Monday, June 29, 2020

கீழ்வரும் நிபந்தனைகளுக்கு

கீழ்வரும் நிபந்தனைகளுக்கு எந்தவொரு வேட்பாளராவது சம்மதிப்பாரா? (1) தேர்தலில் வெற்றி பெற்றால் பாராளுமன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் வெற்றி பெற்ற தொகுதியில் தங்குவேன். வாரத்தில் ஒருநாளாவது மக்கள் குறைகளை கேட்பேன். (2) தேர்தலில் வெற்றி பெற்றால் சொகுசு வாகனம் வாங்க மாட்டேன். வாங்கினாலும் அதை விற்று வரும் 7 கோடி ரூபா பணத்தையும் அப்படியே மக்களுக்கு வழங்குவேன். (3) சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக் கொள்ள மாட்டேன். பெற்றுக் கொண்டாலும் மக்கள் மத்தியில் பொலிஸ் காவலுடன் வர மாட்டேன். (4) வெற்றி பெற்றபின் கட்சி மாறி அமைச்சுப் பதவி பெற மாட்டேன். அதற்காக 50 கோடி ரூபா பணமும் மகிந்த கும்பலிடம் இருந்து பெற மாட்டேன். (5) சாரதி, செயலாளர், இணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு என் உறவினர்களை நியமித்து அதில் இருந்தும் பணம் சம்பாதிக்க மாட்டேன். மாறாக முன்னாள் போராளிகளுக்கு இப் பதவிகளை வழங்குவேன். (6) என் பெயரிலோ அல்லது பினாமி பெயர்களிலோ சாராய பெர்மிட் வாங்க மாட்டேன். வன்னியில் பல ஏக்கர் நிலங்களை சுருட்ட மாட்டேன். (7) லஞ்சம் பெற மாட்டேன். ஊழல் செய்ய மாட்டேன். பதவி ஆரம்பிக்கும்போதும் பதவி முடியும்போதும் எனது குடும்ப சொத்து விபரங்களை பகிரங்மாக மக்கள் முன் தெரிவிப்பேன். (8) தேர்தல் செலவுக்காக இந்திய தூதரிடம் பணம் பெற மாட்டேன். யாரிடமாவது பணம் பெற்றாலும் அதற்குரிய கணக்குகளை பகிரங்கமாக தெரிவிப்பேன். (9) மக்கள் எங்கு மருத்துவ சிகிச்சை பெறுகிறார்களோ அதே மருத்துவமனையிலேதான் நானும் சிகிச்சை பெறுவேன். மக்கள் பணத்தில் சிங்ப்பூரோ அல்லது டில்லியோ சென்று சிகிச்சை பெற மாட்டேன். (10) மற்ற தொழில்கள் போன்று பென்சன் வயது வரும்போது ஒதுங்கி இளையவர்களுக்கு வழி விடுவேன். சாகும்வரை பதவியில் இருப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். குறைந்த பட்சம் இவ் நிபந்தனைகளுக்கு சம்மதிக்கும் வேட்பாரளர் ஒருவராவது இருக்கிறாரா? தமிழ் மக்களே! வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கேளுங்கள். குறிப்பு - எமது வேட்பாளர்களை பன்றிகளுடன் ஒப்பிட்மைக்காக தேவையானால் பன்றிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். No photo description available. Image may contain: 1 person

No comments:

Post a Comment