Friday, May 29, 2020
லண்டனில் இருக்கும் தமிழ் இளைஞர் ஒருவர்
லண்டனில் இருக்கும் தமிழ் இளைஞர் ஒருவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவுக்கு கடிதம் (லெட்டர்)அனுப்பியிருந்தார்.
அந்த லெட்டரில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ஜனாதிபதி கோத்தாவினால் படித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை.
அவர் அருகில் இருந்த அமைச்சர் விமல் வீரவம்சவிடம் காட்டி “ விமல்! இதில் என்ன எழதியிருக்கிறது?” என்று கேட்டார்.
அதனைப் படித்துப் பார்த்த விமல் வீரவம்சா “ மாத்தையா! இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று உங்களுக்கு தெரியும்தானே” என்று கூறினார்.
உடனே இருவரும் பக்கத்து றூமில் ரிவி பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சாவிடம் சென்று லெட்டரைக் காட்டி இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கேட்டனர்.
லெட்டரைப் படித்த மகிந்த ராஜபக்சா இது “கோட் வேர்ட்டில்” எழுதப்பட்டுள்ளது. புலிகளின் கோட்வேர்ட்டை நாங்கள் படிப்பது கஸ்டம். எதற்கும் எங்கள் குற்றப்புலனாய்வு அதிகாரியை அழைத்து கேட்டுப்பாருங்கள்” என்றார்.
மகிந்தா கூறியபடி குற்றப்புலனாய்வு அதிகாரியை அழைத்த கோத்தா லெட்டரை அவரிடம் கொடுத்து “இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கூறுங்கள்” என்றார்.
அவராலும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனைப் பார்த்த மகிந்த ராஜபக்சா “சுமந்திரனை அழைத்து கேளுங்கள்” என்றார்.
அதற்கு “ரணில் கேட்டால் சுமந்திரன் கூறுவார். நாங்கள் கேட்டால் கூறுவாரா?” என்று கோத்தா தயக்கத்துடன் கேட்டார்.
உடனே அருகில் இருந்த குற்றப்புலனாய்வு அதிகாரி “ கண்டிப்பாக கூறுவார். ஏனெனில் இந்த கடிதம் அனுப்பிய தமிழ் இளைஞன் பெயர் சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கில் நாம் தேடும் நபரின் பெயராக இருக்கிறது” என்றார்.
இறுதியாக மகிந்தவே சுமந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ மிஸ்டர் சுமந்திரன்! ஒரு சின்ன பிரச்சனை உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்றார்.
உடனே விரைந்து சென்ற சுமந்திரன் “ என்ன உதவி வேண்டும் சேர்? தயங்காமல் கேளுங்கள். நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார்.
கோத்தா தன் கையில் இருந்த லெட்டரைக் காட்டி “இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கூறமுடியுமா?” எனக் கேட்டார்.
லெட்டரைப் பார்த்த சுமந்திரன் “ சேர்! தலை கீழாக பிடித்து படித்திருக்கிறீர்கள். நிமிர்த்;திப் படியுங்கள் புரியும்” என்றார்.
கோத்தா நிமிர்த்திப் படித்ததும் தன்னை ஒருவன் இத்தனை கேவலமாக எழுதிவிட்டானே என்ற கோபம் ஏற்பட்டாலும் இதை சுமந்திரன் எப்படி உடனே கண்டு பிடித்தார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.
அதை அவர் சுமந்திரனிடமே “ எப்படி உடனே கண்டு பிடித்துவிட்டீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு சுமந்திரன் “ சேர் அந்தப் பையன் இதை எனக்கு தினமும் அனுப்பி டார்ச்சர் பண்ணுறான் என்னால நித்திரை கொள்ளவே முடியவில்லை. அவனைப் பிடிச்சு ஜெயிலில் போடுங்க சேர்” என்றார்.
குறிப்பு - ஒரு ஜனாதிபதியை வைத்து இப்படி நகைச்சுவையாக எழுதுவது அநாகரிகம் என்று யாரும் என்மீது கோபப்பட வேண்டாம். இந்த நகைச்சுவை ஒரு அமெரிக்கரால் அமெரிக்க ஜனாதிபதியை வைத்து எழுதி அமெரிக்க பத்திரிகையில் வந்துள்ளது. இதனை அநாகரிகம் என்று யாரும் அங்கு கண்டிக்கவில்லை. அதனை பின்னூட்டத்தில் தந்துள்ளேன். (கீழே உள்ள படம் - ஜனாதிபதி கோத்தா படித்த லெட்டர்)
No photo description available.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment