Saturday, August 31, 2024

இந்த பூமி தனிப்பட்ட

“இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ,ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல. நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” - காரல் மார்க்ஸ் நாம் இயற்கையை வெல்ல முடியாது. ஆனால் இயற்கை அழிவில் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும். மண் சரிவு நிகழப்போகிறது என்று அறிவித்த பின்பும் இத்தனை உயிர் இழப்பு எப்படி ஏற்பட்டது? அரசு பொறுப்பு கூறவேண்டும்.

கேரள அரசு கொல்லப்பட்ட

கேரள அரசு கொல்லப்பட்ட தனது இரு மீனவக் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு 700க்கு மேற்பட்ட தனது மீனவர்கள் கொல்லப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் மலையாளிகளை மலையாளிகள் ஆளுகின்றனர். ஆனால் தமிழரை தமிழர் அல்லாதவர் ஆளுகின்றனர் என்றே நினைக்க தோன்றுகிறது. இந்திய அரசின் பட்ஜட்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் சிங்கள அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிங்கள அரசு நன்றி மறந்து தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. சிங்கள அரசின் இந்த தைரியத்திற்கு காரணம் இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற நம்பிக்கையே. அதனால்தான் போர் அற்ற இந்த காலத்திலும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வார்களா?

ஒருபுறம் கிரிக்கட்டில்

ஒருபுறம் கிரிக்கட்டில் தோற்றதற்காக தமிழக மீனவனை சிங்கள கடற்படை கொல்கிறது. மறுபுறம் சிங்கள கிரிக்கட் வீரருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடக்கிறது. 50 வருட திராவிட ஆட்சியின் மகிமை இது?

செய்தி – 40கிலோ எலி இற

ைச்சியுடன் கந்தளாயில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகங்களில் பிரியாணி,கொத்துரொட்டி, பற்றிஸ் வாங்குவோர் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை. குறிப்பு – பதிவில் கூறப்பட் செய்திக்கும் கீழே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😂

இந்தியன் மைலாய்

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன . •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் ம - ர். அப்படித்தானே?

400 இந்தியர்களை

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு, 8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது. இது என்ன நியாயம்? (31.07.2024 உதம் சிங் நினைவு தினம்)

இன்று ஆகஸ்ட் 2ம் திகதி

இன்று ஆகஸ்ட் 2ம் திகதி தனிநாயகம் அடிகளாரின் 111வது பிறந்த தினம் ஆகும். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி முதல் நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியவர் தனிநாயகம் அடிகளார். இதனால் ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி உலகத் தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அத்தகைய தனிநாயகம் அடிகளார் பற்றி வட்ஸ்அப்பில் உலாவிய ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. தனிநாயகம் அடிகளார் ஒரு பறங்கியர் என்றும் தனது கிருத்தவமத வளர்ச்சிக்காக துரையப்பா மீது வீண் பழி சுமத்தி இளைஞர்கள் மூலம் துரையப்பாவை கொன்றார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடல் முழுவதும் இந்து மத வெறி கொண்ட ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு செய்தியை எழுத முடியும். இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாற்றும் காலம். எனவே தாராளமாக துரையப்பாவை தியாகியாக மாற்றட்டும். ஆனால் அதற்காக தமிழுக்காக வாழ்ந்து மடிந்த தனிநாயகம் அடிகளாரை துரோகியாக்க வேண்டாம்.