Monday, May 25, 2020
தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை எரிப்பு
தமிழ்நாட்டில் சுமந்திரன் உருவப் பொம்மை எரிப்பு
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஏன்ன?
யாரோ நாலுபேர் ஏதோவொரு வெட்டவெளியில் சுமந்திரன் பொம்மையை எரித்துள்ளார்கள் என்று சாதாரணமாக கடந்துவிட முடியாத சம்பவம் இது.
இயக்குனர் களஞ்சியம் ஈழத் தமிழர் மீதும் புலிகள் இயக்கம் மீதும் அளவில்லா பற்று கொண்டவர். அதனால் கோபத்தில் சுமந்திரன் பொம்மையை எரித்துவிட்டார் என்றும் சாதாரணமாக கூறிவிட முடியாது.
இதுவரை எந்தவொரு ஈழத் தமிழ் தலைவர் மீதும் கருத்து வேறுபாடோ அல்லது ஆத்திரமோ இருந்தாலும் அதை வெளிக்காட்டி போராட்டம் எதையும் ஈழ ஆதரவுத் தமிழக தலைவர்களோ அமைப்புகளோ செய்தது இல்லை.
நான் அறிந்தவரையில் இதுதான் முதன் முதலாக ஒரு ஈழத் தமிழ் தலைவரான சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை காட்டி அவரின் உருவப் பொம்மையையும் செருப்படி வழங்கி எரித்துள்ளனர்.
இதுவரை வெறும் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற அடுத்த கட்டநிலைக்கு தமிழக ஆதரவு சக்திகள் வந்துவிட்டன என்பதையே இச் சம்பவம் காட்டுகிறது.
இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்கே 2009ல் இருந்து இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் பெரும் பிரயத்தனம் செய்து வந்தன.
ஆனாலும் காலம் சுமந்திரனின் வாயால் அதை ஆரம்பித்து வைத்துவிட்டது. சுமந்திரன் தன்னையும் அறியாமல் தமிழினத்திற்கு செய்த உதவி இது.
Image may contain: 1 person, standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment