Monday, May 25, 2020
இவர்கள் இருவரும் இலங்கையர்கள்.
இவர்கள் இருவரும் இலங்கையர்கள்.
ஆனால் ஒருவர் தமிழர். இன்னொருவர் சிங்களவர்.
ஒருவர் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன்.
இன்னொருவர் ஜே.வி.பி இயக்க தலைவர் ரோகன விஜயவீரா வின் மகன் உபுன்டு.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் 2009ல் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு சிறுவனை அதுவும் சரணடைந்த அச் சிறுவனை எதற்காக சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
பிரபாகரன் பயங்கரவாதி . எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி என்று பதில் அளித்தார்கள்.
அப்படியென்றால் ஜேவிபி தலைவர் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது அவர் மகன் உபுன்டுவை ஏன் கொல்லவில்லை?
உபுன்டு மட்டுமல்ல ரோகன விஜேயவீராவின் ஆறு குழந்தைகளில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையே.
மாறாக, ரோகன விஜேயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் பாதுகாத்து அவர்களுக்கு இலங்கை அரசு உதவி அளித்துள்ளது.
உபுன்டு பட்டப்படிப்பு பெற்றதுடன் தற்போது அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.
அதுமட்டுமல்ல, ரோகன விஜேயவீராவுக்கு நினைவு சின்னம் அமைக்கவும் அவருக்கு நினைவு தினம் கொண்டாடவும்கூட இலங்கை அரசு அனுமதிக்கிறது.
ஆனால் பிரபாகரன் படத்தை பேஸ்புக்கில் லைக் போட்டாலே தமிழர்களை இலங்கை அரசு கைது செய்கிறது.
ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம். பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்?
இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம்.
இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?
இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
Image may contain: 1 person
Image may contain: 1 person, hat and close-up
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment