Sunday, May 31, 2020

•திமுக உடன் பிறப்புகளுக்கு!

•திமுக உடன் பிறப்புகளுக்கு! கலைஞர் கருணாநிதி தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அப்போது பல திமுக உடன் பிறப்புகள் நான் பொய் கூறுவதாகவும் போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்து லண்டனில் வாழ்வதாகவும் எழுதினார்கள். அத்தகைய திமுக உடன் பிறப்புகள் இப் பதிவு நான் யார் என்பதை அறிந்து கொள்ள உதவும்; என நம்புகிறேன். நான் சென்னையில் வளசரவாக்கம் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது 12.03.1991 யன்று இரவு இரண்டு மணிக்கு கியூ பிராஞ் டிஎஸ்பி ராமையா என்னை பிடித்துச் சென்றார். மத்திய புலாய்வுதுறை (ஜபி) பிடிக்கச் சொன்னதால்தான் தான் என்னைப் பிடிப்பதாகவும் நாளை காலை அவர்கள் என்னுடன் பேசுவார்கள் என்றும் டிஎஸ்பி ராமையா கூறினார். அடுத்த நாள் காலை மந்தைவெளி கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து இரண்டு ஜபி அதிகாரிகள் என்னிடம் பேசினார்கள். அவர்கள் சுற்றிவளைக்காமல் நேரிடையாக விடயத்திற்கு வந்தார்கள். கலைஞர் கருணாநிதிக்கு எதிரான சதித்திட்டத்திற்கு என்னை ஒத்துழைக்கும்படியும் அப்படி ஒத்துழைத்தால் 50 லட்சம் ரூபா பணம் தருவதாகவும் விரும்பிய வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். ஒத்துழைக்க மறுத்தால் வழக்கு போட்டு பல வருடங்கள் என்னை சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டினார்கள். ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை. இவையாவும் அங்கு கியூ பிராஞ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த திமுக ஆதரவாளரான ஏகாம்பரம் மூலம் கலைஞரும் உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்தார். இப்போது இதை நான் கூறும்போது திமுக உடன் பிறப்புகள் நம்பமாட்டார்கள் என்று தெரியும். இதோ அவர்களுக்கான ஆதாரம். 30.08.1995 யன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்திருந்தேன். அப்போதே இதனை நான் நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறேன். இதோ அந்த வரிகள், “12.03.1991 அன்று இரவு இரண்டுமணியளவில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்றனர். உதவிக்கண்காணிப்பாளர், ,ராமையா தலைமையில் வந்த கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்று மந்தைவெளியிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்தனர். அதன்பின் அங்கு மத்திய உளவுப்படையினைச் சேர்ந்த ஜ.பி அதிகாரிகளினால் தமது சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி மிரட்டப்பட்டேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு மத்திய அரசினால் "டிஸ்மிஸ்" செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு உருவான அனுதாப ஆதரவை உடைக்கும் வண்ணம், தி.மு.க கட்சியை ஒரு வன்முறைக் கட்சியென்று மக்கள் மத்தியில் காட்டுவதற்கு, மத்திய உளவுப்படையானது சதித்திட்டம் தீட்டியிருந்தது. இச்சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி என்னை மிரட்டியது. நான் இதற்கு இணங்க மறுத்தேன். இதனால் கோபமடைந்த மத்திய மாநில உளவுப் படையினர், அவர்கள் குறிப்பிட்டது போன்றே என்மீது பொய் வழக்குப் போட்டதோடு இத்தனை வருடங்களாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சதித்திட்டத்திற்கிணங்க மறுத்தமையினாலேதான் நான் பழிவாங்கப்படுகிறேன்.” குறிப்பு - எனது இவ் நீதிமன்ற வாக்குமூலம் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலில் பக்கம் 88ல் இடம் பெற்றுள்ளது. கீழே உள்ள புகைப்படம் மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும். (1995) Image may contain: 3 people, people standing and outdoor

எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ

•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள். அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள். அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு. குறிப்பு - இன்று யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் ஆகும். (31.05.1981) Image may contain: sky and outdoor

கலைஞர் கருணாநிதியிடம்

கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து எப்படி சேர்த்தீர்கள் என்று கேட்டால் அவர் “அந்தம்மா நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து வைச்சுருக்குது அதை கேட்க மாட்டீங்களா?” என்று பதில் கூறுவார். அதன்படி ஜெயா அம்மையாரிடம் எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தீர்கள் என்று கேட்டால் “முப்பதாயிரம் கோடி ரூபா சொத்து எப்படி சேர்த்தார் என்று கருணாநிதியிடம் கேளுங்கள்” என்பார். இப்படி மாறி மாறி கூறினார்களேயொழிய கடைசிவரைக்கும் இருவரும் தாங்கள் எப்படி இத்தனை ஆயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தோம் என்று பதில் கூறியதில்லை. அதைவிட முக்கியம் என்னவெனில் “முதலில் நீங்கள் எப்படி சொத்து சேர்த்தீர்கள் என்பதைக் கூறுங்கள்”என்று இவர்கள் இருவரிடமும் கேட்கக்கூடிய தைரியமான ஊடகவியலாளர் ஒருவர்கூட தமிழ்நாட்டில் இல்லை. அத்தகைய தைரியமான(?) ஊடகவியலாளர்களில் ஒருவர், காசுக்காக நான் சீமானுக்கு ஆதரவாக எழுதுவதாகவும் எனக்கு ஆயிரம் ரூபா தன் சம்பளத்தில் இருந்து தருவதாகவும் எழுதியிருக்கிறார். இந்த மூத்த ஊடகவியலாளர் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார் என்ற நம்பிக்கையில், காசுக்காக நான் சீமானுக்கு எழுதியதற்கான ஆதாரத்தை தரும்படி கேட்டேன். ஆனால் அந்த ஊடகவியலாளர் எனக்கு இதுவரை பதில் தரவில்லை. மாறாக தனது அப் பதிவை நைசாக நீக்கிவிட்டார். என்னைப் பற்றி நன்கு தெரிந்த அந்த மூத்த ஊடகவியலாளர் ஏன் இப்படி எழுதினார் என்று வருத்தத்துடன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அந்த நண்பர் “ பாவம். அவருக்கும் பசிக்குமில்லே” என்றார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த ஊடகவியலாளரின் பதிவை நம்பி பகிர்ந்த சில ஈழத் தமிழர் இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர். Image may contain: 1 person, text

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப் பொறியில் இருந்தே ஆரம்பித்தது. பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். குறிப்பு - இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் பாலச்சந்திரன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும். Image may contain: 1 person

Friday, May 29, 2020

தயவு செய்து இங்கே யாரும் கைதட்டாதீர்கள்

•தயவு செய்து இங்கே யாரும் கைதட்டாதீர்கள் அவர் உடனே எழும்பி உரையாற்றிவிடக்கூடும்! இது ஒரு அரசியல்வாதியின் கல்லறையில் எழுதப்படக்கூடிய வாசகம். அரசியல்வாதியான ஆறுமுகம் தொண்டமானுக்கும் இது பொருத்தமானதே. இரண்டு நாட்களுக்கு முன்னர் மலையகத்தில் குளவிக் கடியினால் தொழிலாளி ஒருவர் மரணமடைந்த செய்தி வந்திருந்தது. இது வருடா வருடம் வந்து கொண்டிருக்கும் துயரமான செய்தி. 1991ல் இருந்து பதவியில் இருக்கும் ஆறுமுகம் தொண்டமானால் தனது மக்களை இந்த குளவிக் கடியில் இருந்து மீட்க முடியவில்லை. கேவலம் குளவிக் கடியில் இருந்துகூட தன் மக்களை மீட்க முடியாதவரின் மரணத்தை மலையக மக்களின் பேரிழப்பு என்று எப்படித்தான் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூறுகின்றார்கள்? கிழக்காசியாவில் மிகப் பெரிய தொழிற்சங்கத்தைக் கொண்டிருக்கும் இந்த தலைவர் அந்த மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இன்னும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் உழைத்தவனுக்கு கூலி செல்லுமுன்னரே தொழிற்சங்கத்திற்கான சந்தாப் பணம் இந்த தலைவர் தொண்டமானுக்கு சென்றுவிடுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஹோட்டல் ஒன்றை பொலிசார் ரெய்டு செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் செய்த பெண்களையும் ஆண்களையும் பொலிசார் கைது செய்தனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து ஆண்களின் விபரத்தை பொலிசார் பதிவு செய்தபோது ஒருவர் தான் இலங்கையில் அமைச்சர் என்றும் தன் பெயர் ஆறுமுகம் தொண்டமான் என்றும் கூறினார். பொலிசாருக்கு ஆச்சரியம். இறுதியாக சென்னையில் உள்ள இலங்கை தூதுவர் வந்து உறுதிப்படுத்தியதால் வழக்கு பதிவு செய்யாமல் அவரை விடுதலை செய்தனர். இப்போது அந்த தொண்டமான் மரணத்தை “இலங்கை மக்களுக்கு பேரிழப்பு” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஒரு அரசியல்வாதி எத்தனை தவறு இழைத்தாலும் அவர் இறந்தவுடன் அவருடைய தவறுகளை மரணம் மன்னித்துவிடும் என ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. இதனால்தான் பல அரசியல்வாதிகள் துணிந்து தவறுகள் செய்கிறார்கள். அவர்கள் திருந்துவதற்கு முயல்வதில்லை. மாறாக இறந்த பின்னும் தவறுகள் விமர்சிக்கப்படும் என்ற சம்பிரதாயம் பேணப்படுமாயின் அரசியலில் மாற்றத்திற்கான ஒரு வழி பிறக்கும். குறிப்பு - மரணம் தவறுகளை மன்னித்துவிடுவதில்லை. Image may contain: 1 person

இருவரும் மலையக தமிழர்கள்.

இருவரும் மலையக தமிழர்கள். ஒருவர் திருமதி அமிர்தா அம்பிகை மற்றவர் திரு ஆறுமுகன் தொண்டமான். ஒருவர் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழிலாளி. மற்றவர் அந்த தோட்ட தொழிற்துறைக்கான அமைச்சர். ஒருவர் 52 வயதில் குளவி கடித்து மரணமடைந்துள்ளார். மற்றவர் 56 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 56 வயதில் இறந்தவர் அரசியல்வாதி என்பதால் இளம் வயதில் அநியாயமாக இறந்துவிட்டாரே என்று பலரும் இரக்கப்படுகின்றனர். ஆனால் 52 வயதில் இறந்தவர் கூலித் தொழிலாளி என்பதால் இரக்கம் காட்ட மறுக்கின்றனர். ஒரு தமிழர் அமைச்சராக இருக்கும்போது ஒரு தமிழ் கூலித் தொழிலாளி குளவி கடித்து மரணமடையலாமா என்று கேட்டால், அதற்காக அமைச்சர் வந்து குளவிக் கூட்டைக் கலைக்க வேண்டும் என்கிறீர்களா என்று திருப்பிக் கேட்கிறார்கள். சம்பந்தப்பட்ட கூலித் தொழிலாளி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும்போதே குளவி கடித்து இறந்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த துயரம் வருடாவருடம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பும் இறந்தால் நட்டஈடும் கொடுக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இல்லையா? சில வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் இதே மலையக பகுதிக்கு வந்தார். அப்போது இந்த குளவிக் கூடுகள் யாவும் இலங்கை அரசு கலைக்கும் நடவடிக்கை எடுத்தது. இந்திய பிரதமருக்கு குளவி கடிக்கக்கூடாது என நடவடிக்கை எடுத்த இலங்கை அரசும் அமைச்சரும் தொழிலாளர்களுக்கு கடிக்கக்கூடாது என ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இப்போது அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் இடத்திற்கு அவரது மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே இனி அடுத்து அமிர்தா அம்பிகையின் மகள் குளவிக் கடிக்கு இறப்பது தவிர்க்க முடியாதது. குறிப்பு - குளவிகளுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து அடுத்தமுறை தொண்டமான் குடும்பத்தில் யாருக்காவது கடித்து விடுங்கள். Image may contain: 1 person Image may contain: ஜெ முருகேசன், glasses and close-up

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி

ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள், ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள், இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை. திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார். ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை. தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை. சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார். ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை. சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை. அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார். ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை. இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. Image may contain: one or more people, people sitting and outdoor

லண்டனில் இருக்கும் தமிழ் இளைஞர் ஒருவர்

லண்டனில் இருக்கும் தமிழ் இளைஞர் ஒருவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவுக்கு கடிதம் (லெட்டர்)அனுப்பியிருந்தார். அந்த லெட்டரில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ஜனாதிபதி கோத்தாவினால் படித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அருகில் இருந்த அமைச்சர் விமல் வீரவம்சவிடம் காட்டி “ விமல்! இதில் என்ன எழதியிருக்கிறது?” என்று கேட்டார். அதனைப் படித்துப் பார்த்த விமல் வீரவம்சா “ மாத்தையா! இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று உங்களுக்கு தெரியும்தானே” என்று கூறினார். உடனே இருவரும் பக்கத்து றூமில் ரிவி பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சாவிடம் சென்று லெட்டரைக் காட்டி இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கேட்டனர். லெட்டரைப் படித்த மகிந்த ராஜபக்சா இது “கோட் வேர்ட்டில்” எழுதப்பட்டுள்ளது. புலிகளின் கோட்வேர்ட்டை நாங்கள் படிப்பது கஸ்டம். எதற்கும் எங்கள் குற்றப்புலனாய்வு அதிகாரியை அழைத்து கேட்டுப்பாருங்கள்” என்றார். மகிந்தா கூறியபடி குற்றப்புலனாய்வு அதிகாரியை அழைத்த கோத்தா லெட்டரை அவரிடம் கொடுத்து “இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கூறுங்கள்” என்றார். அவராலும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனைப் பார்த்த மகிந்த ராஜபக்சா “சுமந்திரனை அழைத்து கேளுங்கள்” என்றார். அதற்கு “ரணில் கேட்டால் சுமந்திரன் கூறுவார். நாங்கள் கேட்டால் கூறுவாரா?” என்று கோத்தா தயக்கத்துடன் கேட்டார். உடனே அருகில் இருந்த குற்றப்புலனாய்வு அதிகாரி “ கண்டிப்பாக கூறுவார். ஏனெனில் இந்த கடிதம் அனுப்பிய தமிழ் இளைஞன் பெயர் சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கில் நாம் தேடும் நபரின் பெயராக இருக்கிறது” என்றார். இறுதியாக மகிந்தவே சுமந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ மிஸ்டர் சுமந்திரன்! ஒரு சின்ன பிரச்சனை உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்றார். உடனே விரைந்து சென்ற சுமந்திரன் “ என்ன உதவி வேண்டும் சேர்? தயங்காமல் கேளுங்கள். நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார். கோத்தா தன் கையில் இருந்த லெட்டரைக் காட்டி “இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கூறமுடியுமா?” எனக் கேட்டார். லெட்டரைப் பார்த்த சுமந்திரன் “ சேர்! தலை கீழாக பிடித்து படித்திருக்கிறீர்கள். நிமிர்த்;திப் படியுங்கள் புரியும்” என்றார். கோத்தா நிமிர்த்திப் படித்ததும் தன்னை ஒருவன் இத்தனை கேவலமாக எழுதிவிட்டானே என்ற கோபம் ஏற்பட்டாலும் இதை சுமந்திரன் எப்படி உடனே கண்டு பிடித்தார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. அதை அவர் சுமந்திரனிடமே “ எப்படி உடனே கண்டு பிடித்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சுமந்திரன் “ சேர் அந்தப் பையன் இதை எனக்கு தினமும் அனுப்பி டார்ச்சர் பண்ணுறான் என்னால நித்திரை கொள்ளவே முடியவில்லை. அவனைப் பிடிச்சு ஜெயிலில் போடுங்க சேர்” என்றார். குறிப்பு - ஒரு ஜனாதிபதியை வைத்து இப்படி நகைச்சுவையாக எழுதுவது அநாகரிகம் என்று யாரும் என்மீது கோபப்பட வேண்டாம். இந்த நகைச்சுவை ஒரு அமெரிக்கரால் அமெரிக்க ஜனாதிபதியை வைத்து எழுதி அமெரிக்க பத்திரிகையில் வந்துள்ளது. இதனை அநாகரிகம் என்று யாரும் அங்கு கண்டிக்கவில்லை. அதனை பின்னூட்டத்தில் தந்துள்ளேன். (கீழே உள்ள படம் - ஜனாதிபதி கோத்தா படித்த லெட்டர்) No photo description available.

நான் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீடியோக்களை

நான் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீடியோக்களை பார்வையிடுவதில்லை. ஏனெனில் அவை இந்து அடிப்படைவாதிகளை விட மோசமானவை. தமிழகத்தில் ஒரு கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கும் ஒருவர் வீடீயோ ஒன்றை அனுப்பி அதற்கு எப்படி பதில் அளிப்பது என்று என் கருத்தைக் கேட்டார். அதனால் அவர் அனுப்பிய அந்த இஸ்லாமிய தலைவர் ஒருவரின் வீடீயோ உரையை பார்க்க வேண்டியதாகிவிட்டது. ( அந்த வீடியோ கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன் அந்த தமிழக இஸ்லாமிய தலைவர் “பிரபாகரன் இஸ்லாமியர்களின் எதிரி, அவரை ஒருபோதும் இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று கூறுகிறார். பிரபாகரனை ஏற்பதோ இல்லை ஏற்காமல் விடுவதோ அவர் விருப்பம். ஆனால் அதற்காக அவர் பொய் சொல்லக்கூடாது. பொய் சொல்லி மக்களிடையே பிளவுகளையோ மோதல்களையோ ஏற்படுத்தக் கூடாது. பிரபாகரன் பள்ளிவாசலுக்குள் தாக்குதல் நடத்தியவர் என்றும் ஆனால் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மற்றவர்களின் மத வழிபாட்டிடங்களில் தாக்குதல் செய்யவில்லை என்கிறார். கடந்த வருடம் சஹ்ரான் குழுவினர் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்றபோது இந்த தலைவர் என்ன கோமாவிலா இருந்தார்? தமிழ் மக்கள் அதிக அளவில் இறந்தபொதும் தமிழ் மக்கள் பொறுமை காத்தனர். ஒரு இஸ்லாமியர்கூட தமிழர்களால் தாக்கப்படவில்லை. மாறாக சிங்கள காடையர்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே. அதுமட்டுமல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்களின் ஒற்றுமை வேண்டும் என்பதற்காகவே கிழக்குமாகாண முதலமைச்சர் பதவிகூட சம்பந்தர் ஐயாவினால் இஸ்லாமியருக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் இந்த பெருந்தன்மையை சில இஸ்லாமிய தலைவர்கள் தமிழ் மக்களின் பலவீனம் என்று நினைக்கிறார்கள். இந்த இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். • இரண்டுஅரோபிய நாடுகள் • 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள் • கணக்கில் அடங்காத எண்ணெய்வளம் • அதனால் பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள் • வரலாற்று நியாயங்கள் • எல்லாம் வல்ல இறைவன் அல்லா இவை அனைத்தும் இருந்தும் அளுத்கமவில் இஸ்லாமியர் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை! அம்பாறையில் இஸ்லாமியரின் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! 70 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை அகற்றியதை எதுவும் செய்ய முடியவில்லை! • “அல்லாவு அக்பர்” கோசம ;போடுவதாலோ • வெள்ளிகிழமைகளில் கூடிப் பிரார்த்திப்பதாலோ எதுவும் ஆகப்போவதில்லை. இனியாவது கொஞ்சம் யோசியுங்கள்! Image may contain: 1 person, beard and text

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.

இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர். ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள். மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை. ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை. இந்த உண்மையை ஏன் சுமந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை? குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம். Image may contain: 2 people, close-up

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு (05.05.1818)

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு (05.05.1818) குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும் . எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. கொரோனோ நெருக்கடியானது கார்ல் மார்க்ஸ் கருத்துகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடிகள் தோன்றியபோது எப்படி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொண்டதோ அதேபோன்று இம் முறையும் அது தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என சிலர் நம்புகின்றனர். Image may contain: 1 person

வடையை வீரகேசரி பேப்பரில் வைத்து அழுத்தினால் எண்ணெய் காணாமல் போகும்

வடையை வீரகேசரி பேப்பரில் வைத்து அழுத்தினால் எண்ணெய் காணாமல் போகும் அதே வடையை உதயன் பேப்பரில்; வைத்து அழுத்தினால் அந்த வடையே காணாமல் போகும். நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நிஜம். அதுதான் அந்த உதயன் பத்திரிகை ஆசிரியராக இருந்த வித்தியாதரனின் திறமை. தன்னைத்தானே ஊடக ஜம்பவான் என கூறிக்கொண்டு திரியும் வித்தியாதரன் சக ஊடகவியாளர் நிக்சனை மிரட்டியுள்ளதாக அறிய வருகிறது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். மாறாக தன்னிடம் இருக்கும் பணம் மற்றும் அரசியல் பலம் மூலம் மற்றவர்களை வித்தியாதரன் மிரட்ட முயல்வது தவறு. Image may contain: பூந்தளிர் தோழமை, close-up Image may contain: 1 person, selfie and close-up

இதைவிட அதிகமாக வாய்விட்டு சிரித்திருக்கிறேன்.

இதைவிட அதிகமாக வாய்விட்டு சிரித்திருக்கிறேன். அவை எதுவும் தற்போது தேடியபோது சிக்கி தொலைக்கவில்லை. அடுத்த முறை எப்படியும் போட்டு விடுகிறேன். குறிப்பு - சிரிப்பு தினத்தை முன்னிட்டு ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கான ரிலாக்ஸ் பதிவு இது. Image may contain: 1 person, sitting

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன் ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன் குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே. நான் செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர! என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால் பிரபாகரன் பயங்கரவாதி எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி என்கிறார்கள். சரி. அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது அவர் மகனை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை.? மாறாக அவர்களை பாதுகாத்து படிக்கவும் வைத்துள்ளார்களே. ஏனெனில் அவர் சிங்களவர். நான் தமிழன். அதுதானே காரணம். அவர்கள் என்னைக் கொன்றபோதுகூட வலிக்கவில்லை ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம்தான் என்று சுமந்திரன் அங்கிள் சொல்லும்போதுதான் வலிக்கிறது. பிளீஸ், சுமந்திரன் அங்கிள்! நீங்கள் எனக்காக நியாயம் கேட்காவிட்டாலும் பரவாயில்லை நடந்தது இனப் படுகொலை அல்ல என்று மட்டும் கூறாதீர்கள். Image may contain: 1 person

தெலுங்கானா சீதாக்காவும்

•தெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்! இதோ தோளில் மூட்டையை சுமந்து வருகிறாரே இவர் ஒரு தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதா? இவர் பெயர் சீதாக்கா. முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான இவர் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ இந்த கொரோனோ நெருக்கடியில் தன் மக்களுக்காக கற்கள் நிறைந்த மலைப் பாதையில் பொருட்களை சுமந்து செல்கிறார். ஈழத்து தமிழ் மக்களுக்கும் இப்படி உதவுவதற்காக ஒரு அக்காவை எமது சுமந்திரன் அழைத்து வந்தார். அவர் பெயர் அம்பிகா. தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்தவர் கொரோனோ என்றதும் அடுத்த நிமிடம் கொழும்புக்கு பறந்துவிட்டார். இப்பவே மக்கள் பற்றி அக்கறை கொள்ளாத இவர் பதவி பெற்றபின் மக்களில் அக்கறை கொள்வார் என்று எப்படி நம்புவது? பரவாயில்லை. ஆனால் இந்த அம்பிகா அக்காவைத்தான் எப்படியும் தேசிய பட்டியல் மூலமாவது எம்.பி யாக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார். சரி. அதை விடுவோம். இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்கள் தம் சொந்த இடங்களுக்கு திரும்பும் பயணச் செலவை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள பாராளுமன்றத்தை கூட்டினால்தான் வருவோம். பிரதமர் கூப்பிட்டால் வரமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றன. ஆனால் நல்லவேளை எமது சம்பந்தர் ஐயா இப்படி எந்த அடமும் பிடிக்காமல் கலந்து கொண்டுள்ளார். கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக என்ன சாதித்தார் என்று தயவு செய்து யாரும் என்னிடம் கேட்காதீர்கள். அவர் வழக்கம்போல் தனது நீண்ட உறக்கத்தில் இருக்கும் கடமையைச் செய்து முடித்தள்ளார். இது போதாதா? நாங்கள் சீதாக்காவை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். எம் தலைவிதி அப்படி. குறிப்பு- லண்டனில் சொகுசாக இருக்கும் பாலன் தோழர் வந்து மக்களுக்கு சேவை செய்யலாம்தானே என்று கருத்து எழுதப்போகும் சுமந்திரன் விசுவாசிகளுக்கு முதலே கூறிவைக்க விரும்புகிறேன். நான் எம்.பி யும் இல்லை. எம்.பி பதவிக்காக போட்டியிடவும் இல்லை. Image may contain: one or more people, people standing, hat and outdoor Image may contain: 1 person

•பாவம்! இவருக்கும் பசிக்கும்ல்லே?

•பாவம்! இவருக்கும் பசிக்கும்ல்லே? நீங்கள் தாராளமாக கலைஞரையும் அவரின் திமுக வையும் ஆதரியுங்கள். இல்லை, வேணுமென்டால்; சோனியாவின் காங்கிரசையும் ஆதரித்து தொலையுங்கள். நீங்கள் யாரை வேணுமென்டாலும் ஆதரியுங்கள். அது உங்கள் விருப்பம். உங்கள் உரிமை. ஆனால் இந்தியா நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்று மட்டும் தயவு செய்து கூறாதீர்கள். ஏனெனில் யுத்தத்தை நடத்தியது மட்டுமல்ல இன்றும்கூட இலங்கை அரசையும் இனப்படுகொலையாளிகளையும் பாதுகாத்து அதரித்து வருவது இந்திய அரசே. இதை உணர முடியாத அளவிற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அது மட்டுமல்ல முள்ளிவாயக்கால் அழிவு என்பது பத்து வருடத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வு என்று கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு அது வெறும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது நாற்பதாயிரம் மக்களை இழந்த வலி. அதை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். Image may contain: 1 person, glasses

Monday, May 25, 2020

திமுக உடன் பிறப்புகளிடம்

•திமுக உடன் பிறப்புகளிடம் ஒரேயொரு கேள்வி மட்டுமே கேட்க விரும்புகிறேன். மணி என்ற ஒரு அகதி சிறுவனை தத்து எடுத்து வளர்த்தாரே தலைவர் கலைஞர். அந்த சிறுவன் ஏன் ஸ்டாலினால் கொல்லப்பட்டான் என்று நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை. 1990ல் தன் பதவியைக் காப்பதற்காக சிறப்புமுகாம் அமைத்து அகதிகளை அடைத்த கருணாநிதி அதன் பின் இரண்டு தடவை பதவிக்கு வந்தபோதும் அச் சிறப்புமுகாமை ஏன் மூடவில்லை என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழீழம்;தான் தீர்வு என்று டெசோ மாநாடு நடத்துவதும் பதவிக்கு வந்ததும் மத்திய அரசின் கொள்கையே தனது கொள்கை என்று கூறியது ஏன் என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை. மாநில அரசுக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டு பின் ஏன் மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை. போர் நின்றுவிட்டது. உண்ணாவிரதம் வெற்றி என்று அறிவித்துவிட்டு அதன்பின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கேட்டபோது மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்று கூறியது ஏன் என்று உங்களை நான் கேட்க விரும்பவில்லை. தமிழ் மக்கள் இறக்கும்போது மகளின் பதவி விழாவில் கலந்துகொண்டது பற்றி கேட்டபோது சங்ககாலத்தில் ஒரு வீட்டில் இழவு நடக்கும்போது இன்னொரு வீட்டில் கலியாணம் நடந்ததாக கூறியது ஏன் என்றும் உங்களிடம் நான் கேட்க விரும்பவில்லை. ஈழத் தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது அதை காதல் தோல்வியில் மரணம் என்று கொச்சைப்படுத்pயது என் என்றும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை. நான் உங்களிடம் ஒரேயொரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளை கொஞ்சம்கூட இரக்கமின்றி விமானநிலையத்தில் வைத்து திருப்பியதை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறீர்கள்? எதிரி மகிந்த ராஜபக்சா கூட அந்த பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதி வழங்கிய நிலையில் கலைஞர் இரக்கமின்றி திருப்பி அனுப்பியதை என்னவென்று அழைப்பது உடன் பிறப்புகளே? குறிப்பு - தயவு செய்து உங்கள் தலைவர் கலைஞரை இகழ்வதாக சினம் கொள்ளாதீர்கள். எங்கள் வலிகளை உணர்ந்து கொள்ளுங்கள். Image may contain: 1 person, standing and close-up Image may contain: 1 person, close-up

•மறக்க முடியாத அட்டப்பாடி

•மறக்க முடியாத அட்டப்பாடி தோழர் Gajan Gamblerஇன் உதவியால் அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. இப் படத்தை நான் பார்க்க விரும்பியதற்கு காரணம் நஞ்சம்மா என்ன ஆதிவாசிப் பெண் பாடிய பாடலும் அவரது அட்டப்பாடி கிராமமும் ஆகும். 1986ல் அரியலுர் மருதையாற்று பாலத்திற்கு தோழர் தமிழரசன் வெடி குண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கியூ பிரிவு பொலிசார் என்னை தேடினார்கள். என்னை கைது செய்வதற்காக சென்னையில் நான் தங்கியிருந்த மடிப்பாக்கம் வீட்டுக்கு வந்த பொலிசார் நான் இல்லை என்றவுடன் அங்கிருந்த என் நண்பர்களை கைது செய்து விட்டனர். இதனால் எனக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. என்னால் என் நண்பர்களுக்கும் நெருக்கடிகள். இந் நிலையில் நண்பர் மோகன் எனக்கு உதவ முன்வந்தார். நண்பர் மோகன் எனது ஊரைச் சேர்ந்தவர். அப்போது அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். இயக்கத்தில் இருந்தபோது அவர் அன்டன் பாலசிங்கத்திற்கு சாரதியாக இருந்துள்ளார். அவரது தந்தையார் சங்குண்ணி. அவர் கேரளாவில் இருந்து வந்து எனது கிராமமான நெல்லியடியில் ரீ கடை வைத்திருந்தார். தனது தந்தையின் உறவினர்கள் இருக்கும் கேரளாவுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். குருவாயூர் கோயிலுக்கு அருகில் அவரது உறவினர்களின் வீடு இருந்தது. இக் கோயில் கேரளாவில் பிரசித்தமானது என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் இரண்டு விடுதலைப் புலிகள் வந்து இருப்பதாக ஊருக்குள் கதை பரவிவிட்டது. இதனால் எங்களை பார்க்க மக்கள் பலர் வரத்தொடங்கிவிட்டனர். இதனால் பொலிசாருக்கு செய்தி போனால் பிரச்சனையாகிவிடுமே என நாம் அஞ்சியபோது மோகனின் சிறிய தகப்பனார் தனக்கு அட்டப்பாடியில் எஸ்டேட் ஒன்று இருப்பதாகவும் அங்கு போனால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எங்களை கூட்டிச் சென்றார். இதுதான் நான் அட்டப்பாடிக்கு வந்த கதை. உண்மையில் அழகான அருமையான ஒரு இடம் இது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்ற காட்சி. அங்கு வாழும் மக்களின் மொழி எனக்கு புரியவில்லை. இதுபற்றி மோகனிடம் கேட்டபோது இவர்கள் ஆதிவாசிகள் என்றும் இவர்கள் தங்கள் மொழியை பேசுகிறார்கள் என்றார். அப்போது நான் நஞ்சம்மா பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவர் பாடிய பாடல்களை கேட்கும்போது அந்த அழகிய அட்டப்பாடி கிராமம் சேர்ந்து நினைவுக்கு வருகிறது. குறிப்பு - நஞ்சம்மா பாடிய பாடல் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். நீங்களும் கேட்டு அந்த அழகிய அட்டப்பாடியை ஒருமுறை அனுபவியுங்கள். Image may contain: 1 person, text

•மார்க்ஸ் என்னும் அற்புதம்!

•மார்க்ஸ் என்னும் அற்புதம்! இவர் மாட்டு தொழுவத்தில் பிறக்கவில்லை இவர் பிறந்தபோது வானில் நட்சத்திரங்கள் தோன்றவில்லை எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபோதும் இவர் தலையின் பின்னால் ஒளிவட்டம் இருக்கவில்லை இவர் இறந்தபோதுகூட இவரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் முப்பது பேருக்குள்தான் இருந்தனர். ஆனாலும் உலகைக்குலுக்கிய பெரும் புரட்சிப் புயல்களின் மையம் இவரே. இவர் ஒரு அற்புதமே ஏனெனில் இன்றும்கூட இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கு காரணம் முதலாளித்துவம் என்பதை படித்தவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத நிலையில் முதலாளித்தவம் ஆரம்பித்த நிலையிலேயே அதன் நெருக்கடியை ஆய்ந்து கூறியவர் இவர். ஆம். மார்க்சிசம் வெறும் தத்துவம் இல்லை. அது ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். குறிப்பு - இன்று காரல் மார்க்சின் 202வது பிறந்த தினம் ( 05.05.1818) Image may contain: text that says "உலகம் முழுக்க மனித இனத்திற்கு எதிராக, இயற்கைக்கு எதிராக நடக்கும் அத்துனை அழிவு சார்ந்த நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் முதலாளித்துவம் தான்! -கார்ல் மார்க்ஸ்"

•யார் இந்த மணி?

•யார் இந்த மணி? இது கௌத்தூர் மணி பற்றியோ அல்லது வீரமணி பற்றிய பதிவோ இல்லை. இது கலைஞர் தத்து எடுத்த அகதிச் சிறுவன் மணி பற்றியது. திமுக உடன் பிறப்புகளிடம் கேள்வி கேட்டு நேற்று ஒரு பதிவை போட்டிருந்தேன். அதற்கு பதில் அளித்த உடன் பிறப்புகள் பலர் நான் முதலாவதாக குறிப்பிட்ட மணி விடயம் பொய் என்று கூறினர். அதுவும் ஒரு வழக்கறிஞர் “முதலாவதாக குறிப்பிட்ட மணி விடயமே பொய். எனவே அதன் பின்னர் குறிப்பிட்ட அனைத்து விடயமும் பொய்” என்று வாதிட்டார். இவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இவர்களுக்கு தெரியவில்லை என்பதற்காகவோ அல்லது இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலோ ஒரு உண்மையான விடயம் பொய் ஆகிவிடுமா? நான் இப்போது மட்டுமல்ல கலைஞர் உயிருடன் இருந்தபோதே பல தடவைகள் இந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டு: பதிவு போட்டுள்ளேன். அதுமட்டுமல்ல இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதவுமாறு பல வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறேன். அதையும்விட, முதலமைச்சராக இருந்த ஜெயா அம்மையாரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அவருடைய அலுவலக முகவரிக்கு மின்னஞ்சல்கூட அனுப்பியிருக்கிறேன். எல்லாவற்றையும்விட, இச் சிறுவன் பற்றி செய்தி வெளிவந்த முரசொலி பத்திரிகையின் காப்பி ஒன்றை எடுத்து தருமாறு தமிழ் நாட்டில் இருக்கும் பலரிடம் கேட்டிருக்கிறேன். பிரபல ஊடகவியலாளர் டி.வி.எஸ்.சோமு என்பவர் ஒருமுறை என்னிடம் பேட்டி காண விரும்பியபோது இந்த அகதி சிறுவன் பற்றி பரிதி இளம்பரிதியிடம் விசாரித்து எழுதுங்கள் என்றேன். ஏனெனில் தமிழக அரசியல் தலைவர்களில் பரிதிஇளம்வரிதி மட்டுமே “இந்த அகதிச் சிறுவன் எங்கே?” என்று ஒருமுறை கேட்டு அறிக்கை விட்டிருந்தார். பரிதிஇளம்வரிதி திமுக வில் இருந்தவர். அதுவும் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். எனவே அவர் திமுக வை விட்டு வெளியேறியதும் இதைக் கேட்கிறார் எனில் நிச்சயம் அச் சிறுவனுக்கு ஏதோ விபரீதம் ஸ்டாலினால் நடந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஊடகவியலாளர் சோமு அவர்கள் பரிதி இளம்வரிதியின் கைத்தொலைபேசி இலக்கத்தை தந்து உதவினார். நான் உடனே பரிதிஇளம்வரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகதிச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் “அது முடிந்துபோன விடயம். இனி அதைப் பேசி என்ன பயன்?” என்று கேட்டார். தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அது யாரோ ஒரு அகதிச் சிறுவன் பற்றிய விடயம். ஆனால் எமக்கு அது இன்னொரு ஈழத் தமிழன் பற்றிய விடயம். அதனால்தான் எமக்கு வலிக்கிறது. சரி. நடந்தது என்ன? 1983ல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை அடுத்து ஆயிரக் கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் தமிழகம் சென்றனர். அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அதனால் அவருக்கு ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்றும் கலைஞர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்வதற்காக ஒரு அகதிச் சிறுவனை தான் தத்து எடுப்பதாக கலைஞர் அறிவித்தார். அந்த அகதி சிறுவனுக்கு மணி என்று பெயர் சூட்டினார். அவரும் அந்த சிறவனும் சேர்ந்து இருக்கும் படங்கள் முரசொலியில் பிரசுரம் செய்யப்பட்டன. அதுமட்டுமல்ல, கனிமொழிக்கு தம்பி இல்லை என்ற குறை இருந்ததாகவும் இச் சிறுவனை தத்து எடுத்ததன் மூலம் அக் குறையும் தீர்ந்து விட்டதாக கலைஞர் கூறினார். சிறுவனை தத்து எடுத்து வளர்ப்பதாக கலைஞர் அறிவித்தபடியால் கலைஞரின் சொத்தில் சட்டப்படியான உரிமை அச் சிறுவனுக்கு வந்துவிடும் என்று அஞ்சிய ஸ்டாலின் அச் சிறுவனை விரட்டிவிட்டதாக பின்னர் செய்திகள் வந்தன. ஆனால் அச் சிறுவன் விரட்டப்பட வில்லை, மாறாக கொல்லப்பட்டுவிட்டான் என்ற சந்தேகம் பரிதிஇளம்வரிதியின் பேட்டிகள் உறுதி செய்தன. எமக்கு வருத்தம் என்னவெனில் எம்.ஜி.ஆரைவிட தனக்கு தமிழ் இனப் பற்று அதிகமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக கலைஞர் ஒரு அகதிச் சிறுவனை அநியாமாக பலியிட்டு விட்டார் என்பதே. இப்போது உடன்பிறப்புகள் இச் சிறுவன் விடயம் பொய் என்று கூறுவது ஆச்சரியம் தரவில்லை. மாறாக இன்னும் 50 வருடம் கழித்து ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாக மாற்றப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. Image may contain: 34 people, including Paa Baalaa, people standing and indoor

மகிழ்ச்சி.

மகிழ்ச்சி. வாழ்த்துகள். Image may contain: 2 people, including கதிர் மாயவேல், text that says "பிணையில் விடுதலை! வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச்செயலாளர் தமிழர் கட்சி தமிழ்த்தேச மக்கள் கட்சியின் வாழ்த்துக்கள்..."

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்? மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்? அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். எமக்கான நியாயத்தை உலகம் வழங்கும்வரை எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும். ஆம். மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே. எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்! Image may contain: one or more people and close-up

•இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை?

•இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை? இன்று ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கொல்லப்பட்ட தினம் என்று முகநூலில் சிலர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் அவரை நினைவு கூர்வது ஆச்சரியமாக இருக்கிறது. சரி. பரவாயில்லை. ஆனால் நினைவு கூர்வது என்ற போர்வையில் அவர்கள் இந்திய ஆதரவை மீண்டும் விதைக்க முனைவது மோசமானது. கண்டிக்கப்பட வேண்டியது. இந்திய அரசின் உதவியுடன் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று சிறீயண்ணா கூறியது உண்மைதான். ஆனால் அதன் பின் பல பொங்கல் வந்து போய்விட்டது. அவர் கூறிய தமிழீழம் பிறக்க இந்தியா உதவி செய்யவில்லை. மாறாக, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்திய அரசின் உதவியுடனேயே நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை எம் கண் முன்னே கண்டோம். இலங்கை அரசு தமிழினப் படுகொலை செய்வதற்கு உதவியதோடு இன்று இக் கணம்வரை அந்த இலங்கை அரசை ஆதரித்து பாதுகாத்து வருவதும் இந்த இந்திய அரசே. அதை உணராமல் இப்பவும் எப்படி இவர்களால் “ ஈழவிடுதலைப் போராட்டம் இந்திய பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்தது” என்று கூறிக்கொள்ள முடிகிறது? சரி. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை. குறைந்தபட்சம் தன்னை ஆதரித்த தனது விசுவாசியான சிறீயண்ணாவுக்காவது உதவியதா? இல்லையே. சிறீயண்ணா யாழ்ப்பாணத்தில் புலிகளால் கொல்லப்டும்போது இந்திய அரசு அவரை எப்படிக் காப்பாற்றியிருக்க முடியும் என கேட்க விரும்புவர்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். இதே யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற இரு வெள்ளை இனத்தவர்களை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது. சிறையில் உள்ள போராளிகள் அவைரும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை சுட்டுக் கொல்லப்போவதாக ஈபிஆர்எல்எவ் இயக்கம் அறிவித்தது. உடனே அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறையில் உள்ள போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் ஜே.அர்.ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம். நான் அலன் தம்பதிகளை விடுதலை செய்விக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்கதலைவர் பத்மநாபா கைது செய்யப்பட்டு ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார் அந்த இந்திரா அம்மையார். இப்போது எனது கேள்வி என்னவெனில் ஜே.அர் ஜெயவர்தனா கேட்காமலே இரண்டு வெள்ளை இனத்தவர்களுக்கு உதவிய இந்திய அரசு ஏன் தனது விசுவாசியான சிறீயண்ணாவை காப்பாற்றவில்லை? உண்மையில் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். ஏனெனில் அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருந்தார். அவரை கைது செய்து பத்மநாபாவுக்கு செய்தது போல் செய்து சிறீயண்ணாவை காப்பாற்ற என் இந்திய அரசு முயலவில்லை? ஏனெனில் இந்திய அரசைப் பொறுத்தவரையில் போராளிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும் என்பதே விருப்பம். இது இன்று சிறீயண்ணாவின் பெயரால் இந்திய புகழ்பாடுவோருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் இந்திய ஆதரவை விதைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. Image may contain: Telo Sarvathesam, text

அவர்கள் மலர்களை பறித்து விடலாம்

அவர்கள் மலர்களை பறித்து விடலாம் - ஆனால் வசந்தம் வருவதை தடுத்துவிட முடியாது அவர்கள் எமது உயிர்களை நசுக்கி விடலாம் -ஆனால் எமது உணர்வுகளை நொருக்கிவிட முடியாது கிழக்கில் உதிக்கும் சூரியன் போல் எமக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது எமது குழந்தைகளின் சிரிப்பு எமது எதிரியை பழிவாங்கும்! காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. நாம் மட்டும் வீழ்ந்தே கிடந்து விடுவோமா? மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்! குறிப்பு - மீண்டும் எழுவதற்காய் மாண்டவர்களை நினைவு கூர்வோம். Image may contain: 1 person

•விமர்சனம் செய்து கொள்வது எப்படி?

•விமர்சனம் செய்து கொள்வது எப்படி? இது ஒரு மீள்பதிவு. (இன்றைய முகநூல் விவாதங்களையும் விமர்சனங்களையும் பார்க்கும்போது இப் பதிவை மீண்டும் பகிரும் அவசியம் இருப்பதாக உணர்கிறேன்) இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே. சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர். எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர். சரி அப்படியென்றால் முகநூலில் எப்படி விமர்சனம் செய்வது? அல்லது ஆக்கபூர்வமான உரையாடலை எப்படி செய்வது? இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார். 'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார். ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது. நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.. எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும். குறிப்பு - எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே எமது ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே எமது விமர்சனம். No photo description available.

2009 இனப்படுகொலையை

2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா? தமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா? 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன. “வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார். 50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது. சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என நல்லாட்சி அரசு நினைத்தது. ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எமது அடுத்த சந்ததியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருந்துவிட மாட்டார்கள். ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு. ஆனால் அடக்குமுறை இருந்தால் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும் அல்லவா. ஆம், இலங்கையில் அடக்கலாம். இங்கிலாந்தில் அடக்க முடியுமா? இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒற்றுமையாக அனைவரும் ஒருமித்து செயற்பட்டால் “தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்” என்ற செய்தி உலகிற்கு தெரியப்படுத்தப்படும்.. Image may contain: one or more people and text

அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர்

•அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்? Image may contain: 2 people, people standing and outdoor Image may contain: 1 person, close-up and indoor

இதுதான் அந்த இடம்

இதுதான் அந்த இடம் எம் லட்சம் மக்களை கொன்ற இடம் எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம். எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம் கலந்த காற்று வீசும் இடம் இது. இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில் எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம் முன்னர் முள்ளிவாய்க்காலை கடக்கையில் அத் தண்ணி எடுத்து வற்றாபளை அம்மனுக்கு விளக்கு எரிப்பது நினைவுக்கு வரும் இனி முள்ளிவாய்க்காலை கடக்கையில் எம் ஆயிரம் விளக்குகள் அணைக்கப்பட்டது நினைவில் வந்து தொலைக்குமே! விஷவாயுவால் உருக்குலைந்தவர் எத்தனை? ஷெல் குண்டுகளால் கொல்லப்பட்டவர் எத்தனை? அரை குறை உயிருடன் புதைக்கப்பட்டவர் எத்தனை? பால் அருந்திய நிலையிலேயே குழந்தையும் தாயும் ஒன்றாக புதைக்கப்பட்டது எத்தனை? அத்தனையும் நினைக்கையில் இன்றும்கூட எம் கண்ணில் நீர் முட்டித் தெறிப்பதை யார் அறிவார்? ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடக்கையில் எம் ஆவி துடிப்பதை அவர்கள் அறிவார்களா? சொந்தம் சொல்லி அழுவதற்குகூட எமக்கு அனுமதி தர மறுக்கிறார்களே அவர்கள். போர்த்துக்கேயர் வந்தபோது வீழ்ந்தோம் ஒல்லாந்தர் வந்தபோதும் வீழ்ந்தோம் ஆங்கிலேயர் வந்தபோதும் வீழ்ந்தோம் ஆம். வரலாற்றில் பல தடவை வீழ்ந்தோம் ஆனால் அத்தனை தடவையும் மீண்டும் எழுந்தோம் முன்னர் வீழ்ந்த போதெல்லாம் மீண்டும் எழுந்து நின்ற எம் இனம் முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தபோது மட்டும் எழுந்துவிடாமல் கிடந்து விடுமா என்ன? மண்ணுக்கு அடியில் இருக்கும் அருகம்புல் வேர்கூட ஒரு துளி நீர் பட்டவுடன் பொட்டென்று முளைக்கிறது. முள்ளிவாய்க்காலில் புதையுண்டவர்களை எருவாக்கி புதுயுகம் ஒன்றை உருவாக்க எம்மால் முடியாதா? குறிப்பு - எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம். Image may contain: sky, cloud and outdoor

இவர்கள் இருவரும் இலங்கையர்கள்.

இவர்கள் இருவரும் இலங்கையர்கள். ஆனால் ஒருவர் தமிழர். இன்னொருவர் சிங்களவர். ஒருவர் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இன்னொருவர் ஜே.வி.பி இயக்க தலைவர் ரோகன விஜயவீரா வின் மகன் உபுன்டு. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் 2009ல் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு சிறுவனை அதுவும் சரணடைந்த அச் சிறுவனை எதற்காக சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு, பிரபாகரன் பயங்கரவாதி . எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி என்று பதில் அளித்தார்கள். அப்படியென்றால் ஜேவிபி தலைவர் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது அவர் மகன் உபுன்டுவை ஏன் கொல்லவில்லை? உபுன்டு மட்டுமல்ல ரோகன விஜேயவீராவின் ஆறு குழந்தைகளில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையே. மாறாக, ரோகன விஜேயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் பாதுகாத்து அவர்களுக்கு இலங்கை அரசு உதவி அளித்துள்ளது. உபுன்டு பட்டப்படிப்பு பெற்றதுடன் தற்போது அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளார். ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது. அதுமட்டுமல்ல, ரோகன விஜேயவீராவுக்கு நினைவு சின்னம் அமைக்கவும் அவருக்கு நினைவு தினம் கொண்டாடவும்கூட இலங்கை அரசு அனுமதிக்கிறது. ஆனால் பிரபாகரன் படத்தை பேஸ்புக்கில் லைக் போட்டாலே தமிழர்களை இலங்கை அரசு கைது செய்கிறது. ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம். பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? இதற்கு என்ன காரணம்? விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்? இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? Image may contain: 1 person Image may contain: 1 person, hat and close-up

அவர்கள் முதலில் “புலிகள் எல்லாம் தமிழர். எனவே தமிழர் எல்லாம் புலிகள்” என்றார்கள்.

அவர்கள் முதலில் “புலிகள் எல்லாம் தமிழர். எனவே தமிழர் எல்லாம் புலிகள்” என்றார்கள். அவர்கள் பின்னர் “புலிகள் பயங்கரவாதிகள். எனவே தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள்” என்றார்கள். அவர்கள் இறுதியாக இரண்டு நாளில் நாற்பதாயிரம் தமிழர்களை பயங்கரவாத ஒழிப்பு என்றுகூறி கொன்று புதைத்தனர். மக்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர். தேசங்கள் விடுதலையை விரும்புகின்றன என்றார் தோழர் மாவோ சேதுங் நாங்களும் சுதந்திரத்தைத்தானே விரும்பினோம். எம் தமிழ் தேசமும் விடுதலையைத்தானே விரும்பியது. அப்புறம் அவர்கள் ஏன் எம்மை அழிக்க விரும்புகிறார்கள்? ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்தியா எம்மை அழித்தது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர், இல்லை இல்லை பயங்கரவாதிகள் என்பதால்தான் எம்மை அழித்தார்கள் என்கிறார்கள். தீர்வு திட்டம் ரெடி. ஆனால் புலிகள் ஏற்காமல் பிடிவாதம் பிடிப்பதால் புலிகளை அழிக்க வேண்டியதாகிவிட்டது என்று வேறு சிலர் கூறினார்கள். இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடமாகிவிட்டது. அந்த ரெடியாக இருந்த தீர்வு திட்டம் எங்கே? இதுவரை தீர்வு தரப்படவில்லை. ஆனால் தமிழர் நிலமும் வளங்களும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இவர்கள் எல்லோரும் ஒரு உண்மையை கூறாமல் மறைக்கிறார்கள், அது புலிகள் இருக்கும்வரை தமிழர் இயற்கை வளத்தை இவர்களால் சுரண்ட முடியவில்லை என்பது. நடந்தது போர் என்கிறார்கள். ஆனால் போர் விதிகளுக்கு மாறாக சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்பு ஆயிரக் கணக்கான மக்களை போர் விதிகளுக்கு மாறாக கொன்றுள்ளார்கள். சரணடைந்த பல பெண்களை போர் விதிகளுக்கு மாறாக பாலியல் வல்லுறவு செய்து கொன்றுள்ளார்கள். உலகில் தன் சொந்த மக்களை இவ்வாறு ஒரு அரசு அழிப்பதை போர் என்று கூறும் ஒரே அதிசய அரசு இலங்கைஅரசு மட்டுமே. புலிகளிடம் விமானம் இருந்தது. இலங்கையில் எந்தப் பகுதியிலும் குண்டு வீசும் வல்லமையும் இருந்தது. அவர்கள் விரும்பியிருந்தால் லக்சபானா நீர் மின்திட்டத்தின் மீது குண்டு வீசியிருக்க முடியும். இதன்மூலம் பல்லாயிரம் சிங்கள மக்களை சாகடித்திருக்கவும் முடியும். ஆனால் அவர்கள் தாங்கள் அழியும் இறுதி நேரத்தில்கூட அப்பாவி சிங்கள மக்களை கொல்ல முயலவில்லை. இப்போது கூறுங்கள் யார் பயங்கரவாதி? Image may contain: one or more people, shorts, outdoor and nature

நாம் சாகடிக்கப்படலாம்

நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது. எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அல்ல ஏனெனில் போராட்டத்திற்கு ஒருபோதும் தோல்வி இல்லை. எனவேதான் எம்மை தோற்கடிக்கப்பட முடியாது என்கிறோம். நாம், உரிமையை இழந்தோம் உடமையை இழந்தோம் உயிர்களை இழந்தோம்- ஆனால் உணர்வை இழக்கவில்லை. காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது தமிழன் மட்டும் அடிமையாக கிடந்திட முடியுமா? என்ன காரணத்திற்காக போராடினோமோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை. எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது. குனிந்து வா என்றால் தவழ்ந்து செல்லும் விசுவாசிகளாக எம் தலைவர்கள் இருக்கலாம். எதிரி வீசும் இறைச்சித்துண்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளாகவும் அவர்கள் இருக்கலாம். ஆனால் தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டத்தை அடக்கிவிடலாம் என எதிரி நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது. எனவேதான் உரத்து சொல்கிறோம் இறுதி வெற்றி உறுதி தமிழ் மக்களுக்கு. ஒன்றாய் கூடுவோம் ஒருமித்து குரல் எழுப்புவோம் எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம். வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து போவதற்காக அல்ல மாறாக மீண்டும் நாம் எழுவதற்காக! ஒரு சந்ததி வெற்றி பெறுகிறது எனில் அதன் பின்னால் பல சந்ததிகளின் முயற்சி இருந்திருக்கும். எமது அடுத்த சந்ததியின் வெற்றிக்கு தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம் பல்லாயிரம் பேரை ஓரேயடியாக கொன்றால் போராட்டத்தை அடக்கிவிட முடியுமா என எம்மில் சோதித்தார்கள். நாம் பரிசோதனை எலிகள் இல்லை என்பதையும் நாம் பெருமை மிக்க வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிரியின் முகத்தில் காறி உமிழ்ந்து காட்ட வேண்டிய தருணம் இது. Image may contain: 1 person

•பாட்டியுடன் ஒரு உரையாடல் !

•பாட்டியுடன் ஒரு உரையாடல் ! கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே? பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்பறம் என்னிடம் வா. கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்? பாட்டி- கிழவி என்றும் பாராமல் கற்பழிக்கிறான். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறான். விமானத்தில் வந்து குண்டு போடுகிறான். நான் என்ன செய்ய சொல்லுறாய்? கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா? பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க? கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது? பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே? கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா? பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும். கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா? பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் கற்றபழிக்க வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார் . கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் அய்யாவும் கூறுகிறார். பாட்டி- அவர் மகள் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும். கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா? பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை. கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா? பாட்டி- தம்பி- நான் எந்த இயக்கத்தையும் நம்பவில்லை. தலைவர்களையும்கூட நம்பவில்லை. நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும். கேள்வி- எப்படி ? புரியவில்லையே! பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும். குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன ( மீள் பதிவு) Image may contain: one or more people and outdoor

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது

•“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? ஆரம்பத்தில் மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவந்தார்கள். ஆனால் இப்போது வைகோ அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதில்லை. நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார். பிரபாகரன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நெடுமாறன் ஒருமுறை கூறியிருந்தார். அதுமட்டுமன்றி தன்னை சந்தித்த ஒரு ஈழத் தமிழரிடம் பிரபாகரனின் நீரிழிவு நோய்கூட தற்போது குணமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வருடம் தனது பிறந்தநாளின் போது நெடுமாறன் அவர்கள் தனக்கு பிரபாகரன் வாழ்த்து கூறினாரா என்பது பற்றி எதுவும் கூறவில்லை. அவரிடம் இது பற்றி யாரும் கேட்கவில்லையா அல்லது அவராகவே இவ்வாறு கூறுவதை விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. பிரபாகரன் இருக்கிறார் என்று தொடர்ந்து கூறிவரும் இத் தலைவர்கள் அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? என்பன குறித்து எதுவும் கூறுவதில்லை. இதனால் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதால் யாருக்கு நன்மையளிக்கிறது என்று கேட்க வேண்டியுள்ளது. இப்பதிவு கடந்த 2.4.2014 செய்த பதிவாகும். காலத்தின் தேவைகருதி மீள் பதிவு செய்கிறோம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது, (1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது. (2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது. (3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது. (4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது. (5) மகிந்த ராஜபக்சவும் கோத்தபாயாவும் இதனைக் காட்டி தேர்தலில் வெல்ல வழி செய்கிறது. (6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்த இடம் அளிக்கிறது. (7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது. (8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது. (9) இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய உதவுகிறது. (10) தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமை தொடர்ந்து வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் உதவுகிறது. (11) தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கோபம் கொண்டுவிடாமல் தடுக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது. மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம். 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார். மக்களை நம்புவோம். மக்களுக்கு உண்மைகளை கூறுவோம். மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் . Image may contain: 3 people, people standing

புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள்

“புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மறுபுறம் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். புலிகளை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றால், புலிகள் யாவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றால் எதற்காக இல்லாத புலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்? பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட ஜே.வி.பி இயக்கத்தின் தடையை நீக்கியுள்ளீர்கள். பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீராவுக்கு நினைவு சின்னம் வைக்கவும் ஆண்டுதோறும் நினைவு தினம் கொண்டாடவும் அனுமதிக்கிறீர்கள். ஆனால் தமிழ் மக்கள் தமக்காக மாண்ட மாவீரர்களை நினைவு கூர்வதை தடை செய்வதோடு பேஸ்புக்கில் லைக் போட்டால்கூட கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள். புலிகள் எந்த தீர்வுக்கும் வராமல் பிடிவாதம் பிடித்ததால் வேறுவழியின்றி அவர்களை அழித்ததாக கூறுகிறீர்கள். சரி. அப்படியென்றால் புலிகள் இல்லாமல் பத்து வருடம் ஆகிவிட்டது. ஏன் எந்தவொரு தீர்வையும் உங்களால் தமிழ் மக்களுக்கு வழங்க முடியவில்லை? சம்பந்தர் ஜயா தமிழீழத்தை தாம் கோரவில்லை என்றார். சம்பந்தா ஜயா உங்கள் தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்தார் சம்பந்தர் ஜயா மகிந்த ராஜபக்சாதான் தேசிய தலைவர் என்றார். அவருக்கு நீங்கள் கொடுத்தது என்ன? இப்போது புரிகிறதா தமிழ் மக்கள் ஏன் போராளிகளை விரும்புகிறார்கள் என்று. சம்பந்தர் ஜயாவையும் சுமந்திரனையும் எம்.பி யாக தெரிவு செய்ததால் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை மூளையே இல்லாதவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு புரியும் விதத்தில் உங்கள் மொழியில் பதில் தரும் வல்லமை உள்ளவர்கள். Image may contain: 1 person, outdoor Image may contain: one or more people and people standing

•பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். எனது ஊரைச் சேர்ந்தவர். அவர் புலோலி வங்கியில் பணி புரிந்த காலத்தில் இருந்து நன்கு தெரியும். இன்று நான் உயிருடன் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி கேட்டதை உடனே சென்னையில் என்னை சந்தித்து கூறியவர். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். இராணுவத்தினரிடம் அவர் உயிருடன் இருந்தமைக்கான படம் கீழே உள்ளது. ஆனால் அவரும் அவருடைய மகனும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. பத்து வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை. இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலருக்கு அவரை நன்கு தெரியும். கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர்கள் இவர்கள். இன்று அவர் எங்கே என்பதை அறிவதில் ஏனோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்? சரணடைந்த பாலகுமாரையும் அவர் மகனையும் சர்வதேச விதிகளுக்கு முரணாக கொன்றவர்கள் மீது ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை? தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர். இன்று அவருக்காக குரல் எழுப்ப ஒரு தமிழர் பிரதிநிதிகூட இல்லையா? Image may contain: 2 people, people sitting, people standing, child and outdoor

கரடியே காரித் துப்பிடிச்சு !!

கரடியே காரித் துப்பிடிச்சு !! Image may contain: 1 person, glasses and text

•சுமந்திரன் வீசிய பந்து!

•சுமந்திரன் வீசிய பந்து! ஒருபுறம் கொரோனா . மறுபுறம் வலி சுமந்த மாதம். இந்த நேரத்தில் சுமந்திரன் ஏன் இத்தகைய ஒரு பந்தை வீசினார்? தான் கூறும் கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர முடியாத அளவிற்கு சுமந்திரன் ஒன்றும் முட்டாள் இல்லை. அவர் புலிகளை மட்டும் தவறு என்று கூறவில்லை. அவர் ஆயுதப் போராட்டமே தவறு என்கிறார். அதை அவர் கூறுவதற்கு ஆயுதப் போராட்டத்தால் பல்லாயிரம் பேர் மாண்ட மாதத்தை தெரிவு செய்துள்ளார். பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள் என்பதையோ அல்லது அவாகள்; ஏன் மாவீரர்கள் ஆனார்கள் என்பதையோ சுமந்திரனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழ்வதை தனது அதிர்ஷ்டமாக அவர் நினைக்கிறார். ஒருவேளை 1983 இனக் கலவரத்தில் அடிவாங்கி கட்டிய சாரத்துடன் கப்பலில் யாழ்ப்பாணம் வந்து இறங்கியிருந்தால் அவரும் ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்து ஆயுதத்தை தூக்கியிருப்பார். உண்மையில் அவர் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்தது அவர் அதிர்ஷ்டம் இல்லை. மாறாக அவர் சிங்கள இன வெறியர்களிடம் அடி வாங்காததே அவர் அதிர்ஷ்டம் ஆகும். கலவரத்தில் ஒரு தமிழ் ஜயர் சிங்கள காடையர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமே தான் ஆயுதம் தூக்க காரணம் என்று பிரபாகரன் கூறியுள்ளார். அதுபோல் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களும் தாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மன நேயாளிகள் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் சிங்கள ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கா “பிரபாகரன்கள் உருவாவதில்லை. கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளால் உருவாக்கப்படுகிறார்கள்” என்றார். சிங்கள ஜனாதிபதியான சந்திரிக்காவுக்கு தெரிந்த இந்த உண்மையக்கூட தமிழரான சுமந்திரனுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டலேவிடம் “ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிக்கை விடுங்கள் விடுதலை செய்கிறோம்” என ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இறுதியாக அவர் விடுதலையானபோது பல உலக நாட்டு தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பினார்கள். ஆனால் அவர் தான் சந்திக்க விரும்பிய ஒரு தலைவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார். நெல்சன் மண்டலேவுக்கு ஈழப் போராளிகளன் தியாகம் தெரிந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கிறது. ஆனால் சட்டம் படித்த ஈழத் தமிழரான சுமந்திரனுக்கு அதன் மகிமையை புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பு - நண்பர்களே! அந்த மானஸ்தர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? அல்லது தூக்கில் தொங்கிட்டாரா? Image may contain: 1 person, standing

1971ல் ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது.

1971ல் ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது. பின்னர் 1989ல் அதே ஜேவிபி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது. பயங்கரவாதி என்று கூறியே ஜே.விபி தலைவர் ரோகன விஜேயவீராவை இலங்கை அரசு சுட்டுக் கொன்றது. அவரை மட்டுமல்ல அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களையும் பயங்கரவாதிகள் என்று கூறியே அப்போது இலங்கை அரசு கொன்றது. பயங்கரவாத இயக்கம் என்று கூறியே ஜேவிபி அமைப்பை இலங்கை அரசு தடை செய்தது. இப்பவும்கூட ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவோ அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்றோ ஜேவிபி கூறவில்லை ஆனால் அந்த ஜேவிபி இயக்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டதை சுமந்திரன் பெருமையாக கூறுகிறார். தமிழ் இளைஞர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறும் சுமந்திரன், ஆயுதப் போராட்டம் நடத்திய ஜேவிபி யின் ஊர்வலத்தில் பங்கு பற்றியதை எப்படி பெருமையாக கூற முடிகிறது? இதற்கு சுமந்திரன் பதில் தர மாட்டார் என்று தெரியும். எனவே யாராவது சுமந்திரன் விசுவாசிகள் பதில் தாருங்கள். Image may contain: 9 people, people standing and outdoor

சுமந்திரன் இப்போது மட்டுமல்ல

குறிப்பு - சுமந்திரன் இப்போது மட்டுமல்ல அவர் எப்போதுமே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராகவே கருத்து கூறி வருகிறார். 08.11.2014 யன்று ஆயுதப் போராட்டம் பயனற்றது என்று சுமந்திரன் கூறியதற்கு எதிராக நான் எழுதிய பதிவு இது. இது இன்றும் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்கிறேன். • ஆயுதப் போராட்டம் பயனற்றதா? • அகிம்சை வழியில் தீர்வு பெற முடியுமா? ஆயுதப் போராட்டம் பயனற்றது என்றும் அகிம்சை வழியிலேயே தீர்வைப் பெறமுடியும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர் அல்லர் ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டவரும் அல்லர். அவர் அகிம்சைப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர். தமிழ் மக்களுக்காக எந்த தியாகத்தையும் புரியாதவர் சம்பந்தர் மூலம் பின் கதவால் பாராளமன்ற உறுப்பினர் ஆனவர். “ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று கூற இவருக்கு என்ன தகுதி இருக்கு? “துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார் தோழர் மாசேதுங். ஆனால் அகிம்சை வழியில் அரசியல் அதிகாரம் பெறமுடியும் என்று போதிக்கிறார் சுமந்திரன். நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்கிறார் தோழர் மாசேதுங். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன பிச்சை எடுக்க வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்கிறார் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்கிறார் தோழர் சண்முகதாசன். ஆனால் வன்முறை பயன் தராது. அகிம்சை வழி மூலமே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று சுமந்திரன் கூறுகிறார். அகிம்சை போராட்டம் நடத்திய தந்தை செல்வா அது தோல்வியுற்ற நிலையில் தமிழ் மக்களை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும் என்றார். ஆனால் பின் கதவால் பதவி பெற்ற சுமந்திரன் அகிம்சை வழியால் மகிந்தவிடம் தீர்வு பெற முடியும் என்கிறார். காரைநகரில் சிறுமியை கற்பழித்த கடற்படை வீரரை நீதிமன்றில் ஆஜர் செய்ய மகிந்த அரசு மறுக்கிறது. அதற்கே இந்த சட்ட வல்லுனரான சுமந்திரனால் எதுவும் செய்ய முடியவில.லை. ஆனால் 30 ஆயிரம் ராணுவம் சூழ்ந்து இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவாராம். Image may contain: 2 people, including Yoga Yogan, text

ஒருபுறம் சிறையில் உள்ளவர்களின்

ஒருபுறம் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை சுமந்திரன் பிரதமரிடம் கையளித்தார் என்று சுமந்திரன் விசுவாசிகள் படம் போடுகின்றனர். இன்னொருபுறம் அமைச்சர் டக்ளஸ் சிறையில் உள்ளவர்களின் விபரங்களை கையளித்தார் என்று ஈபிடிபியினர் படம் போடுகின்றனர். இங்கு ஆச்சரியம் என்னவெனில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சுமந்திரனின் நல்லாட்சி அரசுதானே இருந்தது. அப்போது ஏன் அவர் கொடுக்கவில்லை? இப்போதுகூட இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்தமைக்கு எதிராக வழக்கு போடப்போவதாக கூறினார். அப்புறம் பார்த்தால் இன்றுபோய் பிரதமரை சந்தித்து கைதிகள் விபரம் கையளித்து பேசியதாக கூறுகிறார். சரி. பரவாயில்லை. ஆனால் இன்னும் ஆச்சரியம் என்னவெனில் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் உண்மையில் பிரதமரிடம் இல்லையா? அவர்கள் இலங்கை அரசின் சிறையில்தானே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் பிரதமர் விரும்பினால் ஒரு போன்கோலில் சிறைத்துறை அமைச்சரிடம் விபரம் கேட்டுப் பெறலாம்தானே? இங்கு வேடிக்கை என்னவெனில் சிறையில் சிங்கள ராணுவ வீரர் இருப்பதை தெரிந்து விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் கைதிகள் இருப்பது தெரியவில்லையா? அல்லது, எந்தவொரு கட்சியிடமும் விபரம் கேட்டுப்பெறாமல் சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்த பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு மட்டும் யாராவது விபரம் கொடுக்க வேண்டுமா? சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல்தானா ஜனாதிபதி தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் அவர்களை விடுதலை செய்வேன் என மகிந்தா வாக்குறுதி அளித்திருந்தார்? என்னவோ போங்கடா, உங்களின் அரசியல் நாடகத்திற்கு அந்த அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள்தான் கிடைத்தார்களா? Image may contain: one or more people, people standing and indoor

ஊரும் நடந்தது உறவும் நடந்தது

ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல் பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப் போவது தெரியாமல் கூடி மகிழ்ந்திட்ட கோயில் கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன பாடி குதூகலித்த வீட்டு முற்றத்தில் பாவியாய் வந்;து புகுந்தது சிங்கள ராணுவம் “பாதுகாப்பு வலயம்”என்பதை நம்பி முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனரே ஆனால் அதுதான் தாம் புதைக்கப்படும் வலயம் என்பதை அறியாமலே நடந்தனரே வந்த பேய்கள் கொளுத்திய தீயில் வெந்து செத்தவர் எத்தனையோ? பாவம் பலியான இவர்கள் ! 5 வயதில் கொழும்பு சென்றிருந்தால் ஒருவேளை சிங்களவர்களுடன் வாழும் அதிர்ஷ்டம் இவர்களுக்கும் கிடைத்திருக்குமோ? Image may contain: one or more people, bicycle and outdoor

அவர் எதை பெற விரும்பினாரோ

அவர் எதை பெற விரும்பினாரோ அதை மக்கள் சரியாகவே வழங்கியுள்ளனர். அது சுமந்திரனா அல்லது ஜனாதிபதி ட்ரம்பா எவராக இருந்தாலும் வழங்குவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. ஏனெனில் மக்களே மகத்தான சக்தி. குறிப்பு - சுமந்திரனுக்கு செருப்பு காட்டுவதை அநாகரீகம் என்று எமக்கு வகுப்பு எடுப்பவர்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்புக்கு மக்கள் எப்படி மரியாதை செய்கின்றனர் என்பதை. Image may contain: 1 person, standing and outdoor Image may contain: 1 person, standing and outdoor

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள்

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள் வெறும் 35 வீதம் மட்டுமே. ஆனால் அங்கு அவர்கள் மற்ற சிறுபான்மை இனங்கள் மீது கலவரங்கள் நடத்துவதில்லை. இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்கள் 80 வீதம் ஆகும். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை இன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இது ஏனெனில் இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தங்களை பெரும்பான்மையினமாக உணர்கிறார்கள். ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் தங்களை பெரும்பான்மையினராக உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் இலங்கைக்கு அருகில் இந்தியாவில் ஏழரைக் கோடி தமிழர் இருப்பதும் வரலாற்றில் பல தடவைகள் அங்கிருந்து படை எடுப்புகள் நடந்ததுமே. சரி. அப்படியென்றால் கைக்கெட்டும் தூரத்தில் ஏழரைக் கோடி தமிழர் இருந்தும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் தைரியம் இலங்கை அரசுக்கு எப்படி வந்தது? அத்துடன், இலங்கையில் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை இலங்கை ராணுவம் கொன்றபோது அதை ஜ.நா மனிதவுரிமைக் கமிஷனுக்கு கொண்டு சென்று நீதி கோரியவர் மகிந்த ராஜபக்சா. எனவே ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்களை கொன்றால் அது ஜ.நா வில் பிரச்சனையாக கொண்டு வரப்படும் என்பது மகிந்த ராஜபக்சாவுக்கு நன்கு தெரியும். அப்படியிருந்தும் அதே மகிந்த ராஜபக்சாவால் எப்படி இவ்வளவு தைரியமாக தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொல்ல முடிந்தது? இந்த இடத்தில்தான் எமக்கு இந்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது சர்வ தேசத்தில் இருந்தோ எந்தப் பிரச்சனையும் வராது என்ற உறுதிமொழி இந்திய அரசால் மகிந்த ராஜபக்சாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மகிந்த ராஜபக்சா இனப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு பங்களிப்பு வழங்கியதோடு இன்றும் இலங்கை அரசை காப்பாற்றி உதவி வருகிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு இவ்வாறு தமிழ் மக்களை பழி வாங்குகிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. ராஜீவ் காந்தியைக் கொல்லாவிட்டாலும் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவியிருக்கப்போவதில்லை. அதுவே உண்மை. ஏனெனில் தமிழீழம் அமைவதை தான் விரும்பவில்லை என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் 1983 முதலே இந்திய அரசு தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவருகிறது. ஏனெனில், தமிழீழம் அமைந்தால் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு உந்து சக்தியாக அமைந்துவிடும். தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும் என இந்திய அரசு அச்சப்படுகிறது. அதைவிட முக்கியமான விடயம் புலிகள் இருக்கும்வரை இந்திய அரசால் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யவோ தமிழர்களின் வளங்களை சுரண்டவோ முடியவில்லை. 2009ல் புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழர் பகுதிகள் யாவும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. புலிகளை அழித்தாயிற்று. புலிகளின் பெயரால் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்களை அழித்தாயிற்று. தமிழர் வளங்களை ஆக்கிரமித்தாயிற்று. ஆனாலும் இந்தியா தன் நாச வேலைகளை நிறுத்தவில்லையே! மன்னாரில் 150 வருடத்திற்கு போதுமான எண்ணெய் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்வளத்தை யார் பெறுகிறார்களோ அவர்களே கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெறப் போகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் சம்பூரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் வேடுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியதுபோன்று மன்னாரிலும் மக்கள் ஒன்றுபட்டு தம்மை விரட்டிவிடுவார்களோ என்று இந்திய அரசு அஞ்சுகிறது. அதனால்தான் மன்னார் வாழ் மக்களிடையே பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குதற்காக ஒருபுறத்தில் சிவசேனை சசச்pதானந்தம் இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் மூலமும் இனவிரோத செயற்பாடுகளுக்கு இந்திய உளவுப்படை முயன்று வருகிறது. இங்கு வேதனை என்னவென்றால் இந்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் எம்மவர் சிலர் இந்திய அரசின் விசுவாசிகளாக செயற்படுகின்றனர். எந்த இந்திய அரசு இனப்படுகொலையின் பங்காளியாக இருக்கிறதோ அதே இந்திய அரசு இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். எந்த இந்திய அரசு தமிழ் மக்களை நசுக்கிறதோ அதே இந்திய அரசு தமிழ் மக்களுக்க தீர்வு பெற்று தரும் என நம்புகின்றனர். Image may contain: 3 people, text that says ""கருணாநிதியின் உண்ணாவிரத நாட டகத்தின் மூலம் எங்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டோம்! இது எங்களின் மிகச்சிறந்த ராஜ தந்திரம்!" கோத்தபய ராஜபக்சே"

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்!

•நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! “எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம். அதன் மூலம் மீண்டும் எழுவோம்” என்று நாம் கூறினால் எதிரிகளான இலங்கை இந்திய அரசுகள்தானே எரிச்சல் அடைய வேண்டும். ஆனால் எம்மவர்கள் சிலர் ஏன் பதட்டமடைகிறார்கள் என்று புரியவில்லை. உடனே ஓடிவந்து “போராடியவர்கள் பலர் சாப்பிட வழியின்றி தாயகத்தில் இருக்கிறார்கள் நீங்கள் எதற்கு பெரும் செலவில் புலத்தில் மாவீரர்களை நினைவு கூறுகிறீர்கள்?” என்று கேட்கின்றனர். அல்லது, “லண்டனில் சொகுசாக இருந்துகொண்டு உசுப்பேத்த வேண்டாம். நாட்டில் வந்து போராட்டம் நடத்துங்கோ” என்று கிண்டலாக எழுதுகின்றனர். இவ்வாறு எழுதுபவர்கள் யார் என்பதையோ அல்லது இவர்கள் ஏன் இவ்வாறு எழுதுகின்றார்கள் என்பதையோ உணர முடியாத அளவிற்கு நாம் முட்டாள்கள் இல்லை. ஆனாலும் இவர்கள் யாராக இருந்தாலும் இவர்களின் இக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது எமது கடமை என்பதால் இப் பதிவை எழுதுகின்றேன். கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா? பதில்- நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால், இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸட்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்? இதே லண்டனில் O2அரினா மண்டபத்தில் ARரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்? வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்? ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்? நாய்க்கு ஜயர் பிடித்து செத்த வீடு நடத்தும்போதும் கெலிகப்டர் பிடித்து சாமத்திய சடங்கு நடத்தும்போதும் கேள்வி எழுப்பாமல் மௌனமாக இருந்தவர்கள் எமக்காக மாண்டவர்களை நினைவு கூரும்போது மட்டும் ஏன் கேள்வி கேட்கின்றனர்? கேள்வி- இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியுமா? பதில்- இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள். இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர். "ஓட முடியவில்லை என்றால் நடந்து செல் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்து செல். ஆனால் ஒருபோதும் உன் இயக்கத்தை நிறுத்திவிடாதே!" இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் கோஷம்! ஏனெனில் நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். Image may contain: 1 person, text

கடந்த வருடம் இதே நாளில்

கடந்த வருடம் இதே நாளில் “முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்று சுமந்திரன் கூறினார். இந்த வருடம் புலிகள் பற்றிய கேள்வி கேட்கப்படும்போது “தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால் அவர்கள் தங்களைத்தானே தற்காத்தக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றுதானே அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறாமல் “நான் அகிம்சைவாதி ஆட்டுக்குட்டி வாதி ------ என்று கூறினால் என்ன அர்த்தம்? 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழ்ந்தது நான் செய்த பாக்கியம் என்று ஒரு முஸ்லிம் தலைவர் யாராவது அழுத்கமவில் வீடு எரிந்த முஸ்லிமிடம் போய் கூற முடியுமா? கூறியிருந்தால் காறித் துப்பியிருப்பான். அல்லது உதைத்து விரட்டியிருப்பான். ஆனால் தமிழனிடம்தான் இப்படி தமிழ் தலைவர் சுமந்திரன் கூற முடிகிறது. கூறிவிட்டு தைரியமாக அதை தொடர்ந்து நியாயப்படுத்த முடிகிறது. எல்லாம் தமிழன் தலைவிதி. Image may contain: 1 person, text that says "லங்காமுரசு மொஹமட் சுன்னத் திஹ்ரான்"

புலவரை நினைவில் கொள்வோம்!

புலவரை நினைவில் கொள்வோம்! தோழர் புலவர் கலியபெருமாள் அவர்களின் 13 வது நினைவு தினம் 16.05.2020 ஆகும். புலவர் கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதனால் அவரை மட்டுமன்றி அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே. அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில் பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே. தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம். முதல் முறையாக எனது தோழர்களை அழைத்துக்கொண்டு புலவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எமது தோழர்கள் மார்க்சிச அரசியல் வகுப்புகள் எடுப்பதற்குரிய ஏற்பாட்டின்படி அவர்களை அழைத்துச் சென்றேன். புலவர் வீட்டிலேயே அனைவரும் தங்கினோம். எமக்கு மூன்று வேளைகளும் உணவு தயாரித்து தந்துகொண்டிருந்தனர் புலவரின் மனைவியும் மகள் மற்றும் மருமகள்மார். எங்கள் தோழர்களுக்கு பிடிக்கும் என்று புட்டு , இடியப்பம் செய்து தந்தது மட்டுமன்றி அவற்றுக்கு சம்பல், சொதி என்பனகூட எமது தோழர்களிடமே கேட்டு கேட்டு சமைத்து தந்ததை மறக்க முடியாது. அதுவும் புலவரின் மகள் கண்ணகி திருமணத்திற்கு முதல்நாள்கூட எமக்கு அக்கறையாக சாப்பாடு செய்து தந்ததையோ அல்லது திருமணத்திற்காக சென்னை செல்வதற்காக ரயில்நியைத்தில் அவர் நின்றபொழுதிலும் தன் தாயாரிடம் “சிரமம் பாராமல் தோழர்களுக்கு புட்டு செய்து கொடுங்க அம்மா” என்று கூறியதையோ எப்படி எம்மால் மறந்துவிட முடியும்? இறுதிவரை ஈழத் தமிழரை உறுதியாக ஆதரித்த ஒரு தோழர். அவரை ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள். புலவர் குறித்து நான் எழுதிய கட்டுரையை; கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம். https://tholarbalan.blogspot.com/2018/05/blog-post_40.html… Image may contain: 1 person, text

•ஜெர்மனியில் இந்திய உளவுப்படைக்காக

•ஜெர்மனியில் இந்திய உளவுப்படைக்காக உளவு பார்த்த இந்தியர் மீது வழக்கு தாக்கல்! ஜெர்மனியில் இந்திய உளவு நிறுவனமான றோ (RAW ) வுக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வாழும் சீக்கிய மற்றும் காஸ்மீர் மக்களை உளவு பார்த்ததாக இந்த இந்தியர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இந்தியர் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள ஒரு றோ அதிகாரியுடன் தொடர்பு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த வருடமும் ஒரு இந்திய தம்பதியினர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இன்று உலகில் இஸ்ரவேலின் உளவு நிறுவனமான மொசாட்டுக்கு இணையாக அதிகளவு பணம் இந்திய உளவு நிறுவனமான றோவுக்கு ஒதுக்கப்படுகிறது. இதன் டில்லியில் இருக்கும் பிராஞ்சைவிட பெரிய பிராஞ்சாக பெங்களுர் பிராஞ் இருக்கிறது. இந்த பெங்களுர் பிராஞ் 2002ல் அதிகளவு தமிழர்களை உள்வாங்கி வெளிநாடுகளுக்கு உளவு பார்க்க அனுப்பியுள்ளது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் இவ் றோ உளவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் ஜரோப்பியநாடுகளே திணறும்போது புலிகளின் பொட்டு அம்மான் எப்படி கண்டு பிடித்தார் என்பதே? மிகவும் எச்சரிகையாக இருந்த பின்லேடனைக்கூட ரெலிபோனை வைத்து கண்டு பிடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இறுதிக் கணம்வரை எதை வைத்தும் இந்திய உளவு நிறுவனத்தால் கண்டு பிடிக்க முடியவில்லையே? உண்மையில் பொட்டு அம்மானின் திறமை ஆச்சரியம் தருகிறது. Image may contain: 1 person, indoor

உலகில் ஈழத் தமிழினம் தவிர வேறு ஏதாவது ஒரு இனம்

உலகில் ஈழத் தமிழினம் தவிர வேறு ஏதாவது ஒரு இனம் தன் சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்டதை அறிந்திருக்கிறீர்களா? உலகில் இலங்கை அரசைத் தவிர வேறு ஏதாவது ஒரு அரசு தன் சொந்த மக்களை கொன்றதை போர் என்று அறிவித்திருக்கிறதா? உலகில் இலங்கை அரசைத் தவிர வேறு ஏதாவது அரசு தன் சொந்த மக்களைக் கொன்றதை போர் வெற்றி என்று வருடந்தோறும் வெற்றிவிழா கொண்டாடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகில் இலங்கை அரசை தவிர வேறு எந்த அரசாவது தன் சொந்த மக்களை முள்வேலிக்குள் அடைத்துவிட்டு புனர்வாழ்வு அளிப்பதாக கூறியதையாவது அறிந்திருக்கிறீர்களா? உலகில் “பயங்கரவாத ஒழிப்பு” என்றுகூறி இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்கள் பயங்கரமாக கொன்று புதைக்கப்பட்டது வேறு ஏதாவது இனத்திற்கு நடந்திருக்கிறதா? இத்தனை நாசமும் செய்துவிட்டு கார்ப்பெட் றோட் போட்டு தாரம், 50 ஆயிரம் வீடு கட்டி தாரோம் நடந்ததை மறந்து விடுங்கள் என்று இலங்கை இந்திய அரசை தவிர வேறு ஏதாவது அரசு கூறக் கேட்டிருக்கிறீர்களா? இத்தனைக்கு பிறகும் இத்தனை நாசம் செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக்கிடைத்தது தனது பாக்கியம் என்று கூறும் தலைவர் ஈழத் தமிழினம் தவிர வேறு ஏதாவது இனத்தில் இருப்பதை அறிந்திருக்கிறீர்களா? Image may contain: one or more people, people standing and outdoor

தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை எரிப்பு

தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை எரிப்பு இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஏன்ன? யாரோ நாலுபேர் ஏதோவொரு வெட்டவெளியில் சுமந்திரன் பொம்மையை எரித்துள்ளார்கள் என்று சாதாரணமாக கடந்துவிட முடியாத சம்பவம் இது. இயக்குனர் களஞ்சியம் ஈழத் தமிழர் மீதும் புலிகள் இயக்கம் மீதும் அளவில்லா பற்று கொண்டவர். அதனால் கோபத்தில் சுமந்திரன் பொம்மையை எரித்துவிட்டார் என்றும் சாதாரணமாக கூறிவிட முடியாது. இதுவரை எந்தவொரு ஈழத் தமிழ் தலைவர் மீதும் கருத்து வேறுபாடோ அல்லது ஆத்திரமோ இருந்தாலும் அதை வெளிக்காட்டி போராட்டம் எதையும் ஈழ ஆதரவுத் தமிழக தலைவர்களோ அமைப்புகளோ செய்தது இல்லை. நான் அறிந்தவரையில் இதுதான் முதன் முதலாக ஒரு ஈழத் தமிழ் தலைவரான சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை காட்டி அவரின் உருவப் பொம்மையையும் செருப்படி வழங்கி எரித்துள்ளனர். இதுவரை வெறும் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற அடுத்த கட்டநிலைக்கு தமிழக ஆதரவு சக்திகள் வந்துவிட்டன என்பதையே இச் சம்பவம் காட்டுகிறது. இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்கே 2009ல் இருந்து இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் பெரும் பிரயத்தனம் செய்து வந்தன. ஆனாலும் காலம் சுமந்திரனின் வாயால் அதை ஆரம்பித்து வைத்துவிட்டது. சுமந்திரன் தன்னையும் அறியாமல் தமிழினத்திற்கு செய்த உதவி இது. Image may contain: 1 person, standing

மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு!

மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு! ஆனால் இந்த முறை அது மல்லாந்து படுத்துக்கொண்டு தனக்குத்தானே காரித் துப்பிடிச்சு முதலில், சுமந்திரன் கூற்று அவரது தனிப்பட்ட கூற்று. கட்சியின் கூற்று இல்லை என்று அறிக்கை அடுத்து, சுமந்திரன் நேர்மையாக பதில் அளித்துள்ளார் என்று பாராட்டு அறிக்கை. வயதான காலத்தில் ஒரு சொகுசு பங்களாவை தக்க வைப்பதற்காக எப்படியெல்லாம் பல்டி அடிக்க வேண்டியிருக்கு இந்த வயதான மனிதருக்கு. பாவம் இந்த மனிதர். இந்த வயதான காலத்தில் தானே அழைத்து வந்த சுமந்திரனுக்குகூட அஞ்சவேண்டியிருக்கு. Image may contain: 1 person, text

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை எமக்கென்னவென்று கடந்து போகவும் முடியவில்லை இறுதி மூச்சு உள்ளவரை இவர்களுக்குரிய நீதியை பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை. ஈழத்தமிழர், தமிழக தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம் ஒருமித்துக் குரல் கொடு:ப்போம். இதுவே நாம் எதிரிக்கு இன்று கொடுக்கப்போகும் செய்தி ஆம். எங்கள் பகைவர் எங்கோ மறைவார் நாம் அனைவரும் ஒன்றாதல் கண்டால்! Image may contain: 4 people, shorts, outdoor and nature

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர். எம்மை எறும்புகள் போல் நசுக்கிவிட்டதாக கூறி போர் வெற்றிவிழா கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை எத்தனை எறும்புகளை நசுக்கி போட்டாலும் எறும்புகள் வரிசையாக முன்னோக்கி வருமேயொழிய ஒரு எறும்புகூட திரும்பி ஓடுவதில்லை ஆனால் நாலு எருமை ஒன்றாக சேர்ந்தாலே சிஙகம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும். அதுமட்டுமல்ல சிங்கங்களைவிட எண்ணிக்கையில் எறும்புகள் அதிகம். அதில் ஒரு எறும்பு சிங்கத்தின் மூக்கினுள்ளேயோ அல்லது காதின் உள்ளோயோ நுழைந்துவிட்டால் அப்புறம் சிங்கம் செத்து தொலைவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாம் எறும்புகளாகவே இருந்து கொள்கிறோம். நீங்கள் சிங்கங்களாகவே இருந்து கொள்ளுங்கள். எறும்புகள் ஒன்று திரள்கின்றன ஒன்று சேர்ந்து ஒருமித்து வருகின்றன இதுவே இன்றைய நாளில் சிங்கங்களுக்கு எறும்புகள் சொல்லும் செய்தி! Image may contain: 1 person, outdoor

முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வன்முறையை பாவித்து முட்டைக்கோதை உடைத்தே வெளிவருகிறது.

முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வன்முறையை பாவித்து முட்டைக்கோதை உடைத்தே வெளிவருகிறது. கோழிக்குஞ்சிடம் சென்று யாரும் வன்முறையை பாவிப்பது தவறு. நீ அகிம்சைவாதியாக இரு என்று போதிப்பதில்லை அதுபோல் தாயின் கருப்பைக்குள் இருக்கும் குழந்தைகூட பிறக்கும்போது வன்முறையை பாவித்து வெளிவருகிறது. அதுமட்டுமல்ல அந்த குழந்தை பிறந்தவுடன் வீறிட்டு அழுவதே இந்த உலகில் அது செய்யும் முதல் போராட்டம். அழுத பிள்ளையே பால் குடிக்கும். அதுபோல் போராடிய இனமே விடுதலை பெறும். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. உலகில் நிகழ்ந்த அனைத்து விடுதலையும் வன்முறையிலேதான் நடந்துள்ளது. அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அகிம்சை வழியில் விடுதலை பெற வேண்டும் என்று கூறுவது ஒன்றில் முட்டாள் தனமாக இருக்க வேண்டும். அல்லது அற்ப சலுகைகளுக்காக அடிமைத்தனத்தில் சுகம் காணும் பேர்வழகளின் உளறலாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கும் எந்தவொரு தேசிய இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. ஆனால், தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்துடன் 5 வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுவது அபத்தம். அதைவிட படு அபத்தமானது அவர் கூறியது சரி என்று நாலு பேர் நியாயப்படுத்த முயல்வது. இது ஒன்றும் வியப்பு இல்லை. ஏனெனில் காலம் பூராவும் இப்படி கருங்காலிகளும் அதை நியாயப்படுத்தும் நாலு வெங்காயங்களும் இருக்கவே செய்கிறார்கள். Image may contain: one or more people and text

•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும்

•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது அண்மையில் 3 தேவாலயத்தில் குண்டு வெடித்து பலர் இறந்தார்களே. அப்பவாவது அவர் வந்தாரா? பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான். அப்ப அல்லா விடம் கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- தன் பள்ளிவாசல்கள் எரிக்கப்படுவதையே அவரால் தடுக்க முடியவில்லை. அப்புறம் உங்களை எப்படி அவரால் காப்பாற்ற முடியும்? இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா? பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா? முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா? பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட்; ஆகி விட்டாயா? முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம். பக்தன்- ஆமாம் முருகா! எம் தமிழ்இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா. முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்? பக்தன்- எப்படி முருகா? முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள். பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 60 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா! முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை. பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே? முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன் பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா? முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும். பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா? முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது? பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது. முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள். Image may contain: 1 person, standing

•எத்தனை தடைகள் அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்!

•எத்தனை தடைகள் அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்! பொலிசார் தடை இராணுவம் தடை புலனாய்வு துறையினர் தடை நீதிமன்றம்கூட தடை மொத்த அரசும் தடையை மேற்கொண்டது அத்தனை தடைகளையும் தாண்டி தமக்காக மாண்டவர்களை மக்கள் நினைவு கூறிக் கொண்டிருக்கின்றனர். எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம் உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். முகநூலில் நினைவு அஞ்சலி இணைய தளங்களில் நினைவு அஞ்சலி பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் குறும் ஒலி ஒளி நாடாக்கள் என எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள் எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம் மட்டுமே என்றவர் இனப் படுகொலைக்கு நீதி பெறாமல் தமிழ் மக்கள் ஓய்ந்துவிடமாட்டார்கள் என்று இம்முறை அறிக்கை விட்டிருக்கிறார் பத்து வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம். Image may contain: one or more people Image may contain: fire and outdoor Image may contain: 1 person, fire and food Image may contain: one or more people, outdoor and nature

• ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?

• ஹோசிமினை எப்படி நினைவு கூருவது? இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 130 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890) 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். ஆனால் இன்று சில தமிழ் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும். இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும். வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது? நிச்சயமாக முடியும்! Image may contain: 1 person, sitting, table and outdoor

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா?

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி; பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை காலில்போட்டு மிதிக்க வேண்டும். Image may contain: 1 person, close-up

•தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் !

•தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் ! கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே? தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்? கேள்வி - குண்டு வெடிக்க வைத்தமையினால்? தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்;ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள். கேள்வி- அப்படியென்றால் ? தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள். கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா? தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன். கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது? தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட இதுவரை எமக்கு நியாயம் வழங்கப்படவில்லையே. கேள்வி- புரியவில்லை? தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை. கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்? தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்? கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா? தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள் ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை? கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா? தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே? கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே? தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா? தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன். கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம்கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது? தனு- இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது. கேள்வி- இதனால் சாதிப்பது என்ன? தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால் அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று வரலாறு இனி இயம்பும். குறிப்பு - இது ஒரு மீள்பதிவு Image may contain: 1 person

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா? 1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள். இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார். அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன். இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது. முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார். 1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது. என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன். இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும். ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண் தனு விற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும். வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார். ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்? தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்? ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்? அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும். ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தனு என்ற இளம் பெண் கொடுத்த தண்டனை இது என்று புரிந்திருக்கும். அதனால்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதி தோழர் லெனின் “தனுவிற்கு வீர வணக்கம்” செலுத்தவதாகவும் ராஜீவ் நினைவு மண்டபம் அகற்றப்பட்டு அங்கு தனுவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். Image may contain: 4 people, people standing

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும் !!

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும் !! இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்று கூறுபவர்கள், ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் RSS பார்ப்பணர்கள் என்று கூறுவதில்லை. மாறாக, காந்தியைக் கொன்றது கோட்சே என்றே கூறுகிறார்கள். சரி. காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது தானு என்றல்லவா கூற வேண்டும்? காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இந்திரா காந்தியைக் கொன்றது பியாந்த் சிங் என்றல்லவா கூற வேண்டும். ஏன் அவ்வாறு இவர்கள் கூறுவதில்லை? ஏனென்றால் “தமிழன் இளிச்சவாயன், என்ன சொன்னாலும் ஏத்துக்குவான்” என்று இவர்கள் திமிராக நினைக்கிறார்கள். அதனால்தான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி ஈழத் தமிழர்களிடம் இன்னும் மன்னிப்பு கோராமல் இருக்கிறார். அது மட்டுமல்ல சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்திய தாக்கியபோது அதனை சிங்களவர்கள் தாக்கியதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. மாறாக இந்த சிப்பாய்க்கு வெயிலில் நின்றதால் சிறிது மனக் குழப்பம் என்றார்கள். இந்த சிப்பாய் தண்டனை கூட அனுபவிக்காமல் இலங்கை அரசு விடுதலை செய்தபோதும் இந்திய அரசு அது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால் 7 தமிழர்களை 27 வருடம் கழிந்த பின்னரும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும்போதாதென்று 2009ல் இலங்கை அரசுடன் சேர்ந்து 40ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். குறிப்பு -"நம்மாளுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா வீட்ல இருக்கற பொருள வெளிய எடுத்து வீசுவான் , பார்ப்பானுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா வெளிய இருக்கற பொருள எடுத்து வீட்டுக்குள்ள வீசுவான்." பார்ப்பனர்கள் அவ்வளவு சூழ்ச்சிக்காரர்கள் - பெரியார் Image may contain: 1 person, close-up

•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை

•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை எமது ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை எமது ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த எமது ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் எமது ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் எமது ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ்க் அவசியம். ஆனால் தனக்கு மாஸ்க் அவசியம் இல்லை என்பதையும்கூட எமது ஜனாதிபதி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது கூறுங்கள். இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை வேறு எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா? சுமந்திரன் பாணியில் சொல்வதானால் இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா? குறிப்பு - மொழிபெயர்ப்பு செய்பவர்கள் “பாக்கியம்” என்பதை “அதிர்ஸ்டம்” என்று செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். Image may contain: 3 people, people standing

சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா?

•சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா? இந்த மக்கள் என்ன கேட்டார்கள்? தமக்கு சுவாசிக்க நல்ல காற்று வேண்டுமென்றுதானே கேட்டார்கள். அதையும் நீங்கள் சொல்லும் அகிம்சை வழியில்தானே கேட்டார்கள். அதற்காக கொஞ்சம்கூட இரக்கமின்றி சுட்டுக் கொல்ல வேண்டுமா? சுட்டுக்கொல்லப்பட்ட விபரத்தை டிவியில் பார்த்துதான் தனக்கு தெரியும் என்கிறார் முதலமைச்சர். அப்படியென்றால் பொலிசாருக்கு சுடுவதற்கான அனுமதியையோ அல்லது அதிகாரத்தையோ வழங்கியவர் யார்? ஏன் இன்னும் இந்த பலியான மக்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை? சுட்ட பொலிஸ் நாய் எப்படி சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறது? எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே விமர்சனம் என்றார் மாவோ சேதுங் ஆனால் தங்களை மாவோயிஸ்டுகள் என்று கூறிக்கொள்பவர்கள் எதிரிக்கு ஆயுதம் மூலம் பதில் அளிப்பதற்கு மாறாக அஞ்சலிப் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தமிழரசனோ அல்லது லெனினோ உயிரோடு இருந்திருந்தால் எதிரிகளின் மொழியில் தக்க பதிலை கொடுத்திருப்பார்கள். Image may contain: 12 people, including தோழர் வேடியப்பன், text

பாவம் இவர்கள்

பாவம் இவர்கள் இந்தியா விற்கப்பட்டுவிட்டது என்று தெரியாமல் தாம் இந்தியர் என்ற பெருமையுடன் நடக்கிறார்கள். இவர்கள் இந்தி மொழி பேசுபவர்கள் இவர்கள் இந்தி மொழி கற்றவர்கள். ஆனாலும் மாநிலம் மாநிலமாக பிழைப்பிற்காக நடந்து திரிகிறார்கள். தமிழர்கள் இந்தி மொழி கற்றால் நன்றாக வாழலாம் என்று கூறிய மாமா பயல் துக்ளக் குருமூர்த்தியும் எஸ்வி சேகரும் உயிரோடு இருக்கிறாங்களா அல்லது செத்திட்டாங்களா? Image may contain: one or more people, people standing, people walking and outdoor