தூதர். இந்து ஆலயங்களை இடித்து புத்தவிகாரை கட்டும் சிங்கள பௌத்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறார் இந்திய தூதர். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என நம்புபவர்கள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?

செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம்

செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம் 400 புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார் நடிகர் எஸ.வி.சேகர். ஏன் திடீரென்று ஓநாய் ஈழத்து ஆட்டுக்குட்டிகள் மீது அக்கறை கொள்கிறது?

ராம் சேது

•ராம் சேது தன் கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல் தமிழன் (லைக்கா)பணத்தில் தமிழனுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் படம் ராம் சேது. ராமர் பாலம் கட்டினார் என்று படம் எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி போராளிகளையும் தேவையில்லாமல் இதில் இணைத்து கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். ராமர் பாலத்தில் காணப்படும் திட்டுக்கள் போன்று பல திட்டுக்கள் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் உண்டு. கச்சதீவு கூட இப்படியான் ஒரு திட்டுதான். திட்டுக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது போன்றும் அவற்றில் நீரின் உயரம் 6 இஞ்ச் என்றும் காட்டுகிறார்கள். இது தவறு. திட்டுக்களுக்கிடையே ஆழமான பகுதி மட்டுமல்ல கடுமையான நீரோட்டமும் உண்டு. எனவே படத்தில் காட்டுவது போன்று நடந்து செல்ல முடியாது. ராமர் பாலம் என்பது மக்களின் நம்பிக்கை என்றும் அதனால் அதை உடைக்கக்கூடாது என்கிறார்கள். உலகம் தட்டையானது என்றுகூட மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது உடைக்கப்பட்டது. அதேபோன்று ராமர் கட்டிய பாலம் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானபூர்வமாக உடைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரியர்கள் அன்று ராமாயணம் என்ற இதிகாசம் மூலம் உருவாக்கிய நம்பிக்கையை இன்றும் தமிழன் பணத்தில் கட்டிக்காக்க முனைகிறார்கள். ஆரியர் எப்போதும் தந்திரசாலிகளாகவே இருக்கின்றனர்.

பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி

பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் சுமார் பத்தாயிரம் ரூபா உதவி தொகை 16 வயதுவரை வழங்கப்பட்டு வருகிறது. இது நன்கு தெரிந்தும் எதற்காக இவர் திராவிடமாடல் கதை விடுகிறார்? பாவம். இவருக்கும் பசிக்கும்தானே?