Monday, June 29, 2020
•சமஷ்டியைக் காணவில்லை என்று தேடிய சுமந்திரன்.
•சமஷ்டியைக் காணவில்லை என்று தேடிய சுமந்திரன்.
ஒரு நாள் யாழ் மருத்துவமனைக்கு சுமந்திரன் டாக்டரைத் தேடி வந்தார். அவரை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.
"சொல்லுங்கள் சுமந்திரன். உடம்புக்கு என்ன?"
"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"
"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீங்கள் பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த பில்டிங்கில இருக்கார்."
"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"
"சரி எதனால வலி?"
"நான் சமஷ்டியை முழுங்கிட்டேன்!"
"ஓ...அப்படீன்னா நீங்கள் இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படுங்க”
உள்ளே அழைத்துச் சென்று, அவருக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவர் வழியிலேயே சென்று அவரை குணப்படுத்த எண்ணிய டாக்டர், ஒரு பைல் கட்டை கொண்டு வந்து மருத்துவமனை மேசையில் வைத்தார்.
சுமந்திரன் தூங்கி எழுந்ததும், டாக்டர் அவர் அருகில் சென்று சொன்னார்.
"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"
"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"
"நீங்கள் நிஜமாவே சமஷ்டியை முழுங்கியிருந்தீர்கள். அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டேன். நல்ல வேளை, உடனடியா நீங்கள் என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்டீங்க. அந்த சமஷ்டியும் பிழைச்சிட்டுது"
"அப்படியா டாக்டர். அந்தக் சமஷ்டியை நான் பார்க்கலாமா?"
"மேசையில் வைத்திருக்கிறேன். வந்து பாருங்கள்"
சுமந்திரன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து மேசைப் பக்கம் போனார். அங்கே சமஷ்டியைப் பார்த்தார். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினார். டாக்டர் பெருமிதத்துடன் அவரைப்; பார்த்தார்.
"பளார்!!"
எதிர்பாராமல் சுமந்திரன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "ஏன் சேர் என்னை அடிக்கிறீர்கள்" என ஆவேசமாக கேட்டார்.
"நீங்க ஒரு போலி டாக்டர். நான் சட்டம் படித்தவன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. நான் முழுங்குனது ஏக்க ராஜ்ஜியத்தில் உள்ள சமஷ்டி. ஆனா நீங்க சந்திரிக்காவின் சமஷ்டியைக் காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"
டாக்டர் மயங்கி விழுந்தார்.
அதன்பின் சுமந்திரன் தன் அதிரடி பாதுகாப்புடன் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்த அதிகாரியிடம் "சமஷ்டியைக் காணவில்லை. கெதியாக கண்டு பிடித்து தாருங்கள். தேர்தல் வந்துவிட்டது. நான் தமிழ் மக்களுக்கு காட்ட வேண்டும் "என்று முறையிட்டார்.
அதை பொறுமையாக கேட்ட அந்த சிங்கள பொலிஸ் அதிகாரி “அப்படியா சேர்? ஏற்கனவே ஒருவர் தீபாவளிக்கு பெற்ற தீர்;வைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்திருக்கிறார். முதலில் அவரின் தீர்;வைக் கண்டு பிடித்துவிட்டு அப்புறம் உங்கள் சமஷ்டியை கண்டு பிடிக்கிறோம்” என்றார்.
“அப்படியா? யார் தீர்வைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்தது?” என்று சுமந்திரன் கேட்டார்.
அதோ கதிரையில் நீண்ட உறக்கத்தில் இருக்கிறாரே. அந்த முதியவர்தான். அவர் தன் பெயர் சம்பந்தர் ஜயா என்று கூறுகிறார்.
குறிப்பு - சுமந்திரன் எப்படியும் சமஷ்டியுடன் வருவார் என அவரது விசுவாசிகள் ஆவலுடன் காத்தக் கொண்டிருக்கின்றனர்.
Image may contain: 1 person
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment