Friday, May 29, 2020
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.
ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா
இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி
இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர்.
இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார்.
நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது
ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள்.
சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால்
அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள்.
மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை.
ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை.
இந்த உண்மையை ஏன் சுமந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை?
குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம்.
Image may contain: 2 people, close-up
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment