Monday, June 29, 2020

தீபெத்திய மக்கள் ஜ.நா மன்றத்தின்

தீபெத்திய மக்கள் ஜ.நா மன்றத்தின் முன் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நேற்றைய தினம் குரல் கொடுத்துள்ளனர். தீபெத்திய மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தும் இலங்கையில் பௌத்த மதத்தின் பேரால் நடந்த இனப்படுகொலையை கண்டித்துள்ளனர். அதுமட்டுமல்ல இந்திய அரசு எரிச்சல் அடையும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் தமது ஆதரவை ஈழத் தமிழருக்கு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காஸ்மீர் , சீக்கிய மற்றும் குர்திஸ் போராடும் மக்கள் தமது ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் வேதனை என்னவெனில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக வரும் சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் மட்டுமே என்கிறார். அவர் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்கிறார். அவர் இலங்கை அரசு கோராதபோதும் ஒருமுறை அல்ல இரண்டுமுறை கால அவகாசம் பெற்றுக் கொடுத்திருக்கிறார். எனவே, என்னதான் உலக மக்கள் அனைவரின் ஆதரவை நாம் பெற்றாலும் சுமந்திரன் இருக்கும்வரை இனப்படுகொலைக்கான நீதியை ஒருபோதும் பெற முடியாது. எனவேதான் சுமந்திரனை தமிழ் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது முன்நிபந்தனையாக அமைகிறது. Image may contain: one or more people, people sitting and outdoor

No comments:

Post a Comment