Monday, June 29, 2020
•யார் ஒற்றுமையைக் குழப்புவது?
•யார் ஒற்றுமையைக் குழப்புவது?
செய்தி - இது முக்கியமான தேர்தல். எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக எமக்கு வாக்களிக்க வேண்டும் - சுமந்திரன்
ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என்று வீராப்பு பேசியவர் இப்போது வந்து தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமக்கு வாக்களிக்குமாறு கெஞ்சுகிறார்.
தமிழினப் படுகொலையாளிகளுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ்வது தனது பாக்கியம் என்று பேட்டியளித்தவர் இப்போது தமிழ் மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்.
சரி. பரவாயில்லை. தமிழ் மக்கள் எப்போதும் ஒற்றுமையாகத்தானே வாக்களித்து வருகிறார்கள். ஆனால் நீங்கள்தானே ஒற்றுமையைக் குழப்புகிறீர்கள்.
நீங்கள்தானே விக்கினேஸ்வரன் அவர்களை அழைத்து வந்தீர்கள். அப்புறம் நீங்கள்தானே அவரை கேவலப்படுத்தி வெளியேற வைத்தீர்கள்.
கஜே;ந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் எல்லாம் உங்களுடன்தானே இருந்தார்கள். அவர்களை ஏன் ஒற்றுமையாக வைத்திருக்காமல் வெளியேற்றினீர்கள்?
அனந்தி சசிதரனை நீங்கள்தானே அழைத்து வந்தீர்கள். அப்பறம் அவரை ஏன் வெளியேற வைத்தீர்கள்.
இப்பகூட உங்கள் வேட்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லையே. உங்கள் வேட்பாளர் தவராசா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று நீங்கள்தானே அவதூறு பரப்புகிறீர்கள்.
அப்புறம் எந்த முகத்தோட வந்து ஒற்றுமையாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கிறீர்கள்?
குறிப்பு - இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆம். உண்மைதான். ஆனால் இது தமிழ் மக்களுக்கு முக்கியமாக தேர்தல் இல்லை. சுமந்திரனுக்குத்தான் முக்கியமான தேர்தல். ஏனெனில் அவரது அரசியல் வாழ்வை தீர்மானிக்கப்போகும் தேர்தல்.
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment