Wednesday, July 27, 2022

சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம்

சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம் இனவாத தேசியம் என்றும் அதனால் ஆதரிக்க முடியாது என்று (போலி) கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர். அப்படியென்றால் தோழர் தமிழரசன் மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகள் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றுதானே முத்திரை குத்தினார்கள்.

தன்னை தமிழின தலைவர் என்றவர்

தன்னை தமிழின தலைவர் என்றவர் ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்தபோது தன்னைக் கொல்லப்பார்க்கிறாங்க காப்பாத்துங்க என்று அலறினார். ஆனால் மரணத் தறுவாயில் தியாகி சிவகுமார் கடைசியாக கூறிய வரிகள்” மீண்டும் தமிழனாக பிறந்து போராட விரும்புகிறேன்” இப்போது கூறுங்கள் யார் தமிழின தலைவர்?

எத்தனை ஆயிரம் தமிழர்களை

எத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்றாலும் பரவாயில்லை. திருப்பதி செல்லுங்கள். பாவ விமோசனம் தரப்படும்.

இவர் ஒரு ஈழத் தமிழர்

இவர் ஒரு ஈழத் தமிழர் இவரால் எப்படி எம்.பி யாக முடிந்தது? அது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது? ஏனெனில் இவர் அகதியாக சென்றது தமிழ்நாட்டிற்கு அல்ல. கனடாவுக்கு.

சிறப்புமுகாமில் இருந்து 16 ஈழத் தமிழ் அகதிகள்

சிறப்புமுகாமில் இருந்து 16 ஈழத் தமிழ் அகதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விடுதலை செய்து இக் கொடிய சிறப்புமுகாமை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்த தமிழ் இன உணர்வாளர்களுக்கு நன்றி.

தோழர் சண் அவர்களின் 102வது பிறந்ததினம்!

தோழர் சண் அவர்களின் 102வது பிறந்ததினம்! இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 102 பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2022) தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர். மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே. அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார். அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார். அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள். இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது. அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன். அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும். குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 3 பெண்கள் 2 சிறுவர் உட்பட 17 பேர் சயிக்கிள் பரப்புரை செய்து வருகின்றனர். இவ் தமிழ் உணர்வாளர்களின் முயற்சிகள் வெற்றி பெறட்டும். அகதிகள் விடுதலை பெறட்டும். வாழ்த்துகள்.

கனடா நாட்டின் பிராம்டன் நகரில்

கனடா நாட்டின் பிராம்டன் நகரில் அமைக்கப்படவுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இனப்படுகொலைக்குரிய நீதியைப் பெறாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓயமாட்டார்கள் என்ற செய்தி உலகிற்கு கடத்தபடுகிறது.

இந்த “வாய்தா” கொடுமையை

இந்த “வாய்தா” கொடுமையை நானும் என் மீதான வழக்கில் எட்டு வருடங்களாக அனுபவித்திருக்கிறேன். வசதி படைத்தவர்கள் மற்றும் உயர் சாதியினர் எப்படி நீதியை வாங்குகின்றனர் என்பதையும் அந்த நீதி ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதையும் இப் படம் நன்கு காட்டுகின்றது. சிறந்த படம்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும்

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றனர் என்பதே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசுக்கு மட்டுமல்ல திராவிடத்திற்கும் தற்போது அச்சத்தைக் கொடுக்கின்றது. எனவேதான் உலக தமிழர் ஒற்றுமையை குழப்ப இவை முயலுகின்றன.

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில்

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அச் செய்தி அறிய கிடைத்தது. அப்துல் ரவூப் என்ற இளைஞர் தன் 23வயதில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி. ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று இந்தியஅரசு கட்டமைத்து வைத்திருந்த விம்பத்தை அச் செய்தி சுக்குநூறாக உடைத் தெறிந்தது. அதைவிட ஆச்சரியம் என்னவெனில் “பணம் தரலாம் உங்கள் மகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறுங்கள்” என்று தமிழக அரசு மிரட்டியும் ரவூப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அப்தல் ரவூப் உயிருடன் இருந்திருந்தால் இன்று தன் 50வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியிருப்பார். அப்துல் ரவூப்பை தொடர்ந்து இதுவரை 17 தமிழக தமிழர்கள் ஈழத் தமிழருக்காக உயிர் துறந்துள்ளார்கள். ஆனாலும் தமிழின படுகொலையை அவர்களால் நிறுத்த முடியவில்லை. ஏனெனில் அரசுக்கு எவ்வித சேதம் தராத தற்கொலைகள் குறித்து அரசு ஒருபோதும் கவலை கொள்வதில்லை. அதுமட்டுமல்ல முக்கியமாக தமிழக தமிழர்களை ஆள்பவர்கள் தமிழரில்லை அல்லது தமிழின உணர்வு அற்றவர்கள்.

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்! பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்றாவது சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பாண்டிச்சேரியில் நடந்த மூன்றாவது சர்வதேச கிக் பொக்சிங் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த யுவதி. விஜிதா ஜெகனேஸ்வரன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

ஆறுதல் தரும் செய்தி !

• ஆறுதல் தரும் செய்தி ! சிறப்புமுகாமில் இருந்து மேலும் 23 ஈழத் தமிழ் அகதிகள் விடுதலை ஆகிறார்கள். அவர்கள் மீதான வழக்கை மதுரை நீதிமன்றம் இன்று முடித்துக்கொண்டதன் மூலம் நாளை அவர்கள் விடுதலை ஆகிறார்கள் என அறிய வருகிறது. ஏற்கனவே 16 ஈழ அகதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். மீதி உள்ளவர்களையும் விரைந்து விடுதலை செய்து சிறப்புமுகாமை மூட வேண்டும். இவ் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்த உணர்வாளர்களுக்கு நன்றிகள்.

மாவோயிஸ்ட் நக்சலைட்டு அமைப்பு

மாவோயிஸ்ட் நக்சலைட்டு அமைப்பு இந்திய அரசால் பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அமைப்பை புகழ்ந்து தெலுங்கில் படம் எடுக்கிறார்கள். அப் படங்கள் எவ்வித தடையும் இன்றி திரையிடப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் புலிகள் பற்றி ஏன் படம் எடுக்க முடியவில்லை? தமிழ்நாட்டில் தமிழ் சினிமா தமிழர் கையில் இல்லை என்பது காரணமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சுதந்திரப் போராட்டத்தையும் அவரது ராணுவத்திற்கு தமிழ் மக்களை அனுப்பி உதவி புரிந்த முத்துராமலிங்க தேவரின் பங்களிப்பும் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். இனிவரும் காலம் சுதந்திரப் போராட்டத்தில் தமிழரின் பங்கையும் வரலாற்றையும் யாராலும் மறைக்க முடியாது என்ற நிலை உருவாகிறது.

1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா?

• 1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா? முதலாவது, 1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை இரண்டாவது, 1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால் இது நிகழ்ந்தது என்கிறார்கள். இதுவும் தவறு. ஏனெனில், (அ)1956, 1966, 1977 ம் ஆணடு;களில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை. (ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (இ)அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியென்றால் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்ட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை? •1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன? எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே. இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்துள்ளது

இளையராசா இதுவரை பல கருவிகள

இளையராசா இதுவரை பல கருவிகளை வாசித்திருந்தாலும் இறுதியாக அவர் வாசித்த இந்த கருவிதான் அவருக்கு பதவி பெற்றுக் கொடுத்துள்ளது. இனி இதை இவர் பல தடவைகள் வாசிக்கப் போகிறார். தமிழர்களும் இதை சகித்துத் தொலைக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

மக்கள் போராட்டம் பிரதமர் ரணிலை

மக்கள் போராட்டம் பிரதமர் ரணிலை மட்டும் விரட்டி அடிக்கப்போகிறதா அல்லது அவருடன் சேர்த்து ஜனாதிபதி கோத்தாவையும் தூக்கி எறியப்போகிறதா?

நீட் தேர்வுக்கு இன்னுமொரு மாணவர் பலி.

நீட் தேர்வுக்கு இன்னுமொரு மாணவர் பலி. இன்னும் எத்தனை மாணவர்கள் இறந்தபின்பு தன்னிடமுள்ள நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் கூறப் போகிறார்? உடன்பிறப்புகளே பதில் பிளீஸ்.

தமிழ்தானே இத்தனை நாளும் சோறு போட்டது

தமிழ்தானே இத்தனை நாளும் சோறு போட்டது தமிழ்தானே இசைஞானி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது இத்தனையும் கொடுத்த தமிழ் இருக்க இந்தி மட்டும் எப்படி இசைக்கு நளினத்தைக் கொடுக்கிறது?

செய்தி – பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி கோத்தா

செய்தி – பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி கோத்தா ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினார். எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் கோத்தா போல் மக்களுக்கு பயந்து எந்த ஜனாதிபதியும் பதுங்கியதில்லை. இதைவிட பதவியை விட்டு கௌரவமாக விலகிச் செல்லலாமே?

எத்தனை தடைகள். அத்தனையும் உடைத் தெறிந்துள்ளார்கள்.

எத்தனை தடைகள். அத்தனையும் உடைத் தெறிந்துள்ளார்கள். ஜனாதிபதி மாளிகை, இல்லம் யாவும் மக்கள் கையில். ஜனாதிபதி தலைமறைவு. மக்கள் சக்தி அணுகுண்டைவிட வலிமையானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள். ஆம், மக்கள் சக்தியே மகத்தான சக்தி

ஹிட்லர் தற்கொலை செய்யும் அந்தக் கணம்வரை

ஹிட்லர் தற்கொலை செய்யும் அந்தக் கணம்வரை தான் வெற்றியின் விளிம்பில் நிற்பதாகவே சொல்லிக்கொண்டிருந்தான். எந்த சர்வாதிகாரியும் தான் அழியும்வரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் வரலாற்றில் மற்ற சர்வாதிகாரிகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அதே முடிவு கோத்தாவுக்கும் நிச்சயம் ஏற்படும்.

இந்த கும்பல் மக்கள் கைகளில் சிக்கப்போகுதா

இந்த கும்பல் மக்கள் கைகளில் சிக்கப்போகுதா அல்லது இந்திய அரசு காப்பாற்றப் போகிறதா?

ஜனாதிபதியின் மாளிகை மற்றும் இல்லம் மக்களால்

ஜனாதிபதியின் மாளிகை மற்றும் இல்லம் மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மாளிகை மக்களால் முற்றுகை இடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால் சம்பந்தர் ஐயாவின் சொகுசு மாளிகைக்கு எந்த ஆபத்தும் இல்லைதானே?

போராடுவது என்று மக்கள் முடிவெடுத்துவிட்டால்

போராடுவது என்று மக்கள் முடிவெடுத்துவிட்டால் ஒடும் விமானத்தைக்கூட கல்லால் எறிந்து விழுத்துவார்கள் - பிடல் காஸ்ரோ

இலங்கையில் இன்று மகிந்த கும்பலின் வாரிசு அரசியல்

இலங்கையில் இன்று மகிந்த கும்பலின் வாரிசு அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியல் முடிவுக்கு வருமா?

எத்தனையோ பேரை காணாமல் ஆக்கியவர்

எத்தனையோ பேரை காணாமல் ஆக்கியவர் இன்று அவரே காணாமல் போய்விட்டார்! காலம் எத்தனை அற்புதமானது அது எத்தனையோ பாடங்களை கற்றுக்கொடுத்துவிட்டே கடந்து செல்கிறது

10வது நினைவுதின அஞ்சலி

10வது நினைவுதின அஞ்சலி தோழர் தமிழரசனுடன் சேர்ந்து பயணித்த ஈழத்து தோழர் தினேஸ் @ ராயு வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் இருக்கும்வரை கூடவே தோழர் ராயுவின் பெயரும் நிலைத்து இருக்கும்.

இதுவரை உலகில் பற்றி எரிந்த

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே உருவானது. 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு சிறு துண்டு பாணில் பற்றிய நெருப்பு இன்று கோத்தாவை மட்டுமல்ல ரணிலையும் பொசுக்கிய பெரு நெருப்பாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

இதுவரை எட்ட நின்று பிரமிப்புடன் பார்த்த மாளிகையை

இதுவரை எட்ட நின்று பிரமிப்புடன் பார்த்த மாளிகையை கைப்பற்றியதுடன் அதில் தங்களையே மன்னர்களாக மக்கள் நினைத்து மகிழும் தருணம் போராட்டத்தின் உச்சம். ஆம். ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள

நான் மீண்டும் வருவேன் - மகிந்த

நான் மீண்டும் வருவேன் - மகிந்த ராஜபக்சா "பிளீஸ் அந்த மிருகத்தை பிடிச்சு ஜெயிலில் போடுங்க"

மத்திய அரசும் கேட்கவில்லை

மத்திய அரசும் கேட்கவில்லை மாநில அரசும் அக்கறை காட்டவில்லை தமிழருக்கென்று ஒரு நாடும் தமிழருக்கென்று ஒரு அரசும் அவசியம் என்பதையே இது காட்டுகிறது.

மரங்கள் ஓய்வை விரும்பினாலும்

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை கரைகள் அமைதியை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை மக்கள் அமைதியை விரும்பினாலும் ஆட்சியாளர்கள் விடுவதில்லை. -மாவோ

2009ல் தமிழ் மக்கள் அழிந்தபோது வராத வருத்தம்

2009ல் தமிழ் மக்கள் அழிந்தபோது வராத வருத்தம் இப்போது ஏன் இந்த அம்மையாருக்கு வருகிறது? இவரது அக்கறை உண்மையில் மக்கள் மீதா அல்லது மகிந்த கும்பல் மீதா?

தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிக்காவிடின்

தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிக்காவிடின் சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

முடிந்தால் அனுப்பி பார்க்கவும்

முடிந்தால் அனுப்பி பார்க்கவும் மீண்டும் சாரம் கட்டிய பையன்களை சந்திக்க வேண்டி வரும் நீதி – நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

பை (BYE ) கோத்தா பை (BYE ) பை ( BYE)

பை (BYE ) கோத்தா பை (BYE ) பை ( BYE) இவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் வரும் என்று மிரட்டினார்கள். ஆனால் அதே வானில் இவர் தப்பிச் செல்லும் நிலையை மக்கள் உருவாக்கியுள்ளார்கள். ஆம். மக்கள் மகத்தானவர்களே.

தமிழத்தேசிய உணர்வாளர் சாட்டை துரைமுருகன் மீதான

தமிழத்தேசிய உணர்வாளர் சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது. அடக்குமுறைக்கு எதிரான அவர் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

மகிந்த கும்பல் மக்களிடமிருந்து எடுத்த

மகிந்த கும்பல் மக்களிடமிருந்து எடுத்த பணத்தை எப்போது ஒப்படைக்கப் போகின்றனர்?

மகிந்த ராஜபக்சா கும்பல் விரட்டி

மகிந்த ராஜபக்சா கும்பல் விரட்டி அடிக்கப்பட்டமைக்கு திராவிடம் ஏன் பதட்டம் அடைகிறது? இலங்கையில் செய்த 26000 கோடி ரூபா முதலீடு அம்பேல் ஆகிவிடும் என்றா ? அல்லது இலங்கை போன்று இந்தியாவிலும் வாரிசு அரசியலுக்கு முடிவு வந்துவிடும் என்ற அச்சமா?

அதிகாரத்தில் இருக்கும்போது இறந்த

அதிகாரத்தில் இருக்கும்போது இறந்த போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்தினார். அவர் பெருமையாக நெஞ்சில் அணிந்திருந்த பதக்கம் அவரது ஜட்டியில் குத்தி காலம் அவருக்கு பதில் அளித்துள்ளது. காலம் உரிய பாடங்களை கற்றுக்கொடுத்தே கடந்து செல்கிறது

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல இந்த கும்பல முயற்சி செய்கிறது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

குண்டு வைத்து குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர்

குண்டு வைத்து குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர் பாதி பதவிக்காலத்திலேயே நாட்டை விட்டு தப்பியோட பார்க்கிறார். 63 லட்சம் வாக்கு பெற்றவன் என்று மார்பு தட்டியவர் இன்று மக்களுக்கு பயந்து ஒளித்து திரிகிறார்.

ஒருவர் அமெரிக்காவுக்கு போக முயற்சி செய்தார்

ஒருவர் அமெரிக்காவுக்கு போக முயற்சி செய்தார் இன்னொருவர் டுபாய்க்கு போக முயற்சி செய்தார் மொத்தமாக மாலைதீவுக்கு கப்பலிலாவது போக முடியுமா என முயற்சி செய்தார்கள். நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என பதவிக்கு வந்தவர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓட முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

யாராவது ஒரு ஆட்சியாளர் கொல்லப்பட்டே

யாராவது ஒரு ஆட்சியாளர் கொல்லப்பட்டே இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்றால் அந்த ஆட்சியாளராக ரணிலே இருக்கப் போகிறார். ரணிலின் பதவிவெறி லிபியாவில் கடாபிக்கு எற்பட்ட முடிவையே அவருக்கும் பெற்றுக்கொடுக்கப் போகிறது.

மாலைதீவிலும் கோத்தாவுக்கு கடும் எதிர்ப்பு

மாலைதீவிலும் கோத்தாவுக்கு கடும் எதிர்ப்பு கோத்தாவுக்கு தஞ்சம் அளிக்கப்போவதில்லை என்றும் போராடும் இலங்கை மக்களுடனே தாம் இருப்பதாக மாலைதீவு அறிவித்துள்ளது. இதனால் கோத்தா சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிய வருகிறது. நாட்டை சிஙகப்பூராக மாற்றுவேன் என்றவர் இப்போது அந்த சிங்கப்பூருக்கே தப்பியோடும் நிலை வந்துள்ளது. அவர் எங்கே பறந்து சென்றாலும் இறுதியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

அஞ்சலிகள்!

அஞ்சலிகள்! பிரதமர் செயலக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். ரணில் தன் பதவி வெறிக்காக நாட்டில் ரத்த களறியை உருவாக்குகிறார்.

மக்கள் மீது வன்முறையை ஏவினால்

மக்கள் மீது வன்முறையை ஏவினால் அதே மொழியில் பதில் அளிக்க மக்கள் தயங்கமாட்டார்கள்.

இன்று ரூபவாகினி மற்றும் பிரதமர் செயலகம்

இன்று ரூபவாகினி மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றைக் கைப்பற்றிய மக்கள், பாராளுமன்றத்தை கைப்பற்ற தடைகளை தகர்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் முன்வாசல் வழியாக உள் செல்கிறார்கள்.

மக்கள் முன்வாசல் வழியாக உள் செல்கிறார்கள். ஆட்சியாளர்கள் பின்வாசல் வழியாக தப்பிச் செல்கிறார்கள். பின்வாசலை அடைத்துவிட்டே முன்வாசல் வழியாக உள் செல்ல வேண்டும் என்பதை வரலாறு கற்றுத் தருகிறது

சுமந்திரன் - ரணில், சஜித் ,அனுரா இதில்

சுமந்திரன் - ரணில், சஜித் ,அனுரா இதில் யாரை நாங்க ஆதரிக்க வேணும் ஐயா? சம்பந்தர் - இந்தியா யாரை ஆதரிக்கிறதோ அவரை நாம் ஆதரிக்க வேண்டும் சுமந்திரன் - இந்தியா யாரை ஆதரிக்கிறது ஐயா? சம்பந்தா - அதுதான் தெரியுதில்லையே. டில்லிக்கு போய் கேட்டால் என்ன?

செய்தி – மாலைதீவில் இருந்து கோத்தா சிங்கப்பூர் சென்றார்.

செய்தி – மாலைதீவில் இருந்து கோத்தா சிங்கப்பூர் சென்றார். நாட்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றுகூறி பதவிக்கு வந்தவர் அந்த சிங்கப்பூருக்கே தஞ்சம் கேட்டு சென்றுள்ளார் அன்று தமிழ் மக்களை அகதிகளாக்கியவர் இன்று தனக்கு அகதி அந்தஸ்து கேட்டு நாடு நாடாக அலைகிறார். இரண்டாம் துட்டகைமுனுக்களுக்கு வந்த நிலை?

நாடு நாடாக தப்பி ஓடிக்கொண்டிருக்கும்

நாடு நாடாக தப்பி ஓடிக்கொண்டிருக்கும் கோத்தபாயா கைது செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் புரிந்த இனப்படுகொலை மற்றும் ஊழலுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தலில் 69லட்சம் வாக்கு பெற்ற கோத்தா

தேர்தலில் 69லட்சம் வாக்கு பெற்ற கோத்தா நாட்டை விட்டு ஓடிவிட்டார். தேர்தலில் தோல்வி அடைந்த ரணில் ஜனாதிபதியாகிவிட்டார். இப்பொது எழும் கேள்வி என்னவெனில் 69 லட்சம் பெரிதா? அதைவிட ரணில் பெரிதா?

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு வழக்கில் காமராசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது உண்மையா உடன்பிறப்புகளே? அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி அவர் தீவிரவாதியா? அல்லது சுதந்திரப் போராட்ட தியாகியா? 200 ரூபா உடன்பிறப்புகள் பதில் பிளீஸ்

கோத்தாவுக்கு எதிராக புலம்பெயர்

கோத்தாவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கோத்தாவுக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். கோத்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

நீட் தேர்வு தற்கொலை தமிழ்நாட்டில்தான் அதிகம்

நீட் தேர்வு தற்கொலை தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று கூறுகின்றார் அன்புமணி. ஆனால் தாம் பதவிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து பண்ணுவோம் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இன்னும் அதனை ரத்து செய்யவில்லை. அதுமட்டுமன்றி நீட் தேர்வு ரத்து ரகசியம் தனக்கு தெரியும் என்று கூறிய உதயநிதியும் இன்னும் அதை கூறவில்லை இன்னும் எத்தனை மரணம் நிகழ்ந்த பின் ரகசியத்தை உதயநிதி கூறி ஸ்டாலின் ரத்து பண்ணப் போகிறார்?

மாலை தீவு சென்றார்.

மாலை தீவு சென்றார். அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் சிங்கப்பூர் சென்றார். இப்போது சிங்கப்பூரும் வெளியேறச் சொல்லிவிட்டது. இனி எங்குதான் செல்லப் போகிறார்? 53 நாடுகளின் உதவி பெற்று யுத்த வெற்றி கண்டதாக மார் தட்டியவருக்கு தஞ்சமளிக்க ஒரு நாடு இல்லையே?

கல்லக்குடி தந்த கலைஞர் மகன் ஆட்சியில்

கல்லக்குடி தந்த கலைஞர் மகன் ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கிடைக்குமா?

கல்வி அமைச்சர் என்று ஒருத்தர் இருப்பாரே

கல்வி அமைச்சர் என்று ஒருத்தர் இருப்பாரே அவர் இந்த பிரச்சனைகளை கவனிக்கக்கூடாதா?

பதவி இல்லை. பண பலம்கூட இல்லை.

பதவி இல்லை. பண பலம்கூட இல்லை. ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் முதல் குரல் இவரிடமிருந்தே வருகிறது. எத்தனையோ பலமான கட்சிகள் இருந்தும் நாம்தமிழர் கட்சி மட்டுமே உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

•அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம்

•அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம் முன்பைவிட வலிமையாக ஆர்ப்பரித்து எழுவோம்! ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் வரும்போது தமிழருக்கு நினைவில் வருவது 1983ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைகளே. அதுவும் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற குட்டிமணி, தங்கத்துரை உட்பட 52 பேரின் படுகொலைகள் மறக்க முடியாதவை. மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வு அது. இக் கொடூரமான வெறிகொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார். தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர். புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார். தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார். அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம்25ம் தேதியன்று வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார். தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 39 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை. வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம். தோழர் அழகன் அவர்கள் நினைவாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க உறுதி கொள்வோம். குறிப்பு- வெலிக்கடை சிறையில் மட்டுமல்ல களுத்துறை மற்றும் பிந்தனுவ சிறைகளிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை ஒருவர்கூட இக் கொலைகளுக்காக தண்டிக்கப்படவில்லை

அடேய் இது யார் பார்த்த வேலையடா?

அடேய் இது யார் பார்த்த வேலையடா? இதெல்லாம் ரொம்ப ஓவரடா. என்ன இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதியடா.

சின்னவர் தாய்லாந்து வழியாக

சின்னவர் தாய்லாந்து வழியாக கனடா சென்றுள்ளாராம். ஒருவேளை மாணவி சிறீமதிக்கு நீதி பெற போயிருப்பாரோ? நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை சார்.

நிருபர் - தூத்துக்குடியில் மக்கள் போராடினால்

நிருபர் - தூத்துக்குடியில் மக்கள் போராடினால் அது மக்கள் புரட்சி என்கிறீர்கள். கள்ளக்குறிச்சியில் மக்கள் போராடினால் கலவரம் என்கிறீர்கள். கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்கிறீர்கள். அதெப்படி சார்? சின்னவர் - அது அப்படித்தான். எப்படி என்று கேள்வி கேட்டால் அப்புறம் பாஜக உள்ளே வந்திடும். பரவாயில்லையா? நிருபர் - அதாவது நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் போராடினால் அது மக்கள் புரட்சி. ஆனால் அதே மக்கள் உங்கள் ஆட்சியில் போராடினால் கலவரம். அப்படித்தானே சார்? சின்னவர் - என்னை “சின்னவர்” என்று என் உடன்பிறப்புகள் அழைப்பது உங்களுக்கு எரிச்சல். அதுதான் இப்படி கேட்கிறீர்கள். நிருபர் - ?????

கேள்வி – ரணில் ஜனாதிபதியாகி உள்ளது பற்றி?

கேள்வி – ரணில் ஜனாதிபதியாகி உள்ளது பற்றி? தமிழ் மக்கள் - அவருக்கு 2 வருடம் உள்ளது. ஆனால் 2 மாதத்திற்குள் கோத்தாவும் மகிந்தாவும் பரவாயில்லை என்று சிங்கள மக்கள் நினைக்கும் அளவிற்கு ஆட்சி செய்வார். கேள்வி – டலஸ் அழகப்பெருமாவை சம்பந்தர் ஐயா ஆதரித்தது பற்றி? தமிழ் மக்கள் - இது ஐயாவின் சாணக்கியம் என்று சுமந்திரன் தம்பிகள் கூறுகின்றனர். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் இதன் மூலம் ஐயா உயிரோடு இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டோம்.

ரணில் , டலஸ் அழகப்பெருமா

ரணில் , டலஸ் அழகப்பெருமா இருவரில் யாரை இந்திய அரசு ஆதரிக்கிறது? யார் பதவிக்கு வந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயற்பட முடியாதவாறும் இந்தியாவுக்கு ஆதரவாய் மாற்றும் அளவிற்கும் இந்தியா அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி செல்வாக்குடன் இருக்கிறது. எனவே யார் பதவிக்கு வந்தாலும் இந்தியா இதன் மூலம் தனது நலன்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.

தமிழ் மக்களுக்காக தனியாக

தமிழ் மக்களுக்காக தனியாக பாரம் சுமக்கும் இந்த ஈழத்து இயேசுவை காட்டிக் கொடுக்கும் அந்த முதுகெலும்பற்ற யுதாஸ்கள் யார் ? சேர் ! முதுகெலும்பு இருக்கிறது என்பதற்காக அதிக பாரம் சுமப்பது நல்லது அல்ல. கொஞ்ச நாளைக்கு நீங்கள் ஓய்வெடுத்தால் என்ன? 😀😀

நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன் இல்லை.

நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன் இல்லை. என்னை எதற்காக இந்த குழுவிற்கு அழைக்கிறார் என்றும் புரியவில்லை. ஆனால் இந்த இடத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நாளை யாராவது புங்குடுதீவு மக்கள் சிலர் “ தாம் தம்மை தனித்துவமாக உணர்வதாகவும் எனவே தம்மை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரினால் அப்போது முஸ்லீம் மக்களையும் மலையக மக்களையும் தனித் தனி தேசிய இனங்கள் என்று கருதுவோர் என்ன முடிவு எடுப்பார்கள்? புங்குடுதீவு மக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களுக்கு பிரிந்துபோகும் உரிமை உண்டு என்பார்களா அல்லது மறுப்பார்களா? குறிப்பு – மேற்படி பதிவிற்கும் குறிப்பிட்ட இக் குழுமத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் புங்குடுதீவில் பசுமைப் புரட்சியை நோக்கமாக கொண்டு செயற்படுவதால் என்னால் இயன்ற கட்டணம் இல்லா விளம்பரம் இது.

உடன்பிறப்புகள் ஏன் எப்போதும் புலிகளின்

(200 ரூபா) உடன்பிறப்புகள் ஏன் எப்போதும் புலிகளின் தியாகத்தை இகழ்ந்த வண்ணம் இருக்கின்றனர்? ஏனெனில், பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை

மூக்கணாங்கயிறுகளை மாற்றுவது

"மூக்கணாங்கயிறுகளை மாற்றுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தருவதில்லை" -ஹோசிமின் ஜனாதிபதிகளை மாற்றுவது மக்களுக்கு பயன் தரப் போவதில்லை தேவை முகம் மாற்றம் இல்லை, அமைப்பு மாற்றமே.

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு எப்போதும் பாம்பு அற்ற கிணறு மட்டுமே.

மாறுவேடப் போட்டியில்

மாறுவேடப் போட்டியில் திருடன் வேடம் போட்ட மாணவன் சந்தேகமேயில்லை நிச்சயம் முதற் பரிசு பெற்றிருப்பான்! 😀😀

நாம் தமிழர் கட்சியினரின்

நாம் தமிழர் கட்சியினரின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் எதிர்ப்பை பார்க்கும்போது அவர்கள் ஏதோ சிறு கல்லை உடைக்கவில்லை, ஆரியம் திராவிடம் சாதியம் என்னும் மூன்று மலைகளை நொருக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிகிறது.

இசைப்பிரியாவின் வலியை

இசைப்பிரியாவின் வலியை இப்போது அவர்கள் உணர்கிறார்களாம். இப்போதாவது உணர்கிறார்களே என்று ஆறுதல் அடைவதா அல்லது தனக்கு வலி வரும்போதுதான் இன்னொருவரின் வலியை உணர்வது என்ற அந்த நிலையை எண்ணி வருந்துவதா?

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம். கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர். வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர் - செர பண்டாயி மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது. ”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு. தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை. 1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம். தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது. சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே. நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது. ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது . இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்? இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?

செய்தி – எனக்கு முதுகெலும்பு உள்ளது.

செய்தி – எனக்கு முதுகெலும்பு உள்ளது. தமிழ் மக்களுக்காக பாரம் சுமக்க நான் தயார் - சுமந்திரன் சுமந்திரன் - வடை சுடுவாயா? கடைகாரர் - ஆமா, நல்லாய் சுடுவேன் சேர் சுமந்திரன் - எண்ணெய் , சட்டி இல்லாம சுடுவாயா? கடைகாரர் - அது எப்படி சேர் முடியும்? சுமந்திரன் - நான் சுடுவேனே. சந்தேகம் இருந்தால் என் தம்பிகளிடம் கேட்டுப் பார். கடைகாரர் - ??????

சேர்!

சேர்! நள்ளிரவில போய் மகிந்தவுக்கு ஆலோசனை சொல்லுறீங்க. அப்புறம் இளைஞர்களை போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொல்லுறீங்க. கோத்தாவுக்கும் புலம்பெயர் தமிழருக்கும் பாலம் அமைப்பேன் என்கிறீங்க. அப்புறம் கோத்தா நியமித்த ரணிலை ஏற்க முடியாது என்கிறீங்க. இந்திய தூதர் சொன்னதால்தான் டலஸ் அழகப்பெருமாவை ஆதரித்தது என்கிறீங்க. இந்தியா தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்கிறது. ஏன் இப்படி? என்று கேட்டால் “எனக்குதான் முதுகெலும்பு இருக்கு நான் பாரம் சுமக்க தயார்” என்கிறீங்க. ஏதாவது ஒன்றை உறுதியாய் சொல்லுங்க சேர். நாங்க எத்தனை தடவைதான் மாத்தி மாத்தி உருட்டுறது? சுமந்திரன் தம்பிகளின் புலம்பல்

குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை

குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்பதல்ல கேள்வி குரங்குகளின் கையில் காரை யார் ஒப்படைத்தார்கள் என்பதே கேள்வி. குறிப்பு - இது அரசியல் பதிவு இல்லை. எனவே இதைப் படித்ததும் உங்களுக்கு ரணிலும் கோத்தாவும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல.

போராட்டம் மகத்தானது.

போராட்டம் மகத்தானது. அது அற்புதமான பாடங்களை கற்றுத் தருகிறது. தமிழினப்படுகொலையை சிங்கள மக்களும் உணர வைக்கிறது.

இயற்கை வளத்தை அழிப்பதை எதிர்த்து கேள்வி கேட்டால் கைதா ?

இயற்கை வளத்தை அழிப்பதை எதிர்த்து கேள்வி கேட்டால் கைதா ?

விடியல் அரசின் சாதனை?

விடியல் அரசின் சாதனை? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் , திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 7 தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது

நீங்கள் இராணுவ உடையில்

“நீங்கள் இராணுவ உடையில் சென்றால் மக்கள் காரி துப்புவார்கள். உங்களை விட புலிகள் சிறந்தவர்கள். பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்.” என்று சிங்கள இளைஞர் ஒருவர் சிங்கள ராணுவத்தை பார்த்து கூறியுள்ளார். போராட்டம் மகத்தானது. அது தமிழர்களின் நியாயத்தை சிங்கள மக்கள் உணர வைக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த எடப்பாடி ஆட்சியில்

கடந்த எடப்பாடி ஆட்சியில் மோடி வந்தபோது கறுப்பு பலூன் பறக்கவிட அனுமதித்த காவல்துறை, இப்போது ஸ்டாலின் ஆட்சியில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்காணிக்கிறது என்றால் அதன் அர்த்தம் என்ன (200 ரூபா) உடன்பிறப்புகளே? #GoBackModi

தமிழுக்கு திருவள்ளுவரைவிட கலைஞர் உயர்ந்தவரா?

தமிழுக்கு திருவள்ளுவரைவிட கலைஞர் உயர்ந்தவரா?

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து மேலும் ஐந்து ஈழத் தமிழ் அகதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்த உணர்வாளர்களுக்கு நன்றிகள். மிகுதி தமிழ் அகதிகளும் விடுதலை செய்யப்பட்டு அக் கொடிய சித்திரவதைமுகாம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

கலைஞரை புனிதப்படுத்தும்

கலைஞரை புனிதப்படுத்தும் (200 ரூபா) உடன்பிறப்புகளின் எழுத்துக்களை படிக்கும்போது பிடல் காஸ்ரோவின் வரிகள் நினைவில் வந்து தொலைக்கிறது. நான் என்ன செய்ய?