Monday, May 25, 2020
அவர்கள் முதலில் “புலிகள் எல்லாம் தமிழர். எனவே தமிழர் எல்லாம் புலிகள்” என்றார்கள்.
அவர்கள் முதலில் “புலிகள் எல்லாம் தமிழர். எனவே தமிழர் எல்லாம் புலிகள்” என்றார்கள்.
அவர்கள் பின்னர் “புலிகள் பயங்கரவாதிகள். எனவே தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள்” என்றார்கள்.
அவர்கள் இறுதியாக இரண்டு நாளில் நாற்பதாயிரம் தமிழர்களை பயங்கரவாத ஒழிப்பு என்றுகூறி கொன்று புதைத்தனர்.
மக்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர். தேசங்கள் விடுதலையை விரும்புகின்றன என்றார் தோழர் மாவோ சேதுங்
நாங்களும் சுதந்திரத்தைத்தானே விரும்பினோம். எம் தமிழ் தேசமும் விடுதலையைத்தானே விரும்பியது.
அப்புறம் அவர்கள் ஏன் எம்மை அழிக்க விரும்புகிறார்கள்?
ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்தியா எம்மை அழித்தது என்கிறார்கள் சிலர்.
இன்னும் சிலர், இல்லை இல்லை பயங்கரவாதிகள் என்பதால்தான் எம்மை அழித்தார்கள் என்கிறார்கள்.
தீர்வு திட்டம் ரெடி. ஆனால் புலிகள் ஏற்காமல் பிடிவாதம் பிடிப்பதால் புலிகளை அழிக்க வேண்டியதாகிவிட்டது என்று வேறு சிலர் கூறினார்கள்.
இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 10 வருடமாகிவிட்டது. அந்த ரெடியாக இருந்த தீர்வு திட்டம் எங்கே?
இதுவரை தீர்வு தரப்படவில்லை. ஆனால் தமிழர் நிலமும் வளங்களும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது.
இவர்கள் எல்லோரும் ஒரு உண்மையை கூறாமல் மறைக்கிறார்கள், அது புலிகள் இருக்கும்வரை தமிழர் இயற்கை வளத்தை இவர்களால் சுரண்ட முடியவில்லை என்பது.
நடந்தது போர் என்கிறார்கள். ஆனால் போர் விதிகளுக்கு மாறாக சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்பு ஆயிரக் கணக்கான மக்களை போர் விதிகளுக்கு மாறாக கொன்றுள்ளார்கள்.
சரணடைந்த பல பெண்களை போர் விதிகளுக்கு மாறாக பாலியல் வல்லுறவு செய்து கொன்றுள்ளார்கள்.
உலகில் தன் சொந்த மக்களை இவ்வாறு ஒரு அரசு அழிப்பதை போர் என்று கூறும் ஒரே அதிசய அரசு இலங்கைஅரசு மட்டுமே.
புலிகளிடம் விமானம் இருந்தது. இலங்கையில் எந்தப் பகுதியிலும் குண்டு வீசும் வல்லமையும் இருந்தது.
அவர்கள் விரும்பியிருந்தால் லக்சபானா நீர் மின்திட்டத்தின் மீது குண்டு வீசியிருக்க முடியும். இதன்மூலம் பல்லாயிரம் சிங்கள மக்களை சாகடித்திருக்கவும் முடியும்.
ஆனால் அவர்கள் தாங்கள் அழியும் இறுதி நேரத்தில்கூட அப்பாவி சிங்கள மக்களை கொல்ல முயலவில்லை.
இப்போது கூறுங்கள் யார் பயங்கரவாதி?
Image may contain: one or more people, shorts, outdoor and nature
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment