Monday, June 29, 2020
கரூர் நீதிமன்றத்தில் புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்!
கரூர் நீதிமன்றத்தில்
புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்!
தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாகிய சிறப்புமுகாம் இருப்பது பலர் மறந்துவிட்டனர். அதுவும் இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டது என்பதுகூட இப்போதைய திமுக உடன் பிறப்புகளுக்கு தெரிவதில்லை.
துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிப் போராளி சிவா அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கரூர் நீதிமன்றத்தில் 17.10.1994 யன்று நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஆனால் அந்த நீதிபதி போராளி சிவாவுக்கு நீதி வழங்கவில்லை. மாறாக அவரை வேலுர் சிறப்புமுகாமில் கொண்டுபோய் அடைத்தார்கள். அதன்பின் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை நான் அறியாமல் இருந்தேன்.
கடந்த வாரம் முகநூலில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், போராளி சிவா வேலூர் சிறப்புமுகாமில் இருந்து தப்பி வந்து வன்னியில் இயங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டுவிட்டதாக கூறினார்.
லெப்.கேணல் மகேந்தியுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிவா உட்பட வாகனத்த்pல் பயணித்த நால்வரும் இறந்துவிட்டதாக அந்த நண்பர் கூறியதுடன் அவர்களின் புகைப்படத்தையும் தந்து உதவினார்.
போராளி சிவா தங்களின் கொடுமைகளை நீதிமனத்தில் கூறிவிட்டார் என்பதற்காக சிவாவைவிட என்மீது அதிக கோபம் கொண்டனர் தமிழக கியூ பிரிவு உளவுப் பொலிசார்.
ஏனெனில் சிவா வாக்குமூலம் கொடுப்பதற்கு நான் உதவியதுடன் இவ் வாக்குமூலத்தை எமது தோழர் தமிழ் முகிலன் அவர்களுக்கும் இரகசியமாக வழங்கிவிட்டேன்.
தோழர் தமிழ்முகிலன் உடனே அவ் வாக்குமூலத்தை “குற்றப் பரம்பரையாக கருதப்படும் ஈழத் தமிழர்கள்” என்னும் தலைப்புடன் சிறு பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்.
அந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் ஜெயா அம்மையார். ஆனாலும் அதையும் மீறி ஈழத் தமிழருக்கான ஆதரவை வழங்கியவர்களில் தமிழ் முகிலனும் ஒருவர்.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கிய போராளி சிவாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அதனை வெளியிட்டு ஆதரவு தந்த தோழர் தமிழ் முகிலன் பெயரும் உச்சரிக்கப்படும்.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் போராளி சிவாவின் வாக்குமூலத்தை படிக்கலாம்.
http://tholarbalan.blogspot.com/2020/06/blog-post_83.html
Image may contain: 1 person, text
No photo description available.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment